இன்று மதியம் ஆல் இண்டியா ரேடியோ செய்தியில், மத்திய அரசு வட கிழக்கு இந்தியாவில் மூங்கில் பூக்களால் ஏற்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த ரூ. 105 கோடிகள் செலவிட இருப்பதாகச் சொன்னார்கள்.
ஒன்றுமே புரியவில்லை. மூங்கில் பூக்கும்போது, அதைத் தின்ன வரும் எலிகள் எக்கச்சக்கமாகப் பெருகிப் போகும் என்றும், அப்படிப் பெருகிய எலிகள், மூங்கில் பூக்கள் தீர்ந்ததும் நெல் வயல்களில் புகுந்து அழித்து அதன் தொடர்ச்சியாகப் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்றும், அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தைத் தொடர்ந்து, அதை உள்ளூர் அரசு சரியாகக் கையாளாததால் ஆயுதப் புரட்சி வெடித்து மிசோ நேஷனல் ஃபிரண்ட் என்ற இந்திய எதிர்ப்புக் குழு உருவானது என்றும் செய்தியில் கேட்டேன்.
இப்பொழுது கூகிள் தேடியில் நிறைய விஷயங்கள் கிடைத்தன. சில சுட்டிகள்:
When The Bamboo Flowers!
India braces for fall-out from flowering bamboos
Northeast’s Money Grass and Opportunity for Peace
ஏற்கெனவே நட்ட மூங்கில்கள் பூப்பதின் உச்சத்தை இப்பொழுது அடையத் தொடங்கியிருக்கும். இம்முறை அரசுகள் இதை கவனமாகக் கையாண்டு பஞ்சங்கள் ஏதும் வராது பார்த்துக் கொள்ளும் என்று வேண்டுவோம்!
நம் நாட்டைப் பற்றி நாம் அறியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன பாருங்கள்!
Friday, February 04, 2005
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு இந்த மூங்கில் பூக்கும் செய்தி புதுமையானதாகவும் ஒரு அறிவியல் புதிராகவும் படுகிறது. இவைகள் தொடர்பு கொள்ளும் முறை ஆராயப்பட வேண்டியது. இது போல மற்ற தாவரங்கள் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுகின்றது. கூகிளிட்டு பார்க்கின்றேன்.
ReplyDeleteநன்றிகள்.
By: Balaji-paari
//அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தைத் தொடர்ந்து, அதை உள்ளூர் அரசு சரியாகக் கையாளாததால் ஆயுதப் புரட்சி வெடித்து மிசோ நேஷனல் ஃபிரண்ட் என்ற இந்திய எதிர்ப்புக் குழு உருவானது//
ReplyDeleteஇதற்கு பின் வரவேண்டியது..
//மத்திய அரசு வட கிழக்கு இந்தியாவில் மூங்கில் பூக்களால் ஏற்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த ரூ. 105 கோடிகள் செலவிட இருப்பதாக...//
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅன்புள்ள பத்ரி,
ReplyDeleteமூங்கில் பூக்கும் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிகிறது! அவ்வளவு உயரத்தில் இருக்கும்
பூக்களையா எலிகள் தின்ன வருகின்றன?
மலேசியாவிலும் மூங்கில்கள் நிறைய இருக்கின்றனவே, அவற்றால் ஏற்படும் பிரச்சனையை அவர்கள் எவ்விதம்
சமாளிக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்!
என்றும் அன்புடன்,
துளசி.
சுவாரஸ்யம்!! நாளை இங்கே எலிகளைப் பார்க்கப் போகும்போது நியாயம் கேட்கிறேன், என்னடாது உங்க சொந்தக்காரங்க எங்க ஊர்ல லொள்ளு பண்றாங்களாமே என்று ;)
ReplyDeleteபத்ரி
ReplyDeleteஎனக்கும்
மூங்கில் பூப்பதும் அதனாலான பிரச்சனையும்
புதிதுதான்.
நட்புடன்
சந்திரவதனா