Sunday, November 20, 2011

விக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்

விக்கி இந்தியா மாநாடு சற்றுமுன் நிறைவுபெற்றது. ஒவ்வொரு இந்திக் மொழி விக்கிபீடியாவிலும் அதிகப் பங்களிப்பு செய்தவர்கள் பாராட்டப்பட்டனர். இறுதியில் ஜூரி விருதுகள் என்று மூன்று கொடுத்தார்கள். முதலாக செங்கைப் பொதுவன்.


இவரை நான் முதலில் பார்த்தது, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தில். தமிழ் எப்படி எழுதுவது என்று அவர் கேட்டு, என்.எச்.எம் ரைட்டரை நிறுவச் சொல்லிக்கொடுத்தேன். இவருக்கு வயது 76. கைகள் நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்கும். தம்ளரைப் பிடித்துக்கொள்ள முடியாது. அவருக்குத் தேநீர் கொடுக்கும்போது, இரு கைகளுக்கு இடையில் கைக்குட்டையைப் பிடித்துக்கொண்டு அதற்கிடையில் தேநீர்க் கோப்பையைப் பிடித்துக்கொண்டுதான் குடிப்பார். உணவு உண்ணும்போது அவருடைய மனைவி உதவினால்தான் அவரால் உண்ணமுடியும்.

அப்படிப்பட்டவர் எப்படி விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கிறார் என்பது ஆச்சரியமே.

அடுத்து விருது பெற்றவர், அனிருத் என்ற ஹிந்தி விக்கிபீடியா பங்களிப்பாளர். இவர் கண் பார்வையற்றவர்.


இவர் ஹிந்தி விக்கிபீடியாவுக்கு இதுவரையில் பங்களித்திருப்போரில் ஏழாவது இடத்திலும், இப்போது பங்களிப்போரில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார் என்றார்கள். மிகுந்த ஆச்சரியம்தான்!

8 comments:

 1. உலகிற்கு உதவ ஊனமோ,முதுமையோ தடையில்லை என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். விருது பெற்றவர்களில் வித்தியாசமான இவர்களை உடனடியாக அறிமுகப்படுத்திய உங்களின் வேகத்திற்கு ஒரு சபாஷ்!விருதுபெற்ற மற்றவர்களைப் பற்றியும் எழுதுங்கள்-அப்படியே தமிழ் விக்கிபீடியாவிற்கு எப்படிப் பங்களிப்பது என்பது பற்றியும்!

  ReplyDelete
 2. செங்கைப் பொதுவன் தமிழ் விக்கியில் உள்ள மிகப்பெரும்பாலான இளைஞர்களை விட வேகமாகப் பங்களிப்பவர். சங்க இலக்கியம், சங்க கால மன்னர்கள், புலவர்கள், பண்பாடு, புவியியல், நாடுகள் என சங்க காலத்தைப் பற்றி சுமார் 850 கட்டுரைகள் எழுதி வருகிறார். பங்களிப்பு எண்ணிக்கை வாரியாக விக்கிக்கு பங்களிப்பவர்களில் 14வது இடத்தில் உள்ளார். இரண்டாண்டு காலமாக தினம் பங்களித்து வருகிறார். விக்கி நிரல், தொழில்நுட்பம் என அனைத்து விசயங்களையும் கற்றுப் பங்களிக்கின்றார்.

  இன்னொரு ஆச்சரியமான விசயம், தமிழ் விக்கியர்களில் மிகவும் மூத்தவர் பொதுவன் ஐயா அல்ல. 84 வயதாகும் profvk எனப்படும் பேரா. வி. கிருஷ்ணமூர்த்தி தான் மிக மூத்தவர். அவரும் விக்கி மாநாட்டில் ஒரு பேச்சு கொடுப்பதாக இருந்தது (தாய்மொழி வழியாக அறிவியல் வளங்களைப் பெறுவது குறித்து). ஆனால் உடல்நிலை காரணமாக அவரால் வர இயலவில்லை.

  ReplyDelete
 3. translatorvasan,

  >>தமிழ் விக்கிபீடியாவிற்கு எப்படிப் பங்களிப்பது என்பது பற்றியும்!

  http://ta.wikipedia.org
  என்பது தான் முகவரி. இங்கு வந்து பயனர் கணக்கினை பதிவு செய்து கொள்ளுங்கள்.

  உதவிப் பக்கம் கீழே உள்ளது
  http://tawp.in/r/9

  முதலில் தளத்தை சற்று மேய்ந்து, விக்கிப் பக்க அமைப்பைப் பரிச்சயப் படுத்திக் கொள்ளுங்கள். பின் சிறிய மாற்றங்களைச் செய்வதிலிருந்து ஆரம்பியுங்கள். நீங்கள் தொகுக்க ஆரம்பித்த உடனே உங்கள் உரையாடல் பக்கத்தில் (ஒவ்வொரு பயனர் கணக்குக்கும் ஒரு உரையாடல் பக்கம் இருக்கும்), உங்கள் உதவிக்கான குறிப்புகள் இடப்படும். நீங்கள் ஏதேனும் தடுமாறினால், உடனடியாகக் காண்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

  குறிப்பான உதவி எதுவும் வேண்டுமெனில்
  http://tawp.in/r/tkc

  என்ற பக்கத்தில் கேட்கலாம்

  ReplyDelete
 4. Looks like you are in disbelief that these people have really contributed. I have been following your blog for a long long time and this is the first time your words are not probably sounding the way you wanted to express. Many people may think like me; would be better if you can rephrase them Bhadri. Just a suggestion.

  ReplyDelete
 5. Yes, I agree to Mr.Annoy Badri...your words sounds like you are in disbelief about these people..

  Regards,
  Baranee

  ReplyDelete
 6. /// ஹிந்து விக்கிபீடியாவுக்கு ///

  Should be HINDI

  ReplyDelete
 7. ** /// ஹிந்து விக்கிபீடியாவுக்கு /// Should be HINDI **

  நன்றி. சரி செய்துவிட்டேன்.

  ReplyDelete
 8. செங்கைப்பொதுவன் சென்னை விக்கி பட்டறை பலவற்றில் கலந்து கொண்டுள்ளார். அவர் சென்னை விக்கியர்கள் நடத்திய ஒரு நிகழ்வில் மடிக்கணினி கொண்டு பங்கேற்ற போது தான் அவர் எப்படி இருப்பார் என்றே பலருக்கு தெரிந்தது. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அறியும் பொழுது வேதனையாக உள்ளது. உடல் நலம் சரியில்லாத பொழுதும் விக்கிக்கு தொடர்ந்து பங்களிக்கிறார் என நினைக்கும் போது பெருமையாகவும் உள்ளது. இவர் சொல்லாமல் சொல்லும் விசயங்கள் பல.

  ReplyDelete