Monday, July 07, 2008

கலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு?!

(தினத்தந்தி தலைப்புபோல் எழுதியதற்கு மன்னிக்கவும்.)

தி ஹிந்து செய்தி

தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம்.

இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள்:

1. கவிப்பேரரசு வைரமுத்து
2. அகத்தியலிங்கம் (இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்)
3. மருதநாயகம் (யார் என்று எனக்குத் தெரியவில்லை)
4. வி.முருகன் (டிட்டோ)
5. பி.கே.பழனிச்சாமி (டிட்டோ)
6. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
7. ரமணி (யார்?)
8. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
9. கயல் விழி (யார்?)
10. எம்.ரவிச்சந்திரன் (யார்?)
11. சி.சிவசண்முகம் (யார்?)

கருணாநிதியின் எழுத்துகளை (கவிதைகள், கட்டுரைகள், [முரசொலிக்?] கடிதங்கள்) பாரதியார் பல்கலைக்கழகம் மொழிமாற்றி வெளியிடுமாம். இதற்கு ரூ. 10 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

***

நோபல் பரிசு பெற அனைவரும் ஆசைப்படுவதில் தவறில்லை. முரசொலியில் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்கள் நோபல் இலக்கியத் தரத்தில் இருப்பதாக சில விசிலடிச்சான் குஞ்சுகள் நினைக்கலாம்.

ஆனால் தமிழிலிருந்து நோபல் பரிசுக் குழுவிடம் கொடுக்க கருணாநிதியின் எழுத்துகள்மட்டும்தான் நம் கண்ணில் படுகிறதா? ஓர் அரசு இயந்திரம் இப்படி பணம் செலவழித்து (விழலுக்கு இரைத்த நீர்?) இதையெல்லாம் செய்யலாமா?

கருணாநிதியின் எழுத்துகளுக்கு தமிழ் இலக்கியத்தில் நிச்சயம் ஏதோ ஓர் இடம் உண்டு என்றபோதிலும் ரபீந்திரநாத் தாகூருக்கு அடுத்து இந்தியாவிலிருந்து நோபல் பரிசு வாங்குவதற்குத் தகுதியானவர் கருணாநிதிதான் என்று பன்னிருவர் அடங்கிய குழு ஒன்று நினைப்பது சித்திரப்பாவைதான் தமிழின் தலைசிறந்த இலக்கிய நூல் என்பதற்கு ஒப்பானதே.

பா.ராகவனின் பதிவிலிருந்து: முதுமையின் மற்றொரு நோய்

16 comments:

 1. விசிலடிச்சான் குஞ்சு என்னும் வார்த்தைப் பிரயோகத்திற்கு பேடண்ட் வாங்கியிருப்பது ரஜினி ரசிகர்கள் மட்டுமே. நீங்கள் கழக உடன்பிறப்புகளை இழிவுப்படுத்துவதால் நாசமா போ என்று சபித்து வைக்கிறோம்.

  ReplyDelete
 2. வரிசை எண் 9.கயல்விழி யாரென்று தெரியவில்லையா?கருணாநிதியின் பேத்தி.மதுரையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அழகிரியின் மகள்.
  சமீபத்தில் கடலூரில் நடந்த தி.மு.க.மகளிர் மகாநாட்டில் கவிதை பாடியதன் மூலமாக அரசியலில் அரங்கேற்றமானவர்.

  ReplyDelete
 3. u posted this topic under the label 'naigaichuvai'

  LOL :)

  ReplyDelete
 4. இந்த செய்தியை பார்த்த பின் இதே எண்ணம்தான் எனக்கும் எழுந்தது. எல்லாம் அரசியலாகிவிட்டது. தமிழின தலைவர் என அழைக்கப்படும் இவர், தமிழன் படித்து இன்புற ஒன்றையும் இவர் எழுதி விடவில்லை. இவர் எழுத்தை கட்சிக்காரன் தவிர வேறு எவரும் படிக்கமாட்டார். பிறகு இதை மொழி பெயர்த்து என்னவாகபோகிறது.
  இவரோட எழுத்து எதிர் கட்சிக்காரனை பார்த்து உடன்பிறப்புக்கள் உறும பட்டுமே வைத்திருக்கிறது.

