Tuesday, July 13, 2004

The IITians

The IITians by Sandipan DebThe IITians, The Story of a Remarkable Indian Institution and How Its Alumni Are Reshaping the World, சந்தீபன் தேப், 2004, பெங்குவின் இந்தியா, பக்: 392, விலை ரூ. 425

ஐஐடி என்றவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நீங்கள் ஐஐடியில் படிக்காதவராக இருந்தால், இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருந்தால், "பயங்கர மூளையுள்ள பையன்கள் (ஆம், பெண்கள் குறைவுதான்) படிக்கும் இடம். படித்தவுடன் அமெரிக்கா போய்விடுவார்கள். சில வருடங்களில் வாயில் நுனிநாக்கு ஆங்கிலத்துடன் இந்தியா வந்து இந்த நாட்டில் என்ன குறையென்று எடுத்துப் பேசிவிட்டு திரும்பியும் அமெரிக்கா போய்விடுவார்கள். அப்படியில்லாமல் இந்தியாவிலேயே தங்கிவிடுபவர்கள், எங்காவது ஒரு ஐஐஎம்மில் படித்துவிட்டு ஹிந்துஸ்தான் லீவர் போய் சீப்பு, சோப்பு, பாசிமணி என்று ஏதாவது ஒன்றை FMCG என்ற பெயரில் கவர்ச்சியான பாக்கெட்டில் போட்டு விற்றுக்கொண்டிருப்பார்கள். பத்து விழுக்காட்டிற்கும் கீழே உள்ளவர்கள்தான் படித்த எஞ்சினியரிங் படிப்பு சம்பந்தமாக இந்தியாவில் ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள்." என்று சொல்வீர்கள், இல்லையா?

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாக இருந்தாலோ, சிலிகான் வேலி வென்ச்சர் கேபிடலிஸ்டாக இருந்தாலோ உங்கள் பதில் வேறாக இருக்கும்.

சந்தீபன் தேப் 14 மாதங்கள் செலவு செய்து, பலரைப் பேட்டி கண்டு ஐஐடியிலிருந்து உருவானவர்கள் எவ்வாறு உலகை மாற்றியிருக்கிறார்கள், மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். சந்தீபன் தேப் அவுட்லுக் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர். ஐஐடி கரக்பூரில் பி.டெக், ஐஐஎம் கொல்கொத்தாவில் PGDM படித்துவிட்டு, சிலகாலம் விளம்பர நிறுவனங்களில் வேலைசெய்து, பின்னர் இதழியல் துறைக்கு வந்தவர்.

புத்தகத்தில் ஐஐடியின் வரலாறு, தொடக்க காலத்தில் ஐஐடிகளுக்குக் கிடைத்த உயர்தர ஆசிரியர்கள், அவர்களுக்கு இடையூறு செய்யாத அரசு, படிக்க வந்த பிரகாசமான மாணவர்கள், அவர்கள் பிற்காலத்தில் சாதித்துக் கொண்டிருப்பது என்று புகழ்ச்சியாக நிறைய உண்டு. ஆங்காங்கே, மாணவர்கள் எப்படி IIT JEE நுழைவுத்தேர்வுக்காக பைத்தியமாக அலைந்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கிறார்கள், எப்படி சில ஊர்களில் நுழைவுத் தேர்வில் ஜெயிக்க பள்ளிக்கூடத்தை மறந்துவிட்டு பயிற்சி மையங்களிலேயே முழு வாழ்நாளை மாணவர்கள் கழிக்கின்றனர், நுழைவுத் தேர்வில் வெல்லமுடியாத மாணவர்களின் நிலை என்று குறைகளைச் சுட்டிக் காண்பிக்கிறார். உள்ளே நுழையும் மாணவர்கள் பலரும் எப்படி படிப்பு, படிப்பு (நுழைவுத் தேர்வு, நுழைவுத் தேர்வு) என்று காலத்தைக் கழித்து ஒற்றைப் பரிமாணமுடையவர்களாய், சமூக வாழ்க்கைக்குத் தேவையான திறமையற்றவர்களாய் ஆகிவிடுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.

மற்றபடி புத்தகம் ஆங்காங்கே சந்தீபனின் வாழ்க்கை வரலாறாகவும் செல்கிறது (அவரது வாழ்க்கைத் துணைவியைப் - அவ்வப்போது தப்பித்தவறி ஐஐடியில் படிக்க வரும் பெண்களில் ஒருவர் - பார்த்தது, ஐஐடி கலாச்சாரப் போட்டிகளில் பங்கேற்றது ஆகிய தகவல்கள்).

இப்பொழுதுள்ள ஐஐடி நிர்வாகத்தின் முதிர்ச்சியற்ற சில சட்டதிட்டங்களை (ஒரு பையன், பெண்ணை சைக்கிளின்/பைக்கின் பின்னால் உட்கார வைத்து அழைத்துச் செல்லக்கூடாது, ஹாஸ்டல்களில் இரவு பத்து மணிக்கு மேல் சத்தம் போடக்கூடாது!) சாடுகிறார். ஐஐடிகள் பொறியியல் கல்விக்கூடங்களா, அல்லது பொதுக்கல்விக் கூடங்களா என்ற கேள்வியை எழுப்புகிறார். (படித்து வெளியே வந்த பலரும் பிரகாசிப்பது பொறியியல் துறைகளில் அல்ல, பிற துறைகளில் என்பதால்.)

எனக்கு சந்தீபனின் சுவாரசியமான நடை பிடித்திருந்தது. ஐஐடியின் உள்விஷயங்களைப் பற்றித் தெரியாதவர்கள் புத்தகத்தை எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை. நான் ஐஐடி சென்னையில் படித்ததால் என்னால் இந்தப் புத்தகத்தை ரசித்து வாசிக்க முடிந்தது. எனக்கும் ஐஐடி கல்வியைப் பற்றிப் பல கேள்விகள் உண்டு.

நான் ஐஐடியில் சேரும் முன்னர் நாகப்பட்டிணத்தில் தமிழ்நாடு மாநிலக் கல்வித்துறைப் படிப்பில் 12வது வரை படித்திருந்தேன். ஐஐடி என்றால் என்னவென்றே தெரியாது. மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல இதுவும் ஒரு பொறியியல் கல்லூரி என்று நினைத்திருந்தேன். நுழைவுத்தேர்வுக்கென எந்த பயிற்சி மையத்திலும் பயிற்சி எடுக்கவில்லை. தபாலில் ஐஐடியை கிராக் செய்யக் கல்வி வழங்கும் அகர்வால், பிரில்லியண்ட் எதிலும் சேரவில்லை. எப்படியோ நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்து மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் சேர்ந்தேன். சந்தீபன் சொல்வதைப் போல வகுப்பில் கற்றதைவிட ஹாஸ்டலில் கற்றதுதான் அதிகம். தன்னம்பிக்கை, உலக ஞானம், உழைப்பில் ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், கடும் போட்டிகளிலும் வென்று முதலாவதாக வரும் திறன், எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு கண்டுபிடிக்கும் விடாமுயற்சி என்று பலதும் ஐஐடியில் கற்றதுதான். இவற்றையெல்லாம் வகுப்பில் பாடமாகக் கற்றுக் கொண்டிருக்கமுடியாது. ஆனால் எப்படியோ, ஹாஸ்டல் வாழ்க்கையும், மற்ற மாணவர்களின் சகவாசமும் தான் இந்தத் திறமைகளையெல்லாம் வளர்த்துக்கொள்ளக் காரணம் என்று தோன்றுகிறது.

வகுப்பில் நிச்சயமாக ஒழுங்கான கல்வி கிடைத்தது. ஆனால் ஓரிருவர் தவிர எந்த ஆசிரியரும் என் நினைவில் நிற்கும் அளவிற்கு இல்லை. [மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் பேராசிரியர்கள் பரமேஸ்வரன், வேலுஸ்வாமி போன்றோரின் பெயர்கள் மட்டும்தான் என் ஞாபகத்தில் நிற்கின்றன.] அதற்கு மாற்றாக கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவருமே மிக அதிகத் தரத்திலும், முழுவதுமாக நினைவில் நிற்பவர்களுமாக இருந்தார்கள். தேடித்தேடிப் போய் அவர்களிடம் பாடம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அளவில் இருந்தனர். ஐஐடி ஆசிரியர்கள் தரம் எக்கச்சக்கமாக உயர வேண்டும்.

