Monday, July 26, 2004

ஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு

சக வலைப்பதிவர் நா.கண்ணன் எழுதிய நூல்கள் இரண்டு - ஒரு சிறுநாவல் தொகுதி, ஒரு குறுநாவல் தொகுதி - இன்று (திங்கள், 26 ஜூலை 2004) சென்னை, மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.

நிழல் வெளி மாந்தர் புத்தக வெளியீடு


'நிழல் வெளி மாந்தர்' எனும் சிறுகதைத் தொகுதியில் 17 சிறுகதைகள். தொகுதியை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி வெளியிட, மாலன் பெற்றுக்கொண்டார். புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதும் இந்திரா பார்த்தசாரதியே.

விலை போகும் நினைவுகள் புத்தக வெளியீடு


'விலை போகும் நினைவுகள்' என்பது ஆறு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. கவிஞர் வைதீஸ்வரன் வெளியிட, கடலோடி நரசய்யா பெற்றுக்கொண்டார். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதும் வைதீஸ்வரனே.

வெங்கடேஷ், நா.கண்ணன்
வெங்கடேஷ், நா.கண்ணன்
புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, மாலன் வாழ்த்துரை வழங்கினார். இந்திரா பார்த்தசாரதி, வெங்கடேஷ், வைதீஸ்வரன், கடலோடி நரசய்யா ஆகியோர் புத்தகங்களில் தங்களைக் கவர்ந்தவற்றைப் பற்றிப் பேசினர். இறுதியாக நா.கண்ணன் ஏற்புரை வழங்க விழா முடிவுற்றது.

நிழல் வெளி மாந்தர், நா.கண்ணன், ஜூலை 2004, மதி நிலையம், பக். 176, விலை ரூ. 55

விலை போகும் நினைவுகள், நா.கண்ணன், ஜூலை 2004, மதி நிலையம், பக். 160, விலை ரூ. 45

No comments:

Post a Comment