Monday, January 17, 2011

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி

துக்ளக் ஆண்டுவிழா பேச்சின்போது குருமூர்த்தி சற்றே விஸ்தாரமாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கக்கூடும் என்பது பற்றி விளக்கினார்.

மொத்தம் ஆறு புதிய கம்பெனிகளுக்கு லைசென்ஸ் கிடைத்துள்ளது. சில பழைய நிறுவனங்களுக்கு புதிய வட்டங்களுக்கான லைசென்ஸ்/ஸ்பெக்ட்ரம் கிடைத்துள்ளது. புது நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆளுக்கு ரூ. 300 கோடியும் அவர்கள் உருவாக்கும் நிறுவனத்தில் 20% பங்குகளும் தரவேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக குருமூர்த்தி சொல்கிறார்.

அதை மேலும் தொடர்ந்து, 20% பங்குகள் என்றால் அவற்றின் மதிப்பு தலா ரூ. 3,000-4,000 கோடி இருக்கும். எனவே மொத்த லஞ்சம் = 18,000 - 24,000 கோடி ரூபாய் என்று முடிக்கிறார்.

இந்த 20% பங்கு என்பதே ஒருவித afterthought என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போதுதான் லஞ்சம் என்பது பத்தாயிரம் கோடிகளைத் தொடும். 1 லட்சம் கோடி என்றெல்லாம் சொன்னபின், பத்தாயிரங்களிலாவது இருக்கவேண்டும் அல்லவா?

உண்மையைப் பார்ப்போம். ஒவ்வொருவரிடமும் 300 கோடி ரூபாய் கேஷாகத் தரவேண்டும் என்று பேசப்பட்டது என்கிறார் அல்லவா குருமூர்த்தி? நடந்திருக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் அதுபோன்ற பணம் இங்கு கைமாறக்கூடிய ஓர் அளவில்தான் உள்ளது. ஆனால் பங்குகள் 20% என்று பேசப்பட்டாலும் ஒரே ஒரு நிறுவனம் தவிர வேறு யாரும் அதைத் தந்ததாகத் தெரியவில்லை. நிச்சயமாக யூனிநாரில் அப்படி ஏதும் இல்லை. (ஏதேனும் பினாமி ஹோல்டிங் = > பிற்காலத்தில் தரப்படும் என்றெல்லாம் சொன்னால் அதைப் பற்றி விளக்க எனக்கு திராணி இல்லை.) ஸ்வானில் சுமார் 5% பங்குகள் சந்தேகாஸ்பதமான ஒரு நிறுவனத்துக்குப் போய், அதன் விலை சுமார் 350 கோடி ரூபாய், பிற நபர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. எனக்கு என்னவோ, இந்த 5% = 350 கோடி என்பதுதான் பேசப்பட்ட பேரமோ என்று தோன்றுகிறது. செயல்படுத்தியதும் இந்த ஒரு நிறுவனம்தான். பிறர் ஒருவேளை பணமாகக் கொடுத்திருக்கலாம்.

அதற்குமேல் பணம் பெயர இந்த வகையில் வாய்ப்பே இல்லை. இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்திருக்கிறேன். ஆறு கம்பெனிகளும் சேர்ந்து குருமூர்த்தி சொன்னாற்போல ஆளுக்கு தலா 300 கோடி ரூபாய் கொடுத்தால், இங்கு நாம் பேசும் தொகை 2,000 கோடி ரூபாய்க்குள் உள்ளது. பழைய பெருச்சாளிகள் (டாடா சேர்த்து) எத்தனை கொடுத்தார்கள், என்ன பேசப்பட்டது என்று தன்னிடம் விவரம் ஏதும் இல்லை என்கிறார் குருமூர்த்தி. டாடா பற்றி நீரா ராடியா ஒலிப்பதிவில் செய்திகள் உள்ளன. உதாரணமாக பெரம்பலூர் மருத்துவமனை ஒன்றுக்கு டாடா அறக்கட்டளை மூலமாக சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் அனுப்புவது பற்றிய ஒரு துண்டு கிடைக்கிறது.

I did speak to Krishna Kumar, I did speak to him, he was supposed to tell the...take the...you see, let me tell you where they are coming from...they’re going ahead, they want to do that, they (are) doing the hospital in Perambalur, no problem right? But what they want to do is, and because the charter of the trust allows them to do it only in a particular manner, what they have to do is, they have to provide equipment for the hospital.

