தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் லூசுகள் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று ஜப்பான் காரர்கள்.
எட்டுத்திக்கும் சென்று அங்குள்ள நல்லவற்றையெல்லாம் கொண்டு வந்து சேர் என்பார் ஒரு மீசைக்காரர். ஜப்பான் காரர்கள் இந்தியாவிலிருந்து புத்த மதத்தைப் பெற்றார்கள். இப்பொழுது சில காலமாக மறை கழண்டு போய் ரஜினி படம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி என்னத்தைத்தான் கண்டார்கள் ரஜினியின் படத்தில் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை.
ரஜினி ஒழுங்காக நடித்தது ரெண்டே ரெண்டு படங்கள்தான் - ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும். அதன் பிறகு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் திறமையையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒரே ஃபார்முலா படமாக போட்டுத் தள்ளினார். எம்ஜியாருக்குப் பின்னர் 'மினிமம் கேரண்டி' நடிகரானதும் தானே குப்பைகளைத் தயாரிக்கவும் தொடங்கினார். அது கடைசியாக 'பாபா' அபத்தத்தில் வந்து முடிந்தது. இப்பொழுது ஜக்குபாய், 'உதட்டைத் தச்சி அதில் ஐஷ்வர்யா ராய் வந்து இச்சு' என்று இவர்களது ஆசை தாங்க முடியவில்லை.
அவரது பக்தர்கள் - டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தான் முதல் பக்தர் - வார இதழ்களில் ஜக்கம்மா பற்றி சரடு விட ஆரம்பித்து விட்டார்கள். படத்தில் இது இருக்கும், அது இருக்கும்... நம் எல்லோருக்கும் தெரியும் அந்தப் படத்தில் எதுவுமே இருக்கப் போவதில்லை. வார இதழ்க்காரர்களுக்கும் வேறு வேலையில்லை. ரஹ்மான், வைரமுத்து, ரவிக்குமார், ரஜினி வீட்டு டிரைவர், நாய் என்று யாரையாவது பிடித்து நாலு கேள்வி கேட்டு எதையாவது எழுத வேண்டும். அப்பொழுதுதான் புத்தகம் விற்கும். பின்னர் படம் வந்ததும் கொஞ்சம் ஹைப் அடித்துவிட்டு, படம் ஊத்தியதும் இழுத்து மூடிக்கொண்டு போகலாம்.
ஜப்பானிலிருந்து இந்தியா வந்தோமா, நாலு கோவிலுக்குப் போய் புண்ணியத்தைத் தேடிக்கொண்டோமா என்றில்லாமல் 'அருணாசலா இன்', 'ராகவேந்திரா கல்யாண மண்டபம்', 'ஆஷ்ரம் ஸ்கூல்(??)' என்று புனித யாத்திரையைத் தொடங்குகிறார்கள். ரஜினியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவரது மனைவியைப் பார்த்தோம், நம்ம ரஜினி ராம்கியைப் பார்த்தோம் என்று புளகாங்கிதப்பட்டு நம்மைப் புல்லரிக்க வைக்கிறார்கள். அவர்கள் போட்டிருக்கும் டீ-ஷர்ட்! அய்யோ கொடுமையே. "எங்களுக்கு உங்களை ஒரு நாள் ஜப்பானுக்கு வர வேன்டும்". எங்களுக்கு உங்களை ரஜினி படம் பார்க்காமல் இருக்க வேன்டும்!
தமிழ் கற்றுக்கொண்டிருப்பது ஒன்றுதான் அவர்கள் செய்வதில் பிடித்துள்ளது. தமிழை அப்படியே நன்றாகக் கற்றுக்கொண்டு, பழந்தமிழ் இலக்கியங்கள், நவீனத் தமிழ் இலக்கியங்கள் என்று படிப்பதை விட்டு, மீனா, சவுந்தர்யா படத்துக்குப் பூ போட்டு வீணாகிப் போகிறார்களே என்று வருத்தமாக உள்ளது!
