இன்று காங்கிரஸ் ஆட்சி காஷ்மீரத்தில் கவிழ்ந்துள்ளது. இதன் பின்னணி வருத்தம் தரத்தக்கது. அமர்நாத் என்னும் இந்துக்களுக்கான புனிதத்தலம் முஸ்லிம் பெரும்பான்மை காஷ்மீரில் உள்ளது. இந்த இடத்துக்குச் செல்வதற்கு இந்து யாத்ரீகர்களுக்குப் பெரும் தொல்லை. எப்படி முஸ்லிம்கள் மெக்கா செல்கிறார்களோ அதேபோல, இந்துக்களின் நம்பிக்கை காரணமாக பல தொல்லைகளையும் பொருட்படுத்தாமல் பல ஆயிரம் இந்துக்கள் ஒவ்வோர் ஆண்டும் அமர்நாத் செல்கிறார்கள்.
அப்படிச் செல்லும் யாத்ரீகர்களுக்கு வசதி செய்துகொடுக்க சில ஏக்கர் நிலத்தை ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட் (SASB) என்னும் வாரியத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு தர முடிவுசெய்தது. உடனே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஒருபக்கம் இந்திய அரசுக்கு எதிரான பிரிவினைவாதிகள், வெளிப்படையாகவே இந்து எதிர்ப்பைக் காட்டினார்கள். கொஞ்சம் மிதவாதிகள், சுற்றுச்சூழல் பாழ்படும் என்று செகுலர் எதிர்ப்பைக் காட்டினார்கள். நேஷனல் கான்ஃபரன்ஸ் தெருத்தெருவாகச் சென்று எதிர்ப்பிரசாரம் செய்தது. காங்கிரஸின் கூட்டாளிக் கட்சியான பி.டி.பி அந்தர் பல்ட்டி அடித்து, “கூடாது, கூடாது, நிலத்தைக் கொடுக்கக்கூடாது” என்று சொல்லி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது.
ஆட்சி கவிழும் நிலையில், காங்கிரஸ் அரசு, ஷ்ரைன் போர்டுக்குக் கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அரசின் சுற்றுலாத் துறையே யாத்ரீகர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கும் என்று அறிவித்தது. இதை வரவேற்ற பி.டி.பி, அரசுக்கு மீண்டும் ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று அறிவித்தது. இன்று குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது.
பெரும்பான்மை இந்துக்கள் உள்ள தேசமான இந்தியாவில் முஸ்லிம்களின் வழிபாட்டு இடங்களை முஸ்லிம்களே நிர்வகிக்கும்படி வக்ஃப் வாரியம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் மெக்காவுக்குப் புனிதப்பயணம் செல்ல மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆனால் காஷ்மீர் போன்ற மாநிலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும்போது அவர்களது மத உரிமையை நிலைநாட்ட மிகச்சிறிய அளவுக்கு சில வசதிகளைச் செய்துகொடுக்கும்போது இந்த அளவுக்கு எதிர்ப்பு காண்பிக்கப்படுவது அசிங்கமாக உள்ளது.
“நமது நிலத்தை இந்தியர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறார்கள்” போன்ற வார்த்தைகள் பிரிவினைவாதிகளிடமிருந்து வரும்போது அவற்றை எதிர்க்காத காஷ்மீர் அரசியல் கட்சிகளையும் அறிவுஜீவிகளையும் கண்டிக்கிறேன்.
காஷ்மீரின் எதிர்காலம் பயம் கொடுப்பதாக உள்ளது. பாகிஸ்தான் ஒரு “தோல்வியுற்ற” நாடு. தன்னை மேலே தூக்கிக்கொள்ளவே அந்த நாட்டுக்கு பல ஆண்டுகள் ஆகும். இந்தியாவுடன் இருப்பதில்தான் காஷ்மீரிகளுக்குப் பொருளாதார லாபம். கல்விமுதல் வேலைவாய்ப்புகள்வரை அனைத்தும் இந்தியாவின் தயவால்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச சுற்றுலாத் துறையையும் குண்டுவெடித்து பயமுறுத்திவிட்டார்கள். இந்து பண்டிட்களை மாநிலத்தைவிட்டே துரத்தியாகிவிட்டது. பலமுறை அமர்நாத் செல்லும் அப்பாவி யாத்ரீகர்களையும் லஷ்கார்-ஈ-தோய்பா, பிற அமைப்புகள் பலமுறை தாக்கியுள்ளன. கடந்த ஓரிரு வருடங்களில் தாக்குதல்கள் ஏதும் இல்லை. இப்போது நடந்துள்ள அசிங்கமான அரசியல் போராட்டத்துக்குப் பிறகு இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கலாம்.
