Wednesday, July 21, 2004

இடியாப்பமும் சொதியும்

நேற்று லண்டனில் நண்பர்களுடன் இரவு உணவு யாழ்ப்பாணம் ஸ்டைலில். இடியாப்பம், சொதி, தேங்காய்த் துவையல், உருளைக்கிழங்கு கறி.

இடியாப்பம் என்றால் சென்னையில் சரவணபவனில் கிடைக்கும் வெளுத்த இடியாப்பங்கள் அல்ல. சற்றே சிவந்தது. சிவந்த அரிசியின் மாவுடன் சற்றே கோதுமை மாவும் கலந்ததாம். சொதி என்பது அவியல் போன்றது. ஆனால் நீர்க்க இருப்பது. தேங்காய்ப் பாலில் சில காய்கறிகளை வேக வைத்துச் செய்வது. தேங்காய்த் துவையல் - அது துவைத்த தேங்காய் அல்ல. பச்சையான (வறுக்காத) தேங்காய்த் துறுவலில் உப்பு, காரம் கலந்தது. கொழும்பில் பலமுறை இதைச் சாப்பிட்டிருக்கிறேன். சம்பல் என்று பெயரிட்டிருப்பார்கள்.

நான் இதுவரை இடியாப்பத்துடன் இனிக்கும் தேங்காய்ப்பால் அல்லது காரக்குருமா கலந்துதான் சாப்பிட்டுள்ளேன். நேற்றைய உணவு புதுமையாகவும் சுவையாகவும் இருந்தது.

சொதி கேரளாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற உணவு என்றார் ஒருவர். இடியாப்பத்தை வியாதிக்காரன் உணவென்று சொல்வார்கள் என்றார் இன்னொருவர். அரிசிச்சோறு உண்டால் பிடித்து அழுத்தும். இடியாப்பம் லேசானது என்றார் மற்றவர்.

ஓரிரு நாட்கள் சாப்பிடுவதற்குப் பரவாயில்லை. ஆனால் எனக்கு தினமும் அரிசிச்சோறுதான் வேண்டியிருக்கிறது. பழக்கத்திற்கு எவ்வளவு அடிமை நாம்?

பத்மநாப ஐயர், நித்தியானந்தம், புஷ்பராஜன், ராஜா, மாலி, பவஹரன் ஆகியோருடன் ஒரு மாலைப்பொழுது இனிமையாகக் கழிந்தது.

உணவுடன் நிறைய இலக்கிய விருந்தும் இருந்தது. அதைப்பற்றிப் பின்னர்.

14 comments:

  1. சொதி திருநெல்வேலி பக்கமும் பிரசித்தம். நல்ல உணவு!

    ReplyDelete
  2. அது சரி... எவ்வளவு இடியாப்பம் "ஸ்வாஹா" பண்ணிணீங்கன்னு சொல்லவே இல்லையே?

    ஐயோ... அப்படி முறைக்காதீங்க. சும்மா அப்படியே பொது அறிவு வளர்த்துக்கறதுக்காக கேட்டேன்.

    நான் உணவகங்களில் எல்லாம் இடியாப்பம் சாப்பிடுவதில்லை பொதுவாக. 10/12 ரூபாய்களுக்கு உணவகங்களில் தரும் 3 துண்டங்கள், நான் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளும் வெண்டைக்காய்/கத்திரிக்காய்க் கறி அளவுக்குக் கூட இருக்காது. வீட்ல? அது சாப்டுவேன், ஒரு ரெண்டு ஈடு முழுசா.

    சொதி.... ஆஹா, இன்னிக்கு இங்கயும் அவியல்தான். சரி, சரி. நான் இப்போ இரவு உணவு சாப்டணும். அவியல் என்னை "வா வா"ன்னு அன்போட அழைக்கிறது. டாட்டா!

    க்ருபா

    ReplyDelete
  3. பத்ரி,

    உங்கள் இலங்கைப் பயணத்தைக் குறித்தும், தெளிவத்தை ஜோசப் போன்ற படைப்பாளிகளுடனான உரையாடல்களையும் உங்கள் பதிவில் பகிர்ந்துகொள்ளுவதாகச் சொன்னீர்கள். அதற்கும், இந்த 'இலக்கிய விருந்தின்' சாரத்திற்குமாய் காத்திருக்கிறேன்.