ரஜினி ராம்கியும் ஜப்பான் மக்காள்ஸும் பாஷா ஆட்டோக்காரன் டான்ஸ் ஆடும் படம் நெஞ்சை உருக வைக்கிறது. அதை தமிழ்த் திரை டிவி காண்பித்து புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள்.
ஏன்யா ரஜினி ராம்கி, ஜப்பான் பக்தர்கள்கிட்ட காவடி எடுக்கறது, அலகு குத்திக்கறது பத்தியெல்லாம் சொல்லிக் கொடுங்களேன்? ரஜினி பிறந்த நாள் அன்னிக்கு ஒசாகா தெரு முழுக்க நாக்குல அலகு குத்தி, காவடி எடுத்து, அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக்கட்டும் உங்காளுங்கெல்லாம்.
அப்புறம் ஜப்பான்ல கோவில் ஒன்னும் தொறக்கல்லியா நம்ம பக்தர்கள்? இதனாலதான்யா அந்த ஊர்ல எரிமலை இன்னமும் பொங்கி வழிஞ்சுகிட்டிருக்கு!
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
11 hours ago
:))
ReplyDelete:claps: :claps:
உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு தலைவர், அடுத்த மாதம் மனம் திறப்பார் :-)
ReplyDeleteநல்லா சொன்னீங்க பத்ரி!
ReplyDelete===
Pari: :)))
ஜப்பான் காரன் பைத்தியம் புடிச்சு அலைஞ்சா இவர் என்னங்க செய்வார்? பிற்காலத்துலே, அவர், மற்ற பலகாரணங்களால, இந்த சோ-கால்ட் மினிமம் கியாரண்டி படங்களிலே நடிச்சார்தான் என்றாலும் , ஆரம்ப காலங்களிலே நீங்க சொன்ன ரெண்டு படங்கள் தவிரவும் வேற நல்ல படங்களிலே நடிச்சிருக்கிறார். அந்த 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' ( தில்லுமுல்லு) கேரக்டரை அவரைத் தவிர வேற யாரும் சிறப்பா செஞ்சிருக்க முடியாது. தப்புத் தாளங்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், கை கொடுக்கும் கை, நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, கதா சங்கமா ( கன்னடம்) . புவனா ஒரு கேள்விக்குறி, ஜானி, அவர்கள், அப்படின்னு இன்னும் கொஞ்சம் படங்களையும் சேர்த்துக்கலாம், தப்பில்லை. நாம இப்ப நிறைய பார்க்கிறோம். நிறைய படிக்கிறோம். நிறைய விஷயங்கள் தெரியுது. சுமார் அல்லது மோசம்னு இப்ப நினைக்கிற படங்கள் எல்லாம், அவை வந்த காலகட்டத்துலே, நாம பார்த்த போது, ஏதோ ஒரு வகையிலே நம்ம ரசனைத் தேவைகளை பூர்த்தி செஞ்சது இல்லையா? அதுதான் முக்கியம்.
