![]() |
CV ராமன் © Wikipedia |
ராமன் இயல்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆசியர். இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்). ஆனால் இதற்கெல்லாம் மேலாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி என்பதை முறையாகத் தோற்றுவித்து அதன்மூலம் பல்லாயிரம் அறிவியல் அறிஞர்களை உருவாக்கியவர். விழாவுக்கு வந்திருந்த M.S.சுவாமிநாதன் சொன்னதைப் போல ராமன் அறிவியலாளர்களின் அறிவியலாளர்.
![]() |
அம்ஷன் குமார் © சாமிநாதன் |
ராமன் அவரது ஒளியியல் சார்ந்த ஆராய்ச்சிக்காகப் பெயர் பெற்றிருந்தாலும் ஒலி, நுகர்வு ஆகியவற்றிலும் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். எண்ணற்ற ஆராய்ச்சியுரைகளைப் படைத்திருக்கிறார்; சில புத்தகங்களை எழுதியுள்ளார்.
அம்ஷன் குமாரின் படத்தில் ராமன் எனும் மனிதர்தான் அதிகமாகத் தெரிகிறார். ராமன் எனும் அறிவியலாளர் பற்றி ஓரளவுக்குத்தான் தெரிந்துகொள்ளமுடிகிறது. ராமனது ஆராய்ச்சிகள் பற்றி மிகக் குறைவாகவேதான் தெரிந்துகொள்ளமுடிகிறது. மாணவர்களுக்கான விவரணப்படம் என்றால் இன்னமும் 10-15 நிமிடங்களாவது ராமனது ஆராய்ச்சிகள், அவற்றின் முடிவுகள் ஆகியவற்றை எளிய விதத்தில் கிராபிக்ஸ், அனிமேஷன், பின்னணிக்குரல் கொண்டு சேர்க்கலாம் என்பது என் கருத்து.
ராமன் பற்றி M.S.சுவாமிநாதன், CNR ராவ், A.ஜயராமன், கொல்காதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) ஆகியோர் விவரணப்படத்தில் பேசுகிறார்கள். ஜயராமன் என்பவர் ராமனின் மாணவர். நியூ ஜெர்சியில் இருக்கிறார். அவரது புத்தகம் C. V. Raman – A. Memoir, Affiliated East-West Private. Ltd, New Delhi, 1989 மற்றும் அவரது பங்களிப்பு இந்தப் படத்துக்கான திரைக்கதை அமைப்புக்கு உதவியுள்ளது.

ஜெயஸ்ரீ, MS சுவாமிநாதன், ஜெயசந்திர சிங், கங்கை அமரன்
© சாமிநாதன்
விழாவின் தொடக்கத்தில் M.S.சுவாமிநாதன், அம்ஷன் குமார் ஆகியோர் பேசினர். தயாரிப்பாளர் முருகானந்தம் சார்பாக அவரது உரையை அவரது உறவினர் ஜெயஸ்ரீ படித்தார். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி இன்று உயர்ந்த தரத்தில் இல்லை. மாணவர்கள் பொறியியல், மருத்துவம் என்றே தங்களைக் குறுக்கிக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். ராமன் பற்றிய இந்த விவரணப்படம் ஓரளவுக்கு இளம் மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியை நோக்கிச் செலுத்தும்.

டிவிடியைப் பெற்றுக்கொள்ளும் OSLC பிரிவில் மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவி
© சாமிநாதன்
விழா நடத்துனர்கள் மிகுந்த சிரத்தையுடன் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்றிருந்த இருவரை மேடைக்கு அழைத்து அவர்கள்மூலம் இந்த விவரணப்பட டிவிடியை வெளியிட்டனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் வெளியில் அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும்
© சாமிநாதன்
விழாவுக்கு ஓரளவுக்கு மாணவர்கள் வந்திருந்தனர். அத்துடன் இலக்கியப் பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மனுஷ்ய புத்திரன் என்று பலர் வந்திருந்தனர்.

விவரணப்படத்தை ஆர்வத்துடன் பார்க்கும் ஜெயகாந்தன்
© சாமிநாதன்
பல நேரங்களில் இதுபோன்ற ஆவணப்படங்கள் வெறும் திரையிடலுடன் முடிந்துவிடும். ஆனால் இங்கு படத்தின் டிவிடியை அரங்கிலேயே விற்பனை செய்தனர். சிறப்பு விலையாக ரூ. 100க்குக் கிடைத்தது. பரவலாக எல்லாக் கடைகளிலும் இந்த டிவிடி விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் அவசியமாக வாங்கி வைக்கவேண்டிய டிவிடி இது. தயாரிப்பாளர் முருகானந்தம் இதுபோன்று பல ஆவணப்படங்களைத் தயாரிக்கவேண்டும்.
Not related
ReplyDeletebut what is this news item ?
http://www.hindu.com/2006/06/16/stories/2006061616310300.htm
is SCV showing ESPN - FIFA football matches in Chennai ?
Alex: yes.
