Saturday, July 19, 2008

மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி

நாகராஜன், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினியில் தமிழில் எழுதச் சொல்லித் தந்த அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதற்கான ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் இப்படி எழுதுகிறார்:
Some weeks ago ELCOT had advertised that it would supply cheap laptop to students in tamil nadu. Should they not provide good desktops to schools first and should they not go for Linux as the Kerala govt. had done. If they can go for tender and get color TVs at cheap rates, why not do the same for all govt. schools in tamil nadu.
இதுதான் சரியான தீர்வு. அதே சமயம் “condemned கம்ப்யூட்டர்களையும்” கூட உருப்படியாகப் பயன்படுத்தமுடியும்.

இன்று பெரும்பான்மைப் பள்ளிக்கூடங்களுக்கு 128 MB நினைவகம் உள்ள கணினிகள்கூடப் போதுமானவை. அதில் லினக்ஸ் நன்கு இயங்கும். இன்று கிடைக்கும் எந்த லினக்ஸ் விநியோகத்தையும் எடுத்துக்கொண்டு, தேவையற்ற பலவற்றை நீக்கிவிட்டு, கே.டி.ஈ டெஸ்க்டாப் சூழல், ஓர் எடிட்டர், ஓப்பன் ஆஃபீஸ், ஃபயர்ஃபாக்ஸ், ஒரு மெசஞ்சர் (யாஹூ!, எம்.எஸ்.என், கூகிள்டாக் ஆகியவற்றுடன் பேசக்கூடியது), பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிட ஒரு செயலி, ரியல் பிளேயர் அல்லது வி.எல்.சி மீடியா பிளேயர் ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டால் போதும்.

(யூனிகோட்) தமிழ் படிக்க, எழுதத் தேவையான செயலிகள் இருந்தால் போதும்.

இவற்றை இயக்க “condemned கம்ப்யூட்டர்களே” போதுமானவை.

ஆனால் இந்தக் கணினியுடன் இணைய இணைப்பு அவசியம். உருப்படியான மின்சாரம் இல்லாத நம் நாட்டில், கூட ஒரு UPS தேவை.

ஆனால் இந்தக் கணினிகளை நம் ஆசிரியர்கள் தாங்கள் மட்டுமே பயன்படுத்தி, மற்றபடி பூட்டிவைக்காமல், மாணவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அதைச் செய்வார்களா என்பது பெரும் கேள்வி.

4 comments:

  1. //இந்தக் கணினிகளை நம் ஆசிரியர்கள் தாங்கள் மட்டுமே பயன்படுத்தி, மற்றபடி பூட்டிவைக்காமல், மாணவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.//

    இது தான் என்னுடைய கவலையும். நிறைய பள்ளிகளில் நூலகங்களையே இப்படித் தான் பூட்டி வைக்கிறார்கள் :(

    தனியார் பள்ளிகளில் இருக்கும் கணினிகள் சிறுவர்களுக்கு multimedia வகுப்பில் மட்டும் அணுகக் கிடைக்கிறது. மற்றபடி, கணினி அறிவியலை ஒரு பாடமாக எடுத்தவர்களுக்கு அந்தப் பாட வேளையில் மட்டும் அணுகக் கிடைக்கிறது.

    நூலகம், கணினிகளை முழு நேரக் கட்டுப்பாடற்ற பயன்பாட்டுக்குத் திறந்து விட்டாலே வளங்களை முழுமையாகப் பயன்படுத்தியதாகும். ஊர்ப்புற பள்ளிகளில் ஊராருக்கும் குறிப்பிட்ட வேளைகளில் கணினி அணுக்கம் கொடுப்பது மிகச்சிறந்த பயன் அளிக்கும்.

    ReplyDelete
  2. If you involve politicians and government departments to function, and have them implement such schemes, nothing will happen!

    Neighbouring countries have done it well including Bangladesh.

    An ordinary book publisher told me once, that he gives the profit as a cut, just to make sure the books go to the library and the needy!

    Regards
    Ramesh

    ReplyDelete
  3. //இது தான் என்னுடைய கவலையும். நிறைய பள்ளிகளில் நூலகங்களையே இப்படித் தான் பூட்டி வைக்கிறார்கள் :(//

    ரவி, தீ-கதவையே (பயர் எக்சிட்) (அல்லது ”தப்பும் வழி” ”அவசர வழி” ) பூட்டி வைக்கிறார்கள். இவர்களை என்ன செய்யலாம்

    ReplyDelete
  4. சிடாக் வழங்கும் பாஸ்
    (CDAC - BOSS) இயங்குதளத்தை ஒரு குறுந்தகட்டில் தருகிறார்கள்

    ஒரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவலாம். அல்லது மற்றொரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவாமலேயே உபயோகிக்கலாம்.

    நான் சோதித்து பார்த்தவரையில் இரண்டாவது குறுந்தகடு சிக்கல் இல்லாமல் இயங்கியது. நெட்வோர்க்கில் இருக்கும் கணினியில் இதை சொருகி ரீபூட் செய்தால் தானாகவே நெட்வோர்க் அமைப்புகளை கண்டுபிடித்து விடுகிறது. எந்த சிரமமும் இல்லாமல் உலாவியில் இணையத்தை மேயலாம்.

    --
    அதே போல் நீங்கள் கூறியபடி ஒரு “குறைந்த பட்ச தேவை மென்பொருள்களுடன்” குறுந்தகட்டில் இருந்தே இயங்கும் இயங்குதளத்தை வடிவமைப்பது சிரமம் அல்ல (சிடாக் பாஸ் தளத்தில் இருந்து சில மென்பொருட்களை நீக்கினால் போதும்)

    --

    அப்படி ஒரு குறுந்தகட்டில் இருந்தே 128 MB RAM கணினியில் இயங்கும் இயங்குதளத்தை - தமிழ் உள்ளீடும் வசதி, ஒபன் ஆபிஸ், பயர் பாக்ஸ், மெஸஞர் உடன் - யாராவது அளித்தால் கண்டிப்பாக அது மிகப்பெரிய வெற்றி அடையும். ஏனென்றால் அப்படி பட்ட ஒரு இயங்கு தளத்திற்கான சந்தை திறந்தே உள்ளது. கழிக்கப்பட்ட நிலையில் உள்ள பல கணினிகள் (குறைந்த பட்சம் உலாவியகங்களிலாவது - Browsing Centreக்கான தமிழ் வார்த்தை !!) உபயோகிக்கப்படலாம்

    --

    ஊதிய சங்கை ஊதி விட்டேன். விரைவில் “வன் தகட்டில் நிறுவாமலேயே கணினியை தமிழில் உபயோகிக்க கூடிய NHM OS" வரும் என்று நினைக்கிறேன்.
    :) :) :)
    --

    ReplyDelete