ReplyDeleteநல்ல படம், நல்லா இல்லாத படம், நல்ல நடிப்பு, நல்லா இல்லாத நடிப்பு அப்படின்னு முடிவுக்கு வருவது எல்லாம்,. ஒவ்வொருத்தரோட ரசனை, படிப்பு, அறிவு ஆகியவற்றின் பின்புலத்தால வருவது. விருப்பம் இருக்கிறவர்கள் ரசனையை உசத்திக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் அங்கேயே நிற்கிறார்கள். ரஜினிகாந்த் படத்தின் முதல் காட்சிக்கு,வந்து அவர் திரையில் தோன்றிய உடன் பூமாரி பொழிந்து ஆரவாரம் செய்யும் ஒரு front bencher இன் ரசனையையும், சத்யம் தியேட்டரில் அட்வான்ஸ் புக்கிங் செய்து ஹாரிபாட்டர் படம் பார்க்கிற ஒருத்தனுடைய ரசனையையும் ஒப்பிட்டு, யாருடைய ரசனை உசந்தது அல்லது தாழ்ந்தது என்று சொல்ல முடியுமா? ரஜினிகாந்த் படத்தைப் பார்க்கிற , படம் முடிந்ததும், அத்துடன் மறந்துவிட்டு, 'தலைவரின்' அடுத்த படம் வரும் வரை, ஆகவேண்டிய காரியத்தை பார்க்கப் புறப்பட்டுவிடுகிறான். ஆனால், நாம் தான் இதை அப்படியே நினைவில் வைத்திருந்து, ரசிக மனப்பான்மை, உளவியல் காரணங்களை எல்லாம் அனலைஸ் செய்து, இணையம் வரை இழுத்து வந்து ஒரு விவாதப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு இது போன்ற சினிமா ஆசாமிகளின் மீதான பித்து புதுசில்லை. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் துவங்கி, கே.ஆர்.ராமசாமி, பி.யு.சின்னப்பா, டி..ஆர்.மகாலிங்கம், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், குஷ்பூ, விஜய் வரை தொடர்கிறது. தென்னிந்தியாவில், இந்த போக்கினை அதிகமாகக் காணலாம். இது தவறுதான். ஆனால், இது அரசியல் வாதிகளின் லஞ்சம் போல, அரசு ஊழியர்களின் மெத்தனம் போல, திரைப்படங்களின் திருட்டு வீசிடி போல, நகரப் பேருந்து நிறுத்தங்களில் நடக்கும் ஈவ் டீசிங் போல, டீக்கடைகளில் இருக்கும் கசங்கிய தினத்தந்தி போல தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியா கலாசாரம். இதை நான் வேதனையுடன் தான் சொல்கிறேன்.
நல்ல சொக்காய் பாண்ட்டு போட்டுக் கொண்டு, தொழில் அது இது என்று என்ன கெரவத்தையோ செய்து கொண்டிருந்தாலும், என் கிட்ட வந்து கொஞ்சம் தோலுரித்துப் பார்த்தால், ரசிகர் மன்றங்களில் எல்லாம் ஈடுபடாத ஒரு ரஜினிகாந்தின் விசிறிதான் உள்ள இருப்பான். " அப்படி என்னத்தைத் தான் கண்டார்கள் ரஜினி படத்தில்? "னு கேட்டு இருக்கீங்க. எனக்கும் தெரிலீங்க. ஆனா, குடுத்த துட்டுக்கு ·புல் என்டர்டெயின்மெண்ட். என்ன, பாபால தான் கொஞ்சம் சிலிப் ஆயிருச்சு. சரி பண்ணிக்கிடலாம்.
ரஜினி மீது அபிமானம் இருக்கிறவங்க 'நட்டு' கழண்டவங்க அப்படிங்கற மாதிரி என்னமோ சொல்லி இருந்தீங்க. அங்க தான் கொஞ்சம் போல இடிச்சுது. அதான் இத்தனை நீளமான பதில்.
அன்புடன்
பிரகாஷ்
பத்ரி,
ReplyDeleteநம்ம ரஜினி காபி கிளப் பக்கமே வர்ரதுக்கு பயமா இருக்கு.
பிரகாஷ்:
இது ஒன்றும் 'aesthetics' சம்பந்தப் பட்ட விஷயம் இல்லை. பச்சை அரசியல், மத விளையாட்டு தொடர்பானது என்பது உங்களுக்கு தெரியாதா?. எம்ஜீயாருக்கு அரசியல் கையைப் பிடித்து பயிற்று வித்தது யார்? ரஜினிக்கு பின்னால் இயங்கும் ஊடகங்கள் சும்மா எண்டெர்டைன்மெண்ட் விடயங்களா? நானும் ரஜினி படம் பார்ப்பேன். ஆனால் அதற்குப் பின்னால் நடக்கும் சமுதாய, அரசியலை நாம் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
ரசனை சம்பந்தப் பட்ட aethetic relativism போல இதைமாற்றி எளிதாக தப்பிவிடமுடியாது.
