Sunday, June 04, 2006

இலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை

சசி, தன் பதிவில் சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" என்று ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார். அதன் முதல் பாகம் இங்கே.

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் புலிகள்மீது கொண்டுவந்த தடை, அதற்குமுன் கனடா அரசு கொண்டுவந்த தடை, அது தொடர்பாக சர்வதேச அரங்கில் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர தோல்வி ஆகியவற்றை முன்வைத்து சசி பேசுகிறார்.

இந்தப் பிரச்னை புலிகள் வலியத் தேடிக்கொண்டது. புலிகள் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கேயுடன் நல்லதொரு சூழலில் அமைதி பற்றி பேசியிருக்கமுடியும். நிச்சயமாக இப்பொழுதிருக்கும் சூழல் இருந்திருக்காது. இன்று புலிகள் பெருத்த பின்னடைவில் இருக்கின்றனர். அடுத்து கடுமையான போர், அதில் ஏற்படும் வெற்றிதோல்வி, யார்பக்கம் அதிக இழப்பு ஆகியவை பொருத்தே மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டியிருக்கும். இலங்கைப் பிரச்னையில் இந்த நிலை கிட்டத்தட்ட 10 வருடங்கள் பின்னடைவு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ரணிலின் வெற்றிவாய்ப்பை விரும்பிக் குலைத்தது புலிகள்தாம். ரணிலென்ன, மஹிந்தாவென்ன, இருவருமே சிங்கள வெறியர்கள்தாம் என்று பிரபாகரனும் ஈழத்தமிழர்களும் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகின்றனர்.

எனது பதிவில் சென்ற வருடம் ஆகஸ்ட், செப்டெம்பர், நவம்பர் மாதங்களில் நான் எழுதியவை, அவற்றுக்கான ஈழத்தமிழர்களின் எதிர்வினைகள் ஆகியவற்றைப் படித்தால் நான் சொல்வது புரியவரும்.

ரணில் விக்ரமசிங்கே தோல்விக்கு புலிகள்தாம் முதல் + முழுக்காரணம். அதனை அவர்கள் விரும்பி வரவேற்றதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷே குடியரசுத் தலைவராக வந்தால் அதனால் தங்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும் என்று நினத்ததே. என்ன பலன்? மஹிந்த ஜே.வி.பி, ஜே.எச்.யு போன்றவர்களின் கூட்டுடன் வந்ததாலும் அவருடைய சொந்தக் கொள்கையே unitary state என்பதை நோக்கி இருப்பதாலும் அவரால் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியாது. புலிகளின் பல விருப்பங்களை நிறைவு செய்யமுடியாது. இதனால் மஹிந்தவைக் காரணம்காட்டி புலிகள் போரில் ஈடுபடலாம். இலங்கை அரசின் போக்குதான் தங்களை இந்த நிலைக்கு இழுத்துவந்துவிட்டது என்று பழியை அவர்கள்மீது போடலாம். நார்வே புலிகளின் நிலையை ஏற்றுக்கொண்டு புலிகளுக்கு அனுசரணையான போக்கை எடுக்க ஐரோப்பிய யூனியனை வற்புறுத்தலாம். ஏராளமான அகதிகள் புலம்பெயர்வதைக் காரணம் காட்டி உலக நாடுகளின் ஆதரவை அல்லது குறைந்த பட்சம் அவர்கள் புலிகளை எதிர்க்காத நிலையைப் பெறலாம்.

