Sunday, July 27, 2008

நான் வெஜிட்டேரியன்

ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள “Mohandas” படித்துக்கொண்டிருக்கிறேன். அது எழுப்பும் நினைவுகளை அவ்வப்போதே எழுதிவைத்துவிட எண்ணம்.

மோகன்தாஸ் காந்தி ராஜ்கோட்டில் இருக்கும்போது மாமிசம் சாப்பிடுகிறார். மேஹ்தாப் என்ற முஸ்லிம் நண்பர் அறிமுகப்படுத்துகிறார். இதே நண்பர்தான் மது, விபசாரம் ஆகியவற்றையும் காந்திக்கு அறிமுகப்படுத்துகிறார். மாமிசம் சாப்பிட்டால் உடல் வலுவாகும், ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுத் துரத்த உதவும் என்பது காந்தியின் எண்ணம்.

ஆனால் காந்தி இங்கிலாந்துக்குச் செல்ல முற்படும்போது தாய் புத்லிபாயிடம் சில சத்தியங்களைச் செய்துகொடுக்கிறார். (1) மாமிசம் சாப்பிடமாட்டேன் (2) மது குடிக்கமாட்டேன் (3) பிற பெண்களைத் தொடமாட்டேன். இதற்குள்ளாக காந்திக்கு கஸ்தூர் என்பவருடன் திருமணமாகி ஹரிலால் என்ற குழந்தையும் பிறந்துவிட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இங்கிலாந்து சென்று லண்டனில் வசிக்கும்போது தாவர உணவு மட்டும் சாப்பிட்டால் பிழைக்கமுடியாது என்றுதான் அனைத்து இந்திய நண்பர்களும் சொல்கின்றனர். எப்படியோ சில நாள்கள், பிரெட், ஓட்ஸ் கஞ்சி என்று சாப்பிட்டுப் பிழைக்கும் காந்தி, தாவர உணவை மட்டுமே சமைக்கும், பரிமாறும் ஓர் உணவகத்தைக் கண்டுபிடிக்கிறார். தாவர உணவு மட்டுமே சாப்பிடுவோர் சேர்ந்து லண்டன் வெஜிட்டேரியன் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருவதைக் கண்டுபிடிக்கிறார். அவர்கள் “வெஜிட்டேரியன்” என்ற பத்திரிகை நடத்துவதையும் கண்டுபிடிக்கிறார். காந்தி அந்த அமைப்பில் சேர்கிறார். அவர்களது பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதுகிறார். கூட்டங்களில் பேசுகிறார். லண்டனில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட தாவர உணவகங்களைக் கண்டுபிடிக்கிறார்.

***

நான் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன். உணவுப் பழக்கவழக்கங்களில் கடுமையான கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் குடும்பம். வீட்டில் வெங்காயம், பூண்டு சேர்க்கமாட்டார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் வெங்காயம் என்பதை வீட்டில் சேர்த்துக்கொள்ளாவிட்டாலும், பள்ளிக்கூடத்தில் ஸ்டாஃப் மீட்டிங் நடக்கும்போது தரும் வெங்காய பஜ்ஜி, போண்டாக்களை என் தந்தை அப்படியே எடுத்துக்கொண்டுவந்து எனக்குத் தருவார்.

பழக்கவழக்கத்தால் தாவர உணவை மட்டுமே சாப்பிடுபவனாக நான் வளர்ந்தேன். நடுவில் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் எனக்கு முட்டை கொடுக்க என் தாய் முற்பட்டார். பச்சை முட்டையை உடைத்து பாலில் கலந்து கொடுத்தால் எனக்கு வாந்திதான் வந்தது. ஒரு கட்டத்தில் அதனைக் கைவிட்டுவிட்டனர்.

ஐஐடி படிக்கும்போது கோதாவரி ஹாஸ்டலில் நான் முட்டை ஆம்லெட் சாப்பிடப் பழகினேன். பிற தாவர உண்ணிகள், மீன், கோழி, ஆடு என்று பரிணாம வளர்ச்சி காண முற்பட்டபோது எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் வரவில்லை.

