Saturday, November 05, 2011

தோற்கடிக்க முடியாதவன்

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.

‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.

‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’

‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’

‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

68 comments:

  1. You have not given your opinion on this !! இடுகை தலைப்பு புரியலை, யார் தோற்கடிக்க முடியாதவன் ???

    ReplyDelete
  2. மனிதத்தன்மையோடு இருக்கும் மனிதரை, கடவுளைப் போல் பார்க்க வைத்திருக்கிறது மற்ற மனிதர்களின் செயல்..

    ReplyDelete
  3. He should be right. Ajit, to my knowledge is the only Hero who dismantled his fans associations. Not that I have watched Ajit movies nor am I his fan, but I have observed he is a good human being.

    ReplyDelete
  4. கார்த்திகேயன்: பாசுமதி அரிசி கிலோ ஒருவேளை அந்த விலை விற்கலாம். எனக்குத் தெரியாது.

    ReplyDelete
  5. ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

    ReplyDelete
  6. உங்களின் மொழிபெயர்ப்பான பாகிஸ்தான் செல்லும் ரயில் புத்தகம் எப்போது nhm தளத்தில் கிடைக்கும்?

    ReplyDelete
  7. @என்றென்றும் பாலா ----என்ன சார் இவ்வளவு சொல்லியுமா புரியல அஜீத் தான். ஹிந்தியில் அஜீத் என்றால் தோற்கடிக்க முடியாதவன் என்று பொருள்.

    ReplyDelete
  8. நான் ஒரு அஜீத் ரசிகன் .. எனக்கு சில நேரங்களில் ஒரு சினிமா நடிகனை நாம் ஏன் இவ்வளவு ரசிக்கிறோம் நேசிக்கிறோம் என்று தோன்றும் .. ஆனால் இதை போன்று சில விஷயங்களை படிக்கும் போது நான் ஒரு நல்ல மனிதனைத்தான் ரசிக்கிறேன் , நேசிக்கிறேன் என்ற திருப்தி கிடைக்கிறது .. நன்றி ஸார் பகிர்ந்து கொண்டதர்க்கு ...

    ReplyDelete
  9. I have also heard good things about him. Persons like Ajith who always lend a helping hand to the needy must long live.

    -Ramesh.

    ReplyDelete
  10. Wonderful. Heard about him working in Erode for a garments company and how the friends took care of him to achieve in cinema. He has not forgotten it.

    ReplyDelete
  11. I heard about Ajith something to similar.

    ReplyDelete
  12. I REALLY ENJOYED THE WAY YOU HAVE PRESENTED!!!! AJITH AS A PERSON, HE IS A GOOD HUMAN BEING.AS AN ACTOR, I EXPECT MORE FROM HIM. DEVA

    ReplyDelete
  13. பத்ரி சார்,

    கல்லூரி படிக்கும் போது அடிக்கடி ஸூட்டிங் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதுண்டு பிர்லா பிளாணட்டோரியத்தில்.

    முகவரி, ஏ மழையே மழையே பாடல் காட்சி 3 நாட்கள் எடுத்தார்கள், க்ளாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் மதியம் போயி ஸூட்டிங் பார்த்ததுண்டு.

    நான் பார்த்த அஜித் மூன்று நாளும் வேறு மாதிரியல்லவா இருந்தார்.

    ReplyDelete
  14. //‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்//
    சட்டசபை தேர்தலில் கமல் ஓட்டு போடவந்த வீடியோ யூட்யூபில் இருக்கிறது. அவர் பின்னந்தலையில் முடி குறைவாக இருப்பது நன்றாகவே தெரியும். பல நிகழ்ச்சிகளில் அவரை அருகில் பார்த்தவர்கள் முடி அடர்த்தி குறைந்தே காணப்பட்டதை சொல்லியிருக்கின்றனர். (சந்தோஷமா!!) அவர் எப்போதும் விக் அணிந்தெல்லாம் பொது விழாக்களில் கலந்துகொண்டதில்லை. மம்மூட்டி மோகன்லால் மாதிரி botox treatment செய்துகொண்டவருமில்லை. மன்மதன் அம்பு வில் அவருக்கு முடி குறைந்தே காணப்படும்.

    ஆனால் அவருக்கு 57 வயதிலும் ஏதோ கொஞ்சம் சுமாராக முடி இருப்பது அவர் 30 வயதிலிருந்தே கடுமையாக பராமரித்ததன் விளைவு. அது உங்களுக்கு பொறுக்கவில்லை!