    இந்த இழையிலேயே இன்னொன்றும் சொல்லவேண்டும்: இலங்கைத் தமிழின் evolution பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளது. கேரளத்தினின்றும் போனது சொதி மட்டுமா, அல்லது இனிமையானதொரு தமிழ் dialect உமா? மேலும், ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது, ஆங்கில உச்சரிப்பின் அருகாமையில் இருக்க, தமிழ் எழுத்துக்களைக் கற்பனை வளத்துடன் அவர்கள் உபயோகிக்கிறார்கள். (டொக்டர், டொர்மெற்றி, ஸ்ரேசன், ரியூசன், பொலிஸ், போஸ்ற் மாஸ்றர்...)

    பழமையான சொற்பிரயோகங்கள் நிறைந்த அழகான தமிழ்ச் சொல்லாளுமையை இலங்கை வட்டார வழக்கு என்று பொத்தாம் பொதுவாகத் தட்டிக் கழிக்காமல், அதிலிருக்கும் அழகம்சத்தை எடுத்து நாமும் கையாளலாமே!

    ReplyDelete
  4. அப்பா யாரப்பா அது இலங்கைத் தமிழ் கேரளத்திலிருந்து வந்தது என்று புரளி கிளப்புவது.அப்படியானால் தமிழ்நாட்டிலிருப்பவர்களை விட கேரளத்தில் அழகு தமிழைப் பேசுபவர்கள் அதிகம் என்கிறீர்களா?.பத்ரி அண்ணா சொதி தனியே தான் பெரும்பாலும் செய்யப்படும் அல்லது மீன் மரக்கறி ஏதாவது சேர்க்கப்படும்.சம்பல் சொதியுடன் உருளைக்கிழங்கு கறியும் சேர்த்து அரிசிமா இடியப்பம் சாப்பிட்டுவிட்டு வந்து சந்திப்பின் சுவையை எங்களுக்குத் தராமல் விட்டுவிட்டீர்களே.
    சிங்கப்பூர் வந்தால் எனக்கு அறிவியுங்கள் இன்னொரு சிறப்புணவு புட்டு செய்து தருகிறேன்.

    ReplyDelete
  5. பத்ரீ,
    இரண்டு விஷயங்களுக்காக் வயிறு எரிகிறது.
    1, இடியாப்பம் சாப்பிட்டதை அவசியம் இப்படி வலைப்பதிவு செய்யனுமா? :)
    2.இன்னொன்னு இப்படி இலங்கை ,லண்டன்னு ஊர்சுத்துறீங்களே அதுக்கு!!
    உங்களுக்கு அஸிஸ்டெண்ட் வேலை ஏதாவது காலியிருக்கா??

    ReplyDelete
  6. கார்த்திக்ராமாஸ்: நம்மள மாதிரி கூலிக்கு மாரடிக்காம சொந்தமா தொழில் பண்ணணும் :-)

    ReplyDelete
  7. சொதி என்று கூகிளில் தேடியபோது எனக்குக் கிடைத்த ஒரு சுட்டி இதோ: http://www.saivaneri.org/saiva-velalla-food-culture.htm

    ஆக, சொதி (பேர் ஒருமாதிரியாக இல்லை?) திருநெல்வேலி, இலங்கை, (கேரளா?) என எங்கும் கிடைக்கிறது. ஆனால் தமிழக உணவு விடுதிகளிலோ தஞ்சாவூர் பிராமண சமையலைத் தவிர வேறெதுவும் கிடைப்பது அபூர்வமாகவுள்ளதே? இதற்குக் காரணமென்ன?

    வியாழன் அன்று புட்டும், சொதியும் சாப்பிட்டேன். அதுவும் பிரமாதம். அதுவும் அவ்வளவாக சென்னை உணவு விடுதிகளில் கிடைப்பதுமில்லை.

    (கார்திக் - இதற்கெல்லாம் வயிறெரிந்தால் நியாயமா? எனக்கு அப்புறம் வயிறு வலிக்காதா? இடியாப்பம், சொதி, புட்டுக்குப் பரிகாரமாக நேற்று விமானத்தின் லுஃப்தான்ஸா கொடுத்த சோறையும், பின்னர் பாஸ்தாவையும் சாப்பிட வேண்டியிருந்தது!)

    ReplyDelete
  8. கண்ணன்: இலங்கைத் தமிழ்ப் பிரயோகங்கள் பற்றி சொன்னீர்கள். ஆங்கிலச் சத்தங்களுக்கு இணையாக 'ர', 'ற' சத்தங்களைப் பிரயோகிப்பதில் தமிழகத் தமிழுக்கும், இலங்கைத் தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள். இதுபற்றி நன்கறிந்த பெரியோர்கள்தான் எழுத வேண்டும்.