மேற்படிப்புக்கு கார்னல் பல்கலைக்கழகம் வந்தபோது, காந்திபோல் கஷ்டப்படுவோம் என்ற பயம் இருக்கவில்லை. மூன்று பேர் சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டோம். அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் இத்தாகாவில் கிடைத்தது. சாம்பார் பொடி, ரசப் பொடி வேண்டிய அளவு கொண்டுவந்திருந்தோம். ஆனாலும் என்றாவது வெளியே போய் உணவகங்களில் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்?

பிட்ஸா என்ற உணவுப்பண்டம் புதியதாகத் தென்பட்டது. மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு நாங்கள் ஒரு கடைக்குச் சென்று பிட்ஸா சாப்பிடுவது என்று முடிவுசெய்தோம். சீனியர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனால் வெட்கம். போய் ஆர்டர் செய்யும்போது மேலே என்ன டாப்பிங் வேண்டும் என்று கேட்டார்கள். கடையில் இருந்த பணிப்பெண்களுக்கு வெஜிட்டேரியன் என்றால் என்னவென்று புரியவில்லை. கடைசியாக பெப்பர் என்று பொருள் என்று நினைத்துக்கொண்டு பெப்பரோனி பிட்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டோம். ருசி சகிக்கவில்லை. கஷ்டப்பட்டு கடித்து முழுங்கினோம்.

பிட்ஸா என்பது வேஸ்ட் என்று முடிவுசெய்து, சில நாள்கள் அதன் பக்கம் போகவில்லை. பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் மற்றுமொரு கடையில் பிட்ஸா. இந்தமுறையும் பெப்பரோனி. இப்போதும் டேஸ்ட் பிடிக்கவில்லை. ஆறு மாதம் கழித்து சீனியர் “பால்” (இவன் பெயர் அனந்தராமன். பால் என்று பெயர்வந்தது வேறு கதை) என்பவனிடம் கேட்க அவன் போட்டு உடைத்தான்!

பெப்பரோனி என்றால் மாடு, பன்றி மாமிசம் கலந்த கலவை. மிச்சம் மீதி மாமிசத் துண்டுகளை அரைத்து பிழிந்து குழாய் போன்றாக்கி, அதை துண்டு துண்டுகளாக நறுக்கி, பிட்ஸா மேல் போட்டு வைத்திருப்பார்கள்.

அதன்பின் பாலின் ஆலோசனையின்பேரில் பிட்ஸா ஹட்டிலிருந்து ஹாலோபென்யோ மிளகாய், பைனாப்பிள் கலவை பிட்ஸா சாப்பிடத் தொடங்கினோம். (இன்றுவரை எனக்குப் பிடித்த காம்பினேஷன் இதுதான்.)

அதன்பின், சாப்பிடும் இடங்களில் கவனமாக பலவற்றைத் தவிர்த்து, தாவர உணவாக மட்டுமே பார்த்து சாப்பிடத் தொடங்கினேன். ஒருமுறை வாஷிங்டன் டிசி சென்று செனேட், வெள்ளை மாளிகை ஆகியவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுவரும் ஒரு பயணம். அதில் சத்யாவும் என்னுடன் வந்திருந்தான். எல்லாம் முடிந்து திரும்பிவரும்போது கொலைப்பசி.

