கடவு இலக்கிய அமைப்பு - கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும்
அசோகமித்திரன் 50
அசோகமித்திரனின் படைப்புலக வாழ்க்கை தனது ஐம்பதாண்டுகளைத் தொடுகிறது. சிறுகதை, நாவல், கட்டுரை என மூன்று பிரிவுகளில் தொடர்ந்தும் தீவிரமாகவும் செயல்பட்டுவரும் அசோகமித்திரனின் பங்களிப்பை நினைவு கூர்ந்து, மீள்பார்வை பார்க்கவேண்டிய தருணம் இது.
12.02.2005 சனிக்கிழமை மாலை 6.30க்கு சென்னை அண்ணாசாலை பிலிம்சேம்பர் அரங்கில் நடைபெறவுள்ள அசோகமித்திரன் - 50 விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அவரது சிறுகதைகள் குறித்து சுந்தர ராமசாமியும் கட்டுரைகள் பற்றி ஞானக்கூத்தனும் நாவல்கள் பற்றி ஆ.இரா. வேங்கடாசலபதியும் உரையாற்றுகிறார்கள். மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா பங்கேற்று, மொழிபெயர்ப்பில் அசோகமித்திரன் அளிக்கும் வாசிப்பு அனுபவங்கள் குறித்துப் பேசுகிறார்.
நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
நிகழ்ச்சி நிரல்
மாலை 6.15 - தேநீர்
மாலை 6.30 : அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் இயக்கிய குறும்படம் திரையீடு
மாலை 7.00 நிகழ்ச்சித் தொடக்கம்
வரவேற்புரை : எஸ். வைத்தீஸ்வரன்
தலைமை : பிரபஞ்சன்
பங்குபெறுவோர் : சுந்தர ராமசாமி, பால் சக்கரியா, ஞானக்கூத்தன், ஆ.இரா. வேங்கடாசலபதி
நிறைவுரை : விருட்சம் அழகியசிங்கர்.
விழா அரங்கில் அசோகமித்திரனின் அனைத்து நூல்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
6 hours ago
மூசி என்றால் மௌளஸா?
ReplyDeleteBy: xyz
மூசி என்றால் மௌஸ்தான். ஆனாலும் எனக்குப் பிடித்தது எலிக்குட்டிதான்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
எலிக்குட்டி? எலிக்குஞ்சு பெட்டர் இல்லையா?
ReplyDeleteBy: xyz
பத்ரி,
ReplyDeleteமிக மகிழ்வான செய்தியிது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன்.
சுரேஷ் கண்ணன்
By: Suresh Kannan
அன்புள்ள பத்ரி மற்றும் தமிழன்பர்க்கு
ReplyDeleteஇராஜ.தியாகராஜனின் வணக்கம்.
எனக்கு பிடித்த சொல் - சுட்டி.
இன்னும் 200 பேருக்கு மேல் எலிக்கு பதிலாக சுட்டியே பயன்படுத்துகிறோம்.
அன்புடன்
இராஜ.தியாகராஜன்.
அப்படிப்போடுங்க அரிவாளை, ஆஹா, அருமையான பேச்சாளர்கள், இலக்கியவாதிகள் உங்க மேடையில. இவர்களில், பால் சக்கரியா பேசித்தான் கேட்டதில்லை, ஆனாலும், அவரின் பத்திக்கு (காலச்சுவடு, டெஹல்கா) ரசிகன் நான்.
ReplyDeleteவாக்கு மாறாம, முன்ன சொன்ன அதே டயலாக் தான் " 3வது ரோல ஒரு சீட்டு போடுங்கப்பா"
'சுட்டி' என்பது pointer-இன் நேரடி மொழிபெயர்ப்ப்பு. இது 'கர்சர்' ஆகவும் இருக்கலம். 'சுட்டி' மவுசைக் குறிக்க வாய்ப்பில்லை; 'mouse pointer' எனபதே சரி. வெளிப்படையான காரணங்களுக்காக, 'hyperlink'-ஐயும் 'சுட்டி' என்றழைக்கலாம்.
ReplyDeleteBy: Partisan
உரைகளை ஒலிபதிவு செய்து வலையில் வழங்க முடியுமா? நன்றி!
ReplyDeleteBy: Sunil K