அப்படி நடந்தால் பெரும்பான்மை இந்தியர்களது “செண்டிமெண்ட்” திசை மாறும். அப்போது பாஜக ஆட்சியில் இருந்தால் (அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இது நிகழ அதிக வாய்ப்பு உள்ளது) காஷ்மீரிகள்மீதான ராணுவ அடக்குமுறை அதிகரிக்கலாம். இந்த நிலைக்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள், முக்கியமாக நேஷனல் கான்ஃபரன்ஸும் பி.டி.பியும் துணைபோவது வருத்தம் தருகிறது.
மேலும் இந்தியாவின் பிற இடங்களில் இந்துத் தீவிரவாத அமைப்புகள் முஸ்லிம்கள்மீதான தாக்குதலில் ஈடுபடுவதற்கும் இது வழிவகுக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரமான சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிந்துவிட்டு, காஷ்மீரையும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலக் கருதும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
விண்திகழ்க!
3 hours ago
sad state of affairs. A govt is falling because of such mundane issues when so many people are starving for education and food !
ReplyDeletemani
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரமான சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிந்துவிட்டு, காஷ்மீரையும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலக் கருதும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்
ReplyDeleteவியப்பாக இருக்கிறது, பத்ரியா
இப்படி எழுதுவது.
பத்ரி,
ReplyDelete// பிரிவினைவாதிகளிடமிருந்து வரும்போது அவற்றை எதிர்க்காத காஷ்மீர் அரசியல் கட்சிகளையும் அறிவுஜீவிகளையும் கண்டிக்கிறேன். //
மிக்க நன்றி. இந்தக் கண்டனத்தில் உங்களுடன் இணைகிறேன்.
// காஷ்மீரின் எதிர்காலம் பயம் கொடுப்பதாக உள்ளது.//
இறந்தகாலம் மட்டும் எப்படி இருந்ததாம்? 1953லேயே உன்னத தேசபக்தரும் பாஜக நிறுவனருமான தலைவர் ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி காஷ்மீரில் நுழைந்தார் என்ற ஒரே "குற்றத்திற்காக" "மர்மமான முறையில்" படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலையின் பின்னணியைக் கூட விசாரிக்க மாட்டோம் என்று கூறி அங்கு பிரிவினைவாதத்தை தூபம் போட்டு வளர்த்த செக்யுலர் வியாதிகளும், அவர்கள் வாரிசுகளும் தான் இந்த நிலை வரக் காரணம்.
முஸ்லீம் மதவெறியையும், அடிப்படைவாதத்தையும் ஒடுக்கி எதிர்கொள்ளாமல், அதனுடன் கொஞ்சிக் குலாவினால் என்ன நடக்கும் என்பதற்கு காஷ்மீரில் நடப்பது ஒரு அப்பட்டமான உதாரணம். இந்தியா முழுவதும் இதில் பாடம் கற்கவேண்டும்.
பார்க்க: தருண் விஜய் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை -
http://timesofindia.indiatimes.com/Opinion/Columnists/Tarun_Vijay/The_Right_View/Denying_Hindus_space/articleshow/msid-3199843,curpg-1.cms
"The first thing the new governor N N Vohra was made to do was to take back the proposal on behalf of the Shri Amarnath Shrine Board for the acquisition of approximately 100 acres of land. He didn't begin his tenure trying to see Kashmiri refugee Hindus are returned with honour and safety to their homes. Nor could Vohra hold any meeting to ensure the valley is free from jihad and that developmental plans are executed to benefit all patriotic citizens. The first move that a Hindu majority country's constitutional appointee took was against the interests of Hindus."
... The only state in India which has a separate flag and a special power bestowed on it by the constitution is Jammu and Kashmir. On an average it gets 10 times more grants compared to any other Indian state yet it complains a hundred times more about Delhi's discrimination and prejudice. The jawan who protects the people and the territory with his sweat and blood is not allowed to buy an inch of land in the state due to the constitutional provision of Article 370 which bars any Indian from settling down in Kashmir."