எங்கோ மெக்டானல்ஸ் கடை ஒன்றில் பஸ்ஸை நிறுத்தினார்கள். அப்போதெல்லாம் (1991) வெஜிட்டேரியன் என்ற ஒன்று மெக்டானல்ஸில் இல்லாத காலகட்டம். எனக்கு அது தெரியாது. பேசாமல் பிரெஞ்ச் ஃப்ரையுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் பசிக்கு அது போதாது. ஹாம்பர்கர் என்றால் என்ன என்று தெரியும். பக்கத்தில் சீஸ்பர்கர் என்று போட்டிருந்தார்கள். ஹாம்பர்கரில் ஹாம் என்றால் சீஸ்பர்கரில் சீஸ் என்று எளிமையான சூத்திரத்தைக் கடைப்பிடித்து வாங்கி உடனடியாகச் சாப்பிட்டு முடித்துவிட்டேன். சாப்பிடும்வரை சத்யா சிரித்துக்கொண்டே இருந்தான். முடித்தபிறகு “நீ இப்போது என்ன சாப்பிட்டாய் என்று தெரியுமா?” என்று கேட்டான். “சீஸ் வைத்திருந்த பன்” என்றேன். “இல்லை, அதுவும் ஹாம்பர்கர்தான். கூட ரெண்டு ஸ்லைஸ் சீஸ் வைத்திருப்பார்கள்” என்றான். அதற்குள் வயிற்றில் ஜீரணம் ஆகிவிட்டது.

விஷயம் தெரிந்ததும் உடனடியாக எல்லாம் வாந்தி வரவில்லை. சரி, ஒழியட்டும் என்று விட்டுவிடுவேன். ஆனால் ஊன் உணவைத் தேடிச் சென்றதில்லை.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பர்கர் கிங் தொடங்கி ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனங்கள் அனைத்தும் வெஜிட்டேரியன் சாய்ஸ் ஒன்றாவது கொடுக்க ஆரம்பித்தன. பிட்ஸாவிலும் வெஜிட்டேரியன் வகை ஒன்றாவது (இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது வெறும் சீஸ் பிட்ஸா) இருக்கும். சாலட் என்பது கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்குத் தென்பட ஆரம்பித்தது. சப்வேயின் அரையடி, ஓரடி சாண்ட்விச்கள் வயிற்றை நிரப்ப ஆரம்பித்தன. பேகல், டோனட்ஸ் போன்ற அற்புதமான உணவுகள் தெரியவந்தன. மெக்சிகன் உணவகங்கள், கொரிய, எத்தியோப்பிய, இத்தாலிய, தாய் உணவகங்கள் என எங்கும் வெஜிட்டேரியன் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் 1960-1980-களில் அமெரிக்காவில் தாவர உண்ணிகள் நிலை இவ்வளவு எளிதாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

காந்தியின் உறுதியான மன நிலை இல்லாதவர்கள் சீக்கிரமே மாமிச உணவு உண்ணப் பழகியிருப்பார்கள்.

***

மாமிச உணவு உண்பது பாவம், தவறு என்ற கொள்கை எனக்குக் கிடையாது. மதம் தொடர்பான அல்லது கொல்லாமை போன்ற எண்ணங்களால் உந்தப்பட்டு நான் தாவர உணவைப் பின்பற்றுவதில்லை. அப்படியே பழகிவிட்டேன். அப்படியே தொடர்வது என்ற நிலையை எடுத்துள்ளேன்.

மாமிச உணவு உண்பவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதில் எந்தப் பிரச்னையும் எனக்கு இருந்ததில்லை. அதேபோல உணவகங்களில் எது எந்த எண்ணெயில் பொறித்தது என்றெல்லாம் சோதித்துப் பார்க்கவேண்டும், கேள்வி கேட்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியதில்லை. ஒரே உணவகத்தில் சைவ/அசைவ சமையல் நடந்தால் எனக்குத் தெரிந்த சிலர் அங்கே உண்ணமாட்டார்கள். எனக்கு அப்படியான எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை.

சமீபத்தில் ஓர் உணவுச்சாலையில் காய்கறி பிரியாணி கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நடுவில் ஒரு சிறிய சிக்கன் துண்டு அகப்பட்டது. அப்படியே நகர்த்தி வைத்துவிட்டுச் சாப்பிட்டோம்.

