Saturday, June 10, 2006

புதுச்சேரிக்கு விமானச்சேவை

தில்லியைச் சேர்ந்த ஜாக்சன் ஏர்லைன்ஸ் (Jagson Airlines) புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களூருக்கு சிறு விமானச் சேவையைத் தொடங்க உள்ளனர். 18 இருக்கைகள் கொண்ட Dornier 228 விமானம் இந்தச் சேவைக்குப் பயன்படுமாம்.

இதில் 50% இருக்கைகள் - 9 இடங்கள் - புதுச்சேரி அரசே எடுத்துக்கொள்ளும் - தன் உபயோகத்துக்கு அல்லது பிறருக்கு விற்க. இதன்மூலம் குறைந்தது 50% இடங்களையாவது விற்பனை செய்யலாம் என்ற உத்தரவாதத்துடன்தான் ஜாக்சன் இந்தச் சேவையைத் தொடங்குகிறது.

இப்பொழுது சென்னை - புதுச்சேரி ஒருவழிப் பயணத்துக்கு ரூ. 1,721 என்று ஜாக்சன் நிர்ணயித்திருப்பதாகவும் அதனை புதுச்சேரி அரசு ரூ. 1,000க்குக் குறைக்க விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்பான செய்திகள்:
The Hindu: Flight from Pondy likely on June 14
New Indian Express: Flights from Pondicherry postponed

1 comment:

  1. பரவாயில்லையே! அவ்வளவு அதிகமாக தெரியவில்லை.
    இந்த சேவையை பாண்டியில் இருந்து சென்னை வருவதற்கு உபயோகப்படுத்துவேன்.
    சமீபத்தில் சென்னை to பாண்டி போக 4 மணி நேரம் ஆனது அதுவே திரும்பும் போது 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

    ReplyDelete