Saturday, January 08, 2011

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ‘ராஜா உத்தமன், ராணி உத்தமி’ என்று நான் எழுதியதாக ஒரு நண்பர் அங்கும் இங்கும் எழுதியபடி உள்ளார். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

நேற்று கபில் சிபல் தெளிவாக சில வாதங்களை எடுத்து முன்வைத்தார். அதில்கூட அவர் பலவற்றை முழுவதும் தெளிவாக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு, என் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை கீழே கொடுக்கிறேன்:

யூனிடெக்  கட்டுமான நிறுவனம், யூனிடெக் டெலிகாம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறது. அதற்குத் தேவையான பணத்தை முதலீடு செய்கிறது. யூனிடெக் டெலிகாம்தான் 1,658 கோடி ரூபாய் கொடுத்து உரிமத்தை வாங்குகிறது. இந்த யூனிடெக் டெலிகாமை அந்நிய நிறுவனம் ஒன்று யூனிடெக் கட்டுமான நிறுவனத்துக்கு 9,100 கோடி ரூபாய் கொடுத்து முற்றிலுமாக வாங்கிவிட்டால்தான் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 9,100  கோடி ரூபாய் என்று சி.ஏ.ஜி முடிவெடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அடிப்படையான ஒரு தவறைச் செய்துள்ளனர்.

யூனிடெக் டெலிகாம் நிறுவனம் புதிதாக வெளியிடும் சில பங்குகளை வாங்கி அந்தப் பங்குகளுக்காக 6,120 கோடி ரூபாயை யூனிடெக் டெலிகாமிடம் கொடுத்துள்ளது டெலிநார் நிறுவனம். அதாவது இந்தப் பணம் யூனிடெக் கட்டுமான நிறுவனத்துக்குப் போகவில்லை. மாறாக யூனிடெக் டெலிகாமுக்குப் போகிறது. அந்த நிறுவனம் யூனிநார் என்று பெயர் மாற்றம் பெறுகிறது. இப்போது யூனிநார் என்ற இந்தப் புதிய நிறுவனத்தின் சொத்து என்ன? மிகவும் தவறாக, சி.ஏ.ஜி, இந்தப் புதிய நிறுவனத்தின் சொத்து வெறும் ஸ்பெக்ட்ரம்தான் என்று முடிவு கட்டுகிறது. ஆனால், உண்மையில் இந்த நிறுவனத்தின் சொத்து, ஸ்பெக்ட்ரம் + 6120 கோடி ரூபாய் பணம். அதற்கான மொத்த மதிப்புதான் 9,100  கோடி. அப்படியானால் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 2,980 கோடி ரூபாய்தான். (இதனை முதலீட்டுத்துறை பரிபாஷையில் ப்ரீ-மனி வேல்யுவேஷன், போஸ்ட்-மனி வேல்யுவேஷன் என்பார்கள்.) யூனிடெக் கட்டுமான நிறுவனம் செய்திருக்கும் இன்னபிற செலவுகளையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், உண்மையில் ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு 2,500 கோடிக்கு மேலாக இருந்திருக்காது. நிச்சயமாக, ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு அதிகமாகியுள்ளது, ஆனால் சி.ஏ.ஜி செய்துள்ள எளிமையான தவறு காரணத்தினால், இந்த மதிப்பு 5 மடங்கு அதிகமானாற்போலக் காட்டப்படுகிறது.

ஆக, யூனிடெக் 1,658 கோடி ரூபாய் செலவு செய்து 2,500 கோடி மதிப்புள்ள பங்கைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதைக்கூட அவர்கள் வெறும் பேப்பராகத்தான் கையில் வைத்துள்ளனர்; பணமாக அல்ல. இதைப் பணமாக அவர்களால் எப்போது பெறமுடியும்? தம் கையில் இருக்கும் பங்குகளை விற்கும்போதுதான். யார் அந்தப் பங்குகளை வாங்குவார்கள்? இன்றைய தேதியில் யாரும் வாங்கமாட்டார்கள். ஆனால் யூனிநார் நாடெங்கும் கிளை பரப்பி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, ஏகப்பட்ட முதலீடுகளைச் செய்து, அதன்பின்னர் நிறைய வருமானம் பார்த்து, பின் லாபம் அடைந்து, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படும் நிலைக்கு வந்தால்தான் (அல்லது வேறு யாராவது யூனிடெக் கையில் உள்ள பங்குகளை வாங்குவதாக முடிவு செய்தால்தான்) அவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
ஸ்பெக்ட்ரத்தை இந்தப் பக்கம் வாங்கி, அந்தப் பக்கம் நகர்த்தியதால், அது திடீரென ஐந்து மடங்கு மதிப்புஉயர்ந்துவிட்டதாக சி.ஏ.ஜி காட்டும் கணக்கு அடிப்படை அக்கவுண்டன்சி விதிகளுக்குப் புறம்பானது. எப்படி இதனை நாட்டின் உயர்ந்த அதிகாரி முன்வைத்துள்ளார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
அரசுக்கு நஷ்டம் என்ற வாதத்தை நான் மறுத்திருக்கிறேன். சி.ஏ.ஜி அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் அக்கவுண்டன்சி அரிச்சுவடி தெரியாதவர்கள் செய்தது என்று என் புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சி சென்று இந்தப் புத்தகத்தை வாங்கி, மேலும் நான் என்ன எழுதியுள்ளேன் என்பதைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