***

தாவர உணவு உண்பதிலும் ஒரு கடுமையான தீவிரவாதத்தை யாரும் முன்வைக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் உணவுப் பழக்கம், சாதியோடு சேர்ந்து ஒட்டிப்போய் பிராமணர்களையும் பிள்ளைமார்களையும் மட்டும் தனித்துக் காண்பித்துவந்தது. ஆனால் இன்றோ, பிற சாதிகளில் உள்ள பலரும் தங்களது விருப்பத் தேர்வாகவே தாவர உணவைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அதே நேரம் பிராமணர்கள் பலரும் தங்களது விருப்பத் தேர்வாக நீந்துவன, ஊர்வன, பறப்பன என அனைத்தையும் உண்ண ஆரம்பித்துள்ளனர்.

ஆனாலும் இன்று சில இடங்களில், ஓர் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் யார் குடியிருக்கலாம், கூடாது என்பதை சாதியை முன்வைத்துத் தீர்மானிக்கின்றனர்.

இது எவ்வளவு அபத்தம்!

16 comments:

  1. பத்ரி,
    இப்பொழுதெல்லாம் உணவு பற்றிய பிரச்சினை எந்த நாட்டிற்கு சென்றாலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பிட்சா வகைகளில் இப்போது சீஸ் தவிர, வெங்காயம், காளான், banana பெப்பெர்ஸ் மற்றும் சில வகைகள் வந்து விட்டன. Subway சென்று sandwich கேட்டால், wheat பிரட் நடுவில் தாவரங்களை வைத்து நன்றாக தருகிறார்கள். mexican பிட்சா என்ற veggi உணவும் நன்றாக இருக்கும்.
    இப்பொழுதெல்லாம் இந்திய உணவகங்களை திறப்பதும், சமையல் பொருட்களை ஏற்றுமதி செய்து விற்பதும் நல்ல தொழிலாக மாறி விட்டது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கூட வாங்கும் வசதி வந்து விட்டது.

    ReplyDelete
  2. Dear Badri

    Nice post. Gandhism. I have had the same experience.

    Sorry to post my comment in English, as I am still trying my level best to learn typing in Tamil. Comfortable in reading, but the transliteration process, takes time. My wife jokes at me (she is Tamil iyer) that my Tamil is like Hindi dubbing movie in Tamil. Well it is more of Bengali influence, and I feel there is some kind of similarity in language.

    Even though we are Mahars, of Ambedkar caste, some subsects are vegetarians, and my grandfathers side, was strictly vegetarians, after the ancestors became followers of Shankaracharya itseems! My grandfather Shri Laxman Tendulkar, was well trained in vedas, while living in Kolhapur. He had a day time job in a shoeshop.

    This reason, made us to be vegetarians. It changed, when my dad moved after his engineering degree for work in a small steel plant at Calcutta. He got hooked onto fish, which was considered vegetarian that side. Jala pusph. So after marraige, we were sort of brought up as seafoodarians. No eggs still. Everyday, my dad had to have fish. Fish is dangerous, beyong a certain quantity and doesnt mix with diary products.

    So once I went to IIT, I was sort of forced to non veg, anything goes culture came into being, as there were too many restrictions on veg food. This continued in Ahmedabad too, when I was doing my PG. I had toned down to fish only then.

    When I made my first trip for work, at a training in Delhi for 2 weeks, we figured out about the veg and non veg fried rice and biriyanis getting made in same Tava. So what is the fun in insisting?

    While making my trips to US, I was able to survive with veg food alone. Mostly NY side. 1991 to 1994.

    My wife, does not mind me eating non veg outside house. We still dont cook at home including eggs. My daughter and son are pure veg. Occassionally I end up eating somewhere while sharing with friends.

    Just thought of sharing....

    Regards
    Ramesh

    ReplyDelete
  3. எனக்கும் இதை பற்றி பதிவில் எழுதி பாக்கணுமுன்னு ஆசையை உண்டாக்குகிறது 'நான் வெஜிட்டேரியன்' என்ற இந்த பதிவு. தீராத அமுதசுரபி மாதிரி 26 வருடத்து அமேரிக்க வாழ்வில் நிறைய சாப்பாட்டுச் சமாச்சாரங்கள் உண்டு.