    ReplyDelete
  15. வாழட்டும் அஜீத் பல்லாண்டு

    ReplyDelete
  16. Nice to know about "THALA". Thank you very much for sharing this.

    ReplyDelete
  17. I've heard about "thalai briyaani" but I never believed "he" prepared himself. I thought of his "pro" idea. He is just being "human". As a "star" it takes different take. I was shocked how the officers in India treat their subalterns ( I had no oppurtunity to work in India).

    Badri, I appreciate you did n't comment "on what you heard" and gave us the fact as ti should be.
    Forgive me my poor English !! I've lost touch!

    ReplyDelete
  18. நல்ல உள்ளம் கொண்ட அஜித்தண்ணா நல்லா இருக்கனும்..

    ReplyDelete
  19. படிக்கவே மனம் சந்தோசமடைகிறது. தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம்தான். அதை செய்யும் அஜித் நீண்ட காலம் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  20. அன்பு என்றுமே தோற்பதில்லை..,
    அந்த அன்பிடம்தான் நாம் தோற்று போகிறோம்..!

    ReplyDelete
  21. karthikeyan.kg. said...
    arisi eppodhu 190rs vitradhu..//

    சமீபத்தில் நாங்கள் வாங்கிய அரிசி 120 ரூபாய் அஜீத் எந்த தரத்தில் அரிசி வாங்கினாரோ.. பிரியாணி அரிசி விலை அதிகம் நண்பரே...!!

    ReplyDelete
  22. சில வருசங்களுக்கு முந்தி, பாரீஸ் கார்னர் நகருந்து நிறுத்தம் ஒன்றில் ஒரு கிழவி, "ஏம்ப்பா, இந்த ... நம்பர் பஸ் எங்கெ நிக்கும்?" என்று என்னை மறித்துக் கேட்டார். (பஸ் எண் இப்போது எனக்கு நினைவில் இல்லை).

    "இப்பொ எல்லாப் பஸ்ஸெயும் அந்தப் பக்கம் கொண்டு போயிட்டாங்கம்மா." என்று உயர்நீதி மன்ற வளாகத்துக்கு ஊடாக அவரை நடத்தி 'எஸ்பிளனேடு' பக்கம் கொண்டு வந்தேன். அவருக்கு ஒரு கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுத் துணிப் படுதாவால் மூடப்பட்டு இருந்தது. அதுபற்றி வினவினேன். கண்பார்வை மங்கி இருந்ததாகவும் ஆப்பரேஷனுக்கு அஜித் தம்பி நாலாயிரம் ரூபாய் கொடுத்து உதவியதாகவும் சொன்னார். எனக்கு அஜித் யாரென்று விளங்காததால், அது யார் என்று கேட்டேன். "அதுதாம்ப்பா சினிமாவுல நடிக்கிறாரு இல்ல, அந்த அஜித்துத் தம்பி" என்றார். எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.

    அந்த அம்மா வியாசர்பாடிப் பக்கத்துச் சேரி ஒன்றின் ஒரு பரம ஏழை.

    ReplyDelete
  23. He is a great personality.. My RoLe MoDeL..

    ReplyDelete
  24. If the people in politics get an heart like this real life hero,... I used to dream a lot.

    ReplyDelete
  25. Bandri ungalidam manm thirantha antha oppanai kalignarin peyar?

    ReplyDelete
  26. Badhri, antha oppanai kalaignarin peyar?

    ReplyDelete
  27. என்ன இப்புடி செஞ்சுபுட்டீக... NHM-ல எக்ஸல் நாவல் விற்பனை வலைப் பக்கத்தில் விமர்சனப் பெட்டியத் தூக்கிவிட்டீர்களே...கமெண்டுகள் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தது..

    ReplyDelete
  28. ஹாட்ஸ் ஆஃப்...

    ReplyDelete
  29. am nt ajith fan, but its makes me to love his character...may god bless him...

