ரோஸாவசந்தின் தூண்டுதலினால் http://www.ambedkar.org/ தளத்திற்குச் சென்று அங்கு தேடிப்பிடித்த IITs: Doing Manu Proud. academic terrorism, casteism go unnoticed என்னும் இந்தக் கட்டுரையைப் படித்தேன்.
உடனடியாக இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை செய்ய இயலாது. ஆனால் நிச்சயமாக சிந்தனையைத் தூண்டிய கட்டுரை. இத்தனை வருடங்களாகியும் தலித்துகளின் கல்வியறிவைப் பெருக்குவதில், அவர்களை மற்றவர்களுக்குச் சமமாக்குவதில் ஐஐடி எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஐஐடி சென்னையில் நடப்பதாக மற்ற சில குற்றங்களும், மேற்சொன்ன தளத்தின் சில செய்திகளில் கிடைத்தது. இவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.
உயர்கல்விக்கூடங்களில் தரம் என்பதே தேவையில்லை என்பது போல மேற்சொன்ன கட்டுரை சொல்லிச்செல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் 'தரம்' என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சரியாக நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. ஐஐடிக்கள், தனக்கென ஒரு குறிக்கோளாக இத்தனை தலித்துகள், பெண்களை கழகத்திற்குள் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் கொண்டுவர வேண்டும் என்று வைத்துக்கொண்டு அதைச் செயல்படுத்தவேண்டும். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்தான் இதனைக் கட்டாயமாக்கி, ஒவ்வொரு ஐஐடியும் இதன்படி நடக்கிறதா என்பதை மேற்பார்வை செய்யவேண்டும்.
அரசுசாரா தலித் நல அமைப்புகள் எந்த வகையில் ஐஐடி, பிற உயர்கல்விக்கூடங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் தகுதி வாய்ந்த தலித் மாணவர்கள் சேருமாறு, இந்த மாணவர்களுக்கு தீவிரமான பயிற்சிகளைத் தருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை.
[ஐஐடி பற்றிய என் முந்தைய பதிவு]
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
Dear Badri, Thank you very much for taking the issue seriously, as it is very easy to ignore what I wrote(and definitely nobody would blame you for that), and jump to something else. Your response definitely gives hope for a reasonable debate on this issue. I just wanted to hint there could be a different face to the picture we see(yes, we are in the same boat). I won't be having proper internet connection from next one hour. I may come back to this issue in September. Thanks again. anbuLLa rosavasanth
ReplyDeleteComment posted in Venkat's blog also:
ReplyDelete---
அன்புள்ள வெங்கட்டு அண்ணே!
இது எதிர் வினையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. :)
பத்ரியின் பதிவையும்,ரமனியையும் கேள்வியையும், அதன்பின் ரோசாவின் கேள்வியையும் படித்தவன் என்ற முறையிலும், ஐஐடியைப் பற்றி எந்த மண்ணும் தெரியாதவன் என்ற முறையிலும் இதை எழுதுகிறேன்.
1. பத்ரி ஆரம்பித்தது 'ஐஐடியன்கள்' புத்தகம் சம்பந்தமாக.
2. ரமணியின் கேள்வி, பத்ரி 'அவாள்' குறித்து எதும் எழுதுவாரா என்பது குறித்து? இதன் பின்னணி 'சோக்.கல்ச்சர் குழும விவாதம் போல' என்பது.
3. ரோசாவின் கேள்வி/குறுக்கீடுக்கு , பத்ரியின் பதில் 'ஐஐடி உருவாக்கும் அவாள் எல்லோரும் ஒரு மாதிரிதானே, அதில் வேற்றுமை பாராட்டவேண்டுமா?' என்பதாய் இருந்ததால், ஐஐடியிலும், ஐஐடி ஹாஸ்டலிலும் "தலித்து" களின் (மீண்டும் சொல்கிறேன் "தலித்துகளின்") நிலை சார்ந்த அல்லது நடத்தப்படும் விதம் குறித்து ஏதேனும் பத்ரி அறிவரா? என்பதய் இருந்தது.
4. நீங்கள் எழுதியது, ஐஐடியின் நிர்வாகம் அது திட்டமிட்ட வெற்றியை அடையாமல் தோல்வியே கணிட்ருப்பது என்பது பற்றி. இதற்கு ரோசாவின் கேள்விக்கும் ஏதுவுத சம்பந்தமும் இல்லை. இது வேற சப்ஜெக்ட். அது வேற சப்ஜெக்ட்.
5. எப்படி நீங்கள் 'இச்லருக்கு பாபர்பான் ஒழிக என்றால்தான்' என்று ஒரு சமூக அமைப்பில் நிலவுகிற
னிலையைக் கொண்டு மேலோட்டமாய் எழுதமுடியுமோ,அது போலவே ரோசா , தான் கேள்விப்ப்டதன் பேரில்,
ஐஐடியில் தலித்துகளின் நிளைமை கேவலாய் உள்ளது என்று கூட அவருக்கு எழுத சுதந்திரம் தருவீர்கள் என நம்புகிறேன். உண்மை நிலை நீங்கள் இருவர் சொல்வதற்கும் வேறக கூட இருக்கலாம். அதைக் கிளரிப்பார்த்தால் தான் தெரியவரும்.
6. உங்கள் கட்டுரைக்கு ரோசா காண்ட்ரிபூட் பண்ணவேண்டும் என்பது எந்த விததிலும் ரெலவண்டாக இல்லை.
அவர் எடுத்த களம் வேறு. நீங்கள் எடுத்துக்கொண்ட களம் வேறு. அப்படியே அவர் காண்டிரிபியூட் செய்தாலும் அதுவும் 'கேள்விப்பட்டதன் பேரில்" இருக்கும் என்பது நீங்கள் சொல்லும் படியே உண்மையாக இருக்கலாம்.
---
மனசாட்சி: அட ஐ ஐடி யப் பத்தி பேசுறாங்க , உனக்கு என்னடா வேலை இங்க கார்த்திக்கு?? :)
ஐ.ஐ.டி கள் குறித்த விவாதம்
ReplyDeletehttp://ravisrinivasblog.rediffblogs.com/
பொதுவான இட ஒதுக்கீடு பற்றிய என்னுடைய கருத்துகள் இங்கே.
ReplyDeletehttp://aruls.blogspot.com
உயர் கல்வி பற்றி நாளை எழுதலாம் என்று இருக்கிறேன்.
அருள்