14 comments:

  1. Mr.Badari, you seems to act oversmart always... is it your childhood problem!!!!

    Is Uninor idiot to spent 6k crores? the point here was the spectrum which was worth 9k crores had been sold to Unitech at 1658 crores!!!

    I really appreciate your smartness in writing and selling something and making money out of it!!!

    ReplyDelete
  2. try my blog too..

    http://ungalsarans.wordpress.com/

    ReplyDelete
  3. Sir,
    the point he whole country is worried about is :

    ""யூனிடெக் டெலிகாம் நிறுவனம் புதிதாக வெளியிடும் சில பங்குகளை வாங்கி அந்தப் பங்குகளுக்காக 6,120 கோடி ரூபாயை யூனிடெக் டெலிகாமிடம் கொடுத்துள்ளது டெலிநார் நிறுவனம்""

    unitech as no value of its own - no infrastructure,nothing, except the spectrum

    Telenor - a public listed company in norway , (after applying thorough due diligence through AGM meetings, after approval by their share holders and board) has decided to buy shares(and only some shares) in unitech for 6120 crores. So, its obvius that, they valued unitech only for their licence and associated spectrum.

    but govt sold the licens and spectrum to uninor from 1650 crores.

    the point here is why did not govt sell licence and spectrum to uninor for the same value which TELENOR paid. Are you saying, govt shud not have priced the samevaluation as telenor had given?

    and Raja completely removed the "merger" clause in hte terms and conditions,which paved way for selling of equity shares.


    Note : ur point about some european companies making losses because of ininital high payment to govt is also ruled out. this will occur only if the auction was based on beauty contest like manner.
    that is why many govts (including india which used for 3g auction) have roped in the services of a company that specialises auction of radio spectrum based on nash-equilibrium principles.
    in this way it will always be a win win.

    You would have noted that the 3g services are offered in rock-bottom prices, even though the companies had to pay huge money. and 2g is a common-man field which would fetch more revenues than 3g.2g is voice and is going to be used by every single citizen.

    and another point Raja has been fooling around is about the clubbibng of spectrum+licence together. there is a whole ambiguity in this are in relation to 2001,2003 award of licences

    and of course, there are these silly act by raja about hanling of letter of intents like movie tickets.

    ReplyDelete
  4. இந்த பத்ரியின் திறமையை என்னவென்று சொல்வது.
    நீதிமன்றம் இதை தவறு நடந்துள்ளது என்று வழக்கை ஏற்று கொண்டு ரொம்ப நாளாகிறது. ராஜாவை prosecute செய்ய முடியும் என்று சொல்லிவிட்டது. கபில் சிபலை கூட கண்டித்து விட்டது. ஆனால் இவர் இன்னும் எங்கப்பன் குதிருக்குள் இல்லைனு புத்தகம் வெளியிட காரணம்.

    1. தேர்தல் நெருங்கிவிட்டது.

    2. ஸ்பெக்ட்ரம் பத்தி Counter செய்ய திமுகவிற்கு (ராஜாவிற்கு) ஒரு சோர்ஸ் தேவை.

    3. அது அறிவுஜீவி எழுதியதாக இருந்தால் இன்னும் நலம் (இன்னுமா இந்த உலகம் நம்பிகிட்டிருக்கு)

    4. தேர்தல் நிதியில் அவர்கள் எவ்வுளவு புத்தகம் வேண்டுமானாலும் வாங்கி உடன்பிறப்பிற்கு கொடுப்பார்கள். (நிச்சயம் ஒரு 1000 புக்காவது விற்கும்)

    5. சன் டீவியில் பேட்டி நிச்சயம். (2001ல் சிவகங்கை சின்னபையன் போல)

    6. அப்புறம் As I Always said அடுத்த ஒரு வருடம் கிழக்கின் வருமானம் ஓகே.
    மீண்டும் முதல் வரியை படிக்கவும்.