    நன்றி.

    ReplyDelete
  4. Dear Mr Badri,

    I heard an explanation from some Swami or such person on why we, Hindus, are vegetarian. It is not only ahimsa. For only living things can give life other living beings. Non living things, like stones, cannot give life to a person.

    But we eat those that are living but least conscious during their life. If we eat human flesh, we take the whole burden of that human's emotional burden on to us.
    So try to eat vegetables that fits this criteria.

    My $0.02

    Regards,
    Chocka (Chockalingam)

    ReplyDelete
  5. //ஆனாலும் இன்று சில இடங்களில், ஓர் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் யார் குடியிருக்கலாம், கூடாது என்பதை சாதியை முன்வைத்துத் தீர்மானிக்கின்றனர்.//

    பல தனியார் நிறுவனங்களின் ஊழியர் குடியிருப்புகளில் கூட சில அடுக்குமாடிகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, சில சில அடுக்குமாடிகள் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு என்று பதிவேடுகளில் இல்லாத ஒரு பகுப்பு இருக்கிறதே

    ReplyDelete
  6. இந்தியாவிலுமே இந்த மாதிரி பிரச்சினைகள் உண்டு. ராணுவத்தில் வெஜிடேரியன் என்றால் வேற்று கிரக ஜந்துக்கள்தான். செகந்திராபாத் AOC-ல் தேசிய மாணவர் படைக்கு ஒரு காம்ப் நடத்துவார்கள். அங்கே ராணுவ மெஸ்தான். ரொட்டி டாலுடன், மட்டன் குருமா, சிக்கன் குழம்பு என்று தருவார்கள். வெஜிடேரியன் என்றால் வெறும் டால்-உடன் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    உணவுப் பழக்கம் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுக்கிற வேலையை பொறுத்து அமைய வேண்டியதாகிறது.

    இன்றைய வாழ்க்கை முறையில், 40 வயதுக்கு மேல் பெரும்பாலும் எல்லாருமே தாவர உணவுக்கு வந்துவிடுகிறார்கள். இல்லையென்றால் கொழுப்பைக் குறைக்க தனியாக உழைக்க வேண்டியதுத்தான்.

    ReplyDelete
  7. //ஆனாலும் இன்று சில இடங்களில், ஓர் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் யார் குடியிருக்கலாம், கூடாது என்பதை சாதியை முன்வைத்துத் தீர்மானிக்கின்றனர்.
    //


    இதில் என்ன ஆச்சிரியம் பத்ரி..
    ஆதம்பாகத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் ஐயரை மட்டும்தான் வாடகைக்கு வைப்பார்கள்.அதுவும் வாடகை எவ்வளவு தெரியுமா rs 2700 மட்டுமே.அவர் எனது நண்பரின் நண்பர், ctsல் வேலை செய்கிறார்..என் நண்பனோ பாவம் mechanical முடித்துவிட்டு மாதம் 15000 சம்பளத்தில் அல்லாடுகிரன் ..இவன்னுக்கு வீட்டு வாடகை எவ்வளவு தெரியுமா 4000 .பிறப்பில் வன்னியனாக இர்ருந்தாலும் நல்ல பழக்கம் உடையவனே(vegetarian) .சென்னையில் மட்டும் தான் இப்படி என்று சொல்லிவிட முடியாது.. அனைத்து ஊரிலும் உள்ளது.
    அதனால் குடி வைக்காதவர்கலையும் குற்றம் கூற முடியாது அவர்களுடைய பழக்கங்கள் தடை படுமோ என்ற ஆதங்கம் அவ்வளவுதான்.
    ஏன் நீங்கள் நாகையில் வசித்த தெருவில் பல சாதி மக்களும் இர்ருந்தனர் , அதனால் உங்கள் உணவு பழக்கங்கள் பெரிதாக மாறவில்லையே !. இங்கு அவ்வாறு இருப்பதில்லை.