ReplyDeleteஅந்த பாப்பானுக்கு ஒன்னுமே தெரியாது, கூட வேல பாத்தவனோட கண்டுபிடிப்பை தன்னோடதுன்னு சொல்லி பேரு வாங்கிக்கிட்டவந்தானே அவன். இதேபோல ஒரு தலித்து விஞ்ஞானி பத்தி எழுதிவியா?
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteநல்ல பதிவு.
நன்றி.
சர்.சி.வி.ராமன் அவர்களை கிட்டத்தட்ட மறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறோம். அது நமது சாபக் கேடாகக் கூட இருக்கலாம். அன்றைய நிலையில் சூடான செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வரலாற்று நிகழ்வுகளுக்குக் கொடுக்காத பாரம்பரியம் தொடர்கிறது.
ReplyDeleteராமன் போன்றே இன்னும் பல விஞ்ஞானிகளை மற்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் முருகானந்தம் போன்ரோரின் நிகழ்வுகள் உற்சாகப் படுத்தப் படல் வேண்டும்.
//அந்த பாப்பானுக்கு ஒன்னுமே தெரியாது, கூட வேல பாத்தவனோட கண்டுபிடிப்பை தன்னோடதுன்னு சொல்லி பேரு வாங்கிக்கிட்டவந்தானே அவன். இதேபோல ஒரு தலித்து விஞ்ஞானி பத்தி எழுதிவியா?//
அனானி,
ஏன் இப்படியான ஒரு பின்னூட்டம்? நீங்கள் எப்போது கண்டுபிடித்தீர்கள், ராமன் அடுத்தவரின் கண்டுபிடிப்பை திருடினார் என்று.
ஒருவர் பிராமணர் என்பதற்காகவே எதிர்க்க வேண்டும் என்பதில்லை. நல்ல விஷயம் எங்கு இருந்து வந்தால் என்ன? பிராமணீயம் தலித்தியம் எல்லாம் இங்கு எப்படி வருகிறது?
பத்ரி அவர்கள் ஒரு தலித்தின் பணியினை இழித்தோ அல்லது சிறுமைப்படுத்தி எழுதி இருந்தால் கூட நீங்கள் கேட்டதனை நியாயப் படுத்த முயலலாம்.
Just like that எல்லாம் statement விடுவது சரியானதாகப் படவில்லை.
நன்றி.
கிட்டத்தட்ட மணிகண்டன் சொன்ன அதே விஷயம் தான். சிம்ரனுக்குக் குழந்தை பிறந்ததை அறிந்த அளவிற்கு எத்தனை பேருக்கு சி.வி.ராமனைத் தெரியும்? பரபரப்புக்காகவும், பின்னூட்டம் பெறுவதற்காகவும், மாறி மாறி முதுகு சொறியவும் மாத்திரமே பதிவுகள் பெரும்பாலும் இங்கு வருகின்றன. ஆங்கிலத்தில் blog எழுதுபவர்கள் பெரும்பாலும் கருப்பொருளை மட்டுந்தான் விவாதிக்கின்றனர். அது போன்றதொரு ஆரோக்கியமான சூழல் தமிழ்ப்பதிவுலகில் விரிவாக்கப்படுவதில் இது போன்ற பதிவுகள் உதவும்.
ReplyDeletePrejudice எண்ணங்களும், காழ்ப்புணர்ச்சியும் மிகும் பட்சத்தில் சுயத்திற்கும், சூழலுக்கும் துரோகம் இழைக்கும் பின்னோக்கிய வளர்ச்சியே மனிதனுக்கு நிலைக்கும். ஆகவெ, அவற்றை வெளிப்படுத்தும் முகம் காட்ட விரும்பாத வரிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை மணி.
Thanks for the info.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteவிழாவில் கலந்து கொண்டமைக்கும் அதைப் பற்றி எழுதியமைக்கும் நன்றி. உங்கள் பதிவின் சுட்டியை - விழா பற்றிய என் புகைப்படப் பதிவில் இணைத்துள்ளேன்.
நான்கு வருட உழைப்பின் பலன் இப்படம் என்றார் நியூஜெர்ஸி சிந்தனைவட்ட நிர்வாகியும் தயாரிப்பாளருமான முருகானந்தம். தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரைப் பற்றிய படம் எடுக்கிற ஆசையும் திட்டமும் வைத்திருக்கிறார். சுப்ரமணிய பாரதி, சி.வி. இராமன் வரிசையில் அவர் இன்னும் நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், அதன் பலன்களைத் தமிழ்ச் சமூகம் உணரவும், உவந்து பெறவும் வேண்டுகிறேன்.
- பி.கே. சிவகுமார்
நல்ல பதிவு. சேர் சி. வி. ராமன் பற்றிய தமிழ் விக்கியில் உள்ள கட்டுரை இங்கே.
ReplyDeleteநல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள்! செ.இரா செல்வகும்மர்
ReplyDeleteHi Badri
ReplyDeleteThanks for the article, glad to know still we remember Sir C.V. raman.
Like you, I too think they should have added his research portion.There are still so many research activities going on based on his theory(Raman effect).
I think lot of youngsters should get inspired by this post, to pursue science degree.
