Wednesday, October 14, 2009

சீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்

இந்தியப் பிரதமர் அருணாசலப் பிரதேசம் சென்றதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது சீனா. அதனால் ‘மன வருத்தம்’ அடைந்து புலம்பியிருக்கின்றனர் இந்திய அரசாங்க அதிகாரிகள்.

சீனா இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்கார நாடு. ஜம்மு காஷ்மீர் வாழ் மக்கள் சீனாவுக்குச் செல்ல விசா கேட்டால் அந்த விசா ஸ்டாம்பை இந்திய பாஸ்போர்ட்டில் போடாமல் தனியாக ஒரு தாளில் போடுவது. அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அதிகாரிகளுக்கு சீனா செல்ல விசா விஷயத்தில் குழப்புவது. மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றால் சும்மா ஒரு பிட்டைப் போட்டுவைப்பது.

உடனே இந்தியா பதறும். எல்லைப் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறோமே, இப்படி எங்களை டார்ச்சர் செய்கிறீர்களே என்று புலம்பும்.

இந்தியாவைப் பதற்றத்தில் ஆழ்த்தும் உளவியல் டெக்னிக் இது. இந்தியா இதில் சிக்குகிறது. மாற்றாக இந்தியா என்ன செய்யவேண்டும்?

1. பதற்றத்துடன் பதில் சொல்லவேண்டாம். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இதற்கு பதில் சொல்லவேண்டாம். சீனா பக்கத்திலிருந்து கண்டனம் சொல்லியிருப்பது யார் என்று பாருங்கள். கடைமட்ட ஊழியர் ஒருவராக இருப்பார். அதைப்போல இந்தியாவில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கடைமட்ட கிளர்க்கைக் கொண்டு மட்டமான தாளில் டைப்ரைட்டர் கொண்டு அச்சடித்த கண்டனக் கடிதத்தை இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்துக்கு அனுப்பிவைத்தால் போதும்.

2. ஒவ்வொரு மாதமும் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் போய் ஒரு சிலையைத் திறந்துவைக்கலாம். அவரது ‘சொந்த மாநிலமான’ அசோமுக்குப் போவதற்கு அருணாசலப் பிரதேசம் வழியாக சுற்றிவளைத்துச் செல்லலாம். இன்னும் சொல்லப்போனால் அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் அருணாசலப் பிரதேசம் சார்பில் மன்மோகன் சிங் நிற்பது நலம். (யோசித்துப் பார்க்கும்போது, இது பிரமாதமான ஐடியாவாகத் தோன்றுகிறது!)

3. சீனாவின் ஹு ஜிண்டா, சீனாவின் எந்தப் பிரதேசத்துக்குச் செல்லும்போதும், இந்திய உள்துறை அமைச்சகத்தின் கடைமட்ட கிளர்க் ஒருவர் அதைக் கண்டித்து ஒரு கடிதத்தை (இந்திய போஸ்டல் சர்வீஸ் மூலம்) அனுப்பி வைக்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் திபெத் பற்றி யாராவது ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு கருத்தை வெளியிடலாம். “திபெத் புத்தமதம் இந்தியாவுக்கே வழிகாட்டும்” என்று ஒரு அமைச்சர். “திபெத் உணவகங்கள் இந்தியா முழுதும் திறக்கப்படும்” என்று சுற்றுலாத் துறை அமைச்சர். “தலாய் லாமா முகம் போட்ட ஸ்டாம்ப் - பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுகிறார்” என்று ஒரு அமைச்சர்.

5. இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை வழங்கவேண்டும். இந்தியர்கள் மாண்டரின் மொழியில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க இந்திய அரசு மானியம் வழங்கவேண்டும்! அப்போது நாம் எல்லாம் இந்தக் கருத்துகளை மாண்டரினில் எழுதி சீனர்களைக் கடுப்பில் ஆழ்த்தலாம். அவற்றை சென்சார் செய்வதிலேயே சீன அரசு செத்துவிடும்!

15 comments:

  1. Chinese govt. knows that Indians are capable of creating a new grammar for Mandarin Chinese
    or can teach them Chinese better than what they do in China.

    ReplyDelete
  2. விடுங்க....இப்பவாவது அருணாச்சலப் ப்ரதேசம் என்கிற மாநிலம், செய்திகளில் முன்னுரிமைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது என்பதிலே அந்த மாநில மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். (link )

    ReplyDelete
  3. //அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் அருணாசலப் பிரதேசம் சார்பில் மன்மோகன் சிங் நிற்பது நலம். (யோசித்துப் பார்க்கும்போது, இது பிரமாதமான ஐடியாவாகத் தோன்றுகிறது!)

    //

    சந்தேகமே வேண்டாம், மிகவும் பிரமாதமான ஐடியா.

    ReplyDelete
  4. உண்மை, மேலும் இந்திய மந்திரிகளுக்கு "The Art of war" வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும் :)

    ReplyDelete
  5. அமேரிக்காகாரன் வந்து குண்டு போடும் பீரங்கி விற்பதாக சொன்னாலே, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் கம்யூனிஸ்டுகள் இந்த மாதிரி விஷயத்தில் பொத்திக்கொண்டு இருப்பது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

    ReplyDelete
  6. காங்கிரஸ் ஆடு சிம்ம கர்ஜனை செய்யாது. சீனா ஒரு நாள் அந்தமானை கேட்டாலும் ஆச்சரியம் இல்லை.

    பராக் ஒபாமா ஆடு கூட தலாய் லாமாவை சந்திக்காமல் டப்பாய்த்துவிட்டது, சீனர் சினம் அஞ்சி.