    ReplyDelete
  30. Proud to be his fan. Thala rockzz

    ReplyDelete
  31. இதையே 6-7 வருடங்களுக்கு முன் ஒரு கேமிரா அசிஸ்ட்டண்ட் சொன்னார். தரமணியில் படித்துக்கொண்டிருந்த காலம். பிலிம் ஸிட்டி அப்போது இயங்கிக்கொண்டிருந்த நேரமாதலால் அங்கு நிறைய படப்பிடிப்பு நிகழும். பொழுதுபோகாத தருணங்களில் படப்பிடிப்பிற்கு போவோம். அப்போது ஒரு படப்பிடிப்பில், (அஜித் படம் அல்ல) கேமிரா அசிஸ்ட்டண்டிடம் பேச்சு கொடுத்த போது, அவர் ஹீரோக்களில் அஜித் போல நல்லவர் யாருமில்லை என்றார். அவர் சொன்ன உதாரணம் - "போன மாசம் நம்மாளு ஒருத்தன் அஜித் சூட்டிங்குல ஐதராபாத்துல இருந்தான் சார்.அவனை பெத்தவரு செத்துடாரு. ஒரு பய கண்டுகல. அஜித்துக்கு தெரிஞ்சதும் பிளைட் டிக்கட் எடுத்து கொடுத்து உடனே மெட்ராஸூக்கு அனுப்பிவிட்டாரு. இந்த மனசு யாருக்கு சார் வரும்?" அப்போது விமானபயணம் பெரிய விடயம்தான்.பயன் பெற்றவர் ஸ்டண்ட் குழுவில் வேலை செய்பவர் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  32. Nice to hear such a words about my THALA....
    Live,let Live..

    ReplyDelete
  33. PESARAVAN 1000 ILLA 10000 KOODA TAPPA PESUNGA ENGA THALA EPPAVUM ENGALUKU THALAIVAN THAN...

    ReplyDelete
  34. அஜித் என்கிற நடிகனுக்குள் ஒழிந்திருக்கும் தன்மை மெய்சிலிர்க்கவைக்கிறது!

    ReplyDelete
  35. அஜித் நல்ல காரியங்கள் செய்வதாகச் சொல்லப்படுவதை நம்பாதீர்கள். ஏனெனில், அஜித் ஒரு பார்ப்பனர். ஆரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி எல்லாம் பொய்யான கதைகளைப் பரப்பி திராவிடர்களை அடிமைகளாக்குகிறார்கள். மானமுள்ள தமிழ் இனத்தவர் யாரும் அஜித், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற பார்ப்பனர்களை ஆதரிக்கக் கூடாது. நம் தனித்தமிழ் இனத்தின் தலைவர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும்.

    ReplyDelete
  36. Dei Inga kooda jaathiya izhunkanthinka da...nallavan and naalathu seiravanukkavathu jaathi vittu veinga da...Nallavargal matrum nalla idayangal vazhattum

    ReplyDelete
  37. Thousands of guyss may have different thoughts,, But the fact is fact.. ThaLa thLa than,,
    He never seems him casteology,, He is always consider himself a humanbeing,,'
    Emadhamum samadham enbathe avar ennam,
    All knows this
    Thanx seshu sir for sharing this

    ReplyDelete
  38. vinodh kumar:
    i am a diehard fan of ajith . initially i was his fan only by seeing his films but after tat he became my role model becoz of his personal life chance a illa .how a man can be like tis nu i had think lot of times. HIS SPECIAL QUALITIES LIKE STRAIGHT FORWARD,MATURED PERSON,GOOD FAMILY MAN FOR SHALINI AND ANOUSHKA,OVER ALL HE IS A GOOD PERSON..

    ReplyDelete
  39. @ஜோசப் வணங்காமுடி
    I am an Eelam tamil, but appreciating a good human doesn't hurt anyone. Doesn't matter what Ajith belongs too.... When Congress killed our people where were you people that talked about tamilan.

    ReplyDelete
  40. அஜித் தர்மம் செய்யட்டும், பலரது பாராட்டைப் பெறட்டும். நல்லதுதான்.அவர் நடித்த பல
    படங்கள் பாடாவதி, பார்க்க சகித்த முடியாதவை.
    2000-2011 ல் அவர் நடித்த பல படங்கள் தோல்விப்படங்கள். ஒரு படம் ஒடும் அடுத்து வரும் இரண்டு/மூன்று பட்ம ஊத்திக்கொள்ளும். அப்புறம் ஒரு படம் ஒடும் இப்படியே எத்தனை ஆண்டுகள்தான் அவரும் நடித்துக் கொண்டிருப்பார்.

    ReplyDelete
  41. Your article runs a risk being circulated among die-hard ajit fans!