I would appreciate if you can write an article about Subramanyan Chandrasekar(Chandra), who is another Indian born physicist to receive Nobel Prize after a very big political struggle in the
science world.
with best
CT
badri
ReplyDeletecouldnt make it on that day. thks for writing about it.
dear ct,
---------
>>>>
I would appreciate if you can write an article about Subramanyan Chandrasekar(Chandra), who is another Indian born physicist to receive Nobel Prize after a very big political struggle in the
science world.
-----------------
i am curious. what was this **political** struggle?
arul
Arul: CT may be referring to Eddington not believing in Chandra's research on White Dwarfs. As you may know, it took several years subsequently for Chandra's theories to be proved right.
ReplyDeleteMay be he was suggesting 'scientific political' struggle as opposed to 'societal political' struggle?
// CT may be referring to Eddington not believing in Chandra's research on White Dwarfs. As you may know, it took several years subsequently for Chandra's theories to be proved right. //
ReplyDeleteI think so too.
Readers may be interested in the book “Empire of the Stars: Obsession, Friendship, and Betrayal in the Quest for Black Holes” by Arthur I. Miller, whose central claim is that the course of 20th-century physics would have been significantly different had Eddington not shot down Chandra's findings, which effectively ensured that everyone ignored it for the next several crucial decades.
The book also describes the “racism” Chandra encountered at Cambridge and portrays him as a bitter man (“It is about time” when he was called to inform about his Nobel Prize) who thought he was victimised. Must’ve been shocking for a man who lived a charmed life in India to experience such discrimination.
Interestingly C.V. Raman who was Chandra’s uncle, is depicted less than kindly in the book and they never had a good relationship. Seems like these were results of internal family politics. How is the relationship shown in the documentary?
yetanothervenkat: Nothing beyond a simple mention that Chandra was Raman's nephew, and that Chandra also got a Nobel prize.
ReplyDeleteWe need a series of simple Tamil articles on great scientists and their discoveries/inventions.
badri:
ReplyDeleteif it is eddington episode, then ok. just wanted to check if there was another.
talking of chandra, i had the privilege of hearing him lecturing thrice.
very measured, and for me one of the clearest expositions about the fudamental constants.
even a nonphysicist like me could understand it.
that talk should also be available somewhere. if i could get hold of it, will be pleased to translate.
arul
சர்.சி.வி.இராமன் இந்தியாவிலிருந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர் என்பது மட்டும்தான் தெரியும். இந்த டிவிடி எங்கே கிடைக்கிறது என்று தெரிந்தால் வாங்கிப் பார்க்கலாம். பார்க்கச் செய்து நம் குழந்தைகளையும் அறிவியல் துறைகளில் ஊக்கப் படுத்தலாம்.
ReplyDelete// இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்).//
ReplyDeleteஎன்ன செய்வது. பல்வேறு குறுக்கீடுகள் அவர்களை வெளிநாட்டிற்கு போகும்படிச் செய்து விடுகின்றது
Thanks for clarifying Mr.Aruls question.
ReplyDelete"We need a series of simple Tamil articles on great scientists and their discoveries/inventions"
Yes we need.
(Following is not closely related to this thread but a suggestion from a sincere indian science guy)
Also some one should write what is the quality of research we are (in Indian industries) doing in India in absolute terms. Two years back I read an article that lot of patents from India are not approved or waiting for approval...this is only in communication Industries, other industries are not even close to this. Worked As a research guy in Indian Bulk pharmaceutical industry, I have a feeling that we are not really developing any product, we are focusing on process development’s. I Think we should focus on inventions and discoveries.Industries should move towards in that direction, should maintain close relationships with Educational Institutions....
We have worlds best brains, we can do researh at much lower cost then any other country, just by selling the product only in US (you will hit BEP in less then two years). This is one way we can bring the dollars IN ,instead of depending on volatile FII's.
with best
CT
A very good and informative post. Thanks for this, Badri.
ReplyDeleteIndian educational institutions must emphasise the interest among the students to pursue scientific research. Government should also come up with good funding for research in our country. That would help our students to pursue the research path.
Arumaiyana valaipathivu.. Nandrigal thiruvalar badhri avargaluku
ReplyDeleteநல்ல முயற்சி;பாராட்டுகள்
ReplyDeleteஒர் அய்யம்;சி.வி ராமனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்-அய்யம்பேட்டை அருகில் புரசக்குடி [அல்லது பொரசக்குடி]எனும் சிற்றூர் என்று அவ்வூர் மக்கள் பெருமையுடன்
குறிப்பிட்டு வருகின்றனர்.ஒருவேளை அருகில் உள்ள நகரமான திருச்சி அவர் பெயருடன் இணைக்காபட்டுவிட்டதோ?இது பெரிய வரலாற்றுப்பிழை அல்ல, ஆயினும்
ஒரு சிற்றுருக்குக் கிடைக்கும் பெருமையை மறுப் பானேன்?
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனான எனக்கு இந்த சந்தேகம் வந்தது.அவ்வூர்வாசி சொன்ன பதில்:"அய்யா பூர்வீகம் இந்த ஊர்தான். அம்மாவுக்குதான் திருச்சி சொந்த ஊர்"