POTA சட்டம் நீக்கப்பட இருக்கிறது. முந்தைய பாஜக அரசினால் POTO என்று ஓர் அவசரச்சட்டமாகக் கொண்டுவரப்பட்ட இந்த ordinance, பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒன்று கூட்டி சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்பொழுதே காங்கிரஸ் இந்தச் சட்டத்தை எதிர்த்தது. ராஜ்ய சபையில் மண்ணைக் கவ்வி விடும் என்பதால்தான் இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டினர். அப்பொழுது இந்தச் சட்டத்தை கருணாநிதியின் திமுகவும், வைகோவின் மதிமுகவும், ராமதாசின் பாமகவும் ஆதரித்தனர். ஜெயலலிதாவின் அஇஅதிமுகவும் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது கேபினெட் ஒன்றுகூடி இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது என்று முடிவு செய்துள்ளனர். வரவேற்க வேண்டியதுதான். POTAவில் பல குறைகள். முக்கியமாக இரண்டு: (1) போடாவின் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடுக்கும் சுயவாக்குமூலம் ஒரு சாட்சியமாகக் கருதப்படும். (2) நீதிமன்றக் காவலுக்கு ஒருவரைக் கொண்டுவராமல் - ஜட்ஜ் ஒருவர் கண்ணில் காண்பிக்காமலேயே ஒருவரை போலிஸ் காவலில் ஒரு வருடம் வரை வைத்திருக்கலாம். இந்த இரண்டும் எந்தவொரு நாகரிகமான நாட்டிலும் இருக்கக்கூடாத சட்டங்கள். என்னதான் தீவிரவாதிகளால் தொல்லை என்றாலும் இப்படிப்பட்ட சட்டங்களால் சிறுபான்மையினருக்கும், வாயில்லாப்ப் பூச்சிகளுக்கும்தான் தொல்லை. NDTVயில் நடந்த ஒரு விவாதத்தில், போடாவை ஆதரிக்கும் ஒருவர் வட அயர்லாந்தில் கூட இம்மாதிரியான சட்டத்தை பிரித்தானிய அரசு விதித்திருந்தது என்றார். அதெல்லாம் ஒத்துக்கொள்ளக் கூடிய வாதமே இல்லை.
நம் நாட்டில் எம்மாதிரியான சட்டங்கள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நாம்தான். கொடுமையான சட்டங்களினால் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியாது. அதற்கு காவல்துறைக்கு அதிகப் பயிற்சிதான் கொடுக்க வேண்டும். புதிய, கொடுமையான சட்டங்களை அல்ல. ஒரு குற்றம் செய்தவர் மீது சரியான சாட்சியங்கள் தேவை. வெறும் ஒப்புதல் வாக்குமூலத்தினாலும், அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்வதாலும் குற்றங்களைத் தடுக்க முடியாது. ஒரு பாவமும் அறியாதவர்கள்தான் இந்தச் சித்திரவதையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இன்று மணிப்பூரில் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கின்றனர். இப்பொழுதைய காங்கிரஸ் அரசாங்கம் Armed Police Special Powers Actஐ திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று பேசுகின்றனர். மக்கள் விரும்பினால் 'Assam Rifles'ஐத் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்கிறார் ஷிவ்ராஜ் பாடில். அந்தப் பேச்சிற்கே இடமில்லை என்றார் பிரணாப் முகர்ஜி நேற்று.
