Wednesday, July 28, 2004

இரண்டு வயதுக் குழந்தையின் கோபம்

இரண்டு நாள்கள் முன்னர் என் அடுக்ககத்தில் (Apartment complex) நடந்த ஒரு சம்பவம்.

இரண்டு வயதாகும் சின்னப் பையன். அவனது தாய், பையனோடு, தன் வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு, அடுத்த வீட்டில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பையன் குறும்பு ஜாஸ்திதான். அடுத்தவர் வீட்டில் உள்ள பொருட்களை கீழே தள்ளி நாசம் செய்ய, கோபத்துடன் தாயார் அவனைக் கடிந்து கொண்டிருக்கிறார். உடனே இந்த இரண்டு வயது வாண்டு அழுதுகொண்டே பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வந்து தன் வீட்டிற்குள் புகுந்து கொண்டு, கதவைச் சாத்தியதில் தானியங்கித் தாழ்ப்பாள் மூடிக்கொண்டது. அத்துடன் நில்லாமல், வெளியிலிருந்து சாவியால் கதவைத் திறக்க முடியாமல் உள்ளிருந்து மற்றுமொரு தாழ்ப்பாளையும் போட்டு விட்டான் விஷமக்காரன். ஆனால் போட்ட தாழ்ப்பாளைத் திறக்கத் தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. இரண்டு வயதே ஆனதால் முழுதாகப் பேசவும் தெரியவில்லை, வெளியிலிருந்து தாயார் சொன்னதைப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை. அரை மணி நேரம் பேச்சுவார்த்தை தொடர, உள்ளிருந்து ஓவென அழ ஆரம்பித்து விட்டான் பையன். அழுது ஓய்ந்து சமர்த்தாக சோஃபாவில் சென்று படுத்துத் தூங்கியும் விட்டான். வெளியே அவனது தாயார் நிலைகுலைந்து தடுமாற, அடுக்ககமே அல்லோகலப்பட்டது.

நான் மதிய உணவுக்காகப் போயிருந்த நேரம் அது.

உட்பக்கமாகப் பூட்டிய அந்த வீட்டினுள் வேறு எந்த வழியிலும் உள்ளே நுழைய முடியாதவாறு மற்ற ஜன்னல் கதவுகளும், பால்கனிக் கதவுகளும் உட்பக்கமாகவே தாழிடப்பட்டிருந்தன.

பின்னர் சற்றே தைரியமான ஒருவரை கயிறால் கட்டி, மேல் மாடி வீட்டின் பால்கனி வழியாக கீழ் வீட்டின் பால்கனியில் இறக்கினோம். அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதுவழியாக பால்கனிக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே நுழைந்து வாசல் கதவைத் திறந்தார். ஆக பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளிருக்கும் பையனைக் காப்பாற்ற கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலானது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் உலகம் முழுதும் நடப்பனதான். ஆனால் எனக்குத் தெரிந்தவரை அமெரிக்கா போன்ற நாடுகளில் இம்மாதிரி சமயத்தில் தீயணைப்புத் துறையினரை நாடுவதுதான் வழக்கம். மரத்தின் மீதேறி மாட்டிக்கொண்டு கீழே இறங்கத் தெரியாது தடுமாறும் வளர்ப்புப்பூனையைக் காப்பது முதல், வீட்டின் உள்ளே பூட்டிக்கொண்டு மாட்டிக்கொள்ளும் குழந்தைகளைக் காப்பதிலிருந்து எல்லாம் தீயணைப்புத் துறையினர்தான்.

நம்மூர்களில் இதுபோன்ற விஷயங்களில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களே அதிரடியாய் காரியத்தில் இறங்கி விடுகிறார்கள். இந்தியாவில் தீயணைப்புத் துறையில் இருப்பவர்கள் இதிலெல்லாம் ஈடுபடுகிறார்களா என்று தெரியவில்லை. தீயணைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற 'காப்பாற்றும்' விஷயங்களிலெல்லாம் நல்ல பயிற்சி கொடுத்தால் பொதுமக்களுக்கு சவுகரியமாக இருக்கும்.

10 comments:

 1. இதுபோன்ற நிகழ்ச்சிகள் உலகம் முழுதும் நடப்பனதான். ஆனால் எனக்குத் தெரிந்தவரை அமெரிக்கா போன்ற நாடுகளில் இம்மாதிரி சமயத்தில் தீயணைப்புத் துறையினரை நாடுவதுதான் வழக்கம்.
  >>
  பூட்டைத் திறக்க Locksmith தேடுவதுதான் வழக்கம். குழந்தையைக் காக்க வேண்டுமானால் தீயணைப்புத் துறை வரும்(அநாவசியமாகக் கூப்பிட்டால், சேவைக்கு வீட்டுக்கு பில் வரும் என்று கேள்வி)

  ReplyDelete
 2. இங்கு சிங்கையிலும் லாக்ஸ்மித்தைத்தான் நாடவேண்டும் -$50 பழுத்துடும். சிவில் டிஃபன்ஸை கூப்பிடலாமா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 3. No pari,
  If the child is locked inside we have to call the firefighters only. Thats consider an emergency.Within 5 min they will come and break something and get into the house.They won't charge for that. My daughter locked twice.Once in car and in house. Car-AAA,house-firefighters.It is good in India also to train the firefighters. Since they are equipped with ladder and otherthings.
  ..Adhithya

