Tuesday, February 15, 2005

பாலசந்தரின் சிந்துபைரவி

சிந்துபைரவிநேற்று கோவை P.S.G கலை, அறிவியல் கல்லூரியில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இயக்குனர் பாலசந்தரின் சிந்துபைரவி படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனமும், P.S.G கலை, அறிவியல் கல்லூரியும் செய்துகொண்ட ஓர் industry-institution initiative ஒப்பந்தம் காரணமாக அக்கல்லூரியில் ஒரு ஸ்டுடியோ, ரூ. 2 கோடி அளவில் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் Mass Communication, Visual Communication, Electronic Communication மாணவர்கள் இந்த ஸ்டுடியோவைப் பயன்படுத்தி படங்களை இயக்கலாம், post-production வேலைகளைச் செய்யலாம். கவிதாலயா நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும். அதனைத் தொடர்ந்து 14-16 பிப்ரவரி 2005-ல் P.S.G கல்லூரியில் பாலசந்தரது படங்கள் காண்பிக்கப்படும் திரை விழாவும், சிந்துபைரவி திரைக்கதை வெளியிடல் விழாவும், பாலசந்தருடனும், பிற சினிமா கலைஞர்களுடனும் மாணவர்கள் நேருக்கு நேர் கலந்து பேசவும், கருத்தரங்குகளும் ஏற்பாடி செய்யப்பட்டிருந்தன. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சுதாங்கன் ஆகியோர் பாலசந்தர் படங்கள் பற்றி (இன்று) ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்கின்றனராம்.

கே.பாலசந்தர்நான் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். வைரமுத்து வெளியிட, விவேக் பெற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 400 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பாலசந்தர் மூன்று நாள்கள் கோவையிலேதான் இருக்கிறார். இன்று மாலை 7.00-9.00 மணிக்கு விஜயா பதிப்பகம் புத்தகக் கடையில் சிந்துபைரவி புத்தகம் வாங்குபவர்களுக்கு கையெழுத்திட்டுத் தருகிறார்.

இயக்குனர் வஸந்த், விவேக், வைரமுத்து ஆகியோர் பாலசந்தர் பற்றிப் பேசினர். வஸந்த் தான் பாலசந்தரிடம் துணை இயக்குனராகச் சேர்ந்தது முதற்கொண்டு, அவரிடம் கற்றுக்கொண்டவற்றைப் பற்றிப் பேசினார். பாலசந்தர் முத்திரை பற்றியும், எப்படி சில விஷயங்களை அற்புதமாக படங்களில் கையாண்டிருக்கிறார் என்பதற்கு நிறைய உதாