Friday, August 27, 2004

சமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி

இந்த வாரம் சமாச்சார்.காம் இதழில் டாடாவின் ஐடி நிறுவனம் டி.சி.எஸ் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்திருப்பது, டாடா குழுமத்தின் ஐடி மற்றும் தொலைபேசி/இணையம் தொடர்பான தொழில்கள் பற்றி. யூனிகோடில் இங்கே.

5 comments:

  1. - சி.எம்.சி, டாடா இன்போடெக், டாடா எல்க்ஸி - பங்குகளும் இப்பொழுது சரசரவென ஏற ஆரம்பித்து விட்டன. கூடிய விரைவில் இந்த நான்கு கம்பெனிகளும் ஒன்றாக இணைக்கப்படலாம் (merger) என பங்குச்சந்தை வர்த்தகர்கள் எண்ணுவதே இதற்குக் காரணம்.
    >>
    '97 & '98லிருந்தே இந்தப் பூச்சாண்டி நடந்து கொண்டு வருகிறது(CMC தவிர்த்து).
    Tata Elxsi, Tata Info Tech(erstwhile Tata Unisys)-உடன் இணைக்கப்படும் என்றும் ஒரு பேச்சு உலவியது.

    Tata Elxsi இன்னும் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது :-)

    ரூ. 1 மதிப்புள்ள ஒவ்வொரு பங்கும் IPO சம்யத்தில் ரூ. 850க்கு விலை போனது.
    >>
    அடிப்படை விலை 1 ரூபாயா? ஆச்சரியமாக இருக்கிறதே. வழக்கமாக 10 ரூபாய் தானே இருக்கும், அதன் மேல் பிரீமியம் வைத்து விற்பார்களே.
    (இந்த base price+premium கான்செப்ட் புரிவதே இல்லை. என்னைப் பொறுத்த வரை இது ஒரு வேலையத்த சமாச்சாரம். SEBI கிட்ட சொல்லணும் :-))

    இது வரை சொந்த பிட்ச்சில் ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனால் இஷ்டத்துக்கு ஆட முடிந்தது. பொதுவுக்கு வந்த பிறகு 'ஆட்டைத் தூக்கி மாட்டில் போடு, மாட்டைத் தூக்கி ஆட்டில் போடு' என்ற ஆட்டம் பலிக்குமா, பங்குச்சந்தை சும்மா விடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. >>>'97 & '98லிருந்தே இந்தப் பூச்சாண்டி நடந்து கொண்டு வருகிறது(CMC தவிர்த்து). Tata Elxsi, Tata Info Tech(erstwhile Tata Unisys)-உடன் இணைக்கப்படும் என்றும் ஒரு பேச்சு உலவியது.

    Tata Elxsi, Tata Infotech எல்லாம் சின்ன கம்பெனிகள் - TCSஐ வைத்துப் பார்க்கும்போது. அதனால் அவையிரண்டும் இணைந்தாலும், இணையாவிட்டாலும் ஒன்றும் பெரிதாக நடந்திருக்காது. TCSஇன் market capitalisations கிட்டத்தட்ட ரூ. 45,000 கோடிக்கும் மேல். மற்ற இரண்டும் சுமார் ரூ. 2,000 கோடிக்கும் குறைவான ரேஞ்சில் இருக்கும்.

    Tata Elxsi ஜூன் 16இல் ரூ. 100இலிருந்து இன்று ரூ. 140க்கு மேல் போயுள்ளது. Tata Infotech இதே நேரத்தில் ரூ. 350இலிருந்து ரூ. 450 வரை போயுள்ளது. CMC இதே நேரத்தில் ரூ. 470இலிருந்து ரூ. 700க்கு வந்துவிட்டது!

    ஆக எல்லாமே TCS IPO effect. ஐ.பி.ஓ நடக்கப்போகிறது என்று விவரம் தெரிந்து, பிற்காலத்தில் மெர்ஜர் நடந்தால் நல்ல swap ratio கிடைக்கும் என்பதால் ஏறும் விலை இது. டாடா காரர்கள் இப்பொழுது ஒன்றும் அவசரமாக எந்த மெர்ஜரையும் செய்யவேண்டும் என்பதில்லை...

    >>>அடிப்படை விலை 1 ரூபாயா? ஆச்சரியமாக இருக்கிறதே. வழக்கமாக 10 ரூபாய் தானே இருக்கும், அதன் மேல் பிரீமியம் வைத்து விற்பார்களே.
    (இந்த base price+premium கான்செப்ட் புரிவதே இல்லை. என்னைப் பொறுத்த வரை இது ஒரு வேலையத்த சமாச்சாரம். SEBI கிட்ட சொல்லணும் :-))

    இந்த அடிப்படை விலையில் ஒரு பிராப்ளமும் இல்லையே? வழக்கமாக ஷேர்கள் தொடங்கும்போது ரூ. 10 முகப்பு விலையில் இருக்கும். அதன்பின் ஒவ்வொரு முறை share split ஆகும்போதும் அதற்கேற்ப அந்த விகிதத்தில் குறையும். உங்கள் ஊர் அமெரிக்காவில், அல்லது பிரிட்டனில் 0.00001 cents, pence என்றெல்லாம் முகப்பு விலை இருக்கலாம். அது இந்தியாவில் இப்பொழுதைக்கு முடியாது.

    அதன்பின் இந்த premium. அது மிகவும் சுலபம். ஒரு பங்கின் முகப்பு விலை எத்தனையாக இருந்தாலும் அதுபற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. முதலில் earning per share - EPS (E) ஐக் கவனியுங்கள். பின் சக தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் EPS, அதன் தற்போதைய விலை - price (P) ஆகியவற்றைக் கவனியுங்கள். இதிலிருந்து price to earning (P/E) விகிதத்தைப் எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் முக்கியம். அதன்பின் புதிதாக வரும் நிறுவனத்துக்கு என்ன (P/E) தரலாம் என்று முடிவு செய்யும்போதுதான் குறிப்பிட்ட premium range கிடைக்கிறது. அந்த வகையில்தான் TCSக்கு ரூ. 850 என்பது குறைந்த P/E என்றும் அதன் P/E இன்போசிஸ் P/Eஐ அடைய வேண்டுமானால் (நியாயமான கோரிக்கை), TCS பங்கின் விலை கிட்டத்தட்ட ரூ. 1,150க்கும் போய்விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பார்க்கலாம் எங்கு போகிறதென்று... என்னிடம் கொஞ்சம் ஷேர்கள் உள்ளன:-)

    SEBIக்கு இதெல்லாம் தெரியாததல்ல.

    ReplyDelete
  3. SEBI கிட்ட சொல்லணும்னு சொன்னது "கருத்து" :-)

    எது என்ன "உங்க ஊர்"? நாளைக்கே வேணாலும் கெளம்பி வந்துடுவேனாக்கும் :-)

    ReplyDelete
  4. http://in.rediff.com/money/2004/aug/30perfin1.htm

    - Mahesh

    ReplyDelete