புலி வருது புலி வருது என்று சொல்லி இப்போது வந்தேவிட்டது! சில மாதங்களாகவே மின் புத்தகப் படிப்பான் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். அது ஜவ்வு போல இழுத்துக்கொண்டே சென்றது.
அமேசான் கிண்டில் முதல் நம்மூர் விங்க் வரை ஏகப்பட்ட மின் படிப்பான் கைக்கருவிச் சாதனங்கள் இருக்கும்போது, இப்போது இது என்ன என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு கைக்கருவி அன்று. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயக்குதளத்தில் இயங்கும் ஒரு மென்பொருள் மட்டுமே. (ஆண்டிராய்ட், ஐபேட் ஆகியவற்றுக்குப் பின்னர் கிடைக்கும்.) சரி, அப்படியே என்றால்கூட புதிதாக ஒன்றை உருவாக்கவேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். நாங்களும் தேடிப் பார்த்தோம். எதுவும் சரியாகச் சிக்கவில்லை.
எங்கள் தேவை இப்படியாக இருந்தது: அச்சில் இருப்பதைப் போன்றே லுக் அண்ட் ஃபீல் இருக்கவேண்டும். ஆனால் யூனிகோட் லேயர் சப்போர்ட் இருக்கவேண்டும் - அதாவது யூனிகோடில் தேடினால் தேடிய வார்த்தை புத்தகத்துக்குள் கிடைக்கவேண்டும். படிப்பது மட்டுமல்ல, புத்தகம் வாங்குவதும் எளிதாக இருக்கவேண்டும். அதாவது ஐட்யூன்ஸ் போல, படிக்கும் மென்பொருளுக்கு உள்ளாகவே e-commerce வசதியும் இருக்கவேண்டும். என்னென்ன புத்தகங்கள் மின்-வடிவில் கிடைக்கும் என்பது தெரியவேண்டும், உடனேயே அவற்றைச் சொடுக்கி, வாங்கும் வசதி இருக்கவேண்டும்.
எழுத்தாளர்கள் தரப்பில் இருந்து பார்த்தால், DRM வசதி இருக்கவேண்டும். ஒருவர் டவுன்லோட் செய்து அடுத்தவருக்கெல்லாம் இலவசமாக அனுப்புவது மாதிரி இருக்கக்கூடாது. அதே நேரம் ஒருவர் காசு கொடுத்து வாங்கினால் குறைந்தது இரண்டு மெஷினிலாவது அவர் படிப்பதாக இருக்கவேண்டும்.
நாங்கள் அறிமுகப்படுத்தும் NHM Feedle இவற்றைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்கிறது. இதற்கு ஆல்ஃபா டெஸ்டர்களை எதிர்பார்க்கிறோம். எங்களுக்குத் தேவை 100 பேர். feedle@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் செய்யும் முதல் 100 பேருக்கு மென்பொருளைத் தரவிரக்கம் செய்யும் சுட்டியை அனுப்புவோம். மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 2003, 7 ஆகியவற்றில் மட்டுமே இயங்கக்கூடியது. நீங்கள் ஏற்கெனவே NHM இணையக் கடையில் பதிந்திருந்தால் உங்கள் பதிவு ஐடியை (கவனியுங்கள், ஐடி மட்டும், பாஸ்வேர்ட் அல்ல) feedle@nhm.in மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் இப்போது பதிவுசெய்து, அந்த ஐடியை எங்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு ரூ. 200 மதிப்புள்ள இணையக் கூப்பனை அனுப்புவோம். அதைக் கொண்டு எங்கள் மின் புத்தகச் சந்தையில் கிடைக்கும் சில புத்தகங்களை நீங்கள் வாங்கி அவற்றைப் படித்துப் பார்த்து, இந்த முறை பயனுள்ளதாக இருக்கிறதா என்றும் இந்த மென்பொருளில் என்னென்ன முன்னேற்றங்கள் செய்யலாம் என்றும் எங்களுக்குச் சொல்லலாம்.
