Tuesday, March 22, 2005

ஜெமினி கணேசன் மறைவு

வலைப்பதிவுகளில் இதுவரை காணவில்லை, எனவே... நேற்று இரவு, தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் காலமானார்.

11 comments:

  1. காலையில வீட்டுல சாப்பாடு கிடைக்கலீங்க, எங்கம்மாவுக்கு அவுங்க தோழி சென்னையில இருந்து போன் போட்டு சொல்லிட்டாங்க, அதுல இருந்து ஒரே ஜெமினி புராணம் தான் வீட்டுல..
    பி.கு.: எங்கம்மாவும் அவுங்க தோழிகளும் 1970ல கோவை அவினாசிலிங்கத்துல 'ஜெமினிக்கு' ஃபேன் கிளப் வச்சிருந்தாங்களாம்.. (கலிகாலம்!!)

    ReplyDelete
  2. OOps.. இப்பத்தான் என் பதிவுல பதிஞ்சேன். ஆனாலும், எம்.ஜி.ஆர் - சிவாஜியின் ஆளுமையில் தமிழ்சினிமா இருந்தபோது அவர்களிடமிருந்து தனித்து, காதல், குடும்பம், நடுத்தர வர்க்க படங்களை செய்தவர். காதல் மன்னனாய் அறியப்பட்டு, இன்றிருந்தால், மாதவன், அஜீத் போன்ற கதாநாயகர்களுக்கு சவால் விடக்கூடியவர். அவர் காலம் முடிந்தபின்னும், கதாநாயகனுக்கு இணையாண கதாபாத்திரங்களில் (உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி )நடித்து தன் நடிப்பாற்றலை நிருபித்தவர்.

    ReplyDelete
  3. சினிமாவில் சம்பாதித்தை சினிமாவிலேயே முதலீடு செய்து சீரழிந்து கொண்டிருந்த நடிகர்கள் மத்தியில் சம்பாதித்த பணத்தை வேறு துறைகளில் முதலீடு செய்தவர்

    நாடக மேடையிலிருந்து வந்தாலும் ஓவர் ஆக்டிங் செய்யாமல் இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர்

    நிறைய வருஷங்கள் நடித்திருந்தாலும் அதிகமாக ஏதும் அவார்டு வாங்காத ஆசாமி

    ஓரு படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிப்பது என்கிற முடிவில் இருந்தது

    அதிகமான குடும்பப்படங்களில் நடித்திருந்தாலும் காதல் மன்னன் என்கிற பெயரே நிலைத்து நின்றதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

    நான்காண்டுகளுக்கு முன்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் அடிபட்டு, ஜெமினியின் தனிமனித வாழ்க்கையை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது டைம் வேஸ்ட்!

    ReplyDelete
  4. //சினிமாவில் சம்பாதித்தை சினிமாவிலேயே முதலீடு செய்து சீரழிந்து கொண்டிருந்த நடிகர்கள் மத்தியில் //
    ராம்கி!
    என்ன சொல்கிறீர்கள். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் போடுவது முட்டாள்தனமா? பிறகு யாராம் படமெடுப்பது. இப்படி அவரவர் தன் பாட்டுக்குப் போய்விட்டது கூட சினிமாவின் தேக்கத்துக்குக் காரணம். இன்னும் பிடிவாதமா படமெடுத்துக் கொண்டிருக்கும் கமல், பார்த்தீபன், பிரகாஸ் ராஜ் எல்லாரும் உங்களுக்கு எப்படித் தெரிகிறார்கள்? உங்களிடம் இப்படியொரு அபிப்பிராயம் ஏன் வந்ததென்று தெரியவில்லை.

    சினிமாவில் உழைத்த காசை கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள் கட்டி பணம் சம்பாதிப்பது தான் சிறந்ததா? அது அவரவர் விருப்பமென்று விட்டுவிட்டாலும், இப்படி சினிமாவில் கொட்டுபவர்களை சீரளிபவர்கள் என்று சொல்வது எவ்வகையில் பொருத்தம்? இவர்களால் தான் (மேற்குறிப்பிட்டவர்கள்) ஓரளவாவது தமிழில் நல்ல படங்கள் வருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. வசந்தன் ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறீங்க! கல்யாண மண்டபம், இஸ்கூல், காலேஜ் அத்தினயும் ஏளைங்களுக்கு ப்ரீ. கஜேந்தரரு( நன்றி கொசப்பேட்டை) ஆரம்பிக்கப் போறாரு மெடிக்கலு காலேஜூ. குட்ச புள்ளிங்க அல்லாரும் இனி டாக்டருதான்! இது சமூக பணி இல்லையா :-))
    பாகவதரு, என்.எஸ்.கே, சந்திரபாபு மாதிரி சோத்துக்கு இல்லாம சாவ சொல்றீங்களா?