    ReplyDelete
  42. கார்த்தி: True! By tracking the emails, comments and tweets I have received, I can see that it already appears in a few Ajit Fan sites. (I didn't know that the actor commanded this many fans:-) This tells me that I should stop writing other kind og blog posts and focus only on Cinema stories. Next one on Vikram, a few on Rajini, and on Kamal and Vijay and Simbu and... Of course, the actresses too. The site access has shot up over the last 2 days - they have actually doubled.

    Unfortunately, I will be returning to other, usually boring themes, I suppose.

    ReplyDelete
  43. \\அஜித் தர்மம் செய்யட்டும், பலரது பாராட்டைப் பெறட்டும். நல்லதுதான்.அவர் நடித்த பல
    படங்கள் பாடாவதி, பார்க்க சகித்த முடியாதவை.
    2000-2011 ல் அவர் நடித்த பல படங்கள் தோல்விப்படங்கள். ஒரு படம் ஒடும் அடுத்து வரும் இரண்டு/மூன்று பட்ம ஊத்திக்கொள்ளும். அப்புறம் ஒரு படம் ஒடும் இப்படியே எத்தனை ஆண்டுகள்தான் அவரும் நடித்துக் கொண்டிருப்பார்.\\

    Avar nadippadhai paarka nangal irukkirom... adhai patri nee kavalai pada thevai illai..

    ReplyDelete
  44. // Next one on Vikram, a few on Rajini, and on Kamal and Vijay and Simbu and...//

    No matter who you write about.. the comments section will be a battlefield between different groups. But AJITH KUMAR is a very rare exception. i m a die hard vijay fan. but i hav immense respect about ajith. We already have noticed it in Vikatan online too.

    ReplyDelete
  45. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டுபோட்டு போஸ் கொடுத்த அஜீத்து உள்ளாட்சி தேர்தலில் ஏனய்யா ஒட்டு போடவில்லை?அப்போ மட்டும் மாமா மனிதன் ஆகிட்டாடரோ?

    ReplyDelete
  46. Nice Human Being...
    Nice Share...
    Thala pola varuma ?

    ReplyDelete
  47. @ஜோசப் வணங்காமுடி:
    அவர் பார்ப்பணராக இருப்பதால் அவரை நீங்கள் தீயவனாக பார்க்க்த் துணிகிறீர்கள்.
    சரி, நீங்கள் ஒரு கிறிஸ்துவர் போலத் தெரிகிறது, நானும் உங்களைத் தீயவனாகப் பார்க்கலாமா?
    அஜித்தின் மனைவி ஷாலினி ஒரு கிறித்தவர் என்பது உமக்குத் தெரியாதோ!!!

    உமக்கு (உனக்கு) கடவுள் நல்ல அறிவு வழங்கட்டும், கண்டிப்பாக நீர் ஒரு பகுத்தறிவாளன் இல்லை..

    ReplyDelete
  48. I have heard from 1996 about Ajith silently providing assistance for poor children to school and also to attend college. He has even been enquiring about their studies at regular intervals. This has been done all over Tamil Nadu. I hope he does that now also.

    ReplyDelete
  49. @Rooban
    அய்யா இந்த கேள்விக்கும் பதில் சொல்லு!!
    நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டுபோட்டு போஸ் கொடுத்த அஜீத்து உள்ளாட்சி தேர்தலில் ஏனய்யா ஒட்டு போடவில்லை?அப்போ மட்டும் மாமா மனிதன் ஆகிட்டாடரோ?

    ReplyDelete
  50. 15 years back Nan rasitha oru Ajith Birth day wishing poster : "Manithargalil nadigargalai parthiruken" Nadigargalil nan partha orey Manithan" Ellam sarithan cine industry peopleku matumthan avar seyarar Anal Surya society ku seyarar AGARAM avar matum illama inum neriya youth serthukitu ellarium seiavaikarar

    ReplyDelete
  51. அசீத்து நடிகை ஹீராவுக்கு அல்வா கொடுத்ததையும் சொல்லலாமே?

    ReplyDelete
  52. For the friend who spoke on Caste..

    Ippavum neenga maaallannaa neenga eppavaumae maara mudiyaadhu..Oru Nadigan..Oru Mnushan avlo dhaan ..Innum Aaariyan Draaviddannu numba paesittu irukra varaikkum ulloorla numbala vechi arasiyal pannitto dhaan iruppaanga..