அனானி: ஆர்ட்டிகிள் 370-ஐப் பொருத்தமட்டில், அது தவறான முன்னுதாரணம் என்பதே எனது கருத்து. அது எப்படிப்பட்ட பின்னணியில் வந்திருந்தாலும் அது நீக்கப்படவேண்டியது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஇந்தியாவில் சிறுபான்மையினருக்கு வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும், அவர்களது நிலைமை முன்னேற்றப்படவேண்டும் என்று செகுலர், லிபரல் கருத்துகளுடன் நாம் பேசும்போது, அதேபோன்ற நிலை காஷ்மீரில் இந்துக்களுக்கு மறுக்கப்படும்போது அங்கே யாரும் குரல் கொடுக்காதது ஒருபக்கச் சார்புடையது.
இதில் குடியாட்சி முறைப்படி பதிவு செய்துகொண்டுள்ள அரசியல் கட்சிகள், மிதவாதப் பிரிவினைவாதிகள், பயங்கரவாதப் பிரிவினைவாதிகள் என அனைவரும் ஒன்றுசேர்ந்தது, “இந்தியர்கள் காஷ்மீர் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள்” என்று புரளி கிளப்பிவிட்டது என அனைத்தையும் ஒருசேரப் பார்க்கும்போது ஆர்ட்டிகிள் 370-ன் அபத்தம் புரியும். அதன் அடிப்படையே, இந்தியர்களாகிய இந்துக்கள், காஷ்மீர் நிலங்களை அபகரித்து, காஷ்மீரி முஸ்லிம்களைத் துரத்திவிடுவார்கள் என்பதால் அதனைத் தடுக்கவேண்டும் என்பதாக உள்ளது. ஆனால் உண்மையில் காஷ்மீரின் இந்து சிறுபான்மையினர்தான் துரத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுமைக்குமாக அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் இருக்கவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு என்று தனியான சிவில் சட்டங்கள் இருக்கக்கூடாது என்றும்கூட இதற்குமுன் நான் என் பதிவில் எழுதியுள்ளேன்.
http://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_17.html
http://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_24.html
அதைப்போலவேதான் ஒரு மாநிலத்துக்கு மட்டும் என்று தனிச் சட்டங்கள் இருக்கக்கூடாது என்பது என் கருத்து.
அனைத்துக்கும் மேலாக, ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியின் சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படவேண்டும். காஷ்மீரி முஸ்லிம்கள் அந்த நிலையிலிருந்து இப்போது வழுவியுள்ளனர். இது கண்டிக்கப்படவேண்டியது.
Badri,read the following link and post ur comment on it.
ReplyDeletehttp://www.greaterkashmir.com/full_story.asp?Date=7_7_2008&ItemID=10&cat=12
கருநாடகம் கூட தனிக்கொடி வைத்துள்ளார்கள்
ReplyDeleteஅசோக சக்கரத்தின் நடுவிக் கே எழுத்து
Greaterkashmir ஃபாரத்தில் டாக்டர் மியான் மெஹ்பூப் என்பவர் எழுதியது குறித்து: அது பெரும் ஜோக்காக உள்ளது. யாரோ ஷேய்க் வந்து வாங்கிவிடக்கூடாது என்பதற்காகவாம். அமர்நாத் ஷ்ரைன் போர்ட் என்பது “non-state body” என்கிறார். இது ஜம்மு காஷ்மீர் அரசால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை. இதன் சேர்மன் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர். நேரடி அரசு நிறுவனம் அல்ல என்றாலும் quasi governmental body என்றுதான் ஆகும். இது தோன்றியபிறகே, அமர்நாத்துக்குச் செல்லும் இந்து யாத்ரீகர்களின் நிலை ஓரளவுக்கு முன்னேறியுள்ளது. இப்போதுகூட நல்ல டாய்லெட் வசதிகளைச் செய்துகொடுக்கவும் யாத்ரீகர்களைத் தங்கவைக்கவும்தான் இந்த இடம் தேவைப்பட்டுள்ளது.
ReplyDeleteஅரசின் சுற்றுலாத்துறை பெரிதாக ஒன்றும் செய்துவிடாது. இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினர் விரோதச் செயலைச் செய்துள்ளன. அதற்காகக் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
இன்று தி ஹிந்து letter to the editor பகுதியில் இது தொடர்பாக வந்துள்ள சில கடிதங்களைப் படிக்கும்போது வரைமுறையின்றி எதற்கும் சப்பைக்கட்டு கட்டலாம் என்பது தெளிவாக உள்ளது.