பத்ரி,
ReplyDeleteநம்ம ரஜினி காபி கிளப் பக்கமே வர்ரதுக்கு பயமா இருக்கு.
பிரகாஷ்:
இது ஒன்றும் 'aesthetics' சம்பந்தப் பட்ட விஷயம் இல்லை. பச்சை அரசியல், மத விளையாட்டு தொடர்பானது என்பது உங்களுக்கு தெரியாதா?. எம்ஜீயாருக்கு அரசியல் கையைப் பிடித்து பயிற்று வித்தது யார்? ரஜினிக்கு பின்னால் இயங்கும் ஊடகங்கள் சும்மா எண்டெர்டைன்மெண்ட் விடயங்களா? நானும் ரஜினி படம் பார்ப்பேன். ஆனால் அதற்குப் பின்னால் நடக்கும் சமுதாய, அரசியலை நாம் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
ரசனை சம்பந்தப் பட்ட aethetic relativism போல இதைமாற்றி எளிதாக தப்பிவிடமுடியாது.
பிரகாஷ்: நான் தமிழ்நாட்டு ரஜினி பக்தர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அவர்களைக் காப்பாற்றுவது கஷ்டம். நான் ஜப்பானிய ரசிகர்களைப் பற்றி மட்டும்தான் ஆதங்கப்பட்டேன். தமிழ்நாட்டில் இவர்கள் ரசிக்க அது ஒன்றுதான் கிடைத்ததா என்று...
ReplyDeleteமற்றபடி ரஜினி படங்கள் - அதுவும் முக்கியமாக கடைசியாக எடுக்கப்பட்ட நாலைந்து படங்கள் - மிகவும் அபத்தமானவை, பிற்போக்கானவை, கெடுதலானவை, ஆபத்தானவை என்பது என் எண்ணம். அவற்றைத் தோண்டித் துருவி பலர் எழுதி விட்டனர்.
இந்தப் படங்களால் ஜப்பானியர்களுக்கு அவ்வளவாக ஆபத்தில்லை. தமிழகத்தில்தான் ஆபத்து. தமிழக ரசிகர்களின் ஆழ்மனதில் தவறான எண்ணங்களை விதைக்கும். ஜப்பான் காரன்/காரி, வெங்கட் சொல்வது போல, "எவ்ளோ பெரிய கண்ணு" என்று பார்த்துவிட்டு, டி-ஷர்ட் வாங்கிப் போட்டுக் கொண்டு, தமிள் கற்றுக்கொண்டு 'அருணாச்சலா இன்'னில் ஒரு வாரம் தங்கி அந்நியச் செலாவணியை செலவழித்து விட்டுப் போவான்/ள்.
Your attack on Rajini is unwarranted.
ReplyDeleteIf you feel Rajini is getting " Undeserved fame", the same can be said about our cricketrs including Sachin Tendulkar.
The productivity loss ( Watching cricinfo updates during worktime) due to following the actions of these great crickters are higher than the loss due to Rajini mania.
All mania need to be condemned. Dont target rajini alone.
//இப்பொழுது சில காலமாக மறை கழண்டு போய் ரஜினி படம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.//
ReplyDelete:LOL: :LOL:
http://vanthiyathevan.blogspot.com/2004/08/blog-post_19.html
ReplyDeleteHai,
ReplyDeleteEvery one Know japaneese are Hard workerers. so He like Rajini. Because Rajini got this position through his hard work & honest. But The useless below like you always criticise others & do useless work. Rajini only give the success movie in the tamil cinema History. Till date no one lose Money for buying & producing rajini Movie.
Ellarum correct nu sollum pothu konjam peru wrong nu sonna, Konjam peru thappana view la pakkurangnu Artham. Athu mathri Rajini yoda cinema style,simplicity ,honest, respect elaaruukkum pudikkum pothu ungala mathri FRAUD,lazy man kku ellam nallatha pudikathu. Media ellam Kasukkaka elutha aramichuduchu.