  ஆட்சியில் இருந்தால் என்னவேனுமாலும் பண்ணலாம்.

  ReplyDelete
 5. dravidan parties (leaders) survive only by coteries and this is another example. Vairamuthu stands as contemporary representative of traditional tamil pulavars who survived just out of flattery for thier kings.

  ReplyDelete
 6. MK Azhagiri has a daughter named Kayal Vizhi !!
  We should be thankful that money is being spent only in Indian Rupees. My initial reaction was a Europe based lobbying firm needs to be hired. Perhaps there is still more to come

  ReplyDelete
 7. இன்றைய ஜெயலலிதாவின் அறிக்கை படித்தீர்களா? அவர் சொல்ல மறந்த ஒன்று. நேற்று மாலை 3 மணி நேரம் கலைஞர், ஸ்டாலின், ஆற்காடு மற்றும் இன்ன பிற அமைச்சர்கள் செய்து கொண்டிருந்தது..தி.மு.க சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தது.

  ம்ம்ம்...என்னவோ நடந்து கொண்டிருந்தபோது யாரோ ஒரு மன்னன் என்னவோ வாசித்துக் கொண்டிருந்ததாகப் படித்தது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 8. கீழே ஆழ்கிணறிருக்க, பிடித்துத்தொங்கும் விழுது எந்நேரமும் இற்றுவிடலாம் என்ற நிலையில் உச்சியிலிருந்து சொட்டின ஒரு துளி தேன் போலும் எரியும் பல்வேறு பிரச்சினைகள் கழுத்து நெரிக்க, சற்றே இளைப்பாற நல்லதொரு நகைச்சுவை இது தமிழ் சமூகத்திற்கு.

  சிரிக்கலாம; சாதாரணமாக அல்ல, வழித்துக்கொண்டு.

  அன்புடன்
  முத்து

  ReplyDelete
 9. இது போன்ற ஒரு கேலிக் கூத்திற்கு தலைமை தாங்குவது ஒரு பல்கலை
  துணை வேந்தர்.இதில் வேடிக்கை
  என்னவென்றால் ஆங்கிலத்தில்
  மொழிபெயர்ப்பது நோபல் பரிசுக்கு
  ஒரு முன்முயற்சியாம். ஆங்கிலத்தில்
  மொழிபெயர்த்தால் கலைஞரின் இலக்கியம் இன்னும் அபத்தமாக,
  அசிங்கமாக இருக்கும். தமிழிலேயே
  அவரை விட பிரமாதமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.
  கலைஞரின் நடையை இவர்கள்
  ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கிறார்கள் என்ற
  வேடிக்கையை நாமும் பார்க்கத்தானே
  போகிறோம்.

  ReplyDelete
 10. தமிழில் (தற்போது உயிருடன் இருக்கும்) சிறந்த எழுத்தாளர்கள் யார் என்ற பட்டியல் யாராவது தர முடியுமா ?

  அதில் எத்தனை பேர் அரசியல் கட்சி சார்புடையவர்கள் ?

  அதில் எத்தனை பேர் திராவிட சிந்தனை (வியாதி!) உடையவர்கள் ?

  அவர்களின் தற்போதய நிலை (வேலை பார்க்கும் இடம் etc.,) என்ன ?

