Wednesday, June 07, 2006

தமிழகத்துக்கு திட்டக்குழு நிதி

2006-07ம் வருடத்துக்கு என திட்டக்குழு தமிழகத்துக்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கியுள்ளது.

ஒரு மாநில அரசுக்குச் செலவழிக்கக் கிடைக்கும் பணத்தில் திட்டக்குழு கொடுக்கும் பணமும் முக்கியமான பங்களிப்பாகும். ஆனால் திட்டக்குழு கொடுக்கும் பணத்தை ஒருசில துறைகளில் மட்டுமே, ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் மட்டுமே செலவழிக்கமுடியும்.

மத்திய அரசும் திட்டக்குழுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்ட நிதியாக எவ்வளவு அளிக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்கின்றன. அதற்குமேல் மத்திய அரசின் நட்பு இருந்தால் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொள்ளமுடியும்.

திட்ட நிதியை மான்யமாகவோ இலவசமாகமோ வாரிவழங்க எடுத்துக்கொள்ளமுடியாது. கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் சில குறிப்பிட்ட துறைகளில் உருவாக்கப்படும் திட்டங்களுக்காக மாநில அரசுக்குப் பணம் கொடுக்கின்றன:
  • கல்வி, அடிப்படைச் சுகாதாரம்
  • விவசாயம், தொழில்துறை வளர்ச்சி
  • உள்கட்டமைப்பு (சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி, பாசனம்)
  • சமூக/பொருளாதாரச் சேவைகள் (வீட்டுவசதி, சத்துணவு போன்றவை)
  • மாநிலங்களின் கடன் சுமை குறைப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி உதவிகள்
முதல்வர் கருணாநிதி திட்டக்குழுவிடமிருந்து சென்ற வருடத்தைவிட கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அதிகமாகப் பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் - அதாவது பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் திட்ட நிதி இதோ:

வருடம்திட்ட நிதி
(ரூ. கோடி)
2006-0712,500
2005-069,100
2004-058,001
2003-047,000
2002-035,754

முதல்வர் கருணாநிதி விவசாயக் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அல்லவா? அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும். இப்பொழுதே திட்டக்குழுவை இந்த விவசாயக் கடன் தள்ளுபடியை திட்டச் செலவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை திட்டக்குழு நிராகரிக்கவேண்டும் என்பது என் கருத்து. இந்த ரூ. 7,000 கோடியை, அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட அளவை திட்டச்செலவு என்று எடுத்துக்கொண்டால் அது மாநில அரசைச் சோம்பேறியாக வைத்திருப்பதற்கு உதவும்.

திட்டக்குழுவிடமிருந்து வாங்கிய பணத்துக்கு ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். தேர்தல் அறிக்கையில் மான்யம், இலவசம் என்று அறிக்கை விட்டால் அதை மாநில அரசின் வருமானத்திலிருந்து சரிக்கட்டவேண்டும். அதுதான் நியாயம். அப்பொழுதுதான் மற்றொருமுறை தேர்தல் அறிக்கையில் வாய்க்கு வந்தபடி வாரிவழங்காமல் சற்றே யோசித்துச் செய்யவேண்டியிருக்கும்.

அதேபோல கிலோ அரிசி ரூ. 2 திட்டமும் நிச்சயம் தடுமாற்றத்தில்தான் முடியப்போகிறது. மத்திய அரசு அரிசி விலையை ஏற்றப்போகிறது. அத்துடன் தமிழகத்துக்கு என்று ப.சிதம்பரம் ஸ்பெஷல் மான்யம் ஏதும் கொடுக்கப்போவதில்லை. கருணாநிதி நிருபர் கூட்டத்தில் பேசும்போது வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார். பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அரிசி கிலோ ரூ. 2 என்று இனி கொடுக்க முடியுமா என்று கேட்டதாக நிருபர்கள் கருணாநிதியைக் கேட்க அவர் பதிலுக்கு "வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்" என்றுள்ளார்.

வீராசாமி, நாயுடு ஜாதி (??) என்பதைத் தவிர இதிலிருந்து வேறெதையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது.

அரிசிக்கே காசு எங்கிருந்து வரப்போகிறது என்று தெரியாத நிலையில் கலர் டிவிக்கு காசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். இந்த ஆண்டுக்கான முழு மாநில பட்ஜெட் வரும்வரை பொறுத்திருப்போம்.

7 comments:

  1. ஸ்டாலின் முதல்வராகும் வரையிலாவது 'தம்' பிடித்து- ஓரளவாவது செய்ய வேண்டும் என நிர்பந்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் வழிதான் தென்படவில்லை.

    ReplyDelete
  2. Nicely written, Badri.

    Do you have the numbers for TN's contribution to the Centre's revenue pool?

    - Ravi

    ReplyDelete
  3. Hi badri
    Nice to hear that we have got very good amount....
    "அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும்."
    When did this number changed from 5400 to 7000.Man that is huge.sometime back when I was listening to BBC , they said farmers are really good people in returning the loan, lot of other banks are making their advances to farmers and also they are making good profits..
    "..ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்"
    Yes we have to do that.