    ReplyDelete
  5. @ பத்ரி:
    கபில்சிபல் சிறந்த வக்கீல். அவரது வாதம் தெளிவாக இல்லையென்றால் அவர் வக்கீல் வேலைக்கே லாயக்கில்லை. நிற்க.

    அவர் சொல்லும் லாஜிக்படி பார்த்தால் நீங்கள் கூட நாளை New Horizon Media பெயரில் கொஞ்சம் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை கொஞ்ச விலைக்கு வாங்கிவிட்டு பிறகு New Horizon Telecom என்று ஆரம்பித்து, வேறு கம்பெனிக்கு கட்டுப்பாட்டை அளிக்கும் அளவில் பங்குகளை மட்டும் விற்று விடலாம். அந்த New Horizon Telecom பங்குகள் திடீரென்று மதிப்பேற்றம் பெற என்ன காரணம்? ஸ்பெக்ட்ரம் உரிமம். அதுவும் தரை ரேட்டுக்கு வாங்கி தியேட்டரில் ப்ளாக் டிக்கெட் விற்பது போல விற்றிருப்பீர்கள். உங்கள் இலாபம் கொள்ளைப் பணம்.

    தொலைத்தொடர்பில் அனுபவமே இல்லாத புத்தகக் கடையான உங்கள் New Horizonக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் எப்படிக் கிடைத்தது? என்ன அடிப்படையில் உரிமம் தந்தார்கள்? (No transparency in those decision making process, buddy!) பின்தொடர்ந்த மேல் விற்பனை இலாபத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது 1 ட்ரில்லியன் ரூபாய் கேள்வி.

    "சி.ஏ.ஜி அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கணக்குகள் அக்கவுண்டன்சி அரிச்சுவடி தெரியாதவர்கள் செய்தது" இது உங்களுக்கே ஓவராக இல்லை? என்னதான் (முனை மழுங்கிய ஏரணத்துடன்) வாதம் செய்து உங்களைப் போன்ற சிலர் CAGஐ வாங்கு வாங்கென்று வாங்கினாலும் இராசாவும் கூட்டத்தினரும் வாங்கியது வாங்கியது தான். நீங்கள் வாங்குவது வக்காலத்து. அதுவும் நாட்டின் மானத்தை வாங்கும் ஒரு கும்பலுக்கு. உங்கள் முரசொலி மாறனிடம் (மனசாட்சி) பதில் வாங்கிப் பாருங்கள்!
    உங்களின் சுலபமான புரிதலுக்காக New Horizon Mediaவை மேற்கோளாகக் காட்டினேன். மன்னார் & கம்பெனி, மன்னார் டெலிகாம் என்று கூட வைத்துப் பார்க்கலாம். லாஜிக் ஒன்றுதான்.

    என் தமிழ் வலைப்பூ: http://hmsjr.wordpress.com/

    ReplyDelete
  6. What about the CAG reference to STel and 3G licensing as other comparisons for arriving at the figure.

    ReplyDelete
  7. பத்ரி தன் வாதங்களை இந்த புத்தகத்தின் வாயிலாக முன் வைத்துள்ளார்.அதை மேற்கோளிட்டு எதிர் வாதங்களை வைப்பது தான் முறை.இதை ஞானி செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார் எனக் கேள்வி.காத்திருப்போம்.

    ஒரு குடியிருப்பில் நெடுங்காலமாக அராஜகம் செய்யும் ஒரு ரவுடியை அங்குள்ள ஒரு மிக நேர்மையான குடிமகன் தானும் தட்டிகேட்பதில்லை.தட்டிக்கேட்பவர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை(ஏனென்றால் அவருக்கு அந்த ரவுடியால் எந்த நேரடியான பாதிப்பும் இல்லை).இது இவ்வாறாக இருக்க அந்த குடியிருப்பின் கோயிலிருந்து அந்த ரவுடி 10 பவுன நகை திருடியதாக மற்றவர்கள் புகாரின் பேரில் போலீசார் அவனை கைது செய்ய,இந்த நேர்மையான குடிமகனும்,தானே வலிய சென்று 10 பவுன என்பது மிகைப்படுத்துதல் அது அதிக பட்சம் 4 பவுன்தான் இருக்கும் என போலீசாரிடம் சொல்லிவிட்டு வருகிறார், அம்புட்டுதான்!

    ReplyDelete
  8. //இதை ஞானி செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்//

    ஓ... பகுத்தறிவு பகலவன்களிடையே மோதலா?