  ReplyDelete
 11. In ………………………….. was awarded the Nobel Prize in Literature. Half a year later, I attended a course in English at a British university. We were a group of students from various countries, and we met for social evenings once a week. There were discussions and mutual entertainment as well as just getting together. On one of these occasions, I asked a question relating to the literary aspect of the course: ‘What was the reaction in this country when …………………….. got the Nobel Prize in Literature?’ There was complete silence. The main teacher was clearly embarrassed and looked at the other teachers, but not a word was uttered. Finally, he turned to me and said: ‘There was evidently no reaction.’ He looked around once more and added: ‘I think they were glad the old chap got something.’ The man referred to as ‘the old chap’ was about 80 years old at the time, a legend in his own lifetime, the receiver of heaps of distinctions including literary prizes.
  http://journals.cambridge.org/action/displayAbstract;jsessionid=BD7A0A33485BE4A13CC4E8342121C94F.tomcat1?fromPage=online&aid=344431

  The Swedish Nobel jury had many doubts when it awarded ………………… the Nobel Literature Prize in 1953, but in the end concluded that the other hopefuls were even less worthy writers than the former British premier, Swedish Academy documents show.
  ……………… without a doubt one of the most important political figures of the 20th century, was also a prolific writer, but his selection for the highest literary award struck many as surprising, even at the time.
  http://marksarvas.blogs.com/elegvar/2004/01/churchill_nobel_2.html

  The vaingloriously self-serving but elegant volumes he authored on the …………. led the Nobel Committee, unable in all conscience to give him an award for peace, to give him, astonishingly enough, the Nobel Prize for Literature — an unwitting tribute to the fictional qualities inherent in ……………………….'s self-justifying embellishments
  http://www.hinduonnet.com/mag/2001/12/09/stories/2001120900280300.htm

  You can fillup the blanks with either MK or Winston Churchill

  However the real question is whether it is justifiable to spend public money on this?

  ReplyDelete
 12. Grimms' Fairy Tales are far far better than Karunanidhi's writings.

  --Nokia Fan

  ReplyDelete
 13. //
  However the real question is whether it is justifiable to spend public money on this?
  //

  There may be so many idiots particularly in TN to fillup MK in the blanks you left out.

  Fortunately the world is not full of such idiots.

  He and his writing are of Dravidian racist supremacist character. He has no shame in killing democracy in TN.

  ReplyDelete
 14. இவ்வளவு ஆயிரம் கோடி சொத்து இருந்தும் அம்பானி குடும்பம் மாதிரி தெருவுல இறங்கி சண்டை போடாத வகையில குடும்பத்த அமைதியா வச்சிருக்காரே.. அதுக்கே நோபல் அமைதி பரிசு தரலாமே... எதுக்கு இவ்வளவு சிரமப்படணும்?

  நல்லவேளை நோபல் இப்ப உயிரோட இல்ல. இருந்திருந்தா ரெண்டு டைனமைட் குச்சிய வாயில சொறுகிகிட்டு பட் பட் டமால்னு போயிருப்பாரு.

  ReplyDelete
 15. விருதுகள் அனைத்தும் போலிகலாகி விட்டன. திரைப்பட துறை, எழுத்து, கல்வித்துறையில் துணைவேந்தர் பதவிகள் என அனைத்திலும் அரசியல் நுழைகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களை பாராட்டி பேசினால் விருதுகள் கிடைக்கும் என்பதே நடைமுறை ஆகிவிட்டது. என்ன செய்ய? தங்களை பற்றி தாங்களே பெருமையாக பேசி கொள்வதிலும், அடுத்தவர்களை பேச விட்டு இன்பம் காண்பதிலும் அரசியல் தலைவர்களை விட்டால் வேறு யார்? வைரமுத்து கூட இப்படி இருப்பதுதான் வேதனையாக உள்ளது.

  ReplyDelete
 16. என்னது கருணாநிதிக்கு நோபல் பரிசா. பூனைக்குட்டி சொன்ன மாதிரி, நல்ல வேளை அல்ஃப்ரெட் நோபல் இப்போது உயிரோடு இல்லை. அப்ப, ஜார்ஜ் புஷ்ஷுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுலாமே? கலி முத்திடுத்து.

  ReplyDelete