Thursday, June 15, 2006

இலங்கை நிலவரம் பற்றி

என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நான் எழுதியிருந்தபடி முதல் கட்டமாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியமான தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு சிறு அறிக்கையைத் தயார் செய்துள்ளேன். அடுத்த இரண்டு நாள்களுக்குள் முடிந்தவரை பல அரசியல்வாதிகளுக்கு இந்தக் கடிதம் சென்றடையலாம்.

இன்று மாலை பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப ஆரம்பிப்பேன். அதற்குள் முக்கியமாக ஏதேனும் தகவல் பிழை இருப்பின் அதனை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

PDF கோப்பு: இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டிப்பது இந்தியாவின் தார்மீகக் கடமை

58 comments:

  1. Badri ,
    very happy to see you doing something constructively.

    The report is very concise and to the point .Hope is succeeds in turning the heads of the people who matters .

    [what are the possibilities of circulating this report in our media , especially print media ??]

    very well thought out initiative.
    I actively support it

    ReplyDelete
  2. Great...Shall I forward this to my friends?(with ur permission)

    ReplyDelete
  3. கார்திக்வேலு: தமிழ் பத்திரிகைகளுக்கு நிச்சயமாக இதில் ஒரு பிரதி அனுப்பப்போகிறேன். யாராவது கட்டுரையாக எழுதித்தரச் சொன்னால் செய்வேன். அடுத்த கட்டமாக இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பவேண்டும்.

    ReplyDelete
  4. மணிகண்டன்: செய்யலாம். அனுமதியெல்லாம் தேவையில்லை. இது இந்திய நாடாளுமன்ற, தமிழக/புதுவை சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து எழுதப்பட்டது. மற்றவருக்கு என்றால் இன்னமும் சில தகவல்களைச் சேர்க்கலாம்.

    ReplyDelete
  5. சொல்வதோடு நிற்காமல் செயலிலலம் காட்டும் உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை .நன்றியும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  6. I agreed.

    modified report will be good fo others.

    Thanks.

    ReplyDelete
  7. வெல்டன் பத்ரி..
    உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நல்லதொரு முயற்சி பத்ரி...

    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.

    இந்நேரத்தில் மிகவும் வேண்டியதொரு செயல்

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும் அது வெற்றியடைய வாழ்த்துக்களும்..

    * யோசனை : இதே போல் ஒரு கையெழுத்து இயக்கம் நிகழ்த்தினால் என்ன?

    ReplyDelete
  9. வணக்கம் பத்ரி அண்ணா
    உங்களுடைய செயல் மிகவும் மனதுக்கு ஆறுதல் தருகின்றது. எங்களுக்காக குரல் கொடுக்க நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையை தருகின்றது.

    அல்லைப்பிட்டி படுகொலையின்போது படையினரும் ஈபிடிபியினரும் பின்னனியில் இருந்தார்கள் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக மன்னிப்புச்சபை குறிப்பிட்டிருந்தது. அதனை சுட்டிக்காட்டுவது நல்லது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. தம்பி: பிற இயக்கங்கள், அல்லது விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பிட்டு எதையும் இந்தக் கடிதத்தில் எழுதப்போவதில்லை. தேவையான சுட்டிகளைப் பின்பற்றி மேற்கொண்டு படிக்க விரும்புபவர்கள் மேலும் அறிந்துகொள்ளலாம். Focus போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளேன்.

    ReplyDelete
  11. Thank you Badri for the effort


    sarah

    ReplyDelete
  12. சொன்னதை செயலில் காட்டும் உங்கள் செயல்திறனுக்கு எனது வாழ்துக்கள்.

    ReplyDelete
  13. பத்ரி,

    செயற்கறிய செயல்!

    நீங்கள் அனைவருக்கும் பொதுவான கோப்பினைத் தயாரிக்கும்வரை இதனை மற்றவர்களுக்கு அனுப்ப அனுமதியுங்கள்

    நன்றி!

    ReplyDelete
  14. அன்பு பத்ரி அருமையான பணியை ஆரம்பித்திருக்கிறீர்கள். இணைய நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

    மஞ்சூர் ராசா
    http://manjoorraja.blogspot.com/
    http://muththamiz.blogspot.com/
    குழுமம்:http://groups.google.com/group/muththamiz

    ReplyDelete
  15. கடிதம், சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. உங்களது இந்த முயற்சிக்கு என் நன்றிகள்.

