Wednesday, June 21, 2006

மின்சார இருசக்கர வண்டி

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளிலிருந்து

செய்தியில் சில முக்கியமான தகவல்கள் இல்லை. மின்சார பேட்டரியால் இயங்கும் இருசக்கர் வண்டியை ஏஸ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாம். 60 கிலோ எடையுள்ள இந்த வண்டியில் கியர் இல்லை, பெல்ட் இல்லை, பல்சக்கரங்கள் இல்லை. முக்கியமாக சூழல் மாசுபடாது.

ஆனால் வண்டி 100-140 கிலோ எடை வரைதான் தாங்கும். அதாவது என்னை மாதிரி இரண்டு பேர் சேர்ந்து போக முடியாது. இன்றைய நகர மாந்தர்களைப் பார்த்தால் நிச்சயமாக பல கணவன், மனைவி ஜோடிகள் சேர்ந்து போகமுடியாது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர்தான். 40 வரை போனால் வசதியாக இருக்கும். இந்த வண்டி அண்ணா மேம்பாலம் போன்ற இடங்களில் மேலே ஏறுமா என்று தெரியவில்லை.

7-8 மணி நேரம் வண்டியை சார்ஜ் செய்யவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதற்கு எவ்வளவு கரண்ட் யூனிட்கள் குடிக்கும் என்று சொல்லவில்லை. அதைவைத்துதான் ஒரு கிலோமீட்டருக்கு எவ்வளவாகும் என்று கணக்கிடவேண்டும்.

ஆனால் ஒரு நல்ல விஷயம் - இந்த வண்டிக்கு ரெஜிஸ்டிரேஷன், லைசென்ஸ் எதுவும் தேவையில்லையாம். தெருவில் போலீஸ் பிடித்தால் என்ன ஆகும் என்று பார்க்கவேண்டும்.

நல்ல ஐடியா. யாராவது இதை எடுத்து மேற்கொண்டு உருப்படியாக்கினால் நன்றாக விற்பனையாக வாய்ப்புகள் உண்டு.

13 comments:

  1. இந்த மாதிரி வண்டிகளை இங்கே பார்த்ததுண்டு. சில பெரியவர்களும், பல சிறுவர்களும் உபயோகப்படுத்துகிறார்கள். இங்கு இந்திய மதிப்புக்கு சுமார் 3000 ரூபாய்க்கே கிடைக்கிறது. மின்சாரம் எவ்வளவு குடிக்கும் என தெரியவில்லை, அப்படியே நிறைய குடித்தாலும் இங்கே அது ஒரு பெரிய விஷயமில்லை. நம்மூரில் மின் தடைகளையும் மீறி இது எந்த அளவுக்கு வெற்றியாகும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

    எனக்குத்தெரிந்த வரை, மேம்பாலத்தில் எல்லாம் கண்டிப்பாக ஏறமுடியாத அளவுக்கு 'வலுவானது' இங்கிருப்பவைகள்.

    ReplyDelete
  2. வணக்கம் பத்ரி!

    இந்த மின்ஸ்கூட்டர்களைப்பற்றி கடந்த மாதம் வெளிகண்டநாதரின் வேண்டும் மாற்று எரிசக்தி பற்றிய பதிவில் பின்னூட்டமிட்டதில் இருந்து ஒரு பகுதி.
    ------------->
    "டாடா ஒரு லட்சம் ரூபாயில் கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மேற்கு வங்கத்தில் அடிக்கல் நாட்டியுள்ளது.ஏன் டாடா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் கார்களை தற்போது தயாரிக்க துவங்க கூடாது?

    தற்போது சீனஇறக்குமதி மின்கார்கள் ,
    ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இறக்கு மதி செய்யப்பட்டு ஓட்டப்படுகிறது ஆனால் இறக்குமதி ஆயதீர்வை வரி 100% இருப்பதால் 20000 விலையில் சீனாவில் இருந்து வருவது 40000 ரூபாய்கு விற்கப்படுகிறது எனவே பெருமளவில் மக்களைப் போய் சேரவில்லை.இந்தியாவிலே தயாரித்தால் விலைக்குறையுமே."
    ------------>

    இந்த வாகனங்கள் கடந்த ஒரு ஆண்டாகவே இங்கே புழக்கத்தில் உள்ளது ஆனால் பெரிய கவனத்தை பெறவில்லை.

    காரணம் நீங்கள் கூறியது போல வேகம், இழுவை திறன் போண்றவை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.பள்ளி மாணவர்களே நிறையபேர் இரண்டு சக்கரவாகனம் வைத்துள்ளார்கள்,அவர்களுக்கு லைசென்ஸ் இருக்குமா எனத்தெரியாது எனவே இது போன்றவானங்கள் வாங்கி தரலாம்
    ஆனல் விலை தான் அதிகம் இவை.இதற்கு மறு விற்பனை மதிப்பென்பதே இல்லை என்பதும் ஒரு குறைப்பாடு.


