Sunday, August 01, 2004

மாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு

நேற்று நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2004இல், மாலன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு கிழக்கு பதிப்பகம்** சார்பாக வெளியிடப்பட்டது.

மாலன் சிறுகதைகள் வெளியீடு


மாலன் சிறுகதைகள் புத்தகத்தை விழுப்புரம் சரகக் காவல்துறை DIG சஞ்சய் அரோரா வெளியிட, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் திட்டத்துறை இயக்குனர் A.R.அன்சாரி பெற்றுக்கொண்டார்.

திருப்பூர் கிருஷ்ணன்மாலன் சிறுகதைகளைப் பற்றியும் தமிழ் இலக்கிய உலகில் மாலனின் இடம் பற்றியும் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார். இந்தப் பேச்சின் விரிவான எழுத்து வடிவம் கூடிய விரைவில் இணையத்தில் வெளியாகும்.

மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு, மாலன், கிழக்கு பதிப்பகம், ஜூன் 2004, பக்: 448, விலை ரூ. 180

நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த எழுத்தாளரையும், ஒரு பதிப்பாளரையும் கவுரவிக்கிறார்கள். அதன்படி நேற்று சு.வேணுகோபால் என்னும் அற்புதமான எழுத்தாளருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. சு.வேணுகோபால் நுண்வெளிக் கிரணங்கள், கூந்தப்பனை போன்ற நாவல்களை எழுதியவர். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல குள்ளமான உருவத்திற்குள் கூர்ந்த எழுத்துத் திறமை வாய்ந்தவர். இவரைப் பற்றி அதிகமாக வெளியே எதிவும் தெரிவதில்லை. தற்பொழுது இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நவீன இலக்கியத்துறையில் ஆசிரியராக உள்ளார்.

சு.வேணுகோபாலுக்குப் பாராட்டுப் பத்திரம்


[கிழக்கு பதிப்பகம், நியூ ஹொரைசன் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் கம்பெனியுடையது. இந்த கம்பெனியில் எனக்கு பெரும்பான்மைப் பங்குகள் உண்டு. கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளராக நான் செயல்படுகிறேன்.]

9 comments:

 1. சஞ்சய் அரோராவுக்கும் அன்சாரிக்கும் தமிழ் தெரியுமா!?

  ReplyDelete
 2. சஞ்சய் அரோராவுக்கு தமிழ் பேசத் தெரிந்துள்ளது. பேசினார். ஆனால் படிக்கத் தெரியாதாம். அன்சாரிக்கு படிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது.

  அப்புறம் ஏன் இவர்கள் இரண்டு பேரும் புத்தகத்தை வெளியிட அழைக்கப்பட்டனர் என்பது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்.

  ReplyDelete
 3. இந்த மாதிரி மீசை நெய்வேலிக்கிட்ட மொத்தவிலையில் விற்கிறார்களா? :) Buy one, get one free? - வெங்கட்

  ReplyDelete
 4. இந்த மாதிரி மீசை நெய்வேலிக்கிட்ட மொத்தவிலையில் விற்கிறார்களா? :) Buy one, get one free? - வெங்கட்

  ReplyDelete
 5. யாரோட மீசை? போலீஸ் டி.ஐ.ஜியோடதா? இல்லை மாலனோடதா? இல்லை சு.வேணுகோபாலனோடதா? இல்லை, பின்னாடி நின்னு கைதட்டிகிட்டிருக்கற அகஸ்தியன் பதிப்பக நிர்வாகியோடதா?

  மேடையில மீசையில்லாத ஒரே ஆசாமி அன்சாரி தான். திருப்பூர் கிருஷ்ணனுக்கு மீசையோட, தாடியும் சேர்த்து!

  ReplyDelete
 6. கான்சல் ஜெனரல் (Consul General).

  என் கட்டுரைகளைப் புத்தகமாகவா? எந்தக் கட்டுரைகளைச் சொல்கிறீர்கள்? புத்தகம் போடுமளவிற்கு நான் இதுவரை எதுவும் எழுதவில்லையே?

  ReplyDelete
 7. High Commission -> High Commissioner
  Consulate -> Consul General
  Embassy -> Ambassador

  இப்படி பல பேர்கள் ஆங்கிலத்தில்தான் உண்டு. எனக்குத் தெரிந்தவரை தமிழில் எல்லாமே தூதரகம், தூதர் தான்.

  ஆங்கில உபயோகம் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும். காமன்வெல்த் நாடுகள் ஒவ்வொன்றும் (அதாங்க, இங்கிலாந்துக்குக் கீழ் அடிமையாக இருந்த நாடுகள்) அதைப் போன்ற மற்ற நாடுகளில் வைத்திருக்கும் தூதரகத்திற்கு High Commission என்று பெயர். அதன் தலைவர் High Commissioner. காமன்வெல்த் இல்லாத மற்ற நாடுகளில் வைத்திருப்பது Embassy. அதன் பொறுப்பாளர் Ambassador.

  Consulate என்பது Embassy ஐ விட பொறுப்பில் குறைந்தது. அமெரிக்காவின் embassy இந்தியாவில் புது தில்லியில் இருக்கும். ஆனால் மற்ற சில்லறை விவகாரங்களை கவனிக்க சென்னையில், மும்பையில் (அதாவது விசா மட்டும் வழங்க, வர்த்தக உறவை வலுப்படுத்த) இருப்பவை consulate கள். The diplomatic mission in Delhi will be called American Embassy. The diplomatic office in Chennai is called American Consulate.

  ஆக ஹாங் காங் சீனாவின் ஒரு பிரதேசம் மட்டுமே என்பதால் இந்தியா அங்கு வைத்திருப்பது consulate. வேண்டுமானால் "துணைத் தூதரகம்" என்று வைத்துக் கொள்வோமா?

  ReplyDelete
 8. Spelling என்றாலே ஆங்கிலம்தான் என்பது கிட்டத்தட்ட சரியே.

  ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற non-phonetic மொழிகளில்தான் spelling, pronunciation இரண்டும் வெவ்வேறாக இருக்கும். அதனால்தான் உச்சரித்த ஒரு சொல்லுக்கு spelling என்ன என்று தனியாகச் சொல்ல வேண்டும். தமிழ் போன்ற phonetic மொழிகளுக்கு எழுதுவதும், உச்சரிப்பதும் ஒன்றுதான். அதனால் தனியாக spelling என்று ஒன்றும் கிடையாது. தமிழில் நா-ற்-கா-லி = நாற்காலி. ஆங்கிலத்தில் சி-எச்-ஏ-ஐ-ஆர் = சேர்

  எனவே தமிழில் ஸ்பெல்லிங் என்பதற்கு சமமான சொல் இல்லை. [எழுத்துக்கூட்டி எழுதுதல் என்று வேண்டுமானால் சொல்லலாமோ?]

  ReplyDelete
 9. நாங்கள்ளாம் அதை 'எழுத்துப்பிழை'ன்னு சொல்லுவோம்! :-)

  ReplyDelete