Nee loose nu maraikirathukkaka matha ellathayum loose nu sollittu alayatha.God Bless You
Jai Hind
Raja.R
raja_nmc@yahoo.com
Tamil cinema vil kudumpathudan pakka mudiyum padam RAJINI padam mattum than. Muthal nalileya pengal,ilaigargal,muthiyavargal kootam alai mothum. Thannudaiya rasikan nallavanaga irukanum, kudumpathai nalla padiya kappathanum nu solra ORA THALIAVA RAJINI THAN. Aduthavar puzhalai kandu poramai paduvathai vida ulaithu nalla peyar vanga valthukiren.
ReplyDeleteR.Raja
raja_nmc@yahoo.com
Tamil cinema vil kudumpathudan pakka mudiyum padam RAJINI padam mattum than. Muthal nalileya pengal,ilaigargal,muthiyavargal kootam alai mothum. Thannudaiya rasikan nallavanaga irukanum, kudumpathai nalla padiya kappathanum nu solra ORA THALIAVA RAJINI THAN. Aduthavar puzhalai kandu poramai paduvathai vida ulaithu nalla peyar vanga valthukiren.
ReplyDeleteR.Raja
raja_nmc@yahoo.com
My reply -poetraj.blogspot.com
ReplyDeletehttp://www.thinnai.com/arts/ar0917024.html
ReplyDeleteபிரசன்னா: எம்ஜியார், ரஜினி ஆகியோருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு ஒப்பிட முடியாது.
ReplyDeleteஎம்ஜியார் தன் ரசிகர் கூட்டத்தை நிலைநிறுத்தும் ஒரே முடிவோடு படத்தின் கதையை, கூட நடிக்கும் நடிகர்களை, கேமரா கோணத்தை, பாடல்களை, வசனத்தை - அத்தனையையும் கட்டுப்படுத்தினார். அதுபோலவே ரஜினியும் படத்துக்கு யார் டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தாலும் கவலையில்லை, முக்கியமானவற்றை கதை, வசனம், சக-நடிகர்கள், கேமரா கோணம் (ரஜினியை பிரம்மாண்டமாகக் காண்பிக்கும் ஷாட்கள்), பாடல் வரிகள் என்று அனைத்தையும் தான்தான் கட்டுப்படுத்துகிறார்.
சிறிது சிறிதாக சினிமா எனும் கலையம்சம் போய் அந்தப் படச்சுருள் ஒரு பெரிய public relations விளம்பரப் படமாகிறது. RMKV நிறுவனம் தன் பெயரை விளம்பரப் படுத்த எடுப்பதைப் போல ரஜினி Inc. எடுக்கும் ஒரு பெரிய PR தான் ரஜினி படங்கள் என்றாகிறது. கடந்த நான்கு ரஜினி படங்களும் அப்படித்தான் என்பதை ஒத்துக் கொள்வீர்களா, மாட்டீர்களா?
ரஜினி என்னும் கலைஞன் இதில் எங்கே தெரிகிறான்?
சரி, அதை விடுவோம்.
ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ்நாட்டில். அவர்கள் ரஜினி சிகரெட்டைத் தூக்கி எறிந்து பிடிப்பதிலிருந்து, அலட்சியமாகப் பேசுவதிலிருந்து, வில்லன்களைப் பந்தாடுவதிலிருந்து வணங்கி மகிழ்ந்தவர்கள். கமல்-ரஜினி இதில் யாரோ ஒருவரின் ரசிகராக இருந்தே தீரவேண்டும் என்று பிரம்மன் அவர்கள் தலையில் எழுதி வைத்துவிட்ட காரணத்தால் கமல் பிடிக்கவில்லை, அதனால் ரஜினி என்று ஒருவேளை முடிவெடுத்திருக்கலாம். [இன்றுதான் மக்களுக்கு எத்தனை சாய்ஸ்? சுள்ளான் தனுஷ், சீயான் விக்ரம், கில்லி விஜய், சூர்யா.... கொஞ்சம் தள்ளிப் பார்த்தால் மக்கள் கலைஞன், ஆக்ஷன் கிங், பார்திபன்...]