    இரண்டு வகையாக வருவதாக சொல்கிறார்கள் 500 வாட்ஸ்,1000 வாட்ஸ் என்று.எவ்வளவு மின்சாரம் குடிக்கும் எனத்தெரியவில்லை என்றீர்கள்,இந்த வாட்ஸ் திறன் வைத்து கணக்கிடலாம்.

    500 வாட்ஸ் வண்டிக்கு இரண்டு மணி நேரம் சார்ஜ் ஆக ஒரு யூனிட் மின்சாரம்,1000 வாட்ஸ்க்கு ஒரு மணி நேரம் சார்ஜ் ஆக 1 யூனிட் ஆகும். கண்டிப்பாக இது மற்ற வாகனங்களை விட சிக்கனமானதே.மக்கள் தயங்குவது இதன் விலை அதிகமாக இருப்பதால் அனவே அரசு வரிவிலக்கு அளிக்கலாம்.

    ReplyDelete
  3. வவ்வால்: மின்வண்டி குடிக்கும் மின்சாரம் பற்றி. நான் படித்த செய்தியில் வாட்டேஜ் பற்றி எதுவும் இல்லை. "A full charge of 6-8 hours, with an input voltage of 220 volts, would enable the bike to cover a distance of 70 km and allow maximum speed of 25 km/hour" என்றுமட்டும்தான் இருந்தது. இதனை வைத்து எவ்வளவு KiloWatt Hours தேவை என்று கணக்கிட முடியாது என்று சொல்லியிருந்தேன்.

    துபாய்வாசி/சிவராமன்: வெறும் ரூ. 2500/3000-தானா? ஆச்சரியமாக உள்ளது. இந்த ஏஸ் மோட்டார்ஸ் நிறுவன வண்டி ரூ. 26,000+ ஆகும் என்கிறார்கள்.

    வவ்வால்: நீங்கள் சொல்வதுபோல இந்தியாவில் தயாரித்தால் விலை குறைய வேண்டும். அத்துடன் உன்மையில் சொல்லப்போனால் அரசே இந்த வண்டி வாங்குபவர்களுக்கு மான்யம் தரலாம். அதாவது பெட்ரோல்/டீசல் பைக் வைத்திருப்பவர்களுக்கு பொல்யூஷன் டாக்ஸ் என்று விதித்து அந்த சம்பாத்யத்தை வைத்து மின்வண்டி ஓட்டுபவர்களுக்கு 20-25% வரை விலையில் மான்யம் தரலாம். இதன்மூலம் பெரு நகரங்களில் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க ஓரளவுக்காவது உதவலாம்!

    ReplyDelete
  4. வணக்க பத்ரி!

    அரசு மானியம் கூட தரத்தேவையில்லை இறக்குமதி மீதான ஆயத்தீர்வையை குறைத்தாலே போதும் சச்சின் டெண்டுல்கரின் பெராரி மான்டியோ காரின் மீதான வரிவிதிப்பை ஒட்டி எழுந்த சல சலப்பை அறிந்து இருப்பீர்கள். இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார்வாகனங்களில் மீதும் 100% அல்லது 120% வரை வரிவிதிக்கப்படுகிறது.

    இந்திய மோட்டார்வாகனத்தொழிலைக் காக்க இந்த வரி என்கிறார்கள் அதே பார்வையில் மின்சாரத்தினால் இயங்கும் வாகனத்திற்கும் வரி விதிக்கிறார்கள் எனவே தான் துபாயில் 3000 ரூபாய்க்கு கிடைப்பது இங்கே இத்தனை விலை. அரசின் வரிவிதிப்பு கொள்கை இதில் மாற வேண்டும். அல்லது உள்நாட்டிலேயே தயாரிக்க முன்வரவேண்டும்.

    ReplyDelete
  5. என்னதான், மோட்டார், மின்சாரம்னு ஜல்லியடிச்சாலும், யாராச்சும் இருவத்தி அஞ்சாயிரம் குடுத்து சைக்கிளை வாங்குவாங்களா? அதும் இந்தியாலே?

    ReplyDelete
  6. Who killed the electric car?
    http://www.pbs.org/now/shows/223/index.html

    ReplyDelete
  7. Looks interesting to me , I have read electric cars being manufactured by a Bangalore base company (If I remember right it is RAVA),I haven't seen them on roads.

    I doubt whether we will be able to get much efficency in question and also what is the availability of electricity...

    I don't know whether we have ethanol base fuel (Ethanol 85% and petrol 15%), if not we should focus on this.This also brings down the carbon monoxide pollution to considerable level and also we don't have to depend much on oil resources.(There is a reason I am posting this a month back , one of the analyst said Indian Industrialist are willing to export ethanol to US ...)
    I guess Hindu Banaras university is also doing research in Hydrogen fuel cell technlogy...
    I hope this is going to be solution on long run...

    with best CT

    ReplyDelete
  8. இங்கே இந்த எலெக்டிரிக் ஸ்கூட்டர்கள் முதியோர்களுக்கு வசதியா இருக்கு. பார்க்கிங்
    பிரச்சனை இல்லை. கடைகளுக்குள்ளேயும் கொண்டு போகலாம். ஒரே இடத்துலே அடைஞ்சு
    கிடக்காம வெளியே போகவரன்னு இருக்கலாம்.