    அப்புறம் இங்கு ஒரு online petition to UN தயாரிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள் இங்கும் கையெழுத்திடலாம்.

    http://www.petitiononline.com/UN061506/petition.html

    நன்றி.

    ReplyDelete
  16. Well done Badri. Your actions are appreciated & needed too.

    ReplyDelete
  17. அண்ணா..
    இணைப்பு கொடுத்துவிட்டேன்..
    நன்றி..
    பல நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தங்களின் கோப்பு அனுப்பி இருக்கிறேன்.
    ஒன்றுபட்டு குரலை உயர்த்துவோம்.

    ReplyDelete
  18. hats off badri.

    hope u wont mind, if i forward the pdf to others.

    ReplyDelete
  19. பத்ரி, கோப்பு நன்று.
    என்னுடைய பதிவில் ஐ.நாவின் மனிதவுரிமை ஆணையத்துக்கான மனுவொன்றை இட்டிருக்கிறேன். அனைவரையும் கையொப்பமிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    http://bhaarathi.net/sundara/?p=273

    ReplyDelete
  20. நல்ல முயற்சி. வாழ்த்து.
    இதில் திருகோணமலையில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் இடம்பெறவில்லையா?

    மேலும் வடமுனை என்ற மட்டக்களப்புக் கிராமத்தில் கண்ணிவெடித்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பத்துப்பேர் கொல்லப்பட்ட தாக்குதலும் வரவில்லை. உங்கள் வரைமுறைகளுக்குள் அடங்கினால் சேர்க்கலாம்.
    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18420


    கடந்த ஒருவாரத்தில் மட்டும் நாற்பது தமிழ் இளைஞர், சிறுவர்கள் கிழக்கு மாகாணத்தில் கடத்தப்பட்டுள்ளார்கள்.

    இன்னுமொரு முக்கிய விசயம். எண்பதுகளில் இருந்து இனப்படுகொலை நடந்து வருகிறது என்பது கொஞ்சம் உறுத்துகிறது. சுதந்திரம் கிடைத்ததிலிருந்து நடந்து வருகிறது. 1956, 57, 77 என்று மிகப்பெரிய இன அழிப்புக்கள் நடந்து வந்துள்ளன. எண்பதுகளின் பின் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. எனவே அவ்வசனத்தை மாற்ற முடியுமானால் நன்று.

    நேரமிருந்தால் எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கள். ஆவண-ஆவன, போன்றன.
    மதிமுக செயலர் தானே வை.கோ?

    என்ன இருந்தாலும் மிக முக்கிய பணி. நிறைவைத் தருகிறது.

    ReplyDelete
  21. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!
    1. பிரச்சனை #2-ல் போர் நிறுத்தம் எப்போதிலிருந்து நடப்பில் உள்ளது என்பதைச் சேர்க்கலாம்.
    2. ஆனந்த விகடனின் எந்தப் பதிப்பில் (இதழ் எண் அல்லது தேதி) ரவிக்குமாரின் கட்டுரை வந்தது என்பதைக் குறிப்பிடலாம்.

    ReplyDelete
  22. நெஞ்சார்ந்த நன்றிகள் பத்ரி

    ReplyDelete
  23. Very Good constructive effort. I will be forwarding this to my friends.
    What if every one of us send a copy of this to politicians sitting in the office.

    In which website we can get the email address of all the MLA and MP's

    I think it is good idea not to include the LTTE name.

    with best
    CT

    ReplyDelete
  24. I have corrected the spelling mistake, fixed Vaiko as secretary of MDMK, added the year when ceasefire agreement was signed, and will also add the details of Vikatan issue.

    1950 vs 1980 - I agree, but most people in TN only know of 1980s as time when refugees started arriving in TN and the problem was massively escalated. I will try to fix that line.

    Any other suggestions welcome. Will start printing the document later this evening.

    Changes can always be incorporated in the later versions, if pointed out.

