Wednesday, August 04, 2004

நிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்

நவீன சினிமாவுக்கான களம் என்று மாத இதழாக வெளிவருகிறது 'நிழல்'. ஆசிரியர், வெளியிடுபவர் ப.திருநாவுக்கரசு.

ஆகஸ்ட் மாத இதழில்
 • இரா.மதுவந்தியின் நியூ ஜெர்சி தமிழ்க்கலைப்படவிழா குறிப்புகள்
 • பத்ரியின் மேற்படி விழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சி பற்றிய கட்டுரை (ஏற்கனவே திண்ணையிலும், இந்த வலைப்பதிவிலும் வெளியானது)
 • டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் எப்படி உருவாக்கப்படும், திரையிடப்படும் என்பது பற்றிய பா.கலைச்செழியனின் அறிமுகக் கட்டுரை
 • திரைச்சொல் அகராதி - சில சினிமா தொடர்பான ஆங்கிலக் கலைச் சொற்களுக்கான விளக்கங்கள்
 • தமிழ்த்திரையில் நகைச்சுவை நடிகர்கள் பற்றிய திருநின்றவூர் டி.சந்தானகிருஷ்ணனின் கட்டுரை - சில தமிழ்ப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளைக் கட்டமிட்டு விவரித்துள்ளார்
 • நியூ படம் பற்றிய விமரிசனம் - கலையாளன்
 • நான்கு புது இயக்குனர்களின் குறும்படங்களை மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து'டன் ஒப்பிட்டு "'அ' விலிருந்து 'ஃ' வரை" என்ற க்ருஷ்ணாவின் கட்டுரை
 • ரோகாந்தின் 'மோனலிசா' என்னும் இதுவரை படமாக்கப்படாத முழுநீளப் படத்தின் கதை, வசனம், திரைக்கதை (unproduced script). இந்த இதழிலிருந்து இதுபோன்ற முழு கதை, திரைக்கதை, வசனத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளார்களாம்.
 • scriptnet 2002-04 - யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திரைக்கதை உருவாக்கல் பயிற்சி முகாமில் உருவான ஏழு குறும்படங்களின் கதைகள் பற்றிய குறிப்புகள்
 • மும்பை திரையுலகத்திலும், உருது இலக்கியத்திலும் இயங்கி வந்த இஸ்மத் சுக்தாய் என்பவர் சாதத் ஹஸன் மண்ட்டோ பற்றி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் - ராமாநுஜம்
 • 'விடை தேடும் குரலும், முடியாத கூந்தலும்' என்னும் நாடகம் பற்றிய கோ.பழனியின் விமரிசனம் [பாஞ்சாலி சபதம் நிகழ்வு தற்காலச் சூழலில் மாற்றம் பெறுகிறது...]
 • நூல்கள் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள், ஒருசில புது குறும்படங்கள் பற்றிய குறுகிய அறிமுகங்கள்
 • திருச்சியிலிருந்து ஜம்புநாதன் என்னும் வாசகர் எழுதிய 'பேரழகன்' படம் பற்றிய காட்டமான விமரிசனம்

தனி இதழ் ரூ. 30, ஆண்டு சந்தா ரூ. 200. தமிழ் நவீன சினிமா மீது அக்கறையுள்ள, விருப்பமுள்ளவர்கள் அவசியம் வாங்க வேண்டிய இதழ்.

முகவரி: நிழல், 31/48 இராணி அண்ணாநகர், கே.கே.நகர், சென்னை 600 078, தொ.பே: 044-2472-8326, மின்னஞ்சல்: nizhal_2001@yahoo.co.in

5 comments:

 1. பத்ரி, சந்தா கட்டினால் வெளிநாடுகளுக்கு (முக்கியமா சவுதிக்கு) இந்தப் பத்திரிகை அவர்களால் அனுப்ப முடியுமா?

  ReplyDelete
 2. ராஜா: வெளிநாட்டு சந்தா பற்றி நேரடியாகவே திருநாவுக்கரசுவிடம் எழுதிக் கேளுங்களேன்? அவரது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துள்ளேன்.

  இதழில் எங்கும் வெளிநாட்டு சந்தா பற்றி எந்தத் தகவலும் இல்லை.

  ReplyDelete
 3. ராஜா, பத்ரி
  அவர்கள் அனுப்புவார்களென்றே நினைக்கிறேன். 2002 இலே நான் அப்படித்தான் அமெரிக்காவுக்குப் பெற்றிருந்தேன்.

  ReplyDelete
 4. Hi Badri, thanks for this post. I have come across another article about Nizhal. From Pathivukal. For the benefit of your blog readers (who may not have read it), I am giving that URL here. http://www.geotamil.com/pathivukal/magazine_nizhal_july2004.html
  Thanks, PK Sivakumar

  ReplyDelete