உங்களது கருத்துகளை ஏற்று, மென்பொருளில் வேண்டிய மாற்றங்களைச் செய்து, அடுத்த 15 நாள்களில் ஒரு பீட்டா வெர்ஷனை வெளியிடுவோம். அப்போது, அனைவரும் அதனைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு நாங்கள் வெளியிட்டுள்ள பெரும்பாலான புத்தகங்கள் அனைத்தும் அப்போது இணையச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் நாங்கள் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களும் (எவற்றுக்கு மின் புத்தக உரிமையும் உள்ளனவோ, அவை மட்டும்தான்) இந்த வழியில் கிடைக்கத் தொடங்கும்.
மின் புத்தகங்களுக்கான விலை, அச்சுப் புத்தகங்களின் விலையைவிடக் குறைவாக இருக்கும். எவ்வளவு குறைவு என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. பீட்டா ரிலீஸின்போது முடிவாகிவிடும்.
உலகம் முழுதும் பரவியிருக்கும் கிழக்கு பதிப்பக வாசகர்கள், இப்போது புத்தகம் அச்சாவதற்கு முன்னரேயே மின் புத்தகங்களை வாங்கிவிட முடியும் என்பது மாபெரும் வசதி. மேலும் தமிழகத்தின் பிற பதிப்பாளர்களிடமும் பேசி, அவர்களது புத்தகங்களும் இந்த வகையில் கிடைக்குமாறு செய்யப்போகிறோம்.
முடிவாக:
NHM Feedle ஆல்ஃபா சோதனையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் செய்யவேண்டியது: feedle@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அனுப்பவேண்டியது.
ஆல்ஃபா சோதனையின்போது தேவை 100 பேர் மட்டுமே.
Wednesday, January 05, 2011
Subscribe to:
Post Comments (Atom)
பத்ரி, உங்கள் பதிவைப் பார்த்தவுடன் ஈமெயில் sent...... நான் டாப் 10 ல் வருகிறேனா???
ReplyDeleteம்.. நல்ல முயற்சி. நுட்பத்தின் சாத்தியங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கது.
ReplyDeleteநான் 1:37 pm IST க்கு மின்னஞ்சல் இட்டேன். டாப் 100 இலாவது இருக்கேனா?
ReplyDeleteGood Effort. Thanks Sir.
ReplyDeleteமொபைல் வர்சனே அதிக தேவை, (ஐபோன், ஆண்ட்ராய்ட்) ஆனால் ஆண்டாய்டில் தமிழ் தெரியாது , இதை எப்படி வெல்வது என யோகிக்க வேண்டும் .
ReplyDeleteசத்யா enool என ஆண்டாய்டுக்கு ஒரு ரீடர் செய்து தமிழ் தெரிய வைத்துள்ளார்.
சிறப்பான முயற்சி.
ReplyDeleteமென் நூல்கள் கணினியில் படிப்பதைவிட மென்படிப்பான்களில் படிக்கவே பலர் விரும்புகின்றனர். மார்க்கெட்டில் ஈ.இங்க் தொழில்நுட்பத்தில் எக்கச்செக்க படிப்பான்கள் வந்தேவிட்டன. அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் feedle வேலைசெய்யுமாறு கூடிய விரைவில் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
Any other Indian language have such a home grown one ?
ReplyDeleteநல்ல முயற்சி, பத்ரி. நான் கடந்த சில மாதங்களாக சங்கப்பலகையின் SPReader மூலம் படித்து வருகிறேன். நன்றாக உள்ளது. இதையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteWas alpha testing email sent to participants? The reason I am checking is I responded with my email address but have not received anything from nhm.
ReplyDeleteThanks
Venkat Ramamoorthy
Venkat: Alpha testing has started. If you have not received the link, then you were probably after the first 100 requests. However, don;t worry. Some fixes are already being done and another alpha version will be generated shortly and mailed to you and others who have not yet received the link to download.
ReplyDeleteThanks for the update Badri.
ReplyDeleteThanks
Venkat
அந்த நூறு பேர் பீடிலின் பங்குதாரர்கள் ஆவார்களா?
ReplyDeleteDear Badri, Could you please update on feedle, we didn't get any other information on this. Is in the beta now? (or second round of Alpha Testing)
ReplyDeleteHi Badri,
ReplyDeleteDo you have an update on Feedle timelines?
thanks,
Venkat