  ReplyDelete
 4. //தானியங்கித் தாழ்ப்பாள் மூடிக்கொண்டது.// இங்கும் உள்ளே பிள்ளைகள் இருந்தாலொழிய பூட்டுக் காரரைத்தான் கூப்பிட வேண்டும். அவ்ர் வந்து ஒரு எக்ஸ் ரே தாளை ( X ray Sheet or cliche) கதவின் இடுக்கில் உள்ளிட்டு வேகமாக கீழ் நோக்கியோ அ மேல் நோக்கியோ (கதவை லேசாக தள்ளிக்கொண்டே) இழுப்பார்.
  கதவைத் திறந்து நம் வயிறெரிச்சலைக் கொட்டிக் கொள்வார் (*வான்*..பாவி)..60 ஈரோவாச்சே !
  நானும் இம்முறையை பின் பற்றி ஒரு முறை நண்பருக்கு உதவியிருக்கிறேன். (பாவி..தாங்க்ஸ் மட்டும் தான் சொன்னான்)..
  ஒரு முறை செய்து பாருங்கள்...எதற்க்கும் சாவி கையிலிருக்கட்டும்..
  :))

  ReplyDelete
 5. When my son was 2 years or so, he went into bathroom and locked it from inside. It was a weekend. He panicked and started crying. I called the apartment maintenance and left a message. My wife went outside the apartment and through the bathroom window (luckily it was ground floor) started talking to my son. Asked him to be cheerful and say 1,2,3.. or ABC with her or sing with her like that. He was doing it with half crying while my neighbor and I were trying to open the bathroom door. It did not have any key. But a locking system that works from inside. Luckily my neighbor opened it after 15 minutes try. Then after 10 more minutes, the maintenance guy came. Apartment Maintenance cell normally charges 10 to 20 dollars for weekend emergency calls. Since the maintenance came after we opened the door ourselves, he did not charge me. Calling police is not required immediately if we know we can handle it for sometime to try to resolve it ourselves. It all depends on experience, comfort level, seriousness of the problem etc to make the call of whether to call police or not. Regards, PK Sivakumar

  ReplyDelete
 6. I think our Fire dept is also trained on such emergencies. I knew one incident where they saved a cat from a tree. But I am not sure whether they will immediately come and unlock a door. Here locksmiths are there for unlocking home doors and AAA is there to open auto doors. But on emergency, 911 can be called and they normally do not charge anything. I've witnessed few cases. Automatic lock is always a pain. My apartment's maintenance will not be available during sundays and holidays, we need to call a locksmith for opening the door. Locksmith will easily charge $60-$70. After learning this lesson in a hard way, I duplicated the keys and kept one in the car and another with my neighbour. In such case, you may call AAA first to open the car and then using that duplicate key, you can open the door. But opening the bathroom door is a little tricky issue. We can still open it from outside using a small pin or so. But we learn all these in a hard way only after spending money on locksmith or other services. Always distribute duplicate keys to your reliable neighbours and disable bathroom auto locks.

  S.Thirumalai

  ReplyDelete
 7. பத்ரி, இங்கே குழந்தைகளுக்கான அறைகளில் பூட்டுகளின் (குமிழ் கைப்பிடி) மையத்தில் ஒரு துளையிருக்கும் (சாவியில்லா பூட்டுகள், உள்ளிருந்து தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளாலம், வெளியிருந்து திறக்கமுடியாது). அந்தத் துளையில் சிறிய கம்பியை வைத்து ஒரு திறப்புப் பொத்தானை அழுத்திக்கொண்டு கைப்பிடியைத் திருகினால் கதவு திறந்து கொள்ளும். என்னுடைய மனைவி ஒருமுறை கதவை வெளியிருந்து சாத்தினாள், உள்ளே ஏற்கனவே பூட்டு இயக்கப்பட்டிருக்க கதவைச் சாத்தியதும் தானாகப் பூட்டிக்கொண்டுவிட்டது. ஒன்றும் விஷயம் தெரியாமலேயே, அதில் இருந்த துளையில் கம்பியை வைத்து அப்படியிப்படி அசைக்க, தன்னால் திறந்து கொண்டுவிட்டது. உடனே அந்த வைத்தியத்தை மற்ற கதவுகளிலும் கையாண்டு பார்க்க எல்லா கதவுகளும் அப்படியே திறந்தன.

  இது குழந்தைகள் பாதுகாப்புக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முறை என்று அப்புறம்தான் தெரியவந்தது. - வெங்கட்

  ReplyDelete
 8. Scares me to read this account. I thought of teaching my daughter how to lock the house from inside, I don't think I'll do anything like that now! Atleast our hero slept on the sofa, my child would find the absence of others at home fertile for mischief. She's about the same age as him, her current passion is clambering up the balcony grill/wall.

  This article sure rings warning bells.

  ReplyDelete
 9. பால்கனி என்பதை மாடி என்று தமிழில் எழுதுங்கள் இனியவரே / சென்னை திரையரங்கில் பால்கனி 20ரூபா என்று
  எழுதியிருந்ததைக் கண்டு அது ஒருவகை உணவு என எண்ணினேன் பின்னர் எனது
  உறவினர் விளக்கப்படுத்தினார் அது பல்க்கணி
  என்று சரியாக எழுதாது போனால் குழப்பமே
  யாழ்ப்பாணத்தில் திரையரங்கங்களில்
  பல்க்கணி என்று சரியான வடிவத்தில் எழுதியிருப்பார்கள்- வாழ்க இனிது

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க. இன்னும் பத்து வருடம் கழித்து யாரேனும் வந்து புது வார்த்தையைச் சொல்லிக்கொடுத்து எழுதச் சொன்னால், அதையும் கட்டாயம் செய்கிறேன்.

   Delete