ஐஐடியினால் இந்தியாவிற்கு நன்மையா? நன்மையென்றுதான் தோன்றுகிறது. இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் ஒருசில பிராண்டுகளில் ஐஐடியும் ஒன்று. எத்தனையோ குறைகள் இருந்தாலும் ஐஐடி நுழைவுத்தேர்வு பெரும்பான்மையாக தகுதிவாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறது. அதைத் தொடர்ந்து ஐஐடியின் பாடத்திட்டங்களும், தேர்வு முறைகளும் பெரும்பாலும் ஏமாற்ற முடியாத, திறமையை சரியாகப் பரிசோதிக்கக் கூடிய மாதிரிதான் உள்ளது. என் வகுப்பில் காப்பியடித்தே தேர்வில் பாஸான பையன்களை எனக்குத் தெரியும். அவர்கள் சாதாரணமாக வகுப்பின் கீழேதான் இருந்தார்கள். [அப்படியிருந்தவர்களும் பின்னர் ஐஐஎம்மிலோ, அல்லது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ சிறப்பாகப் படித்து முடித்து, இன்று தம் துறையில் முன்னணியிலும் உள்ளனர்.]

ஐஐடிக்களை அப்படியே பொறியியல் கல்லூரிகளாக வைத்திருக்காமல், பொதுக்கல்விக் கூடங்களாக, அமெரிக்க முறைப்படியான பல்கலைக்கழகங்களாக மாற்றலாம். அப்படிச் செய்யும்போது ஹாஸ்டல் வாழ்க்கையை முக்கியமாக அப்படியே பாதுகாக்க வேண்டும். ஒருசில மாறுதல்களுடன் மூன்று வகையான நுழைவுத்தேர்வுகளை வைக்கலாம் - ஒன்று: இயற்பியல், வேதியியல், கணிதம்; இரண்டாவது: ஆங்கிலம், பொருளாதாரம் (அல்லது) பொது அறிவு, கணிதம் (அல்லது) சமூகவியல்; மூன்றாவது உயிரியல், பொது அறிவு. முதலாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பொறியியல், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற படிப்புகளுக்கும், இரண்டாவதில் தேர்வு பெறுபவர்கள் பொருளாதாரம், வரலாறு, சமூகவியல் போன்ற படிப்புகளுக்கும், மூன்றாவது உயிரியல், ஜெனிடிக்ஸ், பயோடெக்னாலஜி போன்ற பாடங்களைப் படிக்கவும் சரியாக இருக்கும். Indian Institute of Technology என்பதிலிருந்து Indian Institute of Learning என்று மாற்றிவிடலாம். [எது என்னவோ, கேம்பஸில் கொஞ்சம் பெண்கள் நடமாட்டமாவது அதிகம் இருக்கும்!]

27 comments:

 1. 1. சமீபத்தில் ஐஐடி காரர் ஒருத்தர் எழுதிய five point someone என்ற ஐஐடி காம்பஸ் வாழ்க்கை பற்றிய புத்தகம் (fiction), நாளிதழ்களில் ( வணிக நாளிதழ்கள் உட்பட) பரவலாகப் பேசப்பட்டது. அதை வாசித்தீர்களா?

  2. ஐஐடி என்கிற பிராண்ட் ஏற்படுத்தி இருக்கும் இமேஜ் ரொம்ப உயர்வானது. அந்த பிராண்டை, மற்ற சமூக, அறிவியல், பொருளாதார, வரலாறு போன்ற துறைகளுக்கும் நீட்டிப்பது விவாதத்துக்குரிய விஷயம். ஐஐடி alumni க்களிடம் இருந்துதான் முதல் எதிர்ப்புக்குரல் வரும் . ( நீங்கள் நீங்கலாக :-)). ஐஐடி, சென்னையில், மேலாண்மை மேற்படிப்புக்காக school of management ( IIT-SOM) என்ற ஒன்று , ஒரு தனி நிறுவனமாகவே நடந்து வருகிறது. ஆனால், மற்ற முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களான, IIM, JBIMS, XLRI, ISB, KJ Somaiya, LIBA, BIM, ஆகிய கல்வி நிறுவனங்களுடன் ஓப்பிட்டு நோக்கினால், IIT-SOM எங்கே நிற்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஐஐடியினால் இந்தியாவுக்கு உலகளவில் நிச்சயமாய்ப் பெருமைதான். அந்தப் பெருமைதான், மிகப்பெரிய சுமையாக இருந்து கொண்டு, புதிய மாடல்களை பரிசோதித்துப் பார்க்கத் தடையாக இருக்கிறது.

  3. Arts & Humanities எல்லாம் வேண்டாம். முதலில் basic sciences இல் கவனம் செலுத்தலாம். என் கல்லூரிக்காலங்களில், ஐஐடியில், கணிதம், அறிவியல், வேதியியல் போன்ற துறைகளில் மட்டும் தான் பட்ட மேற்படிப்பு படிக்க முடியும். தற்போது, கணிப்பொறி, மின்னணுவியல் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது போதாது. தற்போது, ஒவ்வொரு ஸ்பெஷல் படிப்புக்கும், ஒரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சித்துறை உருவாக்கப்பட்டு, அவை பட்டங்களை வழங்குகின்றன. உதாரணமாக, மின்வேதிப்பொறியியl படிக்க காரைக்குடியில் இருக்கும் Central Electro Chemical Research Institute, தோல் தொழில்நுட்பம் படிக்க , சென்னையில் இருக்கும் Central Leather Research Institute, ப்ளாஸ்டிக் தொழில்நுட்பம் பயில, சென்னையில் இருக்கும் CIPET, உலைக்களன் பொறியியல் (Foundry Engineering) பற்றி படிக்க, வேலூரில் இருக்கும் NTTF, பாதுகாப்பு மற்றும் தீயணைப்புப் பொறியியல் படிக்க, நாக்பூரில் இருக்கும் National Institute of Fire Engineering, சுரங்கவியல் பற்றி படிக்க, Indian School of Mines, Dhanbad , புள்ளியியல் துறைக்கு கொல்கத்தாவில் இருக்கும் Indian Statistcal Institute , வேதிப்பொறியலுக்கு Indian Institute Of Chemical Technology. Hyderabad, உணவுத் தொழில்நுட்பத்துக்கு Central Food Technological Research Institute,Mysore, பெட்ரோலியம் பற்றிய படிப்புக்கு, Indian Institute Of Petroleum, Dehradun, வடிவமைப்பு பற்றி படிக்க National Institute Of Design, அகமதாபாத்,
  பொருளாதாரத்துக்கு Madras School opf Economics, Chennai, கவின் கலைகளுக்கு என்று அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை, என்று மேம்பாட்டுக்குத் தேவையான பலதுறைகள் அனைத்தும் தனித்தனியாக இயங்குகின்றன. ஆனால் அவை அனைத்தும் , தன்னளவிலே ஒரு centre of excellence ஆக விளங்குகின்றன. நான் மேலே சொன்ன அனைத்து நிறுவனங்களும், அந்த அந்த துறைகளின் ஆராய்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றாலும், அவை, மிகக் குறைவான அளவில் மாணவர்களைச் சேர்த்து, பட்டங்கள். பட்டயங்கள் வழங்குகின்றன. முன்னணி கல்வி நிறுவனங்கள் போலவே கடுமையான தேர்வுகளுக்குப் பிறகு தேர்ந்தடுக்கப்பட்டு, குறிப்பிட்ட துறைகளுக்கு என்றே தயாரிக்கப்படுகிற மாணவர்கள் இவர்கள். இது போன்ற நிறுவனங்களுக்கு ஐஐடி, தன் brand ஐ extend செய்யலாம். முதல் படியாக. அதற்குப் பிறகு, மற்ற துறைகளில் கவனம் செலுத்தலாம், ஐஐடிக்கு விருப்பம் இருந்தால்.