    Still if u stick on to ur opinion..then thanks..we shall never grow up as a society...

    ReplyDelete
  53. Nice.... Perfect mankind Mr.Ajith...

    ReplyDelete
  54. யார் எதைப் பத்திப் பேசினாலும் அழைக்காமலே ஆஜராகி ஜாதி, திராவிடம், ஆரியம் என்று குரைக்கிறது ஒரு தனிக்கலை தான். நாம் பேசுகிற விஷயத்துக்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இருக்கா என்று யோசிக்கிற வழக்கமெல்லாம் கிடையாதோ? அது சரி, தெரு நாய் என்ன வருகிறவன், போகிறவனிடம் நீ என்ன படிச்சிருக்கே, என்ன வேலை பாக்கறே, நல்லவனா, கெட்டவனான்னு கேட்டு விட்டா குரைக்கிறது? உலகமே தலை கீழ சுற்றினாலும் மனித இனமே இல்லாத இடத்திலும் கூட ஜாதிக் குரைப்பை விட மாட்டார்களோ? இன்னிக்கு புதன் கிழமை என்று சொன்னால் கூட ஐயோ பார்ப்பனன் திராவிடன் மேல் ஜாதியைத் திணித்து விட்டது போதாதென்று கிழமையையும் திணிக்கிறானே என்பார்களோ? இந்த வெற்றுக் குரைப்பை விட்டு விட்டு தலித்துகளின் கஷ்டத்தைத் தீர்க்க நிஜமாகவே ஒரு துரும்பையாவது கிள்ளிப் போடத் துப்பிருக்கிறதா இவர்களுக்கு? அஜீத் பற்றி ஏற்கெனவே எல்லாருக்கும் தெரியுமே. குடும்ப ஜால்ரா ஆட்சி நடந்து கொண்டிருந்த போது சினிமாத் துறையினர் மீதான குடும்ப அடக்கு முறை பற்றி அந்தக் குடும்பத் தலைவர் எதிரிலேயே சொன்ன தைரியம் எந்த மறத் தமிழனுக்காவது இருந்ததா? உண்மையிலேயே அவர் தோற்கடிக்க முடியாதவர்தான்.

    ReplyDelete
  55. I just want to add a thing, Vijay fans unga Vijay Bakthiya, inga kaataatheenga, avaru jalra podra idathulla kaatunga!!! Thala is really good Human being than an actor!!!

    ReplyDelete
  56. I liked some films of Ajith while some have been horrible. Some of those horrible films had a much more pathetic film as competition from Vijay while the Vijay film did well at the box office. Yes Ajith has not chosen the best scripts and though he has done very good in certain scenes in his films and has shown his capacity as an actor he is used only as a star and he doesnt try a role where the actor subdues the star. But Surya and Vikram had placed the actor with equal importance as that of the star. One has to note that many of his films between 2000 and 2007 were done for same producer, his the then friend. Additionally many of the directors were at their debut (Ajith wanted to help new directors). The choice of script obviously was influenced by the friend.

    Placing their film roles apart and looking into their character, each is special in their own way. But the extent to which Ajith goes makes him noteworthy. When Ajith was more into racing than films and was successful in F3 racing, he needed 3 crores for sponsoring the race and a producer offered him the amount as advance. But Ajith was much pre occupied with racing and so he wasnt sure when he would return full time acting. The film had to wait for Ajith's return and the money would pile up with interest (interest rates are very high with cine industry financiers). The producer was fine with that. But Ajith refused citing this reason and his the then box office uncertainty. Ajith borrowed the money. - Dinamalr Varamalar.

    Anyone else might go for the money especially film stars. But Ajith did it different. He chose what he felt best at the situation.

    Yes. Ajith had an media reported romantic relationship with Heera and an rumored but unconfirmed extra marital with Vasundhara. Perhaps that aspect of his personal life isnt clean. But the way he behaves with people not too close to him is reported to be only good eventhough he isnt seemingly as good with the near and dear.

    ReplyDelete
  57. nice...i have one doubt...intha postukkum jathikkum enna link?pakkikal yaravathu answer pannungappa....

