Friday, July 16, 2004

கும்பகோணம் தீ விபத்து

கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த தீவிபத்தில் 120க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் கருகி இறந்துவிட்டன என்று கேள்விப்படுகிறேன். முழுத்தகவல் கைவசம் இல்லை.

8 comments:

 1. 70க்கு மேற்பட்ட சிறுவர்கள் இறந்ததாக செய்திகள் கூறுகிறது.
  கொடூரம்.

  ReplyDelete
 2. http://www.vikatan.com/vc/2004/jul/vc0149.shtml
  இத்தளத்தில் சில 'புகை'ப்படங்களும், மேலதிகத்தகவல்களும் உள்ளது.
  என் இரங்கல்கள் :(

  ReplyDelete
 3. அய்யோ, கண் கொண்டு பார்க்க முடியவில்லை அந்தப் படங்களை. அந்தப் பெற்றோர்கள் வேண்டிய நெஞ்சுரத்தைப் பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். என்று தணியும் இந்த 'அறியாமை' தாகம்? என்றெமது பொதுக் கட்டடங்கள் புத்தியுடன் அமைக்கப் பெறும்?

  ReplyDelete
 4. பாண்டிச்சேரி கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது எனக்குக் கிடைத்த தகவல் இது. தீயணைக்கும் வண்டியே உள்ளே செல்ல முடியாமல் இடுக்கான இடத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியாம் இது. குழந்தைகள் வெளியே ஓடிவரமுடியாமல் கருகிச் செத்துள்ளன.

  உடனடியாக பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் தன் அலுவலர்கள் மூலம் பாண்டியில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் பரிசீலிக்க உத்தரவிட்டிருக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை இன்னமும் எத்தனை உயிர்கள் போகவேண்டுமோ?

  செத்தது அத்தனையும் 1-3வது வரை படிக்கும் சிறுவர்களாம்.

  சில மாதங்களுக்கு முன்னர்தான் ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் தீச்சாவு நிகழ்ந்தது.

  Zonal regulations எதையும் சரிவர கவனிக்காதது யார் குற்றம்? நகராட்சிகளின் குற்றமா? இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது கிடைக்கும் பள்ளிகளில் குழந்தைகளைத் தள்ளிவிடும் பெற்றோர்கள் குற்றமா? இல்லை, பணம் செய்வதையே குறிக்கோளாய் வைத்திருக்கும் பள்ளி/கல்யாண மண்டபக்காரர்களின் குற்றமா?

  ReplyDelete
 5. மேலே, zoning regulations என்று இருக்க வேண்டும்.

  ReplyDelete
 6. பத்ரி, இது வலைப்பூவில் நானிட்ட மறுமொழி. கூடுதல் கருத்துக்களுக்காக இங்கும் இடுகிறேன்.

  கண்டும் கற்றும் பல நாடுகளைப் பற்றியும், ஆங்காங்கே இருக்கும் பள்ளி, சமூகச் சூழல்களைப் பற்றி ஓரளவேனும் அறிந்தவர்கள் என்ற முறையிலும் நாம், தமிழ் வலைப்பதிவாளர்கள், அனைவரும் சேர்ந்து நம் பாதிப்புக்களையும், கருத்துக்களையும், யோசனைகளையும், திரட்டித் தமிழக முதல்வர், ஆளுநர், கல்வியமைச்சர், கல்வித்துறைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கலாமா? வேண்டுமெனில் இந்திய அளவிலும் கூட. நம் எண்ணங்களை அவர்களுக்கு முறையாக வெளிப்படுத்தி/பதிவு செய்தே ஆக வேண்டுமென நினைக்கிறேன். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

  ReplyDelete
 7. சுந்தரவடிவேல்: நிச்சயமாகச் செய்ய வேண்டும். ஒரு கடிதம் எழுதி அதில் நம் பார்வையில் குறைந்த பட்சமாக கல்விநிலையங்கள் (தனியாரோ, அரசுடையதோ) எப்படி அமைந்திருக்க வேண்டும், அப்படியில்லாவிட்டால் அந்நிலையங்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று எழுதலாம். இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்கா போன்ற இடங்களில் கல்வி நிலையங்கள் கட்ட எம்மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை நீங்கள் கண்டறிந்து அந்த அறிக்கையை தமிழ்ப்படுத்தி இணைப்பாக வழங்கலாம்.

  இதனால் சில மாறுதல்களும் ஏற்படலாம்.

  ஒவ்வொரு ஊரிலும் சிவில் சொஸைட்டி அமைப்புகள் இந்த விஷயத்தைத் தோளில் போட்டுக்கொண்டு இயங்க வேண்டும்.

  எந்தெந்தெப் பள்ளிகள் வரம்பை மீறிக் கட்டப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய ஒரு fact sheet ஒன்றைக் கொடுக்கலாம். நீங்கள் தொடருங்கள்... பலர் கூடச் சேர்வோம்.

  ReplyDelete
 8. செய்தி கேட்டு/பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். மனைவியிடம் சொல்லிக்கொண்டேன் - சன் டிவில அந்த கோரத்தை பாத்துட்டே நம்மால சாப்பாடு சாப்பிட முடிகிறது என்றால் - நமது மனத்துக்கு என்னவாயிற்றென்று... வேறென்ன செய்ய... கண்டிப்பா இந்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும், ஏற்பாடு செய்யுங்கள். இறந்த பின்னர் ஒரு லட்சம் கொடுப்பவர்களும், 25 லட்சம் கொடுப்பவர்களும் இது மாதிரி நடப்பதற்கு முன்னரே பள்ளி கட்டிடங்கள், பொதுஇடங்கள் அமைக்க உதவி செய்யலாமே... ஹீம்ம்ம்... நல்லது நடக்கட்டும்.

  ReplyDelete