Friday, November 11, 2011

உத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்

இன்று காலை தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அதிர்ச்சியையும் அளித்தது. செய்தியைவிட இரண்டு படங்கள் கதையைத் தெளிவாகச் சொல்கின்றன.

உத்தப்புரம் கிராமத்தில் தலித்துகள் தங்கள் பகுதிகளுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக ஒரு சுவரையே எழுப்பியிருந்தனர் ஆதிக்க சாதியினர். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய பலத்த போராட்டங்களுக்குப் பின், நிர்வாகம் தலையிட்டு அந்தச் சுவரை உடைத்துத் தள்ளியது. இப்போது அதே கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் தலித்துகள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்படி உள்ளே நுழைந்த தலித்துக் குடும்பங்களின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சிதான் முதல் படம்.


அதே செய்தியில் தென்பட்ட அடுத்த படம்தான் அதிர்ச்சியைக் காண்பிக்கிறது. ஆதிக்க சாதி மக்களின் முகத்தில் தென்படும் அதிர்ச்சி, பதட்டம் இரண்டையும் அந்தப் படம் பயங்கரமாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்று பயமாகவும் இருக்கிறது.

12 comments:

 1. Both the photos convey a thousand words!

  ReplyDelete
 2. hard to change this generation. coming generation will be a lot different and broad minded.

  ReplyDelete
 3. உத்தப்புரம் கிராமம் இனி உததமபுரம் ஆகும் என்றால் நல்லது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஹரிஜனப் பிரவேசம் என்னும் இயக்கத்தின் கீழ் தலித்துகள் ஆலயங்களுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.அந்த இயக்க்த்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல சமூகத் தலைவர்கள் இல்லாது போகவே இந்த இயககம் இன்னும் முழுமை பெறாததாக உள்ள்து.
  சமூகத்தில் உயர் ஜாதியினரின் இடத்தை நடுத்தர ஜாதியினர் கைப்பற்றிய பின் அவர்கள் தங்கள் பங்குக்கு தீண்டாமையைப் பின்பற்றத் தொடங்கினர் என்ப்தையே இது காட்டுகிறது/

  ReplyDelete
 4. For these reasons, we can dare to scarifice our culture/langauage. what to do??
  with tears,
  jaya

  ReplyDelete
 5. அப்படியே இக்கோவில் பூஜாரியாகவோ, அர்ச்சகராகவோ ஒரு தலித்தை நியமித்தால் இன்னும் மகிழ்வேன்.

  ReplyDelete
 6. நண்பரே....!

  இந்த இரண்டு போட்டோவில்

  முதல் போட்டோவில்...
  மூதாட்டியின் பின்னால் இருக்கும் கைக்குழந்தை...
  ஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...!

  இரண்டாவது போட்டோவில்
  முதலிலேயே போட்டோவுக்கு தன் பின்தலையை காட்டும் கைகுழந்தை...
  ஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...!

  "மாறதையா....! மாறாது...!
  மனமும் குணமும்... மாறாது...!
  மதமும்... சாதியும்... மாறாது...! மறையாது...!"

  இந்த மதமும்... சாதியும்... இல்லையென்றால் தமிழ்நாட்டுக்காரன் உயிர் வாழ்வது கடினம்...!

  ReplyDelete
 7. வார்த்தைகளில் விவரிக்க முடியாத வித்யாசங்கள்.

  ReplyDelete
 8. @காஞ்சி முரளி
  ////முதல் போட்டோவில்...
  மூதாட்டியின் பின்னால் இருக்கும் கைக்குழந்தை...
  ஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...!

  இரண்டாவது போட்டோவில்
  முதலிலேயே போட்டோவுக்கு தன் பின்தலையை காட்டும் கைகுழந்தை...
  ஒரு இருபது ஆண்டுகள் கழித்து ஐடி படித்து வந்தபோதும்...! ///

  அதென்னே சார், ஐடி படிச்சு வந்தா?. ஏன் மாற்ற துறையில் வந்தா சாதி ஒழியாதா?.. தயவு செய்து ஐடி யை மேன்மைபடித்தி பேசுவதை தவிருங்கள். உண்மையில் நாடு மேன்மை அடையாமல் இருக்க ஐடியும் ஒரு... இல்லை முக்கியமான காரணம்.

