இந்த வாரம் சமாச்சார்.காமில் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் காண்பிக்கும் உரிமம் தொடர்பாக ஜீ (Zee) - இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (ESPN Star Sports) இடையேயான கடும் போட்டி, வெளியே தெரிய வராத சில விஷயங்களுடன். யூனிகோடில் படிக்க இங்கே.
[பி.கு: இந்தப் பதிவு இதுவரை இரண்டு முறை போடப்பட்டு காணாமல் போயுள்ளது. ரஜினிகாந்தின் சில ரசிகர்களைத் திட்டிய பாவம்தான் என்னைப் படுத்துகிறது என்று நினைக்கிறேன். இப்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் போட்டுள்ளேன். அந்த ராகவேந்திரர்தான் இந்தப் பதிவைக் காப்பாற்ற வேண்டும்.]
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
17 hours ago
1. Poojyaya Raghavendraya Satya Dharma Rathaya Cha!
ReplyDeleteBajatham Kalpa Vrukshaya Namatam Kamadhenave!!
இனிமேல் ரஜினி ரசிகர்களை பகைத்துக் கொள்ளவேண்டாம் :-)
2. 1200 கோடி ரூபாய் கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கினால், ஜீ டிவிக்கு எப்படி கட்டுப்படியாகும்? ஒரு விஷயம் புரியலை. இவங்க எவ்வளவு துட்டு கொடுத்து வாங்கினாலும், நேரடி விளம்பரங்களை அதிகமா போட முடியாது. ஒவர்களுக்கு நடுவிலேயும், ப்ரேக்கின் போதும்தான் போட முடியும். அதிகமா ரைட்ஸ் குடுத்து வாங்கின நிகழ்ச்சிங்கறதுக்காக, விளம்பரக் கட்டணத்தை ஒரு லெவலுக்கு மேல ஏத்தமுடியுமா? அப்படி ஏத்தினா ஏஜன்சிக்கள், விளம்பரதாரர்கள் எல்லாம் குதிக்க மாட்டாங்களா? ஜீடிவி, இதனால லாபம் சம்பாதிக்க முடியுமா? இப்படி ஏர் டைம் விலையை அவனவன் இஷ்டத்துக்கு ஏத்தி விட்டுக்கிட்டே போறது நல்லதுன்னா நினைக்கிறீங்க?
விளம்பரக் கட்டணத்தை ஓர் அளவுக்கு மேல் ஏற்ற முடியாது. அவ்வப்போது நடக்கும் ஆட்டங்களின் விறுவிறுப்பைப் பொருத்தது அது. ஆனால் Zee மற்ற வகைகளில் பணத்தைச் சம்பாதிக்க முடியும். கேபிள் சப்ஸ்கிரிப்ஷன் மூலம். இப்பொழுது ESPn Star Sports வாங்க ஒவ்வொருவரும் மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 35 செலவு செய்கிறோம். இந்தியா கிரிக்கெட் குறைவாகத்தான் இருக்கும் என்றால் நாம் இவ்வளவு செலவு செய்ய மாட்டோம். அதனால் ESPN Star Sports விலை குறையும். இப்பொழுது நாம் யாரும் Zee bouquet வாங்குவதில்லை. இந்தியா கிரிக்கெட் இருந்தால் மாதம் அதற்கு ரூ. 10 Zee Sports என்னும் சானல் வாங்க செலவு செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். வருடத்திற்கு ரூ. 120. இந்தியா முழுவதும் 8 கோடி வீடுகள் (80 மில்லியன்) தொலைக்காட்சி வைத்துள்ளன. அதில் 1 கோடி விடுகள் மட்டுமே காசு கொடுத்து Zee Sports வாங்கும் என்று வைத்துக் கொள்வோம். ஆக ஆண்டு வருமானம் = ரூ. 120 கோடி.
ReplyDeleteஇதுவே மாதக் கட்டணம் ரூ. 20க்குக் கொண்டு செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் (இரண்டாம் வருடத்திலிருந்து). 2 கோடி வீடுகள் வரை இந்தக் கட்டண சானலைப் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதனால் வருட வருவாய் ரூ. 480 கோடியாகிறதல்லவா?
நான்கு வருடங்களுக்கு?
இதைத் தவிர DTH சேவையை எடுத்துக் கொள்வோம். அங்கு ஒரு செட் டாப் பாக்ஸ் ரூ. 3,000 வீதம் விற்கலாம். அதில் கிடைக்கும் மார்ஜின் ரூ. 500 ஆவது இருக்கும். மாதக் கட்டணமாக ரூ. 250 வசூலிப்பார்கள். அதில் பல சானல்கள் இருக்கும். Zeeக்குக் கிடைக்கும் லாபம் மாதத்திற்கு ரூ. 50 என்று வைத்துக் கொள்வோம். இப்படி மொத்தம் 1 லட்சம் வீடுகளைக் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கிடைக்கும் லாபம் எவ்வளவு? ஒருதடவை ரூ. 50 கோடி + ஆண்டுக்கு ரூ. 60 கோடி.
மேலும் இப்படி DTH கொடுக்கும் வீடுகளுக்கு broadband இணையச் சேவையைக் கொடுக்கலாம். அதில் மாதம் ரூ. 1,000 வசூல் செய்யலாம். அங்கு கிட்டத்தட்ட ரூ. 300 வரை லாபம் பார்க்கலாம். மொத்தம் கிடத்த 1 லட்சம் வீடுகளில் வெறும் 10% இந்த பிராட்பேண்ட் சேவையை எடுத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொண்டாலும், இதனால் கிடைக்கும் லாபம் வருடத்திற்கு ரூ. 3.6 கோடி.
1 லட்சத்திலிருந்து 5 லட்சத்துக்கு எண்ணிக்கையை அதிகரித்தால்?
சுபாஷ் சந்திராவின் கணக்கு சரியான கணக்குதான்.