ஆனால் இந்தக் கணக்குகள் பல இடங்களில் தவறிவிட்டன. கதிர்காமர் இல்லாத நிலையிலும் SLFP-யின் உட்கட்சிப் பூசல்களுக்கிடையேயும் இலங்கை அரசின் ராஜதந்திரிகள், Human Rights Watch போன்ற சில குழுக்களின் "உதவியோடு" கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புலிகளின் ரகசிய அடிப்படைக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர். இப்பொழுது இலங்கையில் நடக்கும் low intensity conflict-இல் இரண்டு பக்கங்களுமே தவறிழைப்பதாக நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகள் நினைக்கின்றன. எனவே புலிகள் எதிர்பார்த்த ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தமிழகத்துக்கு கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 3,000 அகதிகள் வந்துள்ளனர். வந்துள்ள பலரும் புலிகள்தாம் தங்களைத் தமிழகத்துக்குப் போகுமாறு சொன்னதாகச் சொல்கின்றனர். [உடனே என்னைத் தமிழ் எதிரியாகச் சித்திரிக்கவேண்டாம். நான் கலந்துகொண்ட சில பேச்சுகளில் ஈழத்தமிழ் அகதிகளிடையே உழைக்கும் சில தொண்டு அமைப்புகளின் தன்னார்வலர்கள் சொன்ன செய்தி இது.] ஆனால் இந்த அகதிகள் தமிழகத்துக்கு வந்தது இங்குள்ள அரசியல் நிலைமையை எந்த அளவும் மாற்றவில்லை. தொடர்ந்து இந்திய அரசு புலிகளைத் தடைசெய்த வண்ணம் உள்ளது. தமிழக ஆட்சிமாற்றம் எந்த விதத்திலும் புலிகளுக்கு ஆதரவானதாக இல்லை. இன்னமும் சொல்லப்போனால் கேலிக்கூத்தாக வைகோ தன் புலிகள் ஆதரவை வைத்து தயாநிதி மாறனை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் என்று திமுக எம்.பிக்கள் பிரச்னை எழுப்பி அதன்மூலம் வைகோ, விடுதலைப் புலிகள் இருவருக்கும் பழி தேடித்தரப் பார்க்கிறார்கள்.

இலங்கைப் பிரச்னையில் விடுதலைப் புலிகள் கடந்த வருடம் எடுத்த நிலைப்பாடு தவறானதாகவே இதுவரை சென்றுள்ளது. இன்று விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழர்களின் நியாயமான பிரதிநிதிகள் என்ற வகையில் இந்தத் தவறான முடிவுகள் அனைத்தும் நேரடியாக ஈழத்தமிழர்களை பாதிக்கிறது.

[பி.கு: நான் கடைசியாகச் சென்றிருந்த ஒரு பேச்சு: Geneva Peace Talks: Political and Peace Developments in Sri Lanka"- தரிணி ராஜசிங்கம், 11 ஏப்ரல் 2006. அந்தப் பேச்சின்போது நான் எடுத்துவைத்த குறிப்புகளைக் கொண்டு பதிவெழுத நினைத்து, பின்னர் ஒட்டுமொத்தமாக விட்டுத்தள்ளிவிட்டேன். இந்தப் பேச்சின்போதுதான் தமிழகத்தில் உள்ள சில தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் அகதிகள் பற்றி சொல்வதைக் கேட்டேன்.]

8 comments:

  1. பத்ரி எதிர்பார்த்த முழுமை இல்லாவிட்டாலும் பிரச்சனையை ஓரளவு தொட்டுள்ளீர்கள்.புலிகளின் கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தீர்களானால் முதுகில் குத்துபவர்களுடன் அவர்கள் சமரசம் செய்து கொள்வதே இல்லை.மகிந்தவை நேரடி எதிரியாகவும் ரணிலை முதுகில் குத்தும் எதிரியாகவும் பார்க்கிறார்கள் அதற்கு முக்கிய காரணம் கருணா பிரச்சனையின் தோற்றுவாய் ரணில் என்பதே.

    பொருளாதார ரீதியில் முற்றிலும் திறந்த பொருளாதாரக் கொள்கை உடையவர் ரணில் அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகள் காரணமாக மேற்குலகமும் சரி ஜப்பான் போன்ற உதவி வழங்கும் நாடுகளும் சரி கடந்த காலங்களில் ரணிலை ஆதரித்து வந்துள்ளன திருகோணமலை துறைமுகம்,எண்ணெய்க் குதங்கள் மீதான ஒப்பந்தங்கள் ஒரு உதாரணம்.மகிந்தவினதும் சேர்ந்திருக்கும் கட்சிகளினதும் நிலைப்பாடு காரணமாக ஏனைய நாடுகள் எதிர்பார்த்த ஆதரவை வழங்காமல் இலாப நட்டக் கணக்கு பார்க்க ஆரம்பித்துள்ளன.மகிந்த வந்ததின் பின்னால் பல அபிவிருத்தித் திட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டமை இதற்குச் சான்று.