...

Or they provide say, certain wards, they’ll build certain wards or something. So the letter that we have to do, it’s not a cheque-cheque that we give, we actually have to give a letter, and based on that letter, when they start working on the hospital, on certain areas that I decided, between the wards or equipment, then those disbursements start happening.

*

வெறும் 2,000 கோடிதானே என்றெல்லாம் நான் சொல்வது அநியாயம் என்று என் புத்தகத்தைப் படித்த ஒரு நண்பர் எழுதியிருந்தார். பேசப்படும் தொகையுடன் ஒப்பிடும்போது வித்தியாசம் எங்கிருந்து வருகிறது என்பதை காட்டப் பயன்படுத்தப்பட்ட சொல் அது. ஊழலை நான் condone செய்யவில்லை.

இனி விஷயத்துக்கு வருவோம். சி.ஏ.ஜி கோமாளித்தனம் வெகு விரைவில் அம்பலமாகிவிடும். அவர்கள் எந்த கவனமும் செலுத்தாமல் காமாசோமாவென்று கணக்கு வழக்கு பார்த்துள்ளனர் என்பது புலனாகிவிடும். அடுத்து இராசா உண்மையில் ஏதேனும் ஊழல் செய்திருந்தார் என்றால் அதுவும் எத்தனை என்பது தெரிந்துவிடப்போகிறது. லஞ்சம் கொடுத்த கம்பெனிகளே இந்த விவரத்தைத் தெரிவிக்கப்போகிறார்கள். அதன்பின் பிரஷாந்த் பூஷண், சுப்ரமணியம் சுவாமி வழக்குகளை உச்ச நீதிமன்றம் கவனித்துக்கொள்ளும்.

இவற்றை மறந்துவிட்டு, நாம் முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்தலாம். அது, ஸ்பெக்ட்ரத்துக்கு ஏலம் வேண்டுமா, வேண்டாமா என்ற அடிப்படையான பொருளாதார, ஆட்சி முறையைப் பற்றியது. அதைப் பற்றி தனியாக விரிவாக எழுதவேண்டிய நேரம் இப்போதுதான் வந்துள்ளது. இதுவரையில் 1,75,000 கோடி ஊழல் என்ற அபத்தம் 99% மக்களைக் குழப்பியடித்தபடி இருந்தது. இந்த எண் அளவுக்கு ஊழலும் அல்ல ஒன்றும் அல்ல என்பதை இப்போது ஓரளவுக்குத் தெளிபடுத்தியாயிற்று என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் மீண்டும் ஒருமுறை குருமூர்த்தியின் ஆடியோவைக் கேட்டுவிடுங்கள்.

6 comments:

 1. மறு பக்கத்திலிருந்து பார்க்கிறீர்கள்,தொடருங்கள்.

  ReplyDelete
 2. 2000 ஆயிரம் கோடிதான் என்றால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மறைப்பு வேலைகள் மிக அதிகம். 2000 கோடிக்கு இவ்வளவு அவர்கள் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. மிக அதிகமான பணம் கைமாறி இருக்கிறது என்று தோன்றுகிறது

  ReplyDelete
 3. ------நிச்சயமாக யூனிநாரில் அப்படி ஏதும் இல்லை. (ஏதேனும் பினாமி ஹோல்டிங் = > பிற்காலத்தில் தரப்படும் என்றெல்லாம் சொன்னால் அதைப் பற்றி விளக்க எனக்கு திராணி இல்லை.)----

  Sir! what else is Green house promoters other than benami of d.m.k & co.? I hope you have read the summary of tape recordings prepared by Direct taxes department. It gives briefs about "shares","round trip money" - the mode of money routing via FDI etc,..
  There are some details on routing of money via Lehman Brothers bank also.

  And green house promoters is just one example of such benami holdings.
  1,75,000 கோடி ஊழல் என்ற அபத்தம் -
  So, Do you think, Stel(the wise guy Sivasankaran,whom You had acknowledged as a shrewd businessman after his stint with Aircel)was quoting a wrong figure for his 2g spectrum?

  ---லஞ்சம் கொடுத்த கம்பெனிகளே இந்த விவரத்தைத் தெரிவிக்கப்போகிறார்கள்--

  There are 2 steps in this issue
  1.awarding license and spectrum in low rates
  2.whether the minister and others benefited(either via direct graft or otherwise)from awarding spectrum & license at low rates.