    மலையாளம் பேசுபவர்களுக்கும், ஈழத்தமிழில் கதைப்பவர்களுக்கும் த்வனி மிகவும் ஒன்றியிருப்பது போல எனக்கும் தோன்றும்.

    எங்கிருந்து எது கிளைத்தது என்று பேசப்போனால் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம். அம்மாதிரியான விவாதங்களில் ஈடுபடத் தேவையான அறிவு எனக்கில்லை.

    ReplyDelete
  9. karthik i have a solution for u, but cant post it here
    put a smiley here

    ReplyDelete
  10. லுஃப்தான்ஸாவில் பாஸ்டா-வா!? எதைக் கொடுத்தாலும் சலனமற்ற indifferent முகத்தோடு கொடுப்பார்களே :) அதற்காகவே சாப்பிட வேணுமே... நீங்க AVML சொல்லவில்லையா ??

    ReplyDelete
  11. Sodhi pakkam
    really good
    Manakkirathu!

    ReplyDelete
  12. Sodhi recipe kidaikkumnnu ninaichu aasaiyaa intha page vanthen. But recipe illai ! :(

    Raji

    ReplyDelete
  13. courtesy: http://shankari-rajesh.blogspot.com/2006/07/make-way-for-queen-sodhi.html

    Make way for the Queen - "Sodhi"


    This is one dish that is a specialty of a sect of Tirunvelvelli community..When a newly wed couple come home, guess what the dish is ..Sodhi, Inji Pachadi (ginger relish) and then the rest follow suit. Imagine the plight of the newly wed who have to eat this dish almost everytime someone invites them home :(.

    I think the dish attained this status coz we are primarily vegetarians and this dish calls for coconut milk which makes it very rich and was a tiresome dish to make. They had to grate a whole bunch of coconuts and then blend it for coconut milk. It was a huge affair at home and was very rare to see Sodhi made. And since the dish is kind of heavy, Sodhi is the only dish cooked. Believe me when I say Sodhi is an acquired taste, after our wedding Rajesh had Sodhi at my sister's place and he was not a big fan of it, but over time, he has come to love it.

    Now lets plunge into Sodhi.

    Ingredients

    Coconut milk (canned) - 1.5
    Ginger grated - 2 Tbsps ( If you want it spicy add a little more)
    Moong Dhal boiled with one pod of Garlic - 1/2 cup
    Lime/lemon juice - 1 tbsp
    Carrots - 1 cut in long slices
    Drum Stick - 1
    potato, - 1 cut in cubes
    Onion - 1 cut in large cubes
    Cabbage - 1/4 of a medium sized cabbaged cut in large pieces.

    Ground Mixture

    Grated coconut - 1 tbsp
    Cumin seeds - 1/4 tsp
    Green chilies - 2-3 (depends on how spicy you want it)


    Take the 1/2 can of coconut milk and dilute it in water to make one can and let the vegetables cook in the diluted coconut milk.
    In the meanwhile take the juice of the grated ginger and set it aside.
    Grind the ingredients of the ground mixture.
    When the vegetables are tender add the ground mixture and 1/2 can of coconut milk and let it cook for some time. (remember to cook all this in medium to medium low flame).
    Now add the cooked dhal ( mash the dhal and garlic well) and the remaining 1/2 can of coconut milk.
    Just before you switch off the stove add the ginger juice and cook for a minute and take it off the stove
    When Sodhi cools down add salt and lemon juice and temper with mustard and urad dhal

    Note: Try not to heat the sodhi and have it with piping hot rice. Sodhi is normally made for lunch as it is a very heavy dish, but it taste awesome the night it is cooked and goes well with plain idiyappam.


    Ginger Relish
    Ginger cut into tiny pieces - A handful
    Tamarind - Size of a lemon soaked in water and take the extract
    Coriander seeds - 1/4 tsp
    Red chilly - 4
    Grated Coconut - 4 tbsps

    In oil saute the ginger till it turns brown
    Fry the red chilly, Coriander seeds and coconut gratings separately
    Grind the ginger along with the items that were fried separately.
    Add the thick tamarind extract and salt and let it blend for a second.
    In a pan with 2 tbsps oil, temper mustard seeds, Uradh dhal and add the mixture and let it boil for a atleast an hour in medium low.
    Just before you take it off the stove, add a tbsp of jaggery.

    This relish is definitely made with Sodhi not only coz they pair up well, but because ginger is good for digestion.
    Lemme know if you make it and how you like it!

    ReplyDelete
  14. Actually Sodhi is the traditional recipe of Nellai (Tamilnadu)...

    ReplyDelete