உங்களுக்கு ஜாக்கி சான் படங்கள் பிடித்திருந்தால் உடனே வீட்டில் நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டு, சீன மொழியைக் கற்றுக் கொள்கிறீர்களா? ஹாங் காங் போய் அவர் வீட்டு வாசலில் தவமிருக்கிறீர்களா?
ஏன் இந்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள் சாம்பார் சாதம் சாப்பிடவும், ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை ஒருமுறையாவது பார்க்கவும் விரும்புகிறார்கள் என்று புரியாமல் திகைத்ததன் விளைவே அந்தப் பதிவு. பலபேருக்கு எக்கச்சக்க கோபத்தை வரவழைத்துள்ளது.
[வந்தியத்தேவன்: உங்கள் பகிரங்கக் கடிதத்துக்கு உங்க பேட்டைக்கு வந்து மெதுவா பதில் கொடுக்கறேன்...]
ரஜினி ரசிகர்களைப் பற்றி மேற்கொண்டு புரிந்து கொள்ள rajinidotcom யாஹூ! குழுமத்தில் சேர்ந்திருக்கிறேன்.
யார் கண்டது? ஜக்குபாய் படம் ரிலீஸ் ஆகும்போது முதல் ஷோ, முதல் டிக்கெட் வாங்கிக்கொண்டு பார்ப்பது நானாகவும் இருக்கலாம். அதற்குள் நிச்சயம் ஜாபனீஸ் கற்றுக் கொண்டு விடுவேன்.
பத்ரி,
ReplyDeleteகமல், ரஜினி காலத்தில் மற்ற பிரபல நடிகர்கள் இல்லாமலில்லை. அவர்கள் அனைவரையும் மீறித்தான் கமலும், ரஜினியும் பிரபலமடைந்தார்கள்.
78ம் ஆண்டுகளில் சிவாஜி முண்ணனி நடிகர். விஜயகுமார் கதாநாயகனாக நடித்து மதுர கீதம்,அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன.ஜெய்சங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு? போன்ற படங்களில் நடித்தார். இதைத் தவிர எவர் க்ரீன் சிவக்குமார். ஜெய்கணேச் கூட 'அண்ணன் ஒரு கோவில்" படத்தில் தூள் கிளப்பினார்.
தற்கால சிம்பு, தனுஷ் ஆகியோர்களுடன் ஒப்பிடும்போது, மேலே குறிப்பிட்ட அனைவரும் சிறந்த நடிகர்கள்.
இவர்களையும் தாண்டி தனக்கான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் கமலும் ரஜினியும்
பத்ரி,
ReplyDeleteகமல், ரஜினி காலத்தில் மற்ற பிரபல நடிகர்கள் இல்லாமலில்லை. அவர்கள் அனைவரையும் மீறித்தான் கமலும், ரஜினியும் பிரபலமடைந்தார்கள்.
78ம் ஆண்டுகளில் சிவாஜி முண்ணனி நடிகர். விஜயகுமார் கதாநாயகனாக நடித்து மதுர கீதம்,அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன.ஜெய்சங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு? போன்ற படங்களில் நடித்தார். இதைத் தவிர எவர் க்ரீன் சிவக்குமார். ஜெய்கணேச் கூட 'அண்ணன் ஒரு கோவில்" படத்தில் தூள் கிளப்பினார்.
தற்கால சிம்பு, தனுஷ் ஆகியோர்களுடன் ஒப்பிடும்போது, மேலே குறிப்பிட்ட அனைவரும் சிறந்த நடிகர்கள்.
இவர்களையும் தாண்டி தனக்கான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் கமலும் ரஜினியும்
பத்ரி,
ReplyDeleteகமல், ரஜினி காலத்தில் மற்ற பிரபல நடிகர்கள் இல்லாமலில்லை. அவர்கள் அனைவரையும் மீறித்தான் கமலும், ரஜினியும் பிரபலமடைந்தார்கள்.
