Thursday, June 08, 2006

சன் குழுமம் பற்றி செவந்தி நினான்

செவந்தி நினான் வாராவாரம் (இப்பொழுது மாதம் இருமுறை?) Media Matters என்று தி ஹிந்துவில் கட்டுரை எழுதி வருகிறார். கடைசியாக சன் டிவி குழுமம் பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையை தி ஹிந்து பதிப்பிக்க மறுத்து விட்டதாம். அந்தக் கட்டுரையை தன் வலைத்தளத்தில் அவர் பதிப்பித்துள்ளார்.

Sun-shine in Tamil Nadu

தமிழ் வலைப்பதிவுகளில் (என் பதிவு உட்பட) நாம் இந்த விஷயங்களைப் பற்றித் தீவிரமாகவே பேசியிருக்கிறோம். இதைப் பதிப்பிப்பதில் என்ன பிரச்னை வரும் என்று தி ஹிந்து நினைத்தது என்று புரியவில்லை.

இந்தக் கட்டுரையை வைத்து Churmuri என்னும் வலைப்பதிவில் நடந்த விவாதம் இங்கே.

சன் டிவி குழுமம் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவுகள்:

அக்டோபர் 20, 2004: ராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை
அக்டோபர் 23, 2004: குங்குமம் உருமாற சில யோசனைகள்
நவம்பர் 17, 2004: ஏமாறு கண்ணா ஏமாறு!
ஜூன் 18, 2005: மீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா? - 1
நவம்பர் 11, 2005: சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன?
மே 01, 2006: தயாநிதி மாறன் & conflict of interest
மே 01, 2006: மாறன் conflict of interest - தொடர்ச்சி

12 comments:

  1. The Hindu may not have liked the comments about DM and KM w.r.t SCV and Tata and other topics mentioned. DM being the mappillai of The Hindu family.

    ReplyDelete
  2. Hi Badri
    Hindu should be proud to publish an article like this. Though the article didn't dig as much as what Indian express ( Mr.) Gurumurthy did , there is something which has really brought me to the edge of my chair. sun TV is worth of more than 9000 crores( I remember Vaiko said it is 6000 Crores and subramaniya swami said in another five years it will cross 10,0000 crores ..).
    Some where in the blog they have written it is all due to the management skill of Maran ... I am unable to digest that alone is a fact... I have feeling that Murasoli maran and DM has used their power legally to monopolize the communication industry and am worried what is going to happen to the freedom of speech...

    "Kalanidhi Maran is a man to both admire and fear."

    I don't know what is there to admire from this "Dick Cheney". If some one admires about this guy, they can suggest Maran to write a book on "How to be successful in Indian Business "or "what they don’t teach you at IIM".

    With best
    CT

    ReplyDelete
  3. செவந்தி நினன் கதை கொஞ்சம் பழசு. ஆனால், அதிக கவனத்தைப் ஈர்க்காமல் போய்விட்டது.

    churmuri விஷயத்தைப் பொறுத்த வரை, ஹிந்துவின் ரீடர்ஸ் எடிட்டர் தன் கட்டுரையில் கோட் செய்த , ஒரிரு வரி விமர்சனத்தை அளவுக்கு அதிகமாகப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒரு பாமரப் பார்வையில் இருந்து கொண்டு சொன்னால், ஒரு வணிகக்குழுமத்தைப் பற்றி தவறான தகவல் வருவதும் ( செய்தியாளர் வேண்டுமென்றே தருவதாக இருந்தாலும் ), பின்னர், ஆசிரியர் மன்னிப்புக் கேட்பதும் சாதாரணமானது. ஹிந்துவுக்கும், கார்ப்பரேட் உலகத்துக்கும் உள்ள nexus என்ன என்று ஆராய்வது வேலையத்த வேலை. ஆனால், செவந்தி நினன் விவகாரம் அப்படி அல்ல. சன் டீவியை விமர்சிக்கும் கட்டுரையை, வெளியிட மறுப்பது, சாதாரண விஷயம் அல்ல. இது ஏன், பிற செய்தி ஊடகங்களின் கவனத்தைப் பெற வில்லை என்று புரியாமல் மண்டை காய்கிறது.

    ஒண்ணு மட்டும் நிச்சயம், 'அவங்க' எல்லாரும் ஒரே கட்சிதான் :-)

    ReplyDelete
  4. பத்ரி,
    ஹிந்து குழுமத்தை சொல்லி தப்பில்லை அவர்கள் இதை பதித்து இருந்தால் ஒன்று தயாநிதி மாறன் ஒரு கோடி கேட்டு வழக்கு தொடுத்து இருப்பாரு இல்லாட்டி துறைரீதியா ஏதாவது நெருக்கடி குடுத்து இருப்பாரு. அவர்களுக்கு தேவை இல்லாத பிரச்சனை. இந்தியாவில் ஆரோக்கியமான தொழில் சூழ்நிலை நிலவுவதாக தெரியவில்லை.