    ReplyDelete
  8. 'ஆனாலும் இன்று சில இடங்களில், ஓர் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் யார் குடியிருக்கலாம், கூடாது என்பதை சாதியை முன்வைத்துத் தீர்மானிக்கின்றனர்'

    ஆனாலும் இன்று அரசாங்கம், ஓர் வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம், கூடாது என்பதை சாதியை முன்வைத்துத் தீர்மானிக்கின்றனர்
    என்பதுதானே உண்மை. இது போன்ற பாகுபாடுகள் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் உள்ளன.

    ReplyDelete
  9. //ஆனாலும் இன்று சில இடங்களில், ஓர் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் யார் குடியிருக்கலாம், கூடாது என்பதை சாதியை முன் வைத்துத் தீர்மானிக்கின்றனர். இது எவ்வளவு அபத்தம்!//

    தீண்டாமையின் இன்னொரு பக்கம் தனி மனித உரிமை என்ற விருப்பத்தின் கீழ் இந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கிறது..

    சாதி காரணமாகவே என்னை நிராகரித்த வீட்டு உரிமையாளர்கள் மேற்கு கே.கே.நகரில் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்.

    2500 ரூபாய் வாடகை எனக்குக் கட்டுப்படியானது என்று தேடிச் சென்றால் வாசலிலேயே 'நீங்க பிராமினா?' என்று கேட்டு என்னைத் திருப்பியனுப்பினார்கள்.. இன்னும் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

    அப்படியென்னதான் அந்த 'பிராமணர்கள் மட்டும்' என்பதில் அடங்கியிருக்கிறது என்று எனக்குப் புரியல ஸார்..

    ReplyDelete
  10. 'தீண்டாமையின் இன்னொரு பக்கம் தனி மனித உரிமை என்ற விருப்பத்தின் கீழ் இந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கிறது..'

    அப்படியல்ல, தீண்டாமை என்பதற்கும், தன் வீட்டில் யாரை
    குடியமர்த்தும் உரிமை என்பதற்கும்
    வேறுபாடு உண்டு.

    ‘அப்படியென்னதான் அந்த 'பிராமணர்கள் மட்டும்' என்பதில் அடங்கியிருக்கிறது என்று எனக்குப் புரியல ஸார்..'

    முன்பெல்லாம் திருமணமாகா
    இளைஞர்/இளைஞிகளுக்கு
    வீடு வாடகைக்கு கிடைக்காது.
    இப்போது அது ஒரு பொருட்டே
    அல்ல.அது போல் இதுவும்
    மாறும்.

    ReplyDelete
  11. I am surprised to see ppl refer to vegetarianism as நல்ல பழக்கம்! let's just get a little scientific, vegetarianism has nothing to do with நல்ல or கெட்ட பழக்கம். Homo sapiens neaderthalensis was a vegetarian/herbivourous species of humans, whereas Homo sapiens sapiens are the omnivorous subspecies. and you know what,
    H. neanderthalensis is now extinct. Because mere herbivory did not offer evolutionary advantages. We survived as a species because we switched to an omnivorous diet, with more animal protein. animal protein is more fuel-efficient, much easier to digest and requires less gut space. All the energy we saved on extra lengths of the gut got saved and enabled us to develop a bigger brain. The human body is not designed for Herbivory, we lack a ceacum, we don't chew cud, we have no grinding molars, and we are not hoofed mammals:)and even the most well meaning herbivore human, cannot survive without animal protein, at least in the form of animal milk (Gandhiji experimented extensively with that and concluded the same)
    As for the moral angle, Herbivory was introduced in India not by Brahmins, but by the Jains. Brahmins are the class of people who chant prayers at Yagnas. And animal sacrifice was a matter of fact in yagnas (as for example Aswametha yagna) and it was part of the protocol for the priests to partake the Havi (sacrificed food) Brahmins were largely omnivorous before Mahaveera. Only after Jainism spread, did ideas of ahimsa spread. with that came Herbivory. because the Jains were the most literate of people and held in high esteem all that they preached immediately became a kind of high status behaviour, and so herbivory became a food fad. but ideology cannot beat biology. and soon jainism lost its hold on people, but some aspects of it, linger still,,,as for example ahimsa, vegetarianism, tonsuring, and for that matter the words பள்ளிக்கூடம், சேலை, etc:)