  4. ஐஐடி போன்ற முன்னணி கல்விநிறுவனங்களுக்கும் , தொழில்துறைக்கும் இடையிலான உறவு எப்படி என்று எனக்குத் தெரியாது. ஊடாட்டம் ஏற்கனவே இருக்கிறது என்றாலும், அவை இன்னும் அதிகமாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்வேன். உதாரணத்துக்கு, இன்றைக்கு மின்சாரத்துறையில் தனியார் நுழைந்தாயிற்று. அணுமின்நிலையங்கள் கூட தனியாருக்கு திறந்து விடப்பட்டு விட்டன. தனியார் துறையில் ஏகப்பட மின்நிலையங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஐந்தாண்டுகள் கழித்து, அனல்/நீர்/அணு/சூரியஒளி/காற்று மின்நிலையங்கள் நிறைய உருவாகிவிடும். அவற்றுக்குத் நம் பொறியியல் கல்வி நிறுவனங்கள் தான் human resource தீனி போட வேண்டும். இதைப் பற்றி ஏதாவது ஒரு பாலிசி ஏற்பட்டு இருக்கிறது என்று செய்தி படித்திருக்கிறோமா? அதை விடுங்கள். காப்பீட்டுத் துறை, சமீபத்தில் கண்ட வளர்ச்சி, நமக்குத் தெரியும். ஆனால், actuarial science க்கு என்று பட்ட மேற்படிப்பு எத்தனை நிறுவனங்களில் இருக்கிறது?எனக்கு தெரிந்து, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பிஜிடிப்ளோமா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்னும் ஒன்றிரண்டு இடத்தில் இருக்கலாம். ஆனால், காப்பீட்டுத் துறையின் அதிகரித்து வரும் வளர்ச்சி விகிதத்துக்கு இவை மட்டும் போதுமா? there should be more interaction between the institutes and industry. சென்னைப் பல்கலைக்கழகம் புரட்சி எல்லாம் செய்ய முடியாது. செனட்டில் இருக்கும் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் சொந்த லாபங்களுக்காக இதை அனுமதிக்க மாட்டார்கள். ஒரே பாலிடிக்ஸ். ஆனால் ஐஐடி போன்ற அட்டானமி அந்தஸ்து உள்ள நிறுவனங்கள், புத்திசாலியான பொறியியலாளர்களை உருவாக்குவதன் கூடவே , வேறு எந்த வகையில் சமூகத்துக்கு பயனளிக்க முடியும் என்ற திசையில் சிந்திக்கலாம்.

  5. இணைய ஆரம்ப காலங்களில், நடந்த ஐஐடி/ஆர்.ஈ.சி சண்டை வெகு பிரபலம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அதில் பங்கு பெற்றிருக்கிறீர்களா? இணையத்தில் அது கிடைக்குமா?

  ReplyDelete
 2. [எது என்னவோ, கேம்பஸில் கொஞ்சம் பெண்கள் நடமாட்டமாவது அதிகம் இருக்கும்!]

  ரொம்ப வறண்ட பிரதேசமா இருக்கும் போல இருக்கே :-))

  ReplyDelete
 3. அடடே...ஸ்டேட் போர்டு படித்துவிட்டு, எத்ந்ப் பயிற்சியும் எடுக்காமல் ஐ.ஐ.டி சேர்ந்தவரா நீங்கள்..?? சரியான பஸ் மண்டை போலிருக்கே..:-).

  ரொம்ப சந்தோஷம்.

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. ஐஐடியின் இன்னொரு முகம் பற்றி முன்னாலே soc.culture.tamil தொடக்கம் அடிபிடி நடந்ததே. பேரா. இந்திரசேனன் என்பவரைப் பற்றிப் பேசி......... "சென்னை ஐஐடியிலே அவாள் ஆதிக்கம்" என்றதுவரை. வழக்கம்போல தமிழ்க்குழு விவாதங்கள் வந்து ஒருங்கும் ஒரு முனைதான் என்றாலுங்கூட, அதுபற்றி ஏதேனும் சொல்வீர்களா? சொல்லியிருக்கிறாரா?

  -/peyarili.

  ReplyDelete
 6. முன்பு பிபி வலைப்பூ ஆசிரியராக இருந்த போது அவர் தம்மை ஒரு ஐ.ஐ.டி மாணவர் என்று குறிப்பிட்டதும், ஐ.ஐ.டி பற்றிச் சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டேன். அவர் மறுத்துவிட்டார்.

  நீங்கள் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். நன்றி. பயிற்சி வகுப்புகளில் சேராமலேயே ஐ.ஐ.டி யில் தேர்ச்சி பெற்றுப் பயின்ற தங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.

  மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் இருப்பது போல ஆசிரியர்களையும் தேர்வு செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கக் கூடும். அரசியல் செல்வாக்கால், செல்லாக் காசுகள் எல்லாத் துறைகளிலும் நுழைந்து கோலோச்சுவது போல இங்கும் இருக்குமோ என்னவோ?

  அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் ஊதியம், ஆசிரியர்களிடம் உயர்ந்தபட்சத் திறன் வெளிப்பாட்டுக்குக் காரணமாகிறது. இங்கே போதிய வருமானமின்மையால் (அர்ப்பணிப்பு மனப்பாங்குள்ள சில ஆசிரியர்கள் தவிர மற்றவர்கள்) ஆசிரியப் பணியில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகிறது..ஐ.ஐ.டி பற்றி மட்டும் சொல்லவில்லை. பொதுவாகவே கல்வித் துறை இப்படித்தான் இங்கு உள்ளது.

  ReplyDelete
 7. பிரகாஷ்: நிறையக் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். அதுபற்றி விவரமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

  1. Five points someone - கைவசம் இருக்கிறது. இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. படித்ததும் சொல்கிறேன். அது சிறிது உண்மையும், மற்றதெல்லாம் புனைவும் சேர்ந்த புனைகதை என்று மட்டும் தெரியும்.

  2. ஐஐடி மாணவர்கள் யாரும் சோடை போவதில்லை. ஆனால் ஐஐடியில் நுழைந்த அனைவரும் உலகையே கலக்க வேண்டும் என்பதுமில்லை. ஐஐடி நிறைகள்: (1) Pre-selection of quality students (2) இந்தியாவிலிருந்து பல பாகங்களில் வரும் அனைவரையும் ஒரே கேம்பஸில், ஒவ்வொரு ஹாஸ்டலிலும் தங்க வைத்து, அதன்மூலம் ஒரு மைக்ரோ சமூகத்தை உருவாக்கி, அதனால் வாழ்க்கைக் கல்வியை வளம்பெறச் செய்வது. (3) கட்டுப்பாடுகள் குறைந்த இடம். ஊழல்கள் குறைந்த அல்லது இல்லாத இடம். (4) கல்வியின் மீது பற்றை உண்டாக்குமிடம். (5) வசதிகள் அதிகமான இடம். அங்குள்ள நூலகங்களைப் போலவோ, சோதனைச்சாலைகளைப் போலவோ வேறெங்கும் கிடையாது.

  குறைகள்: (1) ஆசிரியர் தரம் அதிகமாக உயர வேண்டும். (2) ஐஐடி-தொழிற்சாலைகள் உறவு சிறப்பாக இல்லை. அதனால் ரிசர்ச் குறைவுதான். (3) உருப்போடுவதே உயர ஒரே வழி என்று பலர் நினைக்கின்றனர். (4) தொழில்முனைவோர்களாகவோ, தலைவர்களாகவோ மாணவர்களை மாற்ற ஆசிரியர்கள் முயல்வதில்லை. [அஷோக் ஜுன்ஜுன்வாலா போன்றவர்கள் தவிர்த்து.]