    I don't understand why central government is not doing this by starting an autonomous agency when it is intended for deveopment and not for administration.In my view the money what we are getting is really huge and we should be seeing a very big development in each year...it is really sad that people aren't aware of the numbers..

    Like you I am also eagerly waiting for the budget..

    They will give color TV , but who is going to get and how many of them are going to get is the question ?

    "வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்"
    Ayyavuku Vayas analum kusumbu koraia villai...

    CT

    ReplyDelete
  4. விவசாயக் கடன் ரத்து மொத்தமாக ரூ. 6,866 கோடி. அதனால் அதனைக் குத்துமதிப்பாக ரூ. 7,000 கோடி என்றேன்.

    விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிடம் (Co-operative Banks) வாங்கிய கடன், வட்டி, அபராத வட்டி அனைத்தும் சேர்ந்ததுதான் இந்தத் தொகை. இதுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்தும் (ஸ்டேட் பேங்க், இந்தியன் வங்கி போன்றவை) கடன் வாங்கியுள்ளனர். இந்தக் கடன் தொகைகள் வசூல் செய்யப்படுகின்றன. தேசிய வங்கிகள் இவற்றைத் தள்ளுபடி செய்யாது. அதற்கு சிதம்பரத்தின் தயவு தேவை. அவர் இதைச் செய்யமாட்டார்.

    ===

    மத்திய அரசு வளர்ச்சிப் பணிகளுக்கென்று தனி ஏஜென்சியை நியமிக்கக்கூடாது. அது மாநிலத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும்கூட.

    நாம் மாநில அரசுகளின் தவறான நிர்வாகத்துக்கு நிவாரணம் வேண்டி மத்திய அரசிடம் போகக்கூடாது. பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும். அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது.

    கலர் டிவி கொடுக்கமுடியுமா என்று கேட்டபோது தயாநிதி மாறன், மைதாஸ் சாராய ஆலை கொள்ளையடிக்கும் பணத்தைக் கொண்டே கலர் டிவியைக் கொடுத்துவிடுவோம் என்றார். எல்லோரும் கைதட்டினர். பின்னர் விவரம் தெரியவந்ததில் டாஸ்மாக் ஆர்டரிலிருந்து மைதாஸ் பெறுவது ஆண்டுக்கு ரூ. 600 கோடி. இது வருமானம். லாபம் 30% என்றாலும் அதனால் கிடைப்பது ரூ. 180 கோடி. கலர் டிவி கொடுக்கத் தேவையான பணம் ரூ. 6,000 கோடிக்கும் மேல் என்று சொன்னார்களே?

    இப்பொழுது கலர் டிவிக்களை நாங்குநேரி SEZ-ல் செய்யப்போவதாகச் சொல்கிறார்கள்! இன்னமும் நாங்குநேரி SEZ உருப்படியாகக் கட்டப்படவில்லையே? Global tender போடப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவிலிருந்து வாங்கப்போவதாகச் சொல்கிறார்கள். பார்ப்போம். எல்லாம் பட்ஜெட்டில் தெரியவரும்.

    ===

    திட்டக்குழு கொடுக்கும் பணத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நல்ல விஷயங்கள் நடந்துள்ளன என்பதைத் தோண்டி எடுக்கவேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன கிடைக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

    வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  5. Ravi: No, I do not have data offhand related to TN's contribution to Centre's revenue pool.

    It is difficult to evaluate for different reasons anyway. The customs duty collected in Chennai port and Airport cannot be entirely attributed to TN. Excise duty collected in TN may likewise not be exactly assigned to TN. So is the case with Corporate tax collected from companies headquartered in TN.

    Most of the corporates have their HQ in Mumbai and Delhi. Hence disproportionate corporate taxes are collected in Maharashtra and Delhi.

    I will look around for these figures.

    ReplyDelete
  6. Badri,

    The reason I asked for this number is that MK has managed to garner about 30% more this year as compared to last year. Is this increase entirely due to his political clout or/and the increased contribution from TN to Centre's revenue pool? Apart from the revenue sources that you have mentioned, I would also add individual income tax collections.

    - Ravi

    ReplyDelete
  7. Hi Badri
    Thank you very much for the clarification.I didn't mean to offend your numbers...

    " பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும்..."
    Is it feasible....( I have really poor knowledge in the Indian constitution and the functioning of the SYSTEM, might be it is shame to say but that is the fact).

    "அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது."
    It is too much to ask from you to collect information, I would like to volunteer my time.....if there is any way I can assist you.


    Also I think it is very difficult to collect how much state has contributed to central. As you said most of the consumable items( Like tooth paste, soap , skin care products , cleaning liquids etc ) are manufactured in Bombay.They must be paying tax to Maharashtra Government and excise duty will be paid at the exit of Manufacturing unit. This tax will be charged on the people of tamil nadu who consumes.....

    I am looking forward to seeing whats the development we are anticipating and how much of it is going to be real.

    Thanks again for your time to respond in detail.....

    Cheers
    CT

    ReplyDelete