    தங்களுக்கு இலாபமில்லை என்று கண்ட இணைத் தலைமை நாடுகள் இலங்கையின் சமாதான முயற்சிகளிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக தற்போது அறிக்கை விடுத்திருக்கின்றன.இலங்கை இனப்பிரச்சனையில் தலையிடப் போவதில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.அடுத்தடுத்த வாரங்கள் திருப்பம் நிறைந்தனவாக இருக்கும் என நம்பலாம்

    ReplyDelete
  2. வந்துள்ள பலரும் புலிகள்தாம் தங்களைத் தமிழகத்துக்குப் போகுமாறு சொன்னதாகச் சொல்கின்றனர்.
    இது சிறிலங்கா அரசாங்கம் சொல்வதைப் போன்ற புரிதலைத் தருகிறது. ஏதோ இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் எல்லாம் சரியாக நடப்பது போலுவும் மக்களுக்கு எந்த ஆபத்துமில்லையென்பது போலவும் வெளிப்படும் கூற்றுத்தான் சிறிலங்கா அரசாங்கத்தினது. அரசகட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள வேண்டுமென்ற நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    புலிகள் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். அவர்கள் அதிகம் விரும்புவதும் வலியுறுத்துவதும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதையே. அது முடியாதவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்குப் போங்கள் என்றும் சொல்கிறார்கள்.

    மற்றும்படி "சண்டையில்லாமல் இருப்பதே ஈழத்தமிழர்களுக்கான தீர்வு" என்று நிலவும் கருத்தின் தொர்ச்சிதான் உங்களது பதிவும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. //இந்தப் பிரச்னை புலிகள் வலியத் தேடிக்கொண்டது. புலிகள் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கேயுடன் நல்லதொரு சூழலில் அமைதி பற்றி பேசியிருக்கமுடியும். நிச்சயமாக இப்பொழுதிருக்கும் சூழல் இருந்திருக்காது. இன்று புலிகள் பெருத்த பின்னடைவில் இருக்கின்றனர்.//

    தங்களின் இக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. உங்களைப் போலத்தான் பலரும் நினைக்கிறார்கள். ஏன் புலிகள் ரணிலைத் தோற்க வைத்தனர் என்று. இது உண்மையில் தவறான கருத்து. புலிகளின் இந்த இராஜதந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இதில் உள்ள இராஜதந்திரம் மிகவும் நுணுக்கமாக ஆராய்வதன் மூலமே புரிந்து கொள்ள முடியும். உண்மையில் புலிகளுக்கு பின்னடைவு இல்லை. உண்மையில் நசுக்கப்பட இருந்த ஈழவிடுதலப் போராட்டம் , திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெச்சத்தக்க அரசியல் நகர்வுகளால் காப்பாற்றப்பட்டுள்ளது. இவற்றை நான் விரிவாக சசியின் பதிவில் பின்னூட்டமாக பதிகிறேன் பாருங்கள். நீங்களும் , மற்றும் சிலரும் நினைப்பது போலில்லாமல் திரு.பிரபாகரனின் வியக்கத்தக்க அரசியல் நகர்வுகளால் ஈழப்போராட்டம் முன்னேற்றப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. தான் ஒரு சிறந்த இராணுவ நிபுணன் என்பது மட்டுமல்ல சிறந்த இராஜதந்திரி எனவும் பிரபாகரன் மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளார். இவற்றையெல்லாம் விரிவாக விளக்கமாக சச்சியின் பதிவில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. /*
    இந்தப் பிரச்னை புலிகள் வலியத் தேடிக்கொண்டது. புலிகள் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கேயுடன் நல்லதொரு சூழலில் அமைதி பற்றி பேசியிருக்கமுடியும்
    */

    நான் இவ்வாறு நினைக்கவில்லை. ராஜபக்ஷவை புலிகள் தான் வெற்றி பெற வைத்தனர். இது மிகச் சிறந்த ராஜதந்திரம் என்பதிலும், சரியான முடிவு தான் என்பதிலும் ஐயமில்லை. இது குறித்தப் பிற விபரங்களை எனது அடுத்த பதிவில் எழுத எண்ணியுள்ளேன்.

