இந்த ஏற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் இன்னமும் செய்யவேண்டிய ஒன்று பாக்கி உள்ளது.
மண்ணெண்ணெய் விலை ஏற்றாமல் இருக்கலாம். சரி. ஆனால் சமையல் எரிவாயுவின் விலையை ஏற்றியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட ரூ. 100க்கும் மேல் சமையல் எரிவாயுவுக்கு மான்யம் கிடைக்கிறது. தனியார் எரிவாயு சிலிண்டர் விற்பனை மையங்களை (ஸ்பிக் ஜோதி போன்றவை) அணுகி அவர்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று கேட்டால் புரிந்துகொள்வீர்கள். மேலும் வீடுகளுக்காக என்று மான்யத்துடன் கிடைக்கும் சமையல் எரிவாயு கடத்தப்பட்டு ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசால் முடிவதில்லை.
பொதுவாக, இந்த மான்யம் போய்ச்சேருவதெல்லாமே நடுத்தர, உயர்தர குடும்பங்களுக்குத்தான். எரிவாயு விலையை ஏற்றினால் பெட்ரோல், டீசல் விலையை இந்த அளவுக்கு ஏற்றவேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.
மற்றபடி எதிர்பார்த்ததுபோலவே எதிர்க்கட்சிகள், கம்யூனிஸ்டுகள் இந்த விலை ஏற்றத்தை எதிர்ப்பார்கள். ஆனால் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $73 என்ற நிலையில், இப்பொழுது இருக்கும் வரிக் கொள்கைகளுக்கு உள்ளாக வேறெதையும் செய்யமுடியாது. இந்த விலை ஏற்றமே ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்காகக் கொஞ்சம் தள்ளிப்போடப்பட்டது.
மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து மான்யம் யாருக்குப் போய்ச்சேருகிறது என்பதனை ஒழுங்காக முடிவுசெய்யவேண்டியது அவசியம். அது பொது விநியோகத்தில் கொடுக்கப்படும் அரிசி, கோதுமையானாலும் சரி, சமையல் எரிவாயுவானாலும் சரி. மான்யம் வீணாகிப்போவதால் ஏழைகளுக்கும் பலனில்லை, பணம் படைத்தவர்களுக்கும் பலனில்லை.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
10 hours ago
பெட்ரோல் விலை உலகம் பூராவுமே தாறுமாறாய் ஏறிக்கிட்டேதானே இருக்கு.
ReplyDeleteஇங்கேயும் விலை கூடுதல்ன்னு புலம்பிக்கிட்டே இருக்காங்களே தவிர,
காரை எடுக்காம இருக்காங்களா என்ன?
அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இதுன்னுதான் எல்லாம் நடக்குது. இல்லீங்களா?
உண்மையான மான்யம் எல்லாம் ஏழைக்குப் போறதில்லைன்றதுதான் எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியமாப் போச்சேங்க.
நன்பா, உண்மையில் இந்த விலை உயர்வுக்கு காரணம் கச்சா எண்ணை விலை உயர்வல்ல, நம் அரசு நம்மேல் எற்றிவைக்கும் வரிச்சுமையே!! என் வலைப்பதிவுவான http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html இதை அலசியுள்ளேன் பார்க்கவும்.
ReplyDeleteமான்யம் எங்கு போய்ச்சேருகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம். சிலருக்கு மான்யம் தேவையே இல்லை.
ReplyDelete'We the people' பதிவை நானும் வாசித்தேன். கேலன் (Gallon) & லிட்டர், டாலர் & ரூபாய் மதிப்புகளைக் கணக்குப் போட்டுப் பார்த்தபின், இந்தியாவில் பெட்ரோலுக்காக அதிகக் காசு கொடுப்பதாக வியந்த காலமுண்டு.
ReplyDeleteதீராத இந்தப் பிரச்சினை குறித்தே அரசும், எதிர்க்கட்சிகளும் சண்டையிடுவதை விடுத்து, மாற்று எரிபொருள் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுதல் அவசியம். புதிய சாலைகள் போடப்படும் போது சைக்கிள் செல்வதற்கான பாதை தனியான கவனத்துடன் அமைக்கப்படுதல் வேண்டும். மாசுக் கட்டுப்பாடு, எரிபொருள் சேமிப்பு, உடல் ஆரொக்கியம் என பல்முனைப் பயன் கொண்ட இது போன்ற விஷயங்களை மறந்தது மட்டுமின்றி, உதாசீனப்படுத்துவதாகவும் அரசின் செயல்பாடு அமைகிறது.
-குப்புசாமி செல்லமுத்து
Oil companies generally pump their black gold from large underground pockets called fields, which come in many shapes and sizes. The oil from a small field might not fill the average Hollywood swimming pool. But the largest, Saudi Arabia's Ghawar field, produces around 5 million barrels a day, and it's been cranking out crude since 1951. (A barrel, by the way, contains 42 gallons, or 159 liters, of oil.)
ReplyDeleteThe chemical composition of the oil, and the cost of extracting it, varies from field to field. So while you may think oil is oil, more than 160 varieties of the stuff are traded in markets around the world. You can buy West Texas Intermediate, Saharan Blend from Algeria, Tia Juana Light from Venezuela, or Brent Blend from the North Sea. And that's just the appetizer menu.
Got Oil? Prove It
A field's "reserve" is the amount of oil that can be extracted from it. Determining the size of a reserve involves geology, economics, and some educated guesswork. Different methods are used to calculate reserve sizes, and estimates can vary widely depending on the source. The figures used most often by the media represent so-called "proven" reserves.
Basically, proven reserves measure the amount of oil producers can safely expect to pump from known reservoirs and sell at a profit under current conditions. In 2005, the oil industry estimated that the world's total proven reserves come to roughly 1.2 trillion barrels.
Most of this oil (62 percent) comes from the Middle East--mainly from Saudi Arabia (22 percent), Iran (12 percent), and Iraq (10 percent). The United States has just a little more than 2 percent of the world's proven reserves.
Source: BP Statistical Review of World Energy 2006
Print this chart
More Oil? See Canada
Although the world is using oil at a record pace--it consumed around 30 billion barrels in 2005--proven reserves have actually increased by 56 percent over the past twenty years. Some of this growth comes from the discovery of new oil fields, but most of it is economics.
Improvements in technology have made oil extraction more cost effective, while market forces have driven oil prices up. Simply put, oil that once wasn't worth extracting has become profitable to pump, and that increases the size of the world's "proven" reserves.
Take Canada's Athabasca oil sands. Located in Alberta, the oil sands are a mixture of sand, clay, water, and a tar called bitumen, from which oil can be extracted. Extracting the oil used to be prohibitively expensive, but today's oil prices are changing that equation. According to Alberta's government, 175 billion barrels are already recoverable--enough to make Canada second only to Saudi Arabia in proven oil reserves.
Lots Left? Hard to Say
Experts still disagree over how much of Alberta's tar-trapped oil should count as proven reserves. The same goes for oil sands in Venezuela and oil shale in the United States. Yet any large new oil reserves probably will come from nontraditional sources like these. Few industry insiders expect to find a new field like Saudi Arabia's Ghawar.
Already oil producers have a hard time replacing the 30 billion barrels the world uses up each year, and consumption rates continue to rise. If consumption continually outstrips the discovery of new reserves, global supply will inexorably shrink (some experts think this is already happening). The future of oil may well come down to a race between consumption and innovation--including innovations to reduce consumption.