Friday, August 06, 2004

தினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்

மூன்று நாள்கள் முன்னதாக (3 ஆகஸ்ட் 2004 அன்று) பாமகவினர் எனச் சந்தேகப்படும் சிலர் தினமலரின் கடலூர் அலுவலகத்தில் புகுந்து கணினிகள், ஸ்கேன்னர்கள், ஏ.சி, கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி இந்த சம்பவத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி யைப் பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது, என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

பாமகவின் வன்முறைப் பின்னணி எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படியிருந்தும் அந்தக் கட்சிக்கு வடகிழக்குத் தமிழ்நாட்டில் வன்னியச் சாதி சார்ந்த தீவிர பலம் உள்ளது. இந்த ஒரு காரணத்தால்தான் திமுகவும், அஇஅதிமுகவும் மாறி மாறி பாமகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். வன்னியர் சங்கமாக இருந்தபோதகிட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்வைத்து மரங்களை வெட்டித் தெருவெங்கும் எறிந்து கூத்தடித்தவர்கள் இன்று 'பசுமைத் தாயகம்', 'மரம் வளர்ப்போம்' என்று பாவமன்னிப்பு கோருகின்றார்கள். நாளையே ரஜினிகாந்த், விஜயகாந்த், தினமலர் தொடர்பான வன்முறைகளைத் தாண்டி, 'அஹிம்சையே ஆயுதம்', 'மனிதநேயம்' என்பதைக் கூடத் தங்கள் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளலாம்.

திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகள் கூட இன்று இதுபோன்ற அப்பட்டமான வன்முறைகளில் ஈடுபடாத போது, பாமக மட்டும் தொடர்ச்சியாக தனக்குத் தோன்றிய போதெல்லாம் வன்முறையில் ஈடுபடுவதன் காரணம் என்ன? இப்பொழுதைக்குத் தனக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதா கூட தன் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என்ற எண்ணமா? வைகோவை தேவையின்றி பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதா, ராமதாஸ் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை மர்மமாகவே வைத்துள்ளார்.

மேற்படி வன்முறை சம்பவத்திற்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமிருந்தும் நேரடியாக எந்த அறிக்கையும் வரவில்லை.

தினமலர் மீதான் வன்முறைச் சம்பவம் ஜெயலலிதா, 'தி ஹிந்து' மீது கட்டவிழ்த்துவிட்ட அதிகாரத்துடன் ஒப்பிடப் படுகிறது. அதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜெயலலிதா கட்டவிழ்த்துவிட்டது அடிதடி வன்முறை அல்ல. அதிகார துஷ்பிரயோகம். அவதூறு வழக்குகள். அதையொட்டி சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுகள். அதைத் தொடர்ந்து காவல்துறை தி ஹிந்து அலுவலகம் உள்ளே நுழைந்து கலாட்டா செய்தது. பெங்களூர் வரை காரில் சென்று தி ஹிந்து மேலதிகாரிகளை வழிமறித்தது போன்றவை. ராமதாஸ் கட்சியினருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இதற்கு எவ்வளவு நாள்கள் ஆகும்? கையில் மாநில போலீஸ் அதிகாரம் வேண்டும். அதனால் நேரடியாக உருட்டுக் கழிகளையும், அரிவாள்களையும் எடுத்து விட்டனர்.

இரண்டு தலைவர்களின் நடைமுறையையும் எதிர்க்கும் நாம், ராமதாஸ் பிராண்ட் வன்முறையை அதிகமாக எதிர்க்க வேண்டும். இது சட்டத்துக்குப் புறம்பானது. சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுக்கு எதிராக தி ஹிந்து பத்திரிகைக்காரர்கள் உச்ச நீதிமன்றத்துக்காவது போக முடிந்தது. ராமதாஸ் பிராண்ட் வன்முறையில் ஆஸ்பத்திரிக்கோ, சுடுகாட்டுக்கோ போகவேண்டிய நிலை.