    மற்றொன்று இந்தியா, தமிழகம், கலைஞர், வைகோ என்பதைக் கடந்து இன்று ஈழப் போராட்டம் சர்வதேச அளவில் சென்று விட்டது. இந்தியாவின் நிலையில் மாற்றத்தை நாம் என்றைக்கும் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தின் moral support கூட இன்றைய சூழலில் முக்கியமானது அல்ல. இவை தமிழீழத்திற்கு சாதகமாக மாறினால் அது கூடுதல் பலம் அவ்வளவே.

    ReplyDelete
  5. ரணில் வென்றிருந்தால் ஒரு பக்கம் சமாதானமுயற்சி என்று கூறி புலிகளை போருக்கு செல்லவிடாது தடுத்துக்கொண்டு உலகநாடுகளின் உதவியைப்பெற்று தங்களைப்பலப் படுத்தியிருப்பார்கள். உதவி வழங்கும் நாடுகளின் பெருமளவு பணம் இன்னமும் சிறீலங்காவுக்கு கொடுக்கப்படவில்லை. ரணில் வந்திருந்தால் நிலமை வேறு. இந்தப் பணமும் தமிழர்களுக்கு நிச்சயமாகப் சென்றடைந்திராது. ரணில் முன்பே 6 சுற்று பேச்சுவார்த்தையில் பேசியவற்றை நடைமுறைப்படுத்தாது ஜனாதிபதி மீது பழியைப்போட்டுவிட்டு திரைமறைவில் பல காரியங்களை செய்தார்கள். தேர்தலுக்கு முன்பு சில அமைச்சர்கள் மூலமாக இவ்வுண்மை தெரியவந்தது.(இணைத்தலைமை நாடுகள் தோற்றம், கருணாவுக்கு ஆதரவு)

    ReplyDelete
  6. மகிந்த உள்ளபோதே பிரச்சினை இப்படி இழுத்தடிபடுகிறது என்றால் ரணில் இருந்தால் இறப்பர் போல இன்னும் பல காலம் ஈய்ந்துகொண்டிருந்திருக்கும். ரணிலால் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக ஒன்றும் செய்துவிடமுடியாது.இருக்கும் சிங்களவாக்குகளையும் பேரினவாதிகளிடம் இழந்து அரசியல் தற்கொலை செய்ய அவர் விரும்பமாட்டார். புலிகளுடன் வஞ்சகத்துடன் பேசுவதிலும் சர்வதேச வலைப்பின்னல் அமைப்பதிலும் உள்ள திறமை சிங்களமக்களை பேரினவாதிகளிடம் இருந்து தன்பால் ஈர்ப்பதில் இருந்ததில்லை. இதுதான் அவர் தோற்க முதற்காரணம். புலிகள் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னது இரண்டாம் பட்சம்தான்.

    ( அவரை அரசியல்வாதியாக பார்க்க முனைந்தால் இலகுவாக கட்டுடைக்கலாம். சர்வதேச நாடுகள் அவருக்கு கொடுத்த பிம்பங்களில் வைத்துப்பார்த்தால் சமாதானப்பறவை போலத்தான் தோற்றமளிப்பார்)

    - ஆசைப்படுபவன்

    ReplyDelete
  7. Co-Chairs to pull out unless govt. delivers on Oslo deal
    Source: Sunday Leader - June 4, 2006





    The Co-Chairs will withdraw from Sri Lanka’s peace process unless the government and the LTTE recommit to the agreements reached during peace talks from 2002 including the Ceasefire Agreement, top level diplomatic sources said.

    A withdrawal will also result in all development aid except humanitarian assistance being halted, these sources said.

    They said the Co-Chairs have come to the end of their patience and the statement issued after the Tokyo Conference tantamounts to giving notice to both parties, the diplomatic sources said.

