Wednesday, January 05, 2011

கதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்

மேற்கு வங்க முதல்வர் காம்ரேட் ஜோதிபாசு மறைந்தவுடன் கொண்டுவந்த புத்தகம், என். ராமகிருஷ்ணன் எழுதிய அணையாத ஜோதி பாசு. ஆரம்பகால கம்யூனிஸ்டுகள் எல்லோருமே வசதியான வாழ்க்கை பின்னணியிலிருந்துதான் வந்துள்ளனர். பாசுவும் விதிவிலக்கல்ல. மேற்கு வங்கத்தை கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக ஆக்கியதில் பெரும் பங்கு பாசுவுடையது. பாசு தன் இறுதிக்காலம் வரை தரைமீதுதான் நடந்தார்; வானில் பறக்கவில்லை. அப்பழுக்கற்ற தன்மை, பணிவு ஆகியவை கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்களுக்கு எப்போதுமே பண்புகளாக இருந்துள்ளன.

பாசுவின் வாழ்க்கை வரலாறை எழுதிய என். ராமகிருஷ்ணன் கட்சிக்காரர். சி.பி.எம் அலுவலகத்திலேயே இருப்பவர். எனவே கிரிடிகலாக பாசுவின் வாழ்க்கையைப் பற்றி அலசி அராய்ந்து தவறுகள் இருந்தால் அவற்றைப் பட்டியலிட்டு... என்றெல்லாம் இருக்காது. பாசுவின் வாழ்க்கையும் அரசியலும் பணியும் ஒரு நேர்மறை... அய்யோ இலவசக் கொத்தனார் திட்டுவார்... நல்லவிதமான முறையில் கொடுக்கப்பட்டிருக்கும்.

மருதன் கம்யூனிஸ்ட் பார்ட்டியில் கார்டு வைத்திருக்கும் உறுப்பினர் அல்லன். ஆனாலும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்! சீன அதிபர் ஹூ ஜிந்தாவ் பற்றிய புத்தகம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வ வல்லமை பொருந்திய தலைவர் பற்றிய ஓர் ஓவியத்தை நமக்கு அளிக்கிறது. நம் ஊரில்தான் காலம் மாறும், காட்சிகள் மாறும், தலைவர் மாறுவர், கொள்கைகள் மாறும். சீனாவில் தலைவர்கள் அப்படியெல்லாம் எளிதில் மாறிவிடுவதில்லை. அவர்களாகப் போனால்தான் உண்டு.

உலகின் மிக முக்கியமான, அதி வல்லமை படைத்த தலைவர் என்ற பட்டம் அமெரிக்க அதிபரிடமிருந்து சீன அதிபரிடம் வரப்போகும் இந்தக் காலகட்டத்தில், அந்த இடத்தில் இருக்கும் மனிதரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

3 comments:

  1. //உலகின் மிக முக்கியமான, அதி வல்லமை படைத்த தலைவர் என்ற பட்டம் அமெரிக்க அதிபரிடமிருந்து சீன அதிபரிடம் வரப்போகும் இந்தக் காலகட்டத்தில், அந்த இடத்தில் இருக்கும் மனிதரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. //

    I agree sir

    ReplyDelete
  2. //மருதன் கம்யூனிஸ்ட் பார்ட்டியில் கார்டு வைத்திருக்கும் உறுப்பினர் அல்லன். ஆனாலும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்! //
    பேசாமல் கார்டு வாங்கி வைத்துக்கொள்ளவேண்டியது தானே ?

    குறைந்தபட்சம் அவர் நடுநிலையான ஆள் இல்லை என்றாவது பலருக்கு பட்டவர்த்தனமாக தெரிந்துவிடும். ஏன் இப்படி தூரத்தில் நின்றுகொண்டு கம்யூனிஸத்தின் மேல் அபிமானப்படவேண்டும் ?

    ReplyDelete
  3. என்னது மருதன் கம்யூனிஸ்ட் இல்லையா? அப்போ காந்தி இன்னும் உயிரோட தான் இருககாரா?

    ReplyDelete