காரைக்கால் காங்கிரஸ் தலைவர் MOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஃபரூக் மரைக்காயர் பாண்டிச்சேரி முதல்வராக இருந்தவர். பாராளுமன்றத்தில் பலமுறை பாண்டிச்சேரிக்கான் உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் மத்திய மந்திரி சபையில் ஒருமுறை இணையமைச்சராக இருந்தார் என்ற ஞாபகம்.
MOH என்ற பெயரில் காரைக்கால், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களை இணைக்கும் பல பேருந்துகளை இவரது குடும்பம் இயக்கி வருகிறது. காரைக்கால் பகுதியில் பல்வேறு தொழில்களையும் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
சவுதி அரேபியாவில் உள்ள நண்பர்கள் தமிழ் பேசும் இந்தியத் தூதர் கிடைத்துள்ளாரென்று சந்தோஷப்படலாம் - இல்லையா கொஸப்பேட்ட குப்ஸாமி, கானா ஆசாத்?
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
10 hours ago
காரைக்கால் பகுதியில் பல்வேறு தொழில்களையும் செய்கிறார்கள்
ReplyDelete>>
பல்வேறு தொழில்கள்ல ஒரு தொழில் முக்கியமானதா இருக்கும் :-)
காரைக்கால்<->பாண்டி - மூன்று மார்க்கங்களில் பஸ்கள் ஓடுகின்றன. கிட்டத்தட்ட ஒரு குட்டி போக்குவரத்துக் கழகமே உள்ளது அவர்களிடம்.
நீங்க மேற்கோள் காட்டியிருக்கும் வரிக்கு முதல் வரியாக நான் இதைத்தானே எழுதியிருந்தேன்? :)
ReplyDelete"MOH என்ற பெயரில் காரைக்கால், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களை இணைக்கும் பல பேருந்துகளை இவரது குடும்பம் இயக்கி வருகிறது."
அந்த ஊர்களுக்கு நடுவுல மட்டுமே 3 மார்க்கத்துல் வுடுறாங்கன்னு சொல்ல வந்தேன். முழுசா சொல்லல போல :(
ReplyDeleteபரி, வேற ஒரு தொழிலும் முக்கியமானதா இருந்துச்சு. ஒருக்கா மாட்டிக்கின்னதும் அப்புறம் கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க. இதெல்லாம் ஐயா ஆட்சியிலே இருக்கும்போது. இப்போ கொஞ்சம் எக்ஸ்ட்ராவா அடக்கி வாசிக்கிறாங்க.
ReplyDeleteபத்ரி, சவுதியிலே இந்திய தூதர் எப்படி இருப்பார்ன்னே எங்களுக்கு தெரியாது. தூதரகம் மக்களோட அவ்ளோ நெருங்கி பழகுது. ஆசாத் அண்ணனுக்கு வேணா கொஞ்சம் நெருக்கம் இருக்கலாம். வேணும்ன்னா ஒரு முறை தூதரகம் சென்று "ஐயா ஒரு முறை நீங்க கார்ல போகும்போது எங்க வீட்டுக்கு எதிர்ல உங்க கார் பஞ்சர் ஆகிடுச்சு. எங்க வீட்டுல ஒரு சொம்பு தண்ணீர் கேட்டு மோர் வாங்கி குடிச்சிங்க"ன்னு சொல்லி நெருங்க முடியுதான்னு பார்க்கலாம்.