    ReplyDelete
  12. நான் ஒருமுறை வீடு தேடியபோது கிறித்தவர்களுக்கு தரமாட்டோம் என்று சொன்னார்கள் ( இதில் வேடிக்கை என்னவென்றால் chruch பக்கம் அதிகம் போகமாட்டேன் ) தற்போது சிங்கபோரில் "இந்தியர் தவிர" என்ற விளம்பரங்களை பாக்கலாம். ஒரே ஒருமுறை சீனர் தவிர என்ற விளம்பரத்தை பார்த்தேன் ,ஏனெனில் சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவார்கள் அதனால் இஸ்லாமியர்கள் வீடு கொடுக்க மாட்டர்கள்

    -அகிலன்

    ReplyDelete
  13. we need some reason to feel and justify that we are superior to some others. It may be colour, sex, caste, region or Vegetarianism. We are still Tribals. Not modern enough in habits and thought, inspite of acquiring all the modern gadgets and cultural aspects of the west. What is there to be proud of this or that?

    ReplyDelete
  14. Dear Mr Rajagopal,

    > in spite of acquiring modern gadgets and cultural aspects of the West.

    What is great about 'modern gadgets' and 'cultural aspects of the West'. I will say it is denigrating to say this. One must be proud of our own culture and values, unless there is something wrong with it.