  @பத்ரி,
  ///இந்த நிலையில் அந்த கிராமத்தில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. ///

  உண்மை பத்ரி,

  /// அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்று பயமாகவும் இருக்கிறது.///

  ஆபத்து இருபக்கம் உள்ளவர்களுக்கும் சமமாக உள்ளதென்றே நினைக்க தோன்றுகிறது

  ReplyDelete
 9. நான் இரண்டாவது போட்டோவில் சாதிவெறி உணர்வாளர்களைப் பார்க்கவில்லை. அறியாமையில் உழல்பவர்களாகவே பார்க்கிறேன். "ஐயய்யோ.. இவர்களெல்லாம் கோவிலில் நுழைந்துவிட்டார்களே.. கோவில் தீட்டுப்பட்டுவிட்டதே" என்று அறியாமையினால் விளைந்த ஆதங்கத்தில் அழுகிறார்கள்.

  இன்றும் கூட குருவாயூர் கோவிலில் இந்து அல்லாத ஒருவர் நுழைத்து விட்டால் தீட்டுப்பட்டுவிட்டது என்று கோவிலைக் கழுவி விடுகிறார்களே.. இவர்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  ReplyDelete
 10. இன்றும் கூட குருவாயூர் கோவிலில் இந்து அல்லாத ஒருவர் நுழைத்து விட்டால் தீட்டுப்பட்டுவிட்டது என்று கோவிலைக் கழுவி விடுகிறார்களே..

  இப்படி நடப்பதாக விசரித்தவரையில் தெரியவில்லை; ஆதாரமிருந்தால் கொடுங்கள் அதை எதிர்க்கலாம், மாற்ற முயலலாம்; இல்லாவிட்டால் பொய்களின் அடிப்படையி சமூகங்க்களிடையே விரோததையும் வெறுப்பையும் தூண்டாதீர்கள், பரப்பாதீர்கள்.

  ReplyDelete
 11. இதற்கு ஆதாரம் எதற்கு? சில ஆண்டுகளுக்கு முன் வயலார் ரவியின் மகன் குருவாயூர் கோவிலில் நுழைந்ததும் அவர் சென்ற பின்னர் அவர்கள் கோவிலைக் கழுவிவிட்டதும் சர்ச்சையைக் கிளப்பவில்லையா..? (வயலார் ரவியின் மனைவி மெர்சி, எனவே மகன் பிறப்பால் கிறித்தவர் என்பது அவர்களின் கருத்து) அது சர்ச்சையானதால் கோவில் நிர்வாகம் பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
  http://articles.timesofindia.indiatimes.com/2007-06-13/india/27961205_1_ravikrishna-temple-affairs-union-minister-vayalar-ravi
  ஆனாலும் இன்னும் அந்த கொள்கை அப்படியேதான் இருக்கிறது (According to the Devaswom Act, only Hindus are allowed inside Guruvayur and ten other temples in the neighbourhood).
  நான் ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேனே!... கருவறை இருக்கும் பிரதான பிரகாரத்துக்குள் "Non-Hindus are not allowed" என்று பெரிதாக தகவல்பலகையே வைத்திருப்பார்கள்.

  இன்றைக்கும் யேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்குள்ளே கச்சேரி செய்யவேண்டுமானால், தான் மனதார பக்தியுடனே கோவிலுக்கு வருகிறேன் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து ஆரிய சமாஜத்திடம் சான்றிதழ் பெற்றே செல்ல வேண்டும்.

  சர்ச்சையைக் கிளப்புவதற்காக நான் எதையும் கூறவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம், பெரிய பெரிய கோவில்களிலேயே மதங்களின் பெயரால் மக்களைப் புறக்கணித்துவிடுகிறோம்.. அதை தவறாக நினைக்காதபோது, சின்ன ஊர்களில், சாதியின் பெயரால் கோவில்களில் நடக்கும் புறக்கணிப்புகளை கேள்விகேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான்.

  ReplyDelete