Thursday, July 31, 2008

தமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்

லயோலா கல்லூரியில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தப் படிப்பைத் தொடங்கிவைத்த அமைச்சர் பொன்முடி, “ஆங்கிலம் தொடர்புக்கான ஒரு மொழியாக இருக்கலாமேதவிர, தமிழ்தான் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தி தி ஹிந்துவில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தினமணி, தினமலரில் தேடிப்பார்த்தேன். இணையத்தில் கிடைக்கவில்லை.

லயோலா கல்லூரி போன்ற பெயர்பெற்ற கல்லூரிகள் பல வகுப்புகளை தமிழில் நடத்துவதன்மூலம் நல்ல பயிற்றுவிக்கும் முறைகளை ஏற்படுத்தலாம்.

பொன்முடி மேற்கொண்டு இவ்வாறு கூறியுள்ளார்:
The Minister took a dig at the modern-day boys and girls for their preference to converse in improper English rather than in proper Tamil. Mr. Ponmudy said the reason for his advocacy of Tamil was simple: effective expression was possible only in one’s mother tongue. The exactness of expression was a vital function of the print and electronic media.
சரியான தமிழில் பேசுவதற்குபதில், அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதை மாணவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? உளவியல்ரீதியில் இதனை ஆராயவேண்டும். ஆனால் பொன்முடியின் “ஒருவரது தாய்மொழியில்தான் ஒருவரால் கருத்துக்களைத் திறம்பட வெளிப்படுத்தமுடியும்” என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. பல மொழிகளில் தேர்ச்சிபெற்றவர்களால் அவரவரது தேர்ச்சிக்குத் தக்கவாறு பிற மொழிகளிலும் கருத்துக்களை மிக நன்றாக வெளிப்படுத்தமுடியும். ஆனாலும், தாய்மொழியில் எழுதுவதும் பேசுவதும், பிறமொழிகளில் எழுதுவதையும் பேசுவதையும்விட எளிது என்று ஒப்புக்கொள்வேன்.

4 comments:

 1. //சரியான தமிழில் பேசுவதற்குபதில், அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதை மாணவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? உளவியல்ரீதியில் இதனை ஆராயவேண்டும்//

  ஆங்கிலமே சிறந்தது என்ற மாயையால் !!!

  சில பெண்கள் சொந்த நூல்புடவையை கட்டாமல் கடன் வாங்கிய பட்டுபுடவையுடன் விழாக்களுக்கு வரும் அதே உளவியல் தான்
  ----

  ReplyDelete
 2. ஆங்கிலம் சிறந்தது என்பது மாயை அன்று.இன்று தமிழை விட பலவற்றில் ஆங்கிலமே சிறந்தது.
  அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதும்
  ஒரு பயிற்சியாக, நன்றாகப் பேசுவதற்கான முயற்சியின் பகுதியாக
  ஏன் இருக்கக் கூடாது.ஆங்கிலத்தை
  தெரிவு செய்வதும்,அதற்கு முன்னுரிமை கொடுப்பதும்,தமிழ்வழி விடுத்து அதில் படிப்பதும் அவரவர்
  தெரிவுகள். இதில் பிறருக்கு என்ன
  பாதிப்பு அல்லது இழப்பு. எனக்கு
  தேவையானதை ஆங்கிலம் மூலம்
  பெற முடியும் என நினைத்து நான்
  தெரிவு செய்தால் அதை தமிழுக்கு
  எதிரானது என்று கொள்ளத் தேவையில்லை.இந்தப் படிப்பினை
  அதாவது ஊடகவியலை தமிழ் வழியே
  லயோலாவில் படிப்பதை விட
  Asian College of Journalism
  போன்றவற்றில் ஆங்கிலம் வழியே
  படிப்பதே நல்லது, எதிர்காலத்திற்கு
  உதவும் என்று ஒருவர் முடிவு செய்தால் நான் அதை தவறு
  என்று கருதமாட்டேன். ஊடகவியலை தமிழ் வழியே படிப்பதை விட ஆங்கிலத்தில்
  படித்தால் வேலை வாய்ப்புகள்
  கிடைக்கும், எதிர்காலத்தில்
  நன்றாக உதவும் என்பது பொய்
  அல்லவே.ஏனெனில் தமிழ்
  ஊடகச் சந்தையை விட
  ஆங்கில சந்தை பெரியது,
  விரிவானது, அதிக வாய்ப்புகளை
  தரக்கூடியது.அதே போல்
  குழந்தை(களின்)/யின் எதிர்காலத்திற்கு
  ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது
  என பெற்றோர் கருதி அதற்கு
  முன்னுரிமை கொடுத்தால் அதுவும்
  ஒரு தெரிவுதான்.தமிழுக்கு வாழ்க்கையில் எந்த இடம் தரவேண்டும் என்பது அவரவர்
  விருப்பு,வெறுப்பினைப் பொறுத்தது.
  தமிழ் அன்றாட வாழ்க்கைக்கும், விகடன் படிக்கவும்
  போதும் என்று ஒருவர் முடிவு செய்யலாம். அதனால் ஏற்படும்
  நேர்மறை,எதிர்மறை விளைவுகள்
  அவரையே சாரும் எனும் போது
  அதை பிறர் மதித்து விமர்சிக்காமல்
  இருப்பதே நல்லது.

  இங்கு தமிழ் என்பதற்கு சொன்னது
  அனைத்து தாய் மொழிகளுக்கும்
  பொருந்தும்.

  ReplyDelete
 3. 'சில பெண்கள் சொந்த நூல்புடவையை கட்டாமல் கடன் வாங்கிய பட்டுபுடவையுடன் விழாக்களுக்கு வரும் அதே உளவியல் தான்'

  வரட்டுமே, அதில் என்ன தவறு
  கண்டீர்கள்.ஆண்கள் கோட்களை,டைகளை கடன்
  வாங்குவதில்லையா. கடன் வாங்கிய
  புடவை, வாடகைக்கு எடுத்த நகைகள்,
  பணம் செலவளித்து செய்யப்பட்ட
  ஒப்பனை/தலையலங்காரம் இவைகள்
  அவரவர் விருப்பதைப் பொறுத்தது.
  அதில் மாயை ஒன்றும் இல்லை.
  எப்படித் தோன்ற வேண்டும் என்பதும் ஒரு தெரிவுதான்.

  ReplyDelete
 4. ******இந்தச் செய்தி தி ஹிந்துவில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தினமணி, தினமலரில் தேடிப்பார்த்தேன்.*******

  நீங்களும் பொடி (நுண்ணரசியல்) வச்சி எழுத ஆரம்பிச்சுடீங்களா?

  ReplyDelete