  ஐஐடியின் ஆதார விஷயங்களை மனதில் கொண்டு, குறைகளைக் களைந்து, அதனை மற்ற இளங்கலைப் படிப்புகளுக்கு நீட்டித்தல் நல்லது என்று நான் நினைக்கிறேன். அதாவது இந்தியா முழுமையிலிருந்தும் திறமையான மாணவர்களை ஒன்றாகக் கொண்டு வந்து சிறு குழுக்களாக ஹாஸ்டலில் சேர்ந்து வசிக்க வைத்து, கல்வியில் நாட்டத்துடன் படிக்க வைப்பது. மிகச்சிறந்த ஆசிரியர்களைத் தேடிக்கொண்டுவந்து கற்பிக்க வைப்பது. முதுகலை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அந்த மாற்றங்களையும் செய்ய வேண்டும். இதுபற்றியும் சந்தீபனின் புத்தகம் தொட்டுச் செல்கிறது.

  மற்றபடி பிரகாஷ், நீங்கள் குறிப்பிட்ட சில MBA படிப்பு கற்பிக்கும் கல்விச்சாலைகளை ஐஐடியின் MBAவுடன் என்னால் ஒப்பிட முடியாது. என்னிடம் தகுந்த தகவல்கள் இல்லை.

  3. பிரகாஷ்: நீங்கள் சொல்வது போல ஒவ்வொரு ஸ்பெஷல் படிப்புக்கும் ஒரு தனி நிலையம் இருக்கிறது. அவற்றுக்கு ஐஐடி பிராண்ட் தேவையில்லை என்பது என் கருத்து. பிராண்ட் என்றால் வெறும் பெயர் மட்டுமில்லை. சும்மா பெயரைக் கொடுப்பதில் என்ன பிரயோசனம்? ஒரு கல்விமுறை, மாணவர்கள் வாழ்க்கை முறையை அப்படியே புகுத்த வேண்டும்.

  4. ஐஐடி/ஆர்.இ.சி சண்டை - எனக்கு ஞாபகம் இல்லை. இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏதேனும் ஒரு கல்வி நிலையம் - ஐஐடியோ, ஆர்.இ.சியோ - உருப்படியாக இயங்கினால் அது எதனால் என்று அறிந்து அதனை replicate செய்வதுதான் சரியானதாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை pan-Indian உயர் கல்வி நிலையங்கள் அதிகம் தேவை. ஆர்.இ.சிக்கள் பொதுவாக 80% அம்மாநிலத்திற்கும், 20% வெளி மாநிலங்களுக்கும் என்று நினைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும். இதை 50%-50% என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். வெளி மாநிலத்தாரோடு சேர்ந்து பழகும் வாய்ப்பே ஒருமைப்பாட்டிற்கு உதவுவதோடு, பிறரைப் புரிந்துகொள்ளவும், இந்தியா முழுமையிலும் உள்ள பிரச்சனைகளை அறிந்துகொள்ளவும் உதவும். பின்னர் இந்தப் பிரச்சனைகளைக் களையத் தூண்டும். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சியில் படித்த தமிழர்கள் இதனை உணர்வார்கள்.

  ReplyDelete
 8. மூக்கு சுந்தர்: பஸ் மண்டையாக இருக்கலாம், தெரியவில்லை. கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். இருந்திருக்கிறது. அவ்வளவே. நுழைவுத் தேர்வுக்கு அகர்வால், பிரில்லியண்ட் வழியாகப் பயிற்சி எடுத்துக்கொள்ளவில்லையே தவிர, பழைய கேள்வித்தாள்களை வைத்தும், கிடைத்த சில புத்தகங்களை வைத்தும் நிறையப் பயிற்சி எடுத்தேன். இந்த விஷயத்தை எழுதியதன் காரணம் - பெருமைக்காக இல்லை. என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அனைத்திலும் கிட்டத்தட்ட 60% ஐஐடி ஹாஸ்டலில் வசிக்கும்போது கற்றுக்கொண்டது என்பதைச் சொல்லவே. ஆங்கிலத்தில் பேசக்கற்றுக்கொண்டதும் இதில் அடக்கம்.

  ReplyDelete
 9. ரமணிதரன்: soc.culture.tamilஇல் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தவன் என்றாலும் நீங்கள் சொல்லும் சண்டை அவ்வளவாக எனக்கு நினைவில் இல்லை. பேராசிரியர் இந்திரேசன் பற்றி இந்தப் புத்தகத்தில் நிறைய எழுதப்பட்டுள்ளது. எதுவும் குறையாக இல்லை. நீங்கள் சொல்லும் 'இன்னொரு முகம்' என்ன? 'அவாள்' ஆதிக்கம் அதிகமாக இருந்தது/இருக்கிறது என்பதா?

  நான் சேர்ந்தபோது என் வகுப்பில் (என்னையும் சேர்த்து) 'அவாள்'தான் அதிகம்.

  சந்தீபன் (இவர்கூட பெங்காளி 'அவாள்' ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்), அஷோக் ஜுன்ஜுன்வாலாவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சுவையான மேற்கோள் காட்டுகிறார். அஷோக்கிற்கு ஐஐடி கான்பூரில் இடம் கிடைத்தபோது தன் தாத்தாவைச் சந்திக்கப் போயிருக்கிறார். அப்பொழுது தாத்தா 'நீ அந்த பார்ப்பனர் கல்விக்கூடத்திற்குப் போகப்போகிறாயா என்ன?' என்று கேட்டாராம். அஷோக்கின் குடும்பம் வியாபாரம் செய்யும் குடும்பம். இங்கு Brahmin Institution என்பது exclusivity, focus on learning over trading or hard work ஆகியவற்றை வைத்து சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒருவகையில் பார்க்கும்போது உயர்கல்விக்கூடங்கள் எல்லாமே 'அவாள்'களைத்தான் உருவாக்குகிறது, இல்லையா? அருள் முதல் வெங்கட் வரை, மெய்யப்பன் முதல் சுந்தரவடிவேல் வரை, தங்கமணி முதல் ரமணிதரன் வரை, அருண் முதல் பத்ரி வரை அனைவரும் இந்த வகையில் 'அவாள்கள்'தானே? பிறவி 'அவாள்'களை விட, இந்தப் படிப்பின் வழியே உருவான புதிய 'அவாள்'களாவது ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க/உடைக்க முயற்சிக்கட்டும்!

  அஷோக் ஜுன்ஜுன்வாலா, மற்றோர் இடத்தில், இப்பொழுது தன் வேலை தன் மாணவர்களை தொழில்முனைவோராக்குவது, அம்மாணவர்களை வைத்து பல நிறுவனங்களை உருவாக்கி, தொழில்நுட்பங்கள், மென்பொருள், வன்பொருள் உற்பத்தி, வியாபாரம் செய்வது என்றும், அந்த வகையில் தான் இப்பொழுது தன் குடும்பம் விரும்பியமாதிரி ஒரு வியாபாரியாகத்தான் இருக்கிறேன் என்றும் சொல்கிறார்!

  ReplyDelete
 10. ஆச்சிமகன்: ஐஐடி பற்றிய என் அனுபவங்களை அவ்வப்போது எழுத முயல்கிறேன். அதனால் ஏதேனும் பிறர் அறிந்துகொள்ள முடியுமென்றால், அதைப்பற்றி எழுதுவதில் எனக்குத் தயக்கமேதுமில்லை.

