இந்த வாரம் முதற்கொண்டு தொலைதொடர்பு, இணையம், தொலைக்காட்சி ஆகிய பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒன்றாகக் குவிவதைப் பற்றியும், இந்தியாவில் மேற்படித் துறைகளில் உள்ள நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள், அவை கொண்டுவரும் புதுமைகள், அதனால் மக்களுக்கு என்ன நன்மை ஆகியவற்றைப் பற்றி எழுத இருக்கிறேன்.
முதலாவதாக இந்தியாவில் செல்பேசிகள் - அடுத்த கட்டம் பற்றி.. யூனிகோடில் இங்கே.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
பத்ரி
ReplyDeleteUMTS சேவை 3G சேவைகளில் ஒன்றா அல்லது UMTS சேவைதான் 3G சேவையா?
செல்வா
UMTS -> Universal Mobile Telecommunication Services என்பது ஒருசில தரப்படுத்தப்பட்ட கொள்கைகள் என்று வைத்துக்கொண்டால், 3G என்பது மேற்படி UMTS கொள்கைகள் மூலம் இயங்கும் செல்பேசி சிஸ்டம் ஆகும். பாமரனாகப் பார்க்கும்போது இரண்டையும் ஒன்று என்று சொல்லிவிடலாம்.
ReplyDeleteMr.Badri
ReplyDeleteis there any chance to get facility to prepare and send sms in tamil language in very near future. Presently any software available to have this facility. I heard mr.Muthu of murasu anjal was trying to bring out software for this purpose.
Will any cell phone manufacturer do it.
=Ismail Kani (ismailkani@yahoo.com
ஆம். முத்து இதுபற்றி திசைகள் கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். பாகம் 1: http://www.thisaigal.com/Feb04/tamcomp1U.html
ReplyDeleteபாகம் 2: http://www.thisaigal.com/april04/tamcommuthuU.html
முத்து ஜாவாவில் ஒரு செயலியை (Murasu Anjal Mobile Edition) எழுதியுள்ளார்.
ஆனால் ஜாவா தேவையில்லாமல் யூனிகோடு எழுத்துகள் காணக்கூடிய மாதிரியான செல்பேசிகள் இப்பொழுது கிடைக்க ஆரம்பித்துவிட்டன. நான் சொல்வது தொடக்கநிலையில் உள்ள, விலை குறைந்த கைக்கருவிகளை. இந்தியாவில் ஹட்ச் நிறுவனம் தங்கள் பெயரிலேயே கொடுக்கும் ஒரு குறைந்த விலை செல்பேசியால் யூனிகோடு எழுத்துருக்களைக் காண்பிக்க முடியும். பல நோகியா கைக்கருவிகளால் யூனிகோடைப் புரிந்துகொள்ள முடியும். மற்ற பல கைக்கருவிகளிலும் இது சாத்தியமானதே. ஜாவா ஒரு இடைநிலைத் தீர்வே. முழுத் தீர்வாக முடியாது.
ஆனால் கணினிகளில் அவ்வளவாகத் தெரியாத ஒரு தொல்லை, குறுஞ்செய்திகளில் அப்பட்டமாகத் தெரியும். GSM வழியாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளிள், ஒரு செய்தியில், ஆங்கிலத்தில் 160 எழுத்துக்களைத்தான் காண்பிக்க முடியும். யூனிகோடில் வெறும் 69 யூனிகோடு எழுத்துகள்தான் வரும்.
நான் இதுவரை தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் கைக்கருவியைப் பார்த்ததில்லை. அடுத்து முத்து நெடுமாறனை சிங்கப்பூரில் டிசம்பரில் சந்திக்கும்போது பார்த்தபின் சொல்கிறேன்.
Badri,
ReplyDeleteWasn't there a statement from Maran couple of months ago, that India is going to leapfrog to 4G as 3G has not proved cost effective?
And also when the 3G licenses were issued in the UK, the mobile operators paid a fortune for the previlege. Did the same thing happen in india?
Uma
மாறன் 3G/4G, ipv6 என்றெல்லாம் நிறைய சரியாகப் புரியாத விஷயங்களைப் பற்றி அவர் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எழுதிக்கொடுப்பதை அப்படியே பேசி விடுகிறார். இந்தியாவில் இன்னமும் 3G bidding நடக்கவில்லை. அடிப்படை செல்பேசி விஷயத்திலேயே அரசு லைசென்ஸ் பைசா வசூலிப்பதிலிருந்து ரெவின்யூ ஷேர் பக்கம் போய்விட்டனர். அதைப் பார்க்கும்போது இனிவரும் புது சேவை எதற்கும் ரெவின்யூ ஷேர் முறைதான் நடக்கும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteமாறன் 3G/4G, ipv6 என்றெல்லாம் நிறைய சரியாகப் புரியாத விஷயங்களைப் பற்றி அவர் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எழுதிக்கொடுப்பதை அப்படியே பேசி விடுகிறார். இந்தியாவில் இன்னமும் 3G bidding நடக்கவில்லை. அடிப்படை செல்பேசி விஷயத்திலேயே அரசு லைசென்ஸ் பைசா வசூலிப்பதிலிருந்து ரெவின்யூ ஷேர் பக்கம் போய்விட்டனர். அதைப் பார்க்கும்போது இனிவரும் புது சேவை எதற்கும் ரெவின்யூ ஷேர் முறைதான் நடக்கும் என்று தோன்றுகிறது.
ReplyDelete