    ReplyDelete
  9. "Telenor - a public listed company in norway , (after applying thorough due diligence through AGM meetings, after approval by their share holders and board) has decided to buy shares(and only some shares) in unitech for 6120 crores. So, its obvius that, they valued unitech only for their licence and associated spectrum."

    The point of the post is lost in this misunderstanding. The post argues that the Telenor-Unitech deal is not a buyout of *existing* shares. Instead, *new* shares were created using the invested money. So, the net worth = spectrum + invested money = spectrum + 6120 crores = 9100 crores. So, the argument is that at best, the spectrum part must be valued at 9100-6120 = 2980 crores.

    @Ganpat - I agree with you - wish there were valid counterarguments posted instead of blindly vilifying a well-meaning attempt by Badri.

    ReplyDelete
  10. Thanks SK for pointing out to Venkat and others, the basic flaw in the arguments put forward by everyone including the CAG. This is simple arithmetic. However, in a desperate desire to 'manufacture' the largest ever corruption scandal, truth and even arithmetic has to take a beating in India.

    Someone asked about the other modes of calculations done by CAG. They are worse. I will write about them next.

    ReplyDelete
  11. "The post argues that the Telenor-Unitech deal is not a buyout of *existing* shares. Instead, *new* shares were created using the invested money. So, the net worth = spectrum + invested money = spectrum + 6120 crores = 9100 crores. So, the argument is that at best, the spectrum part must be valued at 9100-6120 = 2980 crores."

    At best,license can be valued at 2980 crores.
    This post values the license at around 2500 crores,which is much closer to the valuation arrived by Telenor.

    Telenor annual report 2009, reported the details of the valuation and deal between Telenor and Unitech regarding the uninor.( unitech wireless in the report).It values the license, explicitly,at 2370 crores.

    "Telenor - a public listed company in norway , (after applying thorough due diligence through AGM meetings, after approval by their share holders and board)" has valued the license at 2370 crores.

    Badri,

    Any thoughts on,

    Why the value put forward by Telenor is not at all mentioned anywhere in the media? ( They can agree with it or not, but is this not even worth to analyse?they can question this, citing the goodwill part of the deal statement,but anyway, the max is 2980 crores.)May be they have concluded that Norway's/Telenor's corporate accounting/governance/disclousure standards are not as good as India's!!!!!!

    When the letter sent by S Tel( A company not in the good books of CAG report itself) is taken as the basis of the license valuation, why not these people take this Telenor valuation as fair? While the S Tel offer was on paper only,with conditions and later withdrawn, Telenor valuation is real and done.

    ReplyDelete
  12. Dear Chithiram Pesudhu,

    I am happy that you have pulled out data publicly available showing my guess and calculation to be closer to the mark.

    However, no one seems to be interested in "full truth". They are interested only in "convenient truths".

    Anyway, I will also post what I had written about STel in my book later tonight.

    ReplyDelete
  13. Hi Chitiram Pesuthu,

    Your statement "net worth = spectrum + invested money = spectrum + 6120 crores = 9100 crores"

    First question: Why would someone invest in a company an amount of 6120 crores. I assume its for an asset. In my opinion its the Specturm. The fact that Spectrum has been sold at 2001 rates instead of 2008 rates raises some questions. So to assume that 6120 crores is for setting up the business and running the business is a gross over estimation in my view.

    Second Question: Why should one go with the statement of Telenor which is here with a business motive and to make profits. Remember that the number of mobile subscribers to date is 600 million(in 2008 300 million, 20 million in 2003) and still growing. Assuming each consumer pays Rs.100 per month, look at the enormous profit they are in for. Ignoring book value and equity value and looking at it from a consumer point of view, especially based on the fact that the new company has no asset other than the Spectrum, it makes one think that the Specturm charges are grossly underestimated.


    Mr.Badri,

    I am for knowing the full truth. Will wait for your posts on STel as i have not read your book. And will also wait for your post on 3G. As CAG report clearly says that its based on TRAI report which says 2G auction(presuming auction had taken place)prices can be assessed based on
    3G auction price

    Your view please.

    ReplyDelete
  14. Badri Sir,
    An aside query here :
    Kanimozhi has been charged with section 7 of prevention corruption act -( Public servant taking gratification other than legal remuneration in respect of an official Act.)(along with criminal conspiracy 120-b)
    that s , Kanimozhi is assumed to be a public servant,which i think is because of her MP post.
    in this regard,wouldnt Rajya sabha speaker's permission be needed to even file chargesheet against her?
    Please give your view if time permits.
    Thanks.

    ReplyDelete