  "மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் இருப்பது போல ஆசிரியர்களையும் தேர்வு செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கக் கூடும். அரசியல் செல்வாக்கால், செல்லாக் காசுகள் எல்லாத் துறைகளிலும் நுழைந்து கோலோச்சுவது போல இங்கும் இருக்குமோ என்னவோ?" என்று சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் செல்வாக்கால், செல்லாக்காசுகள் நுழைந்து விட்டன என்று நான் சொல்லமாட்டேன். முதல்தர ஆசிரியர்கள் இருந்தால், அவர்கள் முதல்தரமானவர்களையே உள்ளே கொண்டுவருவார்கள். எப்பொழுது இரண்டாம்தரமானவர்கள் உள்ளே நுழைகிறார்களோ, அப்பொழுதே, அவர்கள் மூன்றாம் தரத்தை உள்ளே கொண்டுவரவே விரும்புவார்கள். ஐஐடியின் தொடக்க காலங்களில் ஆசிரியராக வந்தவர்கள் அனைவரும் மிகச் சிறப்பான தகுதியை உடையவர்கள்தான். இடைக்காலத்தில், திறமையுள்ள, தகுதியுள்ள அனைவருமே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பாடம் சொல்லிகொடுக்க/ ஆராய்ச்சிகள் நடத்தச் சென்று விட்டனர். இதனால் தரம் சற்றுக் குறைந்தவர்கள்தான் இங்கு உள்ளே நுழைந்தனர். மேலும் ஐஐடி இளங்கலைப் படிப்பு சிறப்பாக இருக்கக் காரணம், அதில் படிக்கும் மாணவர்களின் திறனால். ஆனால் முதுகலைப் படிப்பு - இங்குதான் ஆராய்ச்சி அதிகம் - என்று பார்க்கும்போது முன்னிலை மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால் தரம் குறையத்தான் செய்கிறது. வெளிநாடுகளில் இப்பொழுது ஆராய்ச்சியில், படிப்பு கற்றுக்கொடுத்தலில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்குத் திரும்பி வரவேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்க ஐஐடி, ஐ.ஐ.எஸ்.சி போன்ற கல்விக்கூடங்களின் இயக்குனர்கள் முயலவேண்டும். அதற்காக, வேண்டிய விதிகளை மாற்றவும், சம்பளத்தை உயர்த்தவும், பணியிடம் மகிழ்ச்சிதரக் கூடிய மாதிரி இருக்கவும் செய்ய வேண்டும். வெங்கட் தன் பதிவில் இந்திய ஆராய்ச்சித்துறை நிறுவனங்களில் வேலை செய்வது எவ்வளவு கடினம் என்று எழுதியுள்ளார். இப்படியெல்லாம் இருக்கும் நிலைமை மாறினால் பல புத்திசாலிகள், திறமை மிக்கவர்கள் இந்திய உயர்கல்வித் துறையில் வேலை செய்ய வரலாம். அதுதான் நாம் எதிர்பார்க்கக்கூடியது.

  ReplyDelete
 11. ÁýÉ¢ì¸×õ Àòâ, ÃÁ½¢ §¸ð¼ §¸ûÅ¢ìÌ §ÅñΦÁý§È ¾¢¨º ¾¢ÕôÀ¢ ´Õ À¾¢ø ¦º¡øÄ¢ÔûǾ¡¸ Àθ¢ÈÐ. þÐ ¾ü¦ºÂÄ¡, §ÅñΦÁý§È ¦ºö¾¾¡ ±ýÈ À⺣Ĩɨ ӾĢø ¿£í¸û ¦ºö ÓÂüº¢ì¸Ä¡õ. «ôÀÊ ¦ºö¾¡ø ¬§Ã¡ì¸¢ÂÁ¡É Ţš¾õ ±¾¡ÅÐ ±¾¢÷¸¡Äò¾¢ø º¢ò¾¢ì¸ §¿Ã¢¼Ä¡õ.

  ¿¡ý ³³Ê¢ø ÀÊ측Ţð¼¡Öõ «¾Û¼ý ¦¿Õí¸¢Â ÀâîºÂõ ¯ñÎ. «¾¢ø ÀÊò¾ ÀÄÕ¼ý ¦¿Õí¸¢Â ÀÆì¸Óõ, «Å÷¸Ç¢¼Á¢ÕóÐ ¸¢¨¼ò¾ §¸ûÅ¢ »¡ÉÓõ ¯ñÎ. À¢Ãîº¨É ³³Ê¢ø «Å¡û ¬¾¢ì¸õ þÕ츢Ⱦ¡ ±ýÀ¾øÄ. À¡÷ÀÉ ¦ÅÈ¢ ±ýÀÐ ÌÎÁ¢Å¢Ã¢ò¾¡ÎÅÐ ÀüÈ¢Âо¡ý. þ¼ ´Ð츢ðÊø ¯û§Ç ѨÆó¾ Á¡½Å÷¸û ±ó¾ «Ç× harass ¦ºöÂÀθ¢È¡÷¸û ±ýÀ¨¾ ¿£í¸û À¡÷ò¾¾¢ø¨Ä¡? Á¢¸ ¦ÅÇ¢ôÀ¨¼Â¡¸§Å `„¢ðÎ' ±ýÚ Å¢Ç¢ìÌõ ¦ÀÂ÷ ¨ÅòÐ ¸¢ñ¼ø «ÊôÀÐ ¯í¸û ¸¡¾¢ø Å¢Øó¾¾¢ø¨Ä¡? ³³Ê¢ø Å¡ÆÓÊ¡Áø ¸¡õÀ…¢üÌ ¦ÅǢ¢ø ¾íÌõ ¾Ä¢ò¸û ÀüÈ¢ ¿£í¸û §¸ûÅ¢ÀðÊÕì¸ Å¡öÀ¢øÄ¡Áø þÕó¾¢Õì¸Ä¡õ. ÅÕ„ ¸½ì¸¢ø «í§¸ ÀÊó¾ ¯í¸ÙìÌ, ²§¾¡ º¢Ä ºó¾÷Àí¸Ç¢ø ÁðÎõ «í§¸ ¦ºøÄ §¿÷ó¾ ±ý ¸¡¾¢ø Å¢Øó¾ Á¢¸ §Á¡ºÁ¡É ¸¦Áñð¸û ܼ ¯í¸û ¸¡¾¢ø Å¢Øó¾¾¢ø¨Ä¡? ³³Ê ÌÈ¢òÐ ¸ðΨà ±ØÐõ §À¡Ð «¨¾ ±øÄ¡õ §¿÷¨Á¡ö ¿£í¸û À¾¢× ¦ºö §Åñ¼¡õ. ÃÁ½¢ ³³Ê¢ý þý¦É¡Õ Ó¸Á¡ö þÐ ÁüÈ¢ º¢ýɾ¡ö ´Õ §¸ûÅ¢ §¸ð¼¨¾ Íò¾Á¡ö ¾¢¨º ¾¢ÕôÀ¢ ÃÁ½¢, ¾í¸Á½¢ ±ø¦Ä¡Õ§Á «Å¡û¾¡ý (±Øò¾¡Ç÷ º¢Å¸¡Á¢, ሸ׾Áý ܼ «Å¡Ç¡¸¢ Å¢ð¼¡÷¸Ç¡ ±ýÚ ¦º¡øÖí¸û) ±ýÚ ¾¢Ã¢òÐ, §º¡ À¢ÃŠ¾¡À¢ôÀÐ §À¡ø `þýÚ ±ø§Ä¡Õ§Á ¨ÅŠÂ÷¾¡§É¡' ±ýÈ ¦¾¡É¢Â¢ø Å¢ÂìÌõ ¯í¸û ¾¢È¨Á¨Â À¡Ã¡ð¼¡Áø þÕì¸ÓÊÔÁ¡? ºó§¾¸§Á¢ø¨Ä ¯í¸ÙìÌ ÀŠÁñ¨¼¾¡ý. (³³Ê ÌÈ¢òÐõ, Àò⠱ؾ¢Â Å¢„Âõ ÌÈ¢òРŢâšö þó¾¢Â¡Å¢Ä¢ÕóÐ ¾¢ÕõÀ¢ÂÀ¢ý ±Øи¢§Èý. þÐ ´Õ «ÅºÃ ±¾¢÷Å¢¨É ÁðΧÁ!)

  ---§Ã¡…¡Åºóò.