    ReplyDelete
  58. பத்ரி இங்கே கூறிய செய்தி ஒரு நடிகரைப் பற்றி அந்தத் துறையில் இருந்த ஒருவர் பகிர்ந்து கொண்டது.ரசிகர்களை தன்னுடைய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாத ஒன்றிரண்டு நடிகர்களில் இவர் முதன்மையானவர். தேவையில்லாத பல விமர்சனங்களை இங்கே பலர் எழுதியுள்ளனர். அதைத் தவிர்த்து கட்டுரையின் முக்கியக் கருத்தை ஒட்டிய விமர்சனங்களை சொல்வது ஆரோக்கியமாக இருக்கும்

    ReplyDelete
  59. Ajith thinks if he copy Rajini in his personal life, TN people will make him next Rajini easily. This is one clear example of such incident and an innocent person's assumption based on Ajith's public stunt.

    "MGR came from KL and I also came from KL. So is there any chance that I will become CM of TN" - nu thannoda astrology guruvidam ketta perasaikaran Ajith.

    ReplyDelete
  60. அஜீத் நடிகர்களை கொலுபொம்மைகள் ஆக்கும் கட்சியை எதிர்த்தார்...
    இதோ உடன் பணி புரியும் நபர்களை அரவணைத்து செல்கிறார்...
    உண்மையில் எனக்கு சந்தோசம்...

    இவரிடம் ஒரு குறை செவி வழி வந்தது.. உண்மையா...
    ஒரு படத்தில் வேலை செய்யும் போது அஜீத் - விஜய் நடந்துகொள்ளும் விதம் பற்றியது...

    விஜய் ஷூட்டிங் செல்வதற்கு முன், இயக்குனரை பெண்டு நிமிர்த்தி அவர் இமேஜுக்கு ஏற்ப கதை வசனம் காட்சிகளை திணிக்க வைத்துவிடுவாராம். பல சந்திப்பு அது குறித்து இருந்தாலும், படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டால் இவற்றில் தலையிட்டு குழப்பாமல் ஒத்துழைப்பார்.

    இப்போது அஜீத் பற்றி யூகித்திருப்பீர்கள்,
    அதேதான்... விஜய்க்கு எதிர்மறை இவர் என்று கேள்விபட்டேன்...
    இவர் ஆரம்பத்தில் அமைதி.. படபிடிப்பு தளத்தில் வசனம் மாற்றுவது, காட்சியை மாற்றுவது என தலை சுற்றவைப்பார்.. (இது உண்மையெனில் 'தல' தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்)

    ***/இந்த தகவல் பகிர்தலின் இன்னொரு நோக்கம்..
    மொத்தத்தில் படத்தின் வெற்றியை / தோல்வியை (பெரிய) நடிகர்களே 75% தீர்மானிக்கிறார்கள்.
    இயக்குனர்கள் பல புது யுக்திகள், கனவுகளுடன் வந்தாலும் இவர்களை போன்ற பெரிய நடிகர்களிடம் அனைத்திற்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை..
    தோற்றால் இயக்குனர் பொறுப்பு... செயித்தால் சம்பளம் கூட்டுதல்... இது ஒரு சினிமா இலக்கணம் ஆகிவிட்டது./***

    சினிமா தொழிலில் அனைவரும் சந்தோசமாக சம்பாதிக்க - சிறந்த ஒவ்வொருவரின் அனுபவம் திறமைகளையும் இந்த துறையின் சாதனைகளாக்க, அஜீத் போன்ற பல நல்ல திரை-துறை மனிதர்கள் உதவினால், அனைவரும் மகிழ்வார்கள்.

    (surya.kmr என்ற எனது FB பக்கத்திலும் இதை பதிவு செய்திருக்கிறேன்)

    ReplyDelete
  61. I am not a big fan of movies, or movie starts. But I see Ajit's films, just to express my support to him. No one dares to dissolve fans association, nor they recognize everyone as human beings in the set. Long live Ajit.

    ReplyDelete
  62. எம்ஜிஆரை பற்றியும் விஜயகாந்தை பற்றியும் மிக பரந்த மனமுள்ளவர்கள் என்று கேள்வி. கேட்காமல் உதவி செய்பவர்கள் என்று நல்ல பெயர்.

    புகழ்பெற்றவன் வள்ளலாக இருந்தால் ஊர் போற்றும். கூடையில் வேர்கடலை விற்பவர், ஒரு பொட்டல கடலையை பிச்சைக்காரனுக்கு தானம் செய்வதை பார்த்திருக்கிறேன். என்கு சொல்ல?

    ReplyDelete
  63. http://www.vinavu.com/2011/11/14/ajith-mutton-biryani/

    ReplyDelete