    My $0.02

    Regards,
    Chocka

    ReplyDelete
  15. வன்முறையும், உண்முறையும்


    வன்முறை என்ற கருதுகோள் மிகவும் சிக்கலானது. விலங்குகள் விலங்குகளை உண்பதற்கும் மனிதன் விலங்குகளை உண்பதற்கும் வேறுபாடு உண்டா என்பதைக் கூட நம்மால் தீர்மானிக்க இயலாது. உலகிலிருக்கும் தாவரங்கள், உயிர்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பயோஸ்பியர்(Biosphere) பல உயிர்களாகவும், தாவரங்களாகவும் வடிவெடுத்துள்ளது. அடிப்படை அலகான செல்’தான் அனைத்தின் கட்டுமானப் பொருள். அனைத்து உயிர்களும் (இதில் தாவரங்களும் வைரஸ்களும் அடக்கம்). இயற்கை என்னும் (உயிரற்ற) கைவினைஞன் எண்ணிலடங்காத செல்களாலான பயொஸ்பியரை, கலைத்துக் கலைத்துப் போட்டும் புதிய பொருள்களைச் புதிய உயிர்களைச் செய்கிறான் என்று புரிந்து கொள்வதற்காகச் சொல்லிக் கொள்ளலாம். பிறக்கும் குழந்தை புதியதாகத் தோன்றினாலும், அது எதிலிருந்து தோன்றியதோ அது ஏற்கனவே இருந்த பொருள்களிலிருந்து ஆனதே ஆகும். ஆகவே உயிர்களின் சாரம் (உயிரியல் ரீதியில்) ஒன்றுதான்.
    இப்படியிருக்கும் உயிர்வகைகளில் ஒன்று மற்றொன்றை உட்கொண்டாலும் அடிப்படையான செல்லின் தளத்தில் வன்முறை நிகழ்வதில்லை. நம் உயிர்களை செல்களின் காலனி(colony) என்று கொண்டால் ஒரு உயிரின் பகுதியாக இருந்த செல்கள் இன்னொரு உயிரின் பகுதியாக மாறுவது தான் நிகழ்கிறது. உதாரணமாக கோழியின் உடற்பகுதியாக இருக்கும் செல்கள் மனிதன் கோழியை உண்ணும் பொழுது, மனிதனின் உடற்பகுதி செல்களாக மாறிவிடுகின்றன. பூமியின் அளவில் நடக்கும் இந்த மாற்றத்தால் பயோஸ்பியரில் எந்த மாற்றமும் நடக்குமா என்பது கேள்வி. இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இப்படியொரு நிலையில் வன்முறை என்பது உண்பதற்காக செய்யப்பட்டால் அதை வன்முறை என்றழைப்பதைவிட கொள்முறை என்றழைபதே பொருத்தமானது. சின்ன மீனின் செல்களை பெரிய மீன் (உட்)கொள்ளுகிறது. மிருகங்கள் பசியில் தன் இனத்தையே உண்டுகொள்ளும் முறையில் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழியும் சுட்டுவதாக இருக்கலாம். உண்பதற்காக கொன்ற பொருளை, தின்னாமல் விட்டால் தான் பாவம் என்ற தொனியும் இந்தப் பழமொழியில் இருக்கிறது.
    வன்முறையின் இன்னொரு வடிவம் உண்டு. வைக்கோல் போரை நாய் காத்தது போல என்ற பழமொழியின் வகை. கொல்வதற்காகவே கொல்வது. இதில் தான் மனிதன் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். தானும் கொள்ளாமல், அடுத்தவரையும் கொள்ளவிடாமல் வீணாக மனிதர்களைச் சாகடிக்கிறான். பசியில்லை எனில் மிருகங்கள் மற்ற மிருகங்கள் கண்ணெதிரே இருந்தாலும் கொல்வதில்லை. மனிதனின் மூளையில் தான் பசியிருக்கிறது. தான் மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற பசி. பூமியின் வளங்கள் தனக்கு மட்டும் வேண்டும் என்ற பசி. இப்படி நிகழும் வன்முறையில், மரணத்தில் நமது(பயொஸ்பியரின்) அடிப்படை அலகான செல்கள் வீணாகின்றன. இதுதான் உண்மையான வன்முறை.
    சுருக்கமாகச் சொன்னால் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தின் உணவாகும் போது, செல்கள் இடம் மாறுகின்றன. அதாவது ஒரு உடலைவிட்டு இன்னொரு உடலுக்கு. அப்படி ஆகாத வன்முறையும் மரணமும் வீணாக விரையமாவதால் அதையே உண்மையான யாருக்கும் பயனிலாத வன்முறை என்று மறுக்கலாம்.
    எல்லாரும் கறி உண்பவர்களாக ஆனாலும் சிக்கல். யாருமே கறி உண்பவர்களாக இல்லாவிட்டாலும் சிக்கல். ஏனெனில், எல்லோரும் உண்ணும் அளவுக்கு உலகில் மிருகங்கள் கிடையாது. எல்லோரும் தாவர வகை உணவு உண்டாலும், அவர்களுக்கு வேண்டிய அளவு உணவு கிடைக்காது. எனவே, இருக்கிற வகை உணவுகளைப் பகிர்ந்து கொள்வதே சரி. அதற்காக நாம் ஏற்றுக் கொள்கிற வேஷந்தான், புலால் உண்பவன், புலால் உண்ணாதவன் என்ற வேறுபாடு. எப்படியோ மனிதன் வாழ உணவு வேண்டும். அதில் வேற்றுமை காட்டி,ச் சச்சரவு கொள்வது புரிந்து கொள்ள முடியாதது. நமக்கு இதில் தேர்ந்தெடுக்கும் உரிமை மெத்த இருப்பதாகத் தெரிந்தாலும், உண்மையில் பூமியில் உள்ளவர்கள் அனைவருக்கும் கறி உண்ணலாமா அல்லது வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,மிகக் குறுகலானதே.

    ReplyDelete
  16. As Dr. N. Shalini had commented, Homo sapiens neanderthalensis were vegetarians. Wikipedia says, Homo sapiens neanderthalensis were almost exclusively carnivorous and apex predators. Therefore her comments are debatable and not completely true.

    ReplyDelete