    ReplyDelete
  5. பிரகாஷ்: ஆமாம், கில்லியில் வந்திருந்ததை நானே பார்க்கவில்லை. இப்படி அதுக்குன்னு சின்னதா ஒரு வரி கூட விளக்கம் இல்லாம பதிஞ்சா எப்படி இதுக்குள்ள ஏதோ விஷயம் இருக்குன்னு தேடிப் படிக்க முடியும்? தமிழ் பதிவுகள்ள எந்த விவாதமும் இல்லாததுக்கு எலெக்ஷன் நேரம் காரணமா இருந்திருக்கலாம். யாரும் கவனிச்சிருக்க மாட்டாங்க போல.

    ReplyDelete
  6. //sun TV is worth of more than 9000 crores//

    This is based on the listed price. It may go up or down depending upon the situation.

    You got to note that they didnot list all the channels they own (which they might do in the future). So we can comfortably say Kalanidhi is one of the richest person in Asia.

    How did they achieved this?. It depends on how you view it. There is no doubt that their political connections helped them but that is not the only reason.

    As far as I know most of the viewers in Tamilnadu prefer Sun TV programs. You cannot force viewers to watch Sun TV if their programs are not that interesting.

    ReplyDelete
  7. இது தொடர்பாக வியாபார வட்டாரத்திலிருந்து காற்றுவாக்கில் வந்த இன்னொரு தகவல்:

    "பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்" என்கிற பத்திரிகையில் தினகரன் பத்திரிகையின் தில்லுமுல்லுகளைப் பற்றி ஒரு கட்டுரை வரப்போக கலாநிதி மாறனிடமிருந்தே பயங்கர மிரட்டல் வந்ததோடு வந்து கொண்டிருந்த அரசு விளம்பரங்களும் அடியோடு நின்று போனதாம்.

    (சம்பந்தப்பட்ட கட்டுரையின் சுட்டி: http://www.business-standard.com/fulltextsearch/srchStoryPage.php?leftnm=8&tab=r&search=dinakaran&autono=93992)

    (டிஸ்கியிலிருந்து யூனிகோடில் மாற்றியிருக்கிறேன் - பத்ரி)

    ReplyDelete
  8. இந்தப் பதிவிற்குச் சம்பந்தமில்லாத இன்னொரு தகவல்:

    புதிதாக வடிவமைக்கப்பட்ட தினகரனின் சென்னைப் பதிப்பின் விளம்பரக் கட்டணம் ஒரு பத்தி சென்டி மீட்டருக்கு ரூ.425 ஆக இருந்தது. இது சடாரென்று உயர்ந்து ரூ.1060 ஆக ஆகிவிட்டது. இது தினத்தந்தி பத்திரிகையின் விளம்பரக் கட்டணத்திற்கு நிகரானது. பத்திரிகை வரலாற்றில் எந்தவொரு பத்திரிகையும் இவ்வளவு உயர்வுடன் விளம்பரக் கட்டணத்தை கூட்டியதில்லை. அவர்கள் கூறிக்கொள்ளும் பத்திரிகையின் சர்க்குலேஷன் விவரங்களும் ABC ஆடிட் செய்யும் வரை நம்பகத்தன்மை உடையது அல்ல.

    ReplyDelete
  9. Suresh kannan, thanks for the inputs

    ReplyDelete
  10. நடப்பவைகளைப் பார்த்தால் வலைப்பதிவுலகம் எவ்வளவு நாள் தன்னிச்சையாக இயங்க முடியும் என சந்தேகம் வருகிறதே!
    பத்ரி, பத்திரம்: ) Sun Tv Interview எல்லாம் கொடுக்கிறீர்கள், குறிக்கப் படாமல் இருக்க வேண்டும் :(

    ReplyDelete
  11. Despite its direct involvement in the interests of DMK and lack of genuine standing in news telecasts, Sun has stood tall as a great business empire. Beyond some shortcomings, Kalanidhi is a man to be admired. Sun has been flourishing (not just surviving) during tenures of DMK as well as ADMK in power at state level. I am of the impressions that irrespective of state election results, Sun would still have been a great business with virtually no competition. I have heard Kalanidhi saying, “If we get into a business, we should either be #1 or #2 or out of that business”. This is how he ventured into print media & FM and you bet he did what said (or aspired). Even Jaya TV had the same political – leave alone the money – backing, but not a person with the kind of zeal he has.

    Kalanidhi has stood out to be an entrepreneur to be admired. I have no hesitation to pronounce this despite my aversion to his media ethics, which is almost an oxymoron recently in India.

    Once again.. good article.. it reflected what I had in me.

    -குப்புசாமி செல்லமுத்து

    ReplyDelete
  12. my 2cents are in
    http://ravisrinivas.blogspot.com/2006/06/blog-post_09.html

    [I have changed the URL Ravi has given to the permalink URL, so that even in future people can reach the post correctly - Badri]

    ReplyDelete