  Proving point no.2 above is going to be difficult without real effort from cbi,ED,Interpol,Foreign governments like Swiss,USA,Mauritius,St.kits and Navis,etc,etc,..the sleuths have to go deep into money trails.
  And even if the minister and dmk have done this for just 0ne 50 paisa lolly pop or for nothing at all,this is still a crime :).
  Dont you see the very fact that the minister , the party members,the dept secretaries are talking about the details to the representative(Nira) of the companies proves unethical,immoral code of conduct on their part?


  But just because point number 2 cant be proven doesnt mean point 1 is not true.

  ReplyDelete
 4. /-- இந்த எண் அளவுக்கு ஊழலும் அல்ல ஒன்றும் அல்ல என்பதை இப்போது ஓரளவுக்குத் தெளிபடுத்தியாயிற்று --/

  இந்த எண் அளவுக்கு *ஊழலும்* - நடந்தது ஊழல் அல்ல. அரசுக்கான *இழப்பு* என்று சமீபத்தில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டார். இந்த வார்த்தையை கவனிங்க பத்ரி.

  /--ஊழலை நான் condone செய்யவில்லை.--/

  :-)))

  ReplyDelete
 5. We have to remember that CAG does not accuse Raja of swindling 1.76 lakh crores.Infact it does not even say he got bribes or kickbacks.It says he subverted the system to benifit the corporates.As a minister he is responsible for the decisions taken by his ministry.
  The calculation of 1.76 lakh crores is presumptive and comes as the last chapter.The CAG report was prepared with the right intent to just shhok everyone from their chair and take a note of whats happening.The CAG report is within its legal limit to give the figure as 1.76 lakh crore as companies were ready to pay even that much amounts only difference is it will end up on customers and CAG need not worry abt the sector as its not their area of intrest

  ReplyDelete
 6. 2-ஜி உரிம ரத்துக்கு சிஏஜி அறிக்கை மட்டுமே போதாது! - உச்ச நீதிமன்றம்
  image

  புது தில்லி, பிப். 1: தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை அடிப்படையில் மட்டும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் (லைசென்ஸ்) பெற்ற நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  தவறிழைத்த நிறுவனங்களுக்கு அபராதம் மட்டும் விதித்து முறைப்படுத்துவது உள்பட இது குறித்து அரசு ஏதேனும் முடிவு எடுப்பதாயிருந்தால் நீதிமன்றத்தில் தெரிவித்து, அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

  அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது நீதிமன்றத்துக்குத் தெரியாது. ஆனால் எந்த முடிவு எடுப்பதாயிருந்தாலும் அது நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  குறித்த காலத்துக்குள் தங்களது செயல்பாடுகளைத் தொடங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து அவற்றை மீண்டும் செயல்படுத்தச் செய்வதற்கான பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், அரசின் இந்த செயலைத் தடுத்து நிறுத்த உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு மையம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

  இந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.

  பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சார்பில் ஆஜரான ஹரீஷ் சால்வே, அபிஷேக் மனு சிங்வி, சோலி சோரப்ஜி ஆகியோர், "சிஏஜி அறிக்கையின் அடிப்படையிலேயே உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

  ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என சிஏஜி கணக்கிட்டதில் குறைபாடுகள் உள்ளன என்பதை மத்திய அரசு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டினர்.

  நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வதாக அரசு முடிவு செய்தால் அது சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே செய்யக் கூடாது என்று நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனர்.

  லைசென்ûஸ ரத்து செய்வதற்கு 5 காரணங்களை சுட்டிக் காட்டினார் பிரசாந்த் பூஷண். அதில் 2001-ம் ஆண்டு நிலவரப்படியே ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடு திடீரென மாற்றப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு விண்ணப்பங்கள் உரிய காரணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.

  லைசென்ஸ் வழங்கப்பட்ட 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் அடிப்படை தகுதியைக் கூட பூர்த்தி செய்யாதவை. இதில் 69 நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் சேவையைத் தொடங்கவில்லை என்பதால் இந்நிறுவனங்களின் லைசென்ûஸ ரத்து செய்யலாம் என குறிப்பிட்டார்.

  விசாரணையின்போது வழக்கறிஞர் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  ReplyDelete