  ReplyDelete
 12. ரோஸாவசந்த்: திசை திருப்பவேண்டும் என்று நான் அப்படி எழுதவில்லை. மற்றபடி, நான் அங்கிருந்த நான்கு வருடங்களிலும், நீங்கள் சொன்ன எதையும் ('ஷிட்' என்று விளிப்பது, பார்ப்பனவெறி குடுமி விரித்தாடுவது) பார்த்ததில்லை. ஒருவேளை நான் பார்ப்பனராய்ப் பிறந்ததால் இதைப் பார்க்கக்கூடிய கண்கள் எனக்கில்லை என்று கூட நீங்கள் கருதலாம்.

  என் வகுப்பில் (மெக்கானிகல் எஞ்சினியரிங்), என் ஹாஸ்டலில், இடஒதுக்கீடு வழியாக வந்த சில மாணவர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்தேதான் வசித்தனர். ஹாஸ்டலை விட்டு வெளியே எங்கும் போகவில்லை. சேர்ந்தேதான் விளையாடினர். கடைசி இரண்டு வருடங்கள் ஒரு தலித் மாணவர் என் அறைக்கு அடுத்த அறையில்தான் இருந்தார். ஹாஸ்டல் வழக்கப்படி எல்லொருக்கும் பட்டப்பெயர்கள் இருந்தன. அதைச்சொல்லித்தான் கூப்பிடுவோம். அதில் 'ஷிட்' என்பது அடக்கமில்லை.

  அந்த மாணவர்களுடன் இடஒதுக்கீடு பற்றி, மண்டல் கமிஷன் பற்றி காரசாரமாக ஹாஸ்டல் விங்கில் சண்டை போட்டிருக்கிறேன் (றோம்). எனக்கு அப்பொழுது இட ஒதுக்கீட்டின் மீது கோபம். [இப்பொழுது என் கருத்து நிறைய மாறியிருக்கிறது.] மற்றவர்களுக்கு அப்பொழுது வருடக் கல்விக்கட்டணம் ரூ. 200. ஹாஸ்டல் fees ரூ. 100 வருடத்திற்கு. [1987-1991]. இடஒதுக்கீட்டில் வந்த மாணவர்களுக்கு அந்தக் கட்டணமும் கிடையாது. மாதச் சாப்பாட்டிற்கென உதவித்தொகையும் உண்டு. அப்பொழுதெல்லாம் அதை நினைத்து நிறையக் கோபப் பட்டுள்ளேன். என் தந்தை ஆசிரியர் வேலையில் இருந்து சம்பாதித்து பணம் அனுப்பவேண்டும் எனக்கு. என் பக்கத்து அறையில் இருந்த தலித் மாணவனது தந்தை கொல்கொத்தா மியூசியத்தின் தலைமை கியூரேட்டர். அந்த மாணவனுக்கு இலவசமாக கல்வி, உணவு எல்லாம். அந்த நேரத்தில் எனக்கு கோபம் மட்டும்தான் இருந்தது. மற்ற மாணவர்களுக்கு வருடத்திற்கு 20 புத்தகங்கள் எடுத்துக் கொள்ளமுடியும் நூலகத்திலிருந்து. தலித் மாணவர்கள் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் - கணக்கேயின்றி - எடுத்துக்கொள்ள முடியும். இதைப்பற்றியெல்லாம் பேசிச் சண்டை போட்டிருக்கிறோம். இப்பொழுதுதான் 'ரூ. 200க்கு எனக்கு கல்வி கொடுத்ததே பெரிய சப்சிடி. இதில் மற்றொருவருக்கு ரூ. 0 க்கு கல்வி கற்றுக்கொடுத்ததைப் பற்றி நான் குறைகூறக்கூடாது' என்று எனக்குத் தோன்றுகிறது.

  பல கருத்து வேறுபாடுகள் அப்பொழுது இருந்தும், நீங்கள் சொன்னமாதிரி எதுவும் நிகழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

  அப்படி ஒருவேளை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் என் பார்வையில் பட்டதில்லை. இதில் எதையும் மறைக்கும் நோக்கமில்லை.

  ReplyDelete
 13. ¿ýÈ¢ Àòâ!-- À¾¢ÖìÌõ, ³³Ê¢ø þÕó¾§À¡Ð ¯í¸û À¡÷¨Å ±ôÀÊ þÕó¾Ð ±ýÚ Å¢Ç츢¾üÌõ! (±ý ±¾¢÷Å¢¨É¢ø ´Õ º¢ýÉ Å¢Çì¸õ. ¿¡ý ÌÈ¢À¢ð¼ Å¡÷ò¨¾ `„¢ð' (ÁÄõ) «øÄ. SC/ST ±ýÀ¨¾ `„¢ðÎ' (shiddu) ±ýÚ `¦ºøÄÁ¡ö' Àð¼¦ÀÂ÷ ¨ÅòÐ ¾Ä¢ò Á¡½Å÷¸¨Ç «¨ÆôÀ¨¾. þÐ ¦Áðአ³³Ê¢ø ¦À¡ÐÅ¡¸ ÅÆí¸ÀÎõ Å¡÷ò¨¾.)

  ºÃ¢, Àòâ «Å÷ À¡÷¨Å¢ø «ÅÕìÌ À𼨾 ±Ø¾¢Â¢Õ츢ȡ÷. «¨¾ §¿÷¨Á¡¸( «¾¡ÅÐ §ÅñΦÁý§È Á¨ÈòÐ/¾¢Ã¢òÐ ¦ºö¡Áø) ±Ø¾¢Â¾¡¸ ±ÎòЦ¸¡û§Å¡õ. þý¦É¡Õ À¡÷¨Å¨Â ¿¡ý À¢ÈÌ ¾Õ¸¢§Èý. «¾üÌ Óý http://www.ambedkar.org §À¡ö IIT ±ýÀ¾üÌ §¾ÊÉ¡ø ¸¢¨¼ìÌõ ¸ðΨø¨Ç ÀÊòÐÅ¢ðÎ ÅÕÅÐ ¿Äõ. («í§¸ ¯ûÇ «ò¾¨É¨ÂÔõ ¿¡ý «ôÀʧ ²üÚ¦¸¡û¸¢§Èý ±ýÀ¾øÄ, ÌÈ¢ôÀ¡¸ Åºó¾¡ ¸ó¾º¡Á¢¨Â Óý¨ÅòÐ ÅóÐûÇ ¦ºö¾¢¸Ç¢ø ±ÉìÌ º¢Ä Á¡ÚÀ¡Î¸û ¯ñÎ. «í§¸ þý¦É¡Õ À¡÷¨Å ÀüÈ¢ ¦¾Ã¢ÂÅÕõ. «ùÅÇ×¾¡ý.) --§Ã¡…¡Åºóò.

  ReplyDelete
 14. சென்னை இந்திய நுட்பியற் கழகம் (Indian Institute of Technology) - இ.நு.க. பற்றி நண்பர் பத்ரி எழுதியிருக்கிறார். அவர் இளநிலை நுட்பியல் (B.Tech) பார்வையில் எழுதியிருக்கிறார். நான் 1970-72 களில் அங்கு முதுநிலை நுட்பியல் (வேதிப் பொறியியல்) (M.Tech - Chem Engg) படித்தவன்.

  என்னுடைய பட்டறிவில் எழுதுகிறேன். அந்த வளாகம் அருமையானது; இயற்கை தவழும் இடம்; நம் மனம் பண்படத் தூண்டும் சூழல். வெளியுலகத்தோடு தொடர்பு என்பது மிகவும் குறைவே. ஒரு மணி நேரத்திற்கு ஒருக்காய் அடையாறு காந்தி நகருக்கும், அரைமணி நேரத்திற்கு ஒருக்காய் வெளியில் உள்ள கடவுக்கு (gate) கல்லூரிப் பேருந்துகள் வந்து போகும். இதனால், அந்தக் காலங்களில் வந்து போகும் வண்டிகளில் எழுவித்துக் கொள்ளுதல் (lift) மிக இயற்கை. பெரும்பாலானவர்களும் அவர்கள் நெற்றியிலேயே இ.நு.க. என்று எழுதியது போன்ற தோற்றம் இருக்கும். அது அங்கு சேர்ந்த ஒரு மாதத்தில் உங்களுக்குப் புலப்பட்டு விடும்.