அரசிடமிருந்து நிலங்கள் பரிசாகப் பெறுவதெல்லாம் அந்தக்காலம். மத விஷயங்களில் அரசு தலையீடு கூடாது என்பது என் சொந்தக் கருத்து. ஆனால் அமர்நாத் பிரச்சனையின் தீவிரம் இந்த வரிகளில் தெரியும்.
ReplyDelete‘This is a planned conspiracy to civil occupation of Kashmir’ by New Delhi, Ronga said, “We are not against Hindus and Amarnath Yatra, but we are against the transfer of land to SASB. The Muslims have been at the forefront to provide all possible help to the Yatris during the annual pilgrimage over the years. However, now the SASB is communalizing the issue”.The KBA president said that the SASB would use the land to raise permanent structures to settle non-Kashmiris, thereby changing the Muslim-majority character of the Valley. “It is a conspiracy to civil occupation and to change the Muslim character of the Valley,” he said.
அமர்நாத் பிரச்சனையில் கஷ்மீர் பார் அசோசியேசனின் எதிர்வினை இது தான்.
பிரச்சனை நிலம் கொடுக்கல் வாங்கலில் அல்ல, யாருக்கு நாட்டின் வளங்கள் மீது உரிமை அதிகம் என்பது போல் உள்ளது.
மத்தியில் ஆளும் முதுகெலும்பில்லாத மன்மோகன் அரசு மைனாரிட்டிகளுக்குத் தான் நாட்டின் வளங்கள் பயன் படுத்துவதில் முன்னுரிமை என்று சொல்பவர். ஆனால் கஷ்மீரில் அந்த முன்னுரிமை முஸ்லீம்களுக்குத் தான் என்கிறது PDP ஏனென்றால் அவர்கள் தான் அங்கு மெஜாரிட்டி!
கஷ்மீர் பிரச்சனை, இஸ்லாமிய மத அடிப்படைவாதம்.
இஸ்லாமிய முல்லாக்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் nightmare கஷ்மீரின் இஸ்லாமியத் தன்மையை நீர்த்துப் போதல். அது நடக்கவேண்டும் என்றால், இந்திய ராணுவ அதிகாரிகள், ரிட்டையர்ட் இந்திய ராணுவப் பணியாளர்களை கஷ்மீரில் நிரந்தரக் குடிமக்களாக்குது. நிலம் பட்டா போட்டு அவர்களுக்குக் கொடுப்பது.
இத்தகய செயல்கள் பிரச்சனையான பகுதிகளில் நிரந்தரத் தீர்வைத் தந்துள்ளது. உதாரணம் இஸ்ரேல்.
நிலம் வாபஸ் என்பது, காஷ்மீர் முஸ்லிம்களின் 'அடக்கவே முடியாத' போராட்டத்தால் அல்ல. நாட்டிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் ஓட்டுக்களுக்காக.
ReplyDeleteகாஷ்மீரில் இந்துக்களை புறக்கணித்தாலும், காங்கிரஸ் கட்சியிலுள்ள இந்து ஓட்டுகள் தொடர்ந்து காங்கிரஸுக்குத்தான் விழும். ஆனால் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் அவ்வாறு அல்ல.
அனைத்து மாநில அரசியல்வாதிகளுமே தங்களை சிறுபான்மையினரை காக்க வந்த இரட்சகர்களாகவே முன்னிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் (முலாயம், மாயாவதி, கருணாநிதி, தேவேகவுடா, மற்றும் பலர்). இதனால் இரட்டை லாபமுண்டு. ஒன்று, சிறுபான்மையினர் ஓட்டுக்கள் தயக்கமின்றி கிடைத்து விடும். இரண்டு, அந்தந்த கட்சிகளுக்குரிய இந்து ஓட்டுக்களும் வேறு வழியின்றி இவர்களுக்கே விழுந்து விடும்.
சிறுபான்மையினரை சொல்லிக் குற்றமில்லை. அதுவும் காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களை கேட்கவே வேண்டாம். அவர்கள் பாவம், உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை சமாளிக்க வேண்டும்.
கடைசியில் குலாம்நபி ஆட்சியை இழந்ததுதான் மிச்சம். நிச்சயம் காங்கிரஸுக்கு இது போதாத காலம்தான். அடிமேல் அடி.
this news really hurts how media, congress n others are pseudo secular on this simple issue..
ReplyDeleteindia freed terrorists to save the kidnapped pdp chief daughter of mufti..against the interest of india..
now these cunning betrayers act like this ....
hope some thing will happen in minds of people to know the truth...