வெறும் கண்களாலேயே இரு கோள்களும் ஒன்றுக்கொன்று அருகே இருப்பது இரவு சுமார் 7.30 மணிக்குத் தெரிய ஆரம்பித்தது. கோளரங்கத்தில் நிறைய கூட்டம். 8.30 மணிக்கு மேல் தெரியாது என்ற நிலை. நாங்கள் தொலைநோக்கிக்கு வெகு அருகே செல்லும்போதே வெறும் கண்களுக்குத் தெரியாமல் மறையத் தொடங்கிவிட்டது. 8.15க்கு தொலைநோக்கியில் பார்க்கும்போது சனி மட்டும்தான் ஓரளவுக்குத் தெரிந்தது.
நாளை இரவும் தெரியுமாம். ஆனால் சூரியன் மறைந்தபின் சீக்கிரமாகவே கிரகங்களும் மறைந்துவிடுமாம்.
அண்ணே "Mars" க்கு தமிழ் செவ்வாய்், வியாழன் (Jupiter)் அன்று! ;-)
ReplyDeleteகுரு பகவான் கோச்சுக்கப் போறார், திருத்திடுங்க ;-)
நான் Jupiter என்பது 'வெள்ளி' என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்?
ReplyDeleteதெரிந்தவர்கள் திருத்துங்கள்... நான் நினைத்துக்கொண்டது:
ஞாயிறு - Sun
திங்கள் - Moon
செவ்வாய் - Venus
புதன் - Mercury
வியாழன் - Mars
வெள்ளி - Jupiter
சனி - Saturn
இல்லையா?
பத்ரி,
ReplyDeleteஎனக்கு இந்தக் கோள்களின் தமிழ்ப்பெயர்கள் சரியாகத் தெரியாது. ஆனால் Mars என்றால் செவ்வாய்க்கிரகம் என எங்கேயோ படித்த ஞாபகம். கிரகங்களுக்கான தமிழ்ப்பெயரை நானும் அறிய ஆவலாக உள்ளேன்.
நன்றி.
...என்று நினைக்கிறேன்?!?!?
ReplyDeleteபத்ரி - கிழமை வரிசையில் அல்ல - ஜாதக வானியல் அமைப்புப்படி தமிழில் கோள்களைக் குறிப்பிடுவதை வைத்துப் பார்த்தால் தமிழில் mars எனக் குறிப்பிடப்படுவது செவ்வாய் என்பதும், jupiter எனக் குறிப்பிடப்படுவது (குரு/வியாழன்) என்றும் முந்தைய அனானி குறிப்பிட்டிருப்பது சரியே.
ReplyDeleteசெவ்வாய் -Mars
ReplyDeleteவியாழன் - Jupiter
வெள்ளி - Venus
ஞாயிறு - Sun
ReplyDeleteதிங்கள் - Moon
செவ்வாய் - Mars
அறிவன் (புதன்) - Mercury
வியாழன் - Jupiter
வெள்ளி - Venus
காரி (சனி) - Saturn
அன்புடன்,
இராம.கி.
ஞாயிறு - Sun
ReplyDeleteதிங்கள் - Moon
செவ்வாய் - Mars
புதன் - Mercury
வியாழன் - Jupiter
வெள்ளி - Venus
சனி - Saturn
Pluto, Neptuneல எது ராகு எது கேது என்று தெரியவில்லை! :O)
வியாழனும் சனியும் அருகருகே ? சுவாரிஸ்யம் ?
ReplyDeleteஅதைவிட சுவாரஸ்யம் சட்டசபையில் ராகு கேது எதிரெதிரே சந்தித்துக் கொள்வது என்று நினைக்கிறேன்.
//Pluto, Neptuneல எது ராகு எது கேது என்று தெரியவில்லை! :O)//
ReplyDeleteஅவை பருப்பொருள்கள் அல்ல. நிழல்கள்.