    "We represent 85 per cent of the GDP of the world and we have responsibilities to our own countrymen. If there is no proof that both parties want to take the peace process forward, we no longer have a role. Good intentions alone will not suffice," one top diplomat said.

    It was pointed out that if the international community cannot disburse aid equally to the north and south, it will not work.

    The diplomatic sources said they would want both the government and the LTTE to recommit to the agreements reached including the Oslo communique and that the recommitment must come in the form of proven action.

    The government, one source said must prove by action and not mere words that it is not dealing with the Karuna Group.

    Meanwhile Netherlands Ambassador Reynout S. Van Dijk who holds the presidency of the EU in Colombo said they do not want to be used by any party as a scorecard holder.

    "There should be no confusion about our role. We only want to promote peace," he said.

    Ambassador Van Dijk also said the human rights situation in the context of reports submitted by the SLMM is a matter of serious concern and should be addressed effectively.

    Referring to the Kayts massacre the Ambassador said there were no political consequences for those who failed to perform their duties despite an order by the magistrate.

    "We expect the government to come with good answers why allegations of SLMM are untruthful and the government has to be transparent or held accountable," he said.

    "I cannot imagine if a police officer does not follow orders of the magistrate, there are no consequences. Countries that are democratic have to maintain high standards. It has personal consequences for civil servants. If a minister does not deal with it effectively, he is also fired. That is if he does not show results. That is how democratic partners perceive other democratic partners" the Ambassador said.

    Ambassador Van Dijk further said the EU will maintain contact with the LTTE if the LTTE is willing to do so.

    "We do not want to isolate the LTTE. We want to help them arrive at a peaceful solution," the Ambassador added.

    The Ambassador told The Sunday Leader, the EU laws unlike in the US do not preclude maintaining contact with the LTTE and they would be happy to do so.

    The Ambassador further said LTTE members will be free to travel within Europe to promote peace provided they are not listed by name as terrorists.

    ReplyDelete
  8. EU to ban renegade Sri Lanka rebel faction too-diplomat
    ------------------------------
    COLOMBO (Reuters) - The European Union is poised to blacklist a group of breakaway rebels locked in a bitter feud with the island's Tamil Tigers, a senior diplomat said on Sunday, similar to a new terror ban against the mainstream group.

    The Liberation Tigers of Tamil Eelam (LTTE), who were banned by the 25-nation bloc last week amid a rash of violence that many fear could rekindle a two-decade

    Advertisement
    civil war, accuse the military of helping a band of former comrades led by a commander called Karuna.
    The feud is seen as the biggest obstacle to jumpstarting stalled peace talks, which the Tigers have pulled out of indefinitely, and averting a slide back to full-blown war.

    "The EU member states have requested the investigation and preparation of a dossier with the intention of listing the former part of the LTTE now known as the Karuna group," the diplomat told Reuters on condition of anonymity.

    The EU ban on the mainstream group froze the LTTE's funds and assets in member states and prohibited the provision of financial services to them.

    Nordic truce monitors say they suspect some parts of Sri Lanka's military are involved in extrajudicial killings of ethnic Tamils and at the very least are turning a blind eye to Karuna men operating from government-controlled territory.

    The international community has called on the government to rein in Karuna's group as pledged at peace talks earlier this year, but officials say they cannot find anyone to disarm and that it is not their responsibility anyway.

    The government denies any collusion with Karuna, who split from the Tigers in 2004 and is seeking to supplant the rebels' northern leadership.

    More than 290 soldiers, police, civilians and rebels have been killed in a rash of attacks from suicide bombings to naval clashes since February in what the truce monitors and Tigers now call a "low-intensity war" between the state and the rebels.

    Sri Lanka's main political parties agreed on Friday to work on a new power-sharing offer for the Tigers, while the rebels agreed to talks in Oslo on June 8-9 on how to ensure truce monitor safety.

    But the foes are still poles apart over the Tigers' central demand that their de facto state in the island's north and east be recognised as a separate homeland for ethnic Tamils, and many anticipate a return to a war that killed more than 64,000 people before a 2002 truce.

    ReplyDelete