    ReplyDelete
  25. நன்றி பத்ரி, இன்றுதான் இதை பார்த்தேன், இது இன்றைய முக்கியமான தேவையாக இருக்கின்றது, எனக்கு தெரிந்த பிரமுகர்களிடமும் பேசியுள்ளேன், நல்லது நடக்கும் என்று நம்புவோம்... இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தமிழர்கள் மட்டுமல்லாது பிறருக்கும் அனுப்பலாம் உங்கள் அனுமதி கிடைத்தால்.

    ReplyDelete
  26. குழலி: இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவது இரண்டாம் கட்டம். நாளை மொழிபெயர்த்துவிடுவேன். PDF கோப்பு ஒன்றைத் தயார் செய்து அதனை பதிவில் சேர்க்கிறேன்.

    ReplyDelete
  27. விகடனில் வெளியான ரவிக்குமாரின் கட்டுரை இங்கே

    http://www.tamilnaatham.com/pdf_files/vikatan_2006_06_10.pdf

    ReplyDelete
  28. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து ...

    ReplyDelete
  29. பத்ரி, நல்லதொரு முயற்சி/விடயம். நன்றி.

    ReplyDelete
  30. Secerataries to council of ministers

    TN MPs ( Rajya Sabha)

    TN MPs ( Lok Sabha)

    ( only few lok sabha MPs can be contacted through email)

    ReplyDelete
  31. விகடன் எந்த இதழ் என்ற தகவலைச் சேர்த்துவிட்டேன். ராமதாஸ் இனிஷியல் சரி செய்துவிட்டேன்.

    மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினால் எவ்வளவு பிரயோசனம் என்று தெரியாது. ஆனால் சில தலைவர்களுக்கு நேரடியாகச் சென்று கையிலேயே கொடுக்கப்போகிறோம்.

    ReplyDelete
  32. எனக்கு உங்கள் கடிதத்தைப் படிக்க முடியவில்லை. எனது கணினிப் பிரச்சனை. ஆனால், உங்கள் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். எழுதுவதோடு நிற்காமல் செயலிலும் காட்டும் உங்கள் ஊக்கம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம். பாரதியின், "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே" என்ற வரிகளை மாற்றி எழுதும் நாள் உங்களாலும் உங்களைப் போன்ற செயல் வீரர்களாலும் வெகு விரைவில் வரும்.

    ReplyDelete
  33. உங்கள் அரும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்! மிக்க நன்றி பத்ரி.

    ReplyDelete
  34. பத்ரி,
    மிக்க நன்றி.

    அன்புடன்
    வெற்றி

    ReplyDelete
  35. பத்ரி.

    அருமையான முயற்சி.

    வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றிகள்.

    ReplyDelete
  36. இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கில் இதில் ஈடுபட்டால் இன்று அனுராதபுரத்தில் கொல்லப்பட்ட 60 அப்பாவி சிங்கள மக்களையும் இணைத்துக் கொள்க

    ReplyDelete
  37. Badri,

    Commendable effort.

    Could you please replace 'civilians' with 'podhu makkaL'?

    - Ravi

    ReplyDelete
  38. //மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினால் எவ்வளவு பிரயோசனம் என்று தெரியாது. ஆனால் சில தலைவர்களுக்கு நேரடியாகச் சென்று கையிலேயே கொடுக்கப்போகிறோம். //
    பத்ரி!
    நேரில் கொடுப்பதும், தபாலில் அனுப்புவதும் தான் சரியாக இருக்கும்.
    நல்ல முயற்சி, வெற்றி அடைய வேண்டும்.

    ReplyDelete
  39. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. பத்ரி

    தங்களுடைய முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.

    நன்றி

    கொம்பன்

    ReplyDelete
  41. Well done Badri.

    Succinct notice and very much to the point. You have ensured that the focus remains on the core issue with amazing neutrality.

    ReplyDelete
  42. Dear Badri

    I just read your blog. I am really very happy about your action.

    As Sri Lankans, we feel very much isolated and helpless.

    In the circumstances, your action gives a little light at the end of the tunnel. Hope more people come out speak on behalf of the Tamils in Sri Lanka and an acceptable solution is made at the earliest.

    R.Pathmanabhan

    ReplyDelete
  43. Badri,

    The draft looks good.
    Thank you and Sundaravadivel for the support and activism.