  விடுதிகள் அப்பொழுது நன்றாகவே இருந்தன. (நான் தப்தி, கிருட்டிணாவில் இருந்தேன்.) நல்ல முறையில் விடுதி நிர்வாகம் நடந்தது; கூடிய மட்டும் மாணவர் சனநாயகம் விடுதிகளில் இருந்தது; அப்பொழுதே சாப்பாட்டிற்கான செலவு கொஞ்சம் கூடத்தான்.

  துறைகளைப் பொறுத்து ஆசிரியர்களின் தரம் இருந்தது. (அப்பொழுது வேதியல் துறை நன்றாகவே இருந்தது; அதே பொழுது வேதிப் பொறியியல் துறையை ஓகோ என்று சொல்ல முடியாது.) நல்ல ஆசிரியர்கள் அன்று இல்லாமல் இல்லை. 4க்கு 1 என்று தேறுவார்கள். இளநிலையில் சரியாய்க் கல்லாத வேதிப் பொறியியலை ஓரிரு ஆசிரியர்களின் தாக்கத்தால் இங்கு என்னால் கற்க முடிந்தது. ஆராய்ச்சியின் தரமும் இதுபோல் தான். சில மிகச்சிறந்தவை; சில ஓடுகிற ஓட்டம் தான் (எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்). (நுட்பியற் கழகத்துள் தெலுங்கு ஆதிக்கம் கொஞ்சம் கூடவே உண்டு; இன்றும் கூட சென்னை இந்திய நுட்பியற் கழகத்தில் தெலுங்கு மொழியின் ஆட்சி கூடத்தான்.)

  இந்திய நுட்பியற் கழகத்திற்கும் வெளியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பும் அந்தந்தத் துறையின் வீச்சைப் பொறுத்தது. இந்தத் தொடர்பில் வேதிப் பொறியியல் ஒரு பெரிய சுழி. மணலி என்றால் எங்கே இருக்கிறது என்று கேட்பார்கள். நான் கேள்விப் பட்டவரை மின்னியல் (electrical), மின்னியியல் (electronics) ஓரளவு தேறும் என்பார்கள்.

  இங்கு நூலகம், சோதனைச்சாலைகள் ஆகியவை விரிவானவை. (அப்பொழுதெல்லாம் மேற்கோள் பொத்தகங்களிலும், தாளிகைகளிலும் பக்கங்களைக் கிழித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. பொறுமையாகக் குறிப்புப் பொத்தகங்களில் மேற்கோள்களை எழுதிக் கொள்ளுவோம்.நெப்பொழுதாவது ஒளிப்படி (photo-copy and not xerox) எடுத்துக் கொள்ளுவோம். இப்பொழுது நூலகம் போனால் எங்கு பார்த்தாலும் பொத்தகங்கள் கிழித்துக் கிடக்கின்றன. எதையும் அந்தந்த இடத்தில் தேட முடிவதில்லை; இன்னும் பொத்தகத்தை எடுத்து வேறு இடத்தில் ஒளித்து வைப்பது நடந்து கொண்டிருக்கிறது. ஒளிநகல் இயந்திரத்தின் அருகில் பொத்தகங்கள் மலையாய்க் குமிந்து கிடக்கின்றன. ஒரு பெரும் வரிசை நிற்கிறது; எங்கும் எதிலும் பொறுமை இல்லை; நூலகங்களின் நிலை இந்தியப் பல்கலைக் கழகங்கள்/கல்லூரிகளின் சாபக் கேடு.)

  பொதுவாக இ.நு.க. படிப்பு நம்முடைய நடைமுறை வழக்காற்றிற்குச் (practical) சற்று விலகியே உள்ளது. இவர்கள் நியூட்டன் ராப்சனில், இழுமாச் சமலேற்றங்களில் (non-linear simulation) தெளிவு; ஆனால் சட்டென்று ஓர் அஞ்சல்தாள் கணக்குப் போட யோசிப்பார்கள்; டக்குப் புக்கென்று கணியில் இறங்கிவிடுவார்கள்; அதே பொழுது குத்து மதிப்புக் கணக்குப் போட்டு ஒரு வேலையைச் செய்யலாமா, கூடாதா என்று சொல்லத் தயங்குவார்கள். நேர்த்தித் திறன் (efficiency) உள்ளவர்கள்; ஆனால் எதைச் செய்யலாம் என்பதில் கோட்டை விடுகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

  ஓரளவு நம் நாட்டிற்குத் தேவையானதைச் செய்ய இவர்கள் இறங்கி வரலாம் என்றே எண்ணுகிறேன்;சானால் செய்ய மாட்டார்கள்; மாறாகச் சில விதி விலக்குகள் உண்டு. அவர்களைப் பற்றி இங்கு நான் பேசவில்லை. இன்றைய நெறியாளர் முனைவர் அனந்த் நானறிந்த வரை நல்ல செய்திகளைக் கேட்டு, மாற்ற வேண்டியவற்றை மாற்றக் கூடியவர் தான். சீர்திருத்தம் என்பதை வரவேற்கக் கூடியவர் தான்.

  பொதுவாக இந்த நுட்பியற் படிப்பை நான் குறை சொல்ல மாட்டேன்; இது நான் அங்கே படித்தேன் என்பதற்காக அல்ல. அங்குள்ள குறைகளைச் சரி செய்ய முடியும் என்று எண்ணுவதால் சொல்லுகிறேன்.

  பெண்களின் விரவல் முந்திக்கு இப்பொழுது கூடித்தான் இருக்கிறது. சரயூ விடுதியே பெரிதாக இருக்கிறதே?

  "பார்ப்பனர்" ஆட்சி என்பது அங்கு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருகிறது என்பதே உண்மை. கல்வி என்பது மொத்தத்தில் பரவலாகிக் கொண்டு இருக்கிறது.

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 16. காசிலிங்கம்: நீங்களும் கோதாவரியா? நானும்தான். ஆனால் நீங்கள் உள்ளே வரும்போது நான் வெளியே கழண்டு விட்டேன். நான் இருந்தது 1987 முதல் 1991 வரை.

  இராம.கி: உங்கள் மறுமொழிக்கும் நன்றி.

  ReplyDelete
 17. அச்சச்சோ...
  என்னமோ புதுசா ஒரு படம் இருக்கேன்னு (குப்பைத்தொட்டின்னு விளங்கிக்காமல்) அதைச் சொடுக்கினேன். அதில் இந்த மறுமொழி காணாமல் போச்.. பாவிங்களா, 'அழிக்கவா, நெசமாவா?'ன்னெல்லாம் ஒண்ணும் கேக்கவேயில்லை. சந்தேகத்தில் 5 நிமிடம் கழிச்சு இன்னொரு முறை பார்த்தேன். அப்பவும் இருந்தது. இப்பக் காணோம். ப்ளாக்கர் சோதிக்கறார். இன்னொரு முறை தட்டமுடியுமா தெரியவில்லை.. :( :(

  ReplyDelete
 18. காசி : அதான் மேட்டரா? பத்ரி ப்ளாக்லே மட்டும் அடிக்கடி போஸ்ட் அழிக்கப்பட்டதுன்னு அடிக்கடி பாத்துட்டு, ஒருவேளை, சென்சார் செய்யறாரோன்னு சந்தேகப்பட்டேன் :-). குப்பைத் தொட்டியை க்ளிக் செஞ்சால், கமண்ட் குப்பை தொட்டிக்கு போய்டுமா? நல்லவேளை, நான் அந்த விளையாட்டை விளையாடிப்பார்க்கலை :-)

  பத்ரி: விரிவான பதிலுக்கு நன்றி.

  ReplyDelete
 19. பத்ரி, உங்கள் வலைக்குறிப்பு, தொடர்பான விவாதங்களையொட்டி நீண்ட வலைக்குறிப்பொன்றை இன்றைக்கு எழுதியிருக்கிறேன் . அந்தக் குறிப்பின் மீதான உங்கள் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.

  உங்கள் Trackback வேலை செய்யவில்லை.