இப்பொழுதைக்கு தமிழகத்தின் அரசியலிலிருந்து களையெடுக்கப் படவேண்டியவர்கள் ராமதாசும் அவரது கட்சியினரும். பாமகவோடு கூட்டணி வைப்பவர்கள் மீண்டும் ஒருமுறையாவது யோசனை செய்துவிட்டு கூட்டணி அமைப்பது நல்லது.

பி.கு: தினமலர் ஒழுக்கசீலமான பத்திரிகை இல்லை. பாமக - ரஜினி விவகாரத்தில் தேவையற்று, பொய்யாக, சிண்டுமுடிந்து குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

10 comments:

 1. Hi,
  PMK is a very strong political force in Tamil Nadu..It is ultimately the People of Tamilnadu (a section ),being represented by the PMK. First, the people should be forced with heavy punishment to abide by law.That will include correcting everyone irrespective of Party politics.As long as the Law enforcement agencies are not independent & fair, that will be a long cry..
  With top officials & Politicians corrupt to core, only a people's revolution can fix things for better..
  MAY BE TOO MUCH TO EXPECT FROM TAMILIANS( INDIANS )!!
  -SRIRAM

  ReplyDelete
 2. >பாமகவினர் எனச் சந்தேகப்படும் சிலர்
  "alleged" to be PMK partymen, huh? :-)
  (சந்தேகிக்கப்படும் தானே?)

  ReplyDelete
 3. தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் செய்தால் அமைதியாக இருப்பதும் அ.தி.மு.க செய்தால் அதை வீறு கொண்டு எதிர்ப்பதும் என்று பத்திரிகையாளர்கள் (எல்லோரும் அல்ல, பெரும்பான்மையானவர்கள்) தொடங்கி வருடங்கள் ஆகிறது. தி.மு.க.விற்கு எதிராக எது சொன்னாலும் அது நடுநிலைமையின்மை என்பதும் அ.தி.மு.க எது செய்தாலும் அதைத் திட்டித் தீர்த்தால் அது நடுநிலைமை என்றும் நிறுபட்டுவிட்ட ஒன்று. இதே அரஜாகத்தை அ.தி.மு.க. முன்னின்று நடத்தியிருந்தால் கண்டனப் பேரணிகளும் உண்ணாவிரதமும் மனிதச் சங்கிலியும் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டிருக்கும். இப்போது தாக்கியிருப்பதோ பா.ம.க. தற்போதைய உறவை நினைத்துக்கொண்டு தி.மு.க. சும்மா இருக்கும். நாளைய கணக்கை மனதில் வைத்து அ.தி.மு.க. சும்மா இருக்கும். தி.மு.கவிற்கும் ராமதாஸுக்கும் உள்ள சுமூக உறவே பலர் அமைதியாய் இருப்பதற்குக் காரணம். மேலும் தாக்கப்பட்டது தினமலர்தானே. தினமலர் புனிதமான பத்திரிகை அல்ல. புனிதமற்ற பத்திரிகைகள் தாக்கப்படலாம் என்பதுமல்ல. இதே தாக்குதல் முரசொலி மீது நடந்திருந்தால் எல்லாத் தரப்பிலிருந்தும் கொந்தளிப்புக்குக் குறைவிந்திருக்காது. இதுதான் இன்றைய எதார்த்தம்.

  ReplyDelete
 4. இந்தத் தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியது.ஆனால் பா.ம.கவினர் தான் இதை செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்.பா,ம,க மோசமான கட்சி என்றால் பா,ஜ.க, சிவசேனை போன்றவையும்தான் மோசமான கட்சிகள்.கருத்துரிமையைப் பொறுத்த வரை இந்த இரண்டு கட்சிகளும் .அது கபீப் தன்வர் நாடகமாகட்டும், தீபா மேத்தா படப்பிடிப்பாகட்டும் இல்லை கேர்ள்பிரண்ட் போன்ற படங்களாகட்டும் "நேரடி நடவடிக்கை"யில் இறங்கியுள்ளன. இன்னும் சொல்லப்பபோனால் இவைதான் பா.ம.காவை விட ஆபத்தான கட்சிகள்.