78ம் ஆண்டுகளில் சிவாஜி முண்ணனி நடிகர். விஜயகுமார் கதாநாயகனாக நடித்து மதுர கீதம்,அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன.ஜெய்சங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு? போன்ற படங்களில் நடித்தார். இதைத் தவிர எவர் க்ரீன் சிவக்குமார். ஜெய்கணேச் கூட 'அண்ணன் ஒரு கோவில்" படத்தில் தூள் கிளப்பினார்.
தற்கால சிம்பு, தனுஷ் ஆகியோர்களுடன் ஒப்பிடும்போது, மேலே குறிப்பிட்ட அனைவரும் சிறந்த நடிகர்கள்.
இவர்களையும் தாண்டி தனக்கான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் கமலும் ரஜினியும்
previous comment accidently posted three times. kindly excuse me
ReplyDeleteI guess you are being little too harsh on this subject. Entertainment comes in many forms . If cricket is one form movie is just another form. What do a person gain from WATCHING 9 hours of cricket or 45 hours of cricket. Is it not a criminal waste? In tamil there is a saying " kannadi malIgaiyul vukkanthukittu kal Ariya kudathunnu"..i think that is exactly what you have done. I am regular visitor of your site. I agree on some of your views, i dont agree on some but i enjoying reading your blogs. But this time i felt that you were a bit too far harsh. I really dont know why you did so.
ReplyDeleteGanesh (vplg@yahoo.com)
'முத்து' வந்த புதிதில் ஜப்பானில் ராஜாவாக, ராணியாகப் போற்றி பெரிய ஹிட்டாக்கி விட்டார்கள். உடனே கவிதாலாயாவில் இருந்த கெடச்ச படத்தையெல்லாம் ஜப்பானிஷ் சப்-டைட்டில் போட்டு வெளியிட்டு நல்ல காசு பண்ணிவிட்டார்கள். இந்த ஜப்பான் திரும்பும்முன் சிங்கையில் ஒரு நாள் தங்கி, அவர்களுடைய இந்தியப் புனிதப் பயணம் ற்றி தமிழ்முரசில் சொல்லியிருந்தார்கள். ஒருவேள 'ப்ரியா'வில் வரும் கோபுரம் இருக்கும் சீனத்தோட்டத்துக்கும் விஜயம் செய்தார்களோ என்னவோ!?
ReplyDeleteஅதெல்லாம் இருக்கட்டும்...
இப்பல்லாம் ஏன் வலைப்பூக்களில் இஷ்டத்துக்கு எழுதவும் - அதற்கு பதிலுக்கு நாராசம கத்தவும் ஆரம்பிச்சிட்டாங்க?
எந்த லூசுகளை திருத்த, நாம லூசு மாதிரி ஒளரிட்டுருக்கிறோம்?
Japan karan Rajini paithyam pidichu alaiyaran...ogay
ReplyDeletebut ivar [athan pa badri maharaja] England Vs Wi pathi pakkam pakkama ezudhi......kazutha arukukarar?...
avar pAnila Chonna, [read it in a grumpy tone]
an Indian should not like England Vs WI, what is there for an Indian to like about WI or England why does indians waste time..
no body should have their own choice, good good, Rajini being famous among japanese is our greatest problem today...to learn from japenese people., he he..tamiza tamiza...
I dont want to tell who i am because I dont like free advertisment [ellam unga logic than],
hi badri
ReplyDeleteennaku oru vishayam puriyala..?edhu ungala kovapadavum,poramapadavum vaikudhunu..? jackichan padam pakra nama idhu kaga hongkong poradhilla....noodles seiyaradhuilla...aana...idha appadiye reciprocala rajini japaneesea seiya mudiya vaikadhu...!there he stands..!
ithana kodi pera than pinnala nikka vaika mudiyara rajini loosa?illa arthame illama trension agara neenga...? oru vishayam yosinga..rajini yalla ithana japaneese india pathi theriyavaikamudiyudu..adhu onnukey salam podalam!
last but not least...successive people speaks only about sujects.
n failure one always speak about people..!choose urself whom ur?