    S. Sankarapandi

    ReplyDelete
  44. தேவையான, உருப்படியான செயல். நண்பரே, தொடருங்கள். வங்காலைக் கொலைகள் போன்றவை நிறுத்தப் பட வேண்டும்.

    இன்னும் எத்தனை காலத்திற்குத்தான், ஈழத் தமிழரின் அவலநிலை பற்றி தமிழகத் தமிழர் பேசாதிருப்பது?

    அணுக்கமாக,
    இராம.கி.

    ReplyDelete
  45. பாராட்டதக்க முயற்சி பத்ரி. Email மூலம் அனுப்பும் முறை சரியாக இருக்காது. தபால் மூலம் அனுப்புவதும் நேரில் குடுப்பதுமே சிறந்தது.
    Online Petition ல் கையொப்பமிட்டுவிட்டேன்.
    ஆங்கில பிரதி தேவை அதை தமிழரல்லாதவர்களுக்கு அனுப்பவேண்டும்.

    ReplyDelete
  46. Badri

    Thank you.

    -Kajan

    ReplyDelete
  47. Badri,

    This is really great & constructive step..

    I will forward this copy till the general public copy is ready.

    Please don't foget to send a copy to our president also.

    ReplyDelete
  48. இணைய எழுத்தாளர்கள் இது போன்ற மனித உரிமைகளுக்கெதிரான செயல்களை அரசியல் வாதிகளுக்கு உரிய ஆதாரங்களுடன் எடுத்து செல்வதை மனதார பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  49. பத்ரி அவர்களுக்கு,
    உங்களுடைய பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    உங்கள் பணிகுறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    நன்றி,

    புதுச்சேரி இரா. சுகுமாரன்.

    ReplyDelete
  50. we welcome you. pls attche colour Photos also.

    dont fotget to send to some leading colleages and schools.

    ReplyDelete
  51. Dear Badri

    pls. send some colour photos to Press, colleages and Libraries.

    mrs. r. shanmugan
    Germany

    ReplyDelete
  52. Badri,
    I am very happy to know an Indian
    Tamil taking the initiative to expose the Human right violation of
    the Srilankan State against the Eelam Tamils.I send 100 e-mails to my friends to sign the online Petition.I actively support you.

    ReplyDelete
  53. Badri,

    I trust that you have sent the report.

    Please let us know the reaction or any reply from politicians.

    Except ruling party(DMK + Congress + PMK), all parties(not ADMK) have extended support.

    One more issue is sri lankan tamils would be treated very bad by our people,government and officers etc.

    This should change.

    ReplyDelete
  54. பத்ரி,

    தங்களது முயற்சிக்குப் பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள். எப்படியாவது நல்லது நடந்தால் சரி.

    தங்கமணி குறிப்பிட்டிருந்த ஆன்லைன் பெட்டிஷனிலும் கையெழுத்துப் போட்டேன்.

    ReplyDelete
  55. பத்ரி சார்,

    உங்க சேவை மகத்தானது. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

    நேற்று டான் தொலைக்காட்சி சேவையில் சென்னை புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் உங்களை பார்த்தேன், ரொம்பவும் இளமையாகவே இருக்கீங்க :)

    - பரஞ்சோதி

    ReplyDelete
  56. கீழ்க்கண்டவர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் போய்ச் சேர்ந்துள்ளது. (நேரடியாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

    காங்கிரஸ்

    ஜி.கே.வாசன்
    சுதர்சனம்
    ஜெயக்குமார்
    ராஜ்குமார்
    சுதர்சன நாச்சியப்பன்

    பாமக

    ஜி.கே.மணி

    விடுதலைச் சிறுத்தைகள்

    திருமாவளவன்

    இ.கம்யூனிஸ்ட்

    நல்லகண்ணு

    மா.கம்யூ

    மகேந்திரன்

    பாஜக

    இல.கணேசன்

    ReplyDelete
  57. பத்ரி, தங்கள் முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  58. 10 நாட்கள் கழித்து இப்போதுதான் வலைப்பதிவுகள் பக்கம் திரும்பினேன். சிறந்த முயற்சி. ஏதாவது தேவையெனில் என்னையும் அணுகவும். நன்றி!

    ReplyDelete