    பொல்யூஷனைக் குரைக்க இப்படி மின்சாரத்துலே ஓடற பஸ்ஸுகளும் நகரில் ஓடுது.
    இலவச சேவைதான். செண்ட்ரல் சிடியைச் சுத்திச் சுத்தி வரும். சுற்றுலாப் பிரயாணிகளுக்கு
    ரொம்ப வசதியா இருக்கு.

    ReplyDelete
  9. >>>>
    I have read electric cars being manufactured by a Bangalore base company (If I remember right it is RAVA),I haven't seen them on roads.
    ---------------------
    You can spot many of these "REVA" electric cars on the roads of Bangalore. They are compact, easy to drive, zero pollution cars and very practical for Bangalore's narrow, crowded zigzag roads. They come in 2/3 seater models too.
    They are slightly pricey inspite of subsidies, so not many opt for them.
    But they do have a clientale among the informed, trendy set in Bangalore.
    arul

    ReplyDelete
  10. இங்கு முதியவர்களும் வலுக்குறைந்தவர்களும் பயன்படுத்துகின்ற ஒருவகையுள்ளது. நீங்கள் சொல்வதும் அப்படிப்பட்டது தானா என்று தெரியவில்லை. ஒருவர் மட்டும் பயணம் செய்யலாம். துளசி சொன்னதுபோல் கடைகளுக்குள்ளும் தாராளமாகப் போய்வரலாம். எங்குமே இறங்கவேண்டியதில்லை. ஆனால் இவ்வகை வண்டிகள் இலங்கை - இந்திய வீதியமைப்புக்களுக்குச் சரிவருமா தெரியவில்லை. இங்கு இவ்வாகனம் பாவிப்பவர்கள் வீதியில் செல்வதில்லை. நடைபாதையை மட்டுமே பாவிப்பர். வேகம் குறைவுதான். ஆனால் யாருடைய தயவுமின்றி எங்கும் சென்றுவருவார்கள். இங்குள்ள நிலைமைப்படி மின்கட்டணம் உறுத்துவதேயில்லை.

    ஏற்கனவே நடிகர் பார்த்தீபன் ஒரு கார் வைத்திருந்து அது பள்ளியில் எரிந்து பெரிய பிரச்சினையானதாகக் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  11. இந்த மின்சாரக்கார்கள் சென்னையிலும் இருக்கு ஆனால் பெரிய வரவேற்பு பெறவில்லை.இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன் இதும் சீனத்தயாரிப்பு தான் எனப்படித்ததாக நினைவு.ரெவா(REVA) கார் ஷோரூம் நந்தன்ம் YMCA கு எதிரில் இருக்கிறது ஒரு கார் விலை 2 லட்சம் சொன்னார்கள்.இரண்டு பேர் தான் பயணிக்க முடியும்.அந்த விலைக்கு ஒரு மாருதிக்கார் வாங்கலாம் குடும்பமே போகலாம் என தான் நினைக்கிறார்கள். இந்த வகை கார்களுக்கு இன்சுரன்ஸ் இல்லை.நாம் தனியாக வேறு வகையில் காப்பீடு செய்துகொள்ளவேண்டும்.

    ஒரு துணை செய்தி: நடிகர் பார்த்திபன் இந்த வகை கார் வாங்கி உபயோகபடுத்தினார் சில நாட்களுக்கு முன் பேட்டரி ரீ சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து முழு காரும் எரிந்து விட்டது.அதற்கு அவருக்கு எந்த வகை இழப்பீடும் கிடைக்கவில்லை. இது பற்றி நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளது.

    //இலவச சேவைதான். செண்ட்ரல் சிடியைச் சுத்திச் சுத்தி வரும். சுற்றுலாப் பிரயாணிகளுக்கு
    ரொம்ப வசதியா இருக்கு//

    துளசி கோபால், இலவசமா பஸ் லாம் விடுராங்களா உங்க ஊருல ரொம்ப நல்ல ஊரா இருக்கே இங்கே அடிக்கடி கட்டணம் ஏத்தி டார்ச்சர் தான் பண்றாங்க!

    ReplyDelete
  12. வணக்கம் பத்ரி!

    தங்களை ஆறு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பங்குகொள்ளுங்கள்.

    http://vovalpaarvai.blogspot.com/2006/06/blog-post_115098459923649714.html

    ReplyDelete
  13. http://www.revaindia.com/aboutevs.htm

    As Arul Selvan mentioned, there are quite a few Reva cars that can be seen in Bangalore (1 in 50)

    ReplyDelete