    ReplyDelete
  6. தனது வாழ்வைத் தான் விருப்பப்பட்டபடி, மற்றவர்களுக்கு சங்கடமில்லாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விட்ட ஜெமினியின் வாழ்க்கை வியக்க வைக்கிறது....

    எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை?

    ReplyDelete
  7. can't i increase the text size? choosing the 'largest' t/s on 'view' menu merely increases the space b/w lines, it seems?

    ReplyDelete
  8. ¸¡¾ø ÁýÉý ¦ƒÁ¢É¢ ¸§½ºý Á¨È× §Å¾¨ÉÂǢ츢ÈÐ. «¨¾Å¢¼ §Å¾¨É þô§À¡Ð ÅÕõ Ê.Å¢. º£Ã¢ÂÄ¢ø (Ó츢ÂÁ¡¸ ºý Ê.Å¢.) ¿ÁÐ ¸Ä¡º¡Ãõ º£ÃÆ¢Ôõ Åñ½õ ±Îì¸ôÀÎõ º£Ã¢Âø¸û. «Îò¾Å÷ Á¨ÉÅ¢¨Â ±ôÀÊ «À¸Ã¢ôÀÐ, «Îò¾Å÷ ¸½Å¨É ±ôÀÊ ¨¸ìÌû §À¡ðÎì ¦¸¡ûÅÐ. þ¾¨É ¯¼ÉÊ¡¸ ¾Îò¾¡¸ §ÅñÎõ. Å£ðÊø ±ø§Ä¡Õõ ¯ð¸¡÷óÐ ±¨¾Ôõ À¡÷ì¸ ÓÊÂÅ¢ø¨Ä. þЧÀ¡ýÈ ¸¡ðº¢¸Ç¡ø ÌÎõÀò¾¢ø ºó§¾¸õ «¾¢¸Ã¢ì¸¢ÈÐ ±ýÀÐ ±ý ±ñ½õ. þ¨¾ô ÀüÈ¢ ¿£í¸û ±Ø¾Ä¡§Á Àòâ.

    ReplyDelete
  9. பத்ரி: ரொம்ப வருத்தமா இருக்கு. ஜெமினி ஒரு versatile artist. அவர் ஒரு படத்திலே வில்லனா வருவார். கையிலே ஒரு சிகார் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணை மிரட்டுவார். அப்புறம் ஒரு படத்தில் கள்ளனுக்கு கள்ளனாக வருவார். தூக்கத்தில் கூட மறந்தும் தாய்மொழி பேசமாட்டார். இப்படியெல்லாம், நிறைய செய்திருக்கிறார். சூரியனும், சந்திரனும் வரும் போது நட்சத்திரம் ஒளிமங்குவது போல் அவர் காலம் ஓடிவிட்டது. ஆனால், மறக்க முடியவில்லை.

    ReplyDelete
  10. வசந்தன்,

    கல்யாண மண்டபம், ஸ்கூல் கட்டுவதெல்லாம் சமூக தொண்டில் சேர்த்தியல்ல என்று நினைப்பவன் நான்.

    சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் மட்டும் முதலீடு செய்ததால் சீரழிந்தவர்களின் லிஸ்ட் பெரிது. உ.ம் நாகேஷ், வி.கே.ராமசாமி, கலைவாணர்...

    நீங்கள் சொல்லும் கமல், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களெல்லாம் சினிமாவிலும் முதலீடு செய்கிறார்கள்... அவ்வளவுதான்.

    ReplyDelete
  11. ராம்கி,
    அடேங்கப்பா!சமாளிப்பு மன்னன் தான் போங்க.
    கமல் சினிமா தவிர வேறு எதில் முதலீடு செய்திருக்கிறார்? உங்க புண்ணியதுல தெரிஞ்சுக்குவோம்.

    ReplyDelete