ஆசாம் ரைஃபிள்ஸ் மீது தவறோ இல்லையோ, ஒரு மாநிலத்தின் மக்களைக் கொந்தளிக்க வைத்த காரணத்தாலேயே அவர்களை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் மத்திய அரசு. அத்துடன் உடனடியாக தேவையற்ற 'Special Powers Act'ஐ தூக்கியெறிந்து விட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
முக்கியமாக இந்திய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பொதுமக்களிடம் எப்படி முறையாக நடந்து கொள்வது என்பதைப் பற்றி சீரிய பாடங்களை நடத்த வேண்டும். பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்வது கொடுமையானது. விசாரணை என்ற பெயரில் பெண்களைக் கொண்டுவந்தால் பெண் காவலர்கள் மட்டுமே அந்த விசாரணையில் ஈடுபட வேண்டும். கைது செய்து வந்த பெண்ணுடைய உறவினர்கள் யாரையாவது, அல்லது அவரது வக்கீல் ஒருவரை விசாரணையின் போது எப்பொழுதும் கூட இருக்குமாறு அனுமதிக்க வேண்டும். நம் நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையைத் தருகின்றன.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
6 hours ago
முக்கியமாக இந்திய காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பொதுமக்களிடம் எப்படி முறையாக நடந்து கொள்வது என்பதைப் பற்றி சீரிய பாடங்களை நடத்த வேண்டும்
ReplyDeleteI agree that we have to train our military and army on these issues. Also, I am glad that we are in a free democracy to point out these issues fearlessly. I hope the government will listen to it. Else, we have elections to teach them a lession. I wish Eezhalathan will do the same when it comes to the atrocities of LTTE. Hope he will also ask the LTTE to abide by International Human Rights Standards in treating prisoners, children soldiers etc. I still remember Eezhanathan writing in Peyarili blog justifying why LTTE killing people from other religions. The reason Eezhanathan gave is those are friendly with both Sinhalese and Tamils. Thanks and regards, PK Sivakumar
ReplyDeletecorrection. we have to train our military and police on this. - PKS
ReplyDeleteI checked Peyarili blog and the comment is in the name Eezhavan. If Eezhavan is not Eezhanathan, I am SORRY for the confusion and take my word back that Eezhanathan told it. However, considering Eezhavan is not Eezhanathan, I would be happy to get answers from Eezhanathan on these issues. 1.Will he tell LTTE the same to train its cadre abt human rights?. 2. What does he thinks about LTTE killing other religions based on Eezhavan's justification (that they are friendly with Sinhalese too). PK Sivakumar
ReplyDeleteI checked Peyarili blog and the comment is in the name Eezhavan. If Eezhavan is not Eezhanathan, I am SORRY for the confusion and take my word back that Eezhanathan told it. However, considering Eezhavan is not Eezhanathan, I would be happy to get answers from Eezhanathan on these issues. 1.Will he tell LTTE the same to train its cadre abt human rights?. 2. What does he thinks about LTTE killing other religions based on Eezhavan's justification (that they are friendly with Sinhalese too). PK Sivakumar
ReplyDeleteI checked Peyarili blog and the comment is in the name Eezhavan. If Eezhavan is not Eezhanathan, I am SORRY for the confusion and take my word back that Eezhanathan told it. However, considering Eezhavan is not Eezhanathan, I would be happy to get answers from Eezhanathan on these issues. 1.Will he tell LTTE the same to train its cadre abt human rights?. 2. What does he thinks about LTTE killing other religions based on Eezhavan's justification (that they are friendly with Sinhalese too). PK Sivakumar
ReplyDeleteAlmost all laws of our nation are abused and misused by the people in power. Let us repeal all such laws too and make the nation a lawless jungle. That is what this Alibaba and his 40 thieves remote controlled by one yavanarani is trying to do for the nation. What else one can expect from a Govt. which is keeping the associate of Dawood's as a cabinet minister other than repealing POTA.
ReplyDeleteS.T
PKS: நேற்றுதான் பல வலைப்பதிவுகளில் நடந்துகொண்டிருக்கும் இந்தியப் படை/இலங்கைத்தமிழர்/புலிகள் தொடர்பான சிலவற்றைப் படித்தேன்.
ReplyDeleteநான் என் பதிவை எழுதும்போது அவற்றினைப் படித்திருக்கவில்லை. என் பதிவினை மற்ற பதிவுகள் எதுவும் தூண்டவுமில்லை.
என் கருத்தை நான் இந்தியப் பொதுமக்களை முன்வைத்தே சொன்னேன். சொந்த நாட்டிலே சொந்த அரசின் போலீஸ்/இராணுவ அடக்குமுறையில் காவல்நிலையங்களில் அலைக்கழிக்கப்படுவதும், உயிர்போவதும் கொடுமையான சம்பவங்கள்.