  பிரகாஷ் - நல்ல கருத்துக்கள். திரு ரோஸா வஸந்த் பிறர் கூறக் கேட்டதாக நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பெரும்பாண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பது என் எண்ணம். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் படிக்கும்பொழுது நான் வாங்கிய அடிகளையும் திட்டுக்களையும் ஐஐடியில் யாராவது பெற்றிருப்ப்பார்களா என்பது சந்தேகம். என் வாயில் மீனைத் திணிக்க முற்பட்டதைப் பற்றி நான் சொல்லப்போக நான்பார்ப்பன வெறியன் என்று இணையத்தில் திட்டப்பட்டிருக்கிறேன்.

  வெங்கட்

  ReplyDelete
 20. Jeez!
  Badri, I did not ask what I asked neither as a sacastic question nor as a debating question. Since I read about it in Soc.Culture.Tamil, I asked about. I am sorry that you took it as a negative point.

  Bye.

  -/ramanitharan.

  ReplyDelete
 21. sorry for my mixed up english;-)

  Jeez!
  Badri, what I asked was neither a sacastic question nor a debating question. Since I read about it in Soc.Culture.Tamil, I asked about it. I am sorry that you took it as a negative statement.

  Bye.

  -/ramanitharan.

  ReplyDelete
 22. கொஞ்சம் ஐஐடிக்குள் புகுந்துவந்தவன் என்ற முறையில் எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள்:

  நான் ஐஐடியில் இளநிலைப் பட்டம் படிக்கவில்லை. நான் வந்த படிகளும் வழக்கமாக கேள்விப்படும் வகையல்ல. எனவே என் அனுபவங்கள் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காது. பொறியியல் பட்டயம் (டிப்ளமா), பகுதிநேரப் பட்டம் (பி.இ.) இவற்றுக்குப்பின் 4 வருட இடைவெளிக்கப்புறமே நான் முதுநிலை (வார்த்தை நன்றி: திரு. இராம.கி.) பட்டத்திற்காக ஐஐடிக்குப் போனேன். அங்கு இருந்ததே இரண்டு செமஸ்டர்கள்தான். எனக்கும் மற்ற வழக்கமான மாணவருக்கும் இடையே 6-7 வருட வயது இடைவெளியும் இருந்தது. ('அங்கேயும் காசியண்ணன் தானா': கார்த்திக்ராமாஸ்:)) என் அம்மா திருவள்ளூரில் தனியே வசித்ததால் வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் விடுதியில் இருக்கமாட்டேன். இதெல்லாம் சேர்ந்து, பெரிய அளவில் எனக்கு விடுதி அனுபவம் என்று ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் போனது.

  ஆனால் கல்விமுறையின் அமைப்பில் ஐஐடி அனுபவம் வித்தியாசமான ஒரு அனுபவம். ஒவ்வொரு செமஸ்டரிலும் பாடங்களில் சிலவற்றை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி, 'தொடர் மதிப்பீட்டுக்கு இத்தனை, இறுதித்தேர்வுக்கு இத்தனை மதிப்பெண்கள்' என்றெல்லாம் ஆசிரியரே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரம், உண்மையிலேயே திறமையும் ஈடுபாடும் கொண்ட பல ஆசிரியர்கள் (நேர் எதிர் ஜென்மங்களும் உண்டு) இவை எனக்குப் புதிதாய் இருந்தது. உருப்போடவைக்காமல், அசைன்மென்ட் என்று வெட்டியாய்ப் பக்கம் பக்கம் எழுதவைக்காமல், புரிந்து படிக்க ஊக்குவித்த ஆசிரியர்களை என் கிராமத்து பள்ளிக்குக்குப் பின் ஓரளவுக்கு இங்கே கண்டேன். என் துறை (Engineering Mechanics) மட்டுமே இப்படி இருந்ததா என்று தெரியாது. ஆனால் என் பாலிடெக்னிக்கிலும், கல்லூரியிலும் இவை குறைவாகவே இருந்தன.

  நான் அறிந்தவரையில் 'பார்ப்பன ஆதிக்கம்' கண்ணில் படவில்லை. எங்கள் வகுப்பிலேயே கூட (பெரிய வகுப்பு, 'ஐ ந் து' பேர் :) ) ஒரு பார்ப்பன மாணவன்கூட இல்லை. ஐந்துபேருக்காக மெனக்கெட சோம்பேறித்தனப்பட்டு என் ஆசிரியர் (தன் துறையில் உலக ஒருவர் சென்ற வருடக் கேள்வித்தாளையே தேதியை இற்றைப்படுத்தி, மீண்டும் கொடுத்ததில் வெறுத்துப் போனதும் உண்டு.

  என்னைப் பொறுத்தவரையில் ஐஐடியால் திறமையான மாணவர்கள் உருவாகிறார்களா, திறமையான மாணவர்கள் உள்ளே வருவதால் ஐஐடிக்கள் பெயர் வாங்குகின்றனவா என்றால், முறையே 20% & 80% சரி என்பேன்.

  (முதலில் எழுதியது குப்பைத்தொட்டிக்குப் போய்விட, மறுபடியும் எழுதியது. சிலது மாறியிருக்கும், கொஞ்சம் வெட்டியும் விட்டேன்)

  ReplyDelete
 23. ஒரு பிழை திருத்தம்:
  ...என் ஆசிரியர் (தன் துறையில் உலக... என்பதற்குப்பின்

  '(தன் துறையில் உலக அளவில் அறியப்பட்டவர்)'

  என்று வந்திருக்கவேண்டும்.

  ReplyDelete
 24. Dear Ramani,

  I hope you didn't find the tone of my response too aggressive. I have answered your and subsequently Rosavasanth's question as well in, hopefully, my normal, sane tone. I found your question interesting and hence took the liberty to expand upon it a bit.

  I beleieved that it is important to expand on commissions and omissions of the members of the Brahmin caste in IITs. I believe I can touch on the subject dispassionately, despite my birth backgrounds.

  I would still like to stand by my response, where I don't come across as being totally upset.

  Over time, in any institution of higher learning where (born) brahmins have held sway, there will be dilution in numbers. There should be. However there will always be a new breed of 'brahmins' who get created in the process. Isn't that the truth?

  ReplyDelete
 25. I am not in a position to write anything in detail(for the next one month) in the internet. Venkat, can you show me(if possible by giving the link or by cutting/pasting the relevent part) where you have been called as a 'pArapanma veRiyan', just fopr narrating `how fish was insereted' in your mouth. Thanks!- Rosavasanth.

  ReplyDelete
 26. Ramani, would you like to say `I am sorry that Rosavasanth took it in a negative sense'--rosavasanth

  ReplyDelete
 27. நான் பத்ரியின் பின்னூட்டத்தினைப் பார்த்தபோது, ரோஸாவசந்தின் பின்னூட்டத்தைக் காணவில்லை. பொதுவிலே soc.culture.tamil இல் நிகழ்ந்த (வி)வாதங்களைப் பார்த்தே கேட்டேன். மேலும் என்னுடைய முன்னைய (தென்னிந்திய வேற்றுமாநில-பிராமணரல்லாத) அறைநண்பர் ஒருவர், முதுநிலைப்படிப்பு சென்னை ஐஐடியிலே மேற்கொண்டவர். அவரின் சுட்டுதல்கள் 1. பார்ப்பன ஆதிக்கம், 2. தமிழர் ஆதிக்கம் என்பதாக இருந்தன. அதனாலேயே அறிந்துகொள்ளக்கேட்டேன். இணையத்திலே தமிழர் எதைப் பேசினாலும், இறுதியிலே ஒருங்கிப்போய் நிற்குமிடங்கள் ஐந்து என்பதாக என் அவதானிப்பு. அவற்றிலே இந்த பார்ப்பான் - அல்லான் |விதண்டா|வாதமும் ஒன்றாகிப் போனதாலேதான் கொஞ்சம் எச்சரிக்கையாகப் பேசவேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்.

  -/இரமணி.

  ReplyDelete