    காம்ரேடுகளும், "அறிவுஜீவிகளும்", அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தான் கூரை ஏரி கூச்சல் போட்டு திட்டுவர்.

    சீனாவை பற்றி நாம் இன்று ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால், ஒன்று Mount Road Xinhua (Hindu) படிக்கவேண்டும், இல்லையேல் அமெரிக்க, ஆங்கில பத்திரிகை அல்லது புத்தகங்களை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. அனைத்தும் நல்ல ஐடியாக்கள் :-))))))

    அப்படியே எல்லா வட கிழக்கு மாநிலங்களுக்கும் பிரபலங்களை படையெடுக்கச் சொல்லலாம்.

    சீனா இந்தியாவை தினமும் கோமாளியாக்குகிறது. நல்ல தலைவர்கள் இல்லை. :-((((

    ReplyDelete
  8. //
    5. இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை வழங்கவேண்டும். இந்தியர்கள் மாண்டரின் மொழியில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க இந்திய அரசு மானியம் வழங்கவேண்டும்! அப்போது இதே கருத்துகளை நாம் எல்லாம் இந்தக் கருத்துகளை மாண்டரினில் எழுதி சீனர்களைக் கடுப்பில் ஆழ்த்தலாம். அவற்றை சென்சார் செய்வதிலேயே சீன அரசு செத்துவிடும்!
    //

    மாண்டரின் கற்ற பலர், சீனாவுக்கு சிங்கி அடிப்பவர்களாக மாறிவிடுவதைத் தடுக்க என்ன வழி என்று இப்போது யோசித்தாலே போதும்.

    எனக்குத் தெரிந்து, சீனாவில் ஜனநாயகம் மலரும் வரை, நம் கம்யூனிஸ்டு பார்டியை ban செய்து விட்டாலே பாதி பிரச்சனை ஓய்ந்துவிடும்.


    இங்கு உள்ள ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தானே இவர்கள் சீனாவுக்குக் கூஜா தூக்குகிறார்கள். அங்கும் ஜனநாயகம் வந்தால், இந்திய ஆதரவு கட்சி ஒன்றை உருவாக்கி நமக்காகவும் சப்பை மூக்குக்காரர்களை கூஜா தூக்க வைத்துவிடலாம். எல்லாம் ஒரு level playing field கொண்டுவரத்தான்.

    ReplyDelete
  9. //இந்தியர்கள் மாண்டரின் கற்றுக்கொள்ள நிறைய உதவிகளை வழங்கவேண்டும். இந்தியர்கள் மாண்டரின் மொழியில் வலைப்பதிவுகளை ஆரம்பிக்க இந்திய அரசு மானியம் வழங்கவேண்டும்! அப்போது நாம் எல்லாம் இந்தக் கருத்துகளை மாண்டரினில் எழுதி சீனர்களைக் கடுப்பில் ஆழ்த்தலாம். அவற்றை சென்சார் செய்வதிலேயே சீன அரசு செத்துவிடும்! //


    அவ்வளவு வேண்டியதில்லை. நம்மாள்கள் ஆங்கிலத்தில் பேசுகிறேன்/எழுதுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து அதைக் கொலை செய்ததைத் தாங்க முடியாமல்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறினார்கள் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அதுபோலவே மாண்டரீன் சீன மொழியைக் கொலை செய்ய ஆரம்பித்தாலே போதும். தன் எல்லையோர மாநிலம் ஒன்றைக்கூட தாரைவார்க்க சீனா தயாரகிவிடும்!

    ReplyDelete
  10. ரீடிஃபில் வந்த சமீபத்திய செய்தி படித்தீர்களா ?
    96 % சீன மக்கள் மன்மோகன் சிங் அருணாச்சலம் செல்வதை ஆட்சேபிக்கின்றனராம். இணைய சர்வே மூலம் தெரிந்திருக்கிறதாம்.

    கூகிளே அங்கே கம்யூனிஸ்டு பார்ட்டி போலிட் பீரோ சொல்வதைக் கேட்டுத்தான் நடக்குது...எனும் போது, இத்தகய சர்வேக்களின் நம்பகத்தன்மை என்னவாக இருக்கும் ? இதற்கெல்லாம் ஏன் ரீடிஃப் காரர்கள் முழுப்பக்கத்தை வீணடிக்கிறார்கள் ?

    ReplyDelete
  11. அருமையான ஐடியாக்கள். இருந்தாலும் இப்படியெல்லாம் செய்ய இந்தியா பயப்படத்தான் செய்யும்.

    ReplyDelete
  12. அட இந்த உளவியல் சமாச்சாரம் எல்லாம் நம்ம ஊரு மஞ்சள் துண்டு டெக்னிக்தான்...ஒலிக்கும் முரசுக்கு சீன பதிப்பு கொணர்ந்து, தலைவிக்கு பதிலாக வென் ஜியாபாவை திட்டச் சொன்னால் போதும் !!! !!!

    ReplyDelete
  13. ஏங்க, இந்த சாணக்கியரின் அர்தசாஸ்திரத்தை ஏன் தமிழில் கொண்டுவரக்கூடாது ?

    அதில் தான் எப்படி எதிரி நாடுகளை அடையாளம் காண்பது, யார் எதிரிகள், யார் நட்பு நாடுகள் என்பது பற்றியெல்லாம் விரிவாக அலசி எழுதியிருக்காரே.

    ஏதேதோ வாயில் நுழையாத மொழியில் எழுதுவதையெல்லாம் தமிழில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடும் நீங்கள் ஏன் இதைச் செய்யக்கூடாது ?

    ReplyDelete