  நாடக்க்கலைஞர் தன்வர் கபீப் நாடகங்களை மத்தியப் பிரதேசத்தில் நடத்தவிடாமல் செய்தன இந்த்துவ அமைப்புகள்.அதுகுறித்து ரா.கி.கிளப்பில் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.ஆனால் தினமலர் மீது தாக்குதல் என்றால் பா.ம.க வை விமர்சித்து, பா..காவினர் தாக்கினர் என்பதற்கு ஆதாரமிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பாமல் அனல்பறக்கும் கடிதங்கள். ஏன் - பா.ம.க மீதான வெறுப்பினை காட்ட இது ஒரு வாய்ப்பு.

  ReplyDelete
 5. இணைய விவாதக்களங்களிலும்,தளங்களும் மாற்றுக்கருத்திற்கு என்ன இடமுள்ளது.ஒரு "பெரிய எழுத்தாளர்-விமர்சகர்" கேள்வி பதில் என்ற பெயரில் தனி நபர் அவதூறுகளை பரப்புவார்.அதற்கு பதில் தர வாய்ப்பினை மறுக்கும் இணையதளமும் தமிழில் உள்ளதே.பா.ம.காவை திட்டும் முன் கரன் பிரச்சனா போன்றவர்கள் இதையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்

  ReplyDelete
 6. Dear Ravisrinivas,

  You are bringing yr personal things here. It has been already cleared to you about the limitations of www.maraththadi.com. We could not upload the responses on the "Ask the Author" Program. If you have reviews, questions and comments on that, You can join maraththadi group and post as a maraththadi group member. If you want to have a wide discussion, you can share yr thoughts in websites which allows vast discussions like thinnai.com, etc. www.maraththadi.com is not responsible for the comments given by the author. its his own comment and he and he only is the responsible for his comment. All these things are already cleared to you. If you have comments on the answer of "periya ezuththaaLar - vimarsakar", you can raise them in the websites which allow public discussions. I feel sorry to use badri's blog's comment section to say these things. You have made me to do so. This is my last reply on this. If you have further queries, pl contact the head of maraththadi.com. I answered so far as a co-owner of maraththadi group and one of the co-ordinators of the program.

  Thanks and regards.

  ReplyDelete
 7. Dear HaranPrasanna
  The point is simple.The response should be accessible to all who read the original comment.Otherwise how will they know that there has been a response.if i write a rejoinder as a letter in epw or outlook and when published it is accessible to all readers.

  ask yourself whether the rule has been followed in this case.i have been informed that only moderators comments on ask the author will appear at marathadi.com but have you not published a comment by a reader as well.is not then obvious that the rule is not for all but for some persons only.

  i am not interested in having a conversation on this
  with owners of maraththadi on this, particularly when
  even a reply i sent to the person who asked that question was not allowed to be posted.

  it is not a question of technicalities, it is a question of giving space to diverse views and ethics.i hope you will understand this.

  if maraththadi is willing to publish my rejoinder in the site in a way that is accessible to all, not just to marathathadi group members i am willing to send a rejoinder, otherwise no.i am clear on this.
  thanks for your response
  regards
  ravi srinivas

  ReplyDelete
 8. Is not the attack on Kalaikathir - a brother(!) magazine of Dinamalar and not on Dinamalar itself. Some one mentioned about the Dinamalar family feud and division of areas and hence a new daily called kalaikathir for one of the brothers. Attack on Dinamalar office in Madurai drew widespread protest while attack on Kalaikathir may not evoke so much. Even then Ramadoss and Co have to be reined in or condemned by the custodians of paththirikkai suthanthiram.

  Mahesh

  ReplyDelete
 9. Is not the attack on Kalaikathir - a brother(!) magazine of Dinamalar and not on Dinamalar itself. Some one mentioned about the Dinamalar family feud and division of areas and hence a new daily called kalaikathir for one of the brothers. Attack on Dinamalar office in Madurai drew widespread protest while attack on Kalaikathir may not evoke so much. Even then Ramadoss and Co have to be reined in or condemned by the custodians of paththirikkai suthanthiram.

  ReplyDelete
 10. loosu ellaam amaidhiya irunga

  ReplyDelete