இன்றைய தேதியில் மக்களின் பொதுப்புத்தியில் காவலர் என்றாலே லஞ்ச லாவண்யமும், பொதுமக்களை மிரட்டுபவர், அச்சுறுத்துபவர், ஆனால் அரசியல்வாதிகளைக் கண்டால் கூழைக்கும்பிடு போடுபவர் என்ற எண்ணம் மட்டும்தான் உள்ளது. இந்த எண்ணத்தில் தவறு அதிகமும் இல்லை. இதனை மாற்றக்கூடிய வகையில் சிவில் சொஸைட்டி அமைப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்.
வடகிழக்கு, காஷ்மீர் போன்ற இடங்களில் இராணுவமோ, எல்லைக்காவல் படையோ செய்ய வேண்டிய காரியங்கள் மிகவும் கடுமையானவை. எதிர்களைச் சந்தித்து அவர்களோடு கேள்வி கேட்காமம் சண்டையை மட்டுமே போடப் பயிற்சி கொடுத்து விட்டு, அவர்களை மக்கள் நடுவில் கட்டவிழ்த்து விடுவது நம் ஆட்சியாளர்கள்தான். எல்லையில் எதிர்களோடு போராடுவது வேறு; பொதுமக்கள் இடையில் தீவிரவாதிகளைக் கண்டெடுத்து அவர்களால் ஏற்படும் தொல்லைகளை நீக்குவது என்பது வேறு. இந்த வேறுபாடு தெரியாத இராணுவத்தால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு பெருத்த அபாயம் ஏற்படுகிறது.
எல்லைக்காவல் படைகளையோ, இராணுவத்தையோ அவசியமேற்பட்டால்தான் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மற்றபடி உள்ளூர் காவல்துறைக்கு நன்கு பயிற்சி அளித்து உள்ளூர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவே முயல வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் பெரும்பாலும் பழங்குடியினர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையே வெகுவாக மாறுபடும் பழக்க வழக்கங்களை உடையவர்கள். இந்த மாநிலங்களுக்கிடையேயான பல பழங்குடிகளுக்கிடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. ஒரு மாநிலத்தில் பல்வேறு இனங்களுக்கிடையே பிரச்சினை. கிறித்துவ மதம் மாறுவது தொடர்பாக சில பிரச்சினைகள். இந்திய அரசின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளாத பல போராளிக் குழுக்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள். மிகவும் மோசமான அரசியல் கட்டுப்பாடமைந்த இடங்கள்... பல இடங்களில் தேர்தலில் எதிர்ப்பாளி இன்றி போட்டியிட்டு வெல்லும் சட்டமன்ற உறுப்பினர்கள், வென்றதும் ஹோல்சேல் கட்சி மாறல் என்று அந்த ஏரியாவே வெடிமருந்துக் கிடங்கு போன்று ஆபத்தானது.
பெரும்பான்மை இந்தியர்களாகிய நாம் இந்நிலையில் ஆசாமிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் இராணுவ, எல்லைக்காவல் படைகளை அனுப்பினால் அந்த ஊர் மக்கள் கொந்தளித்துத்தான் போவார்கள்.
நம் ஐம்பதாண்டுக் கால குடியாட்சி முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
பத்ரி,
ReplyDeleteபோடாவை சில திருத்தங்கள் செய்து அமுலாக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
நம் சட்டங்கள் சாதாரணக் குற்றங்களைத் தண்டிக்க ஏற்படுத்தப் பட்டவை. சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்து வைத்திருக்கும் கிரிமினல்கள் குற்றமிழைக்கத் தயங்குவதில்லை. மத்திய மந்திரி சிபு சோரென் துவங்கி, பிக்பாக்கெட் கபாலி வரைக்கும் இந்தச் சாதுரியம் உள்ளது. நாகரிக நாட்டுக்கான சட்டம் இல்லை என்றீர்கள். சமீபத்திய நடப்புக்களில் நாகரீகத்தின் புதிய தாழ்மைகளை நாம் அடைந்துள்ளோம்.
தீவிரவாத சக்திகளின் உத்திகள், அவை அவிழ்த்துவிடும் அளவில்லாத வன்முறைகளின் வீரியம் ஆகியவற்றை பழைய சட்டங்கள் கொண்டு தடுத்துவிட முடியுமா? இன, மொழி மற்றும் மத அடிப்படையில் அனுதாபிகளைச் சம்பாதித்துக் கொள்ளும் உத்தியை இந்த தீய சக்திகள் வெற்றிகரமாகக் கடைபிடித்து வரும் கால கட்டத்தில், அம்மாதிரி polarization ஐ தடுக்க, எந்த வகையான (கோத்ரா, முதலியன உட்பட) வன்முறையும் வேரூன்றி விடாமல் காப்பாற்ற சில கடுமையான சட்டங்கள் தேவையே. சட்டத்திற்கு தண்டிக்கும் கடமையைவிட குற்றம் நடக்காமல் தடுக்கும் பொறுப்பும் உள்ளது. தண்டனைக்குத் தப்ப முடியாது என்று தெரிந்தால் இந்தக் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பு மனு நிராகரிக்கப் பட்ட தனஞ்சய்
விவகாரத்திலும் எனக்கு இந்தச் சார்பே. கொலையாளிகள் காட்டாத மனித உரிமை, மனிதாபிமான உணர்வுகளை அவர்களுக்கு நாம் ஏன் காட்ட வேண்டும்? இந்தமாதிரியான போக்கு என்றைக்காவது அடங்கினால், அமைதி திரும்பினால், நாம் நாகரீகமானால், நாகரீகமான சட்டங்களுக்குத் திரும்பிப் போகலாம்.
மனித உரிமை அமைப்புக்கள் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு இடையூறாக வந்தால் அம்மாதிரி அமைப்புக்களே நமக்குத் தேவையில்லை.
சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் ஷரத்துக்களைச் சேர்த்து, அம்மாதிரி செய்பவருக்கும் அதிக பக்ஷ தண்டனை என்று அமைத்தால், கடுமையான சட்டங்களும் அமுலில் இருக்கலாம்.
நன்றி சிவகுமார் அண்ணா இந்தக் கருத்து எனது தனிப்பட்ட கருத்து அல்ல இந்திய இராணுவம் தனது நடவடிக்கைகளிலிருந்து தோற்று இலங்கையிலிருந்து திரும்பிய காலப்பகுதியில் சொல்லப்பட்ட கருத்து இலங்கைச் சூழல் மற்றும் பௌதிகவியல் அமைப்புகளுக்குத் தாக்குப்பிடித்த அளவு மக்களுடனான உறவாடலில் இந்திய இராணுவம் தோற்றுப்போனதே அவர்களின் அமைதி காக்கும் பணி தோற்றதற்குக் காரணம்.
ReplyDeleteரமணி அண்ணாவின் வலைப்பதிவில் பதிலளித்தது நான் தான் சிங்களவர் தமிழர்களுடன் நட்பாக இருந்த காரணத்துக்காக முஸ்லிம் மக்கல் கொல்லப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை அப்படி கருத்துப்பட அவ்வாக்கியம் இருந்திருந்தால் என்னைவிட மிலேச்சத்தனமுள்ளவன் யாரும் இருக்க முடியாது.இன்றுவரை யாழிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தவறானதென்றே கருத்து எழுதுகிறேன்.
அப்படியிருக்க நான் எழுதியதன் சாராம்சம் முஸ்லிம்கள் இருபகுதியினருடனும் ஒன்றி தமது சுயலாபங்களுக்காகக் காட்டிக்கொடுத்தல் ஊர்காவல்துறை என்ற பெயரில் தமிழர்களைத் துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுப்பட்டமையாலும் ஏறாவூர் என்ற கிராமத்தில் படையினருடன் இணைந்து தமிழ் மக்கள் மீது வெறியாட்டத்தில் ஈடுபட்டதாலும் ஆத்திரமடைந்த புலிகளால் இது செய்யப்பட்டது என்பதெ அதன் சாராம்சம்.இப்படியான பழிவாங்கல்கள் சரியான தீர்வாக மைந்துவிடாது என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு.
மற்றையது புலிகளுக்கு ஆலோசனை கூறுமளவுக்கு நான் ஒன்றும் பெரியவன் அல்ல ஆயினும் கருத்தரங்குகளிலும் மாணவர் அமைப்புகளிலும் எமது கருத்துகளை முன்வைப்பதற்கு கொல்லப்பட்டுவிடுவோனோ என்று அஞ்சியதில்லை.நிச்சயமாக பிறிதொருநாளில் தகுந்த இடைத்தில் சர்வதேச அளவில் புலிகள் பற்றிய விமர்சனங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் சொல்லுவேன்.
மனித உரிமை நிறுவனங்களாலும் செஞ்சிலுவைச் சங்கங்கத்தாலும் காலம் காலமாக புலிகள் இயகத்தின் உறுப்பினர்களுக்கு கருத்தரங்குகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.அதனை அவர்கள் எவ்வளவுதூரம் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்வி.ஆனால் அவர்களும் மனிதர்கள் தான் சொன்னபடி கேட்பார்கள் அதிலும் இதுவரை எந்தவொரு இயக்க உறுப்பினரும் எந்தவொரு பெண்ணையும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகச் சரித்திரமில்லை ஆகக் குறைந்தது அதையாவது இந்திய இராணுவத்துக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எனது கருத்தில் நீங்களும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன்
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் பலகாலமாக கண்டனம் தெரிவித்து, ராணுவமும்,காவல் துறையினருக்கு கட்டற்ற அதிகாரங்கள் தரக்கூடாது, மனித உரிமை மீறல்களுக்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பலவற்றை வலியுறுத்தி வந்துள்ளன.நந்திதா கக்ஸர் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார்.அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த பிண்ணனி விவகாரங்களை கருத்தில் கொண்டு யாரவது தங்கள் வலைபதிவுகளில் எழுதியிருக்கிறார்களா. புலிகளின் மனித உரிமை மீறல்களும் கண்டிக்கப்பட வேண்டியவைதான். இந்திய ராணுவம் நடந்து கொண்ட விதம் வேறுவிதமாக இருந்திருந்தால் அங்குள்ள தமிழர்கள் அதன் மீது இத்தனை வெறுப்பினை காட்டியிருக்க மாட்டார்கள். ஒன்றினை நினைவு படுத்த விரும்புகிறேன், அரசுகள் சட்டத்தைப் பேண வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும், அரசு அல்லாத அமைப்புகள்,பிறர் தனி நபர், இனப்படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக அரசுளும் அதையே செய்தால் அது எப்படி சரியான செயலாகும்.
ReplyDeletethere is something wrong.i posted a long comment but it is not there.
ReplyDeleteBadri, I dont find fault with your post. In any democracy, there are flaws and issues which the press and people have to hightlight. It will compel and pressurize the govt to make changes. Thats what the Idathusarikal, good press and Neutral people in India are doing. For example, Arundati Roy. There could be others whose names I have not mentioned here. So, when these kind of issues are raised, they are discussed in all angles and a solution could be found or the solution which is there already could be improved. To me, democracy is the best form of ruling and government. I am not ashamed to say it bur very proud to proclaim so. On any day, Democracy in its worst form and worst way of implementation is far far better than Dictatorship and Terrorism in their best forms and shapes.
ReplyDeleteShivraj Patil told there are 50% of people who dont want that law to be repealed in Manipur. Hope its true. We wish a good solution to it would be found. If not, as citizens everyone has a power to show their strength in the next coming elections. Intellectuals like you, press and good citizens should and will always highlight when there are issues in democracy. Thats the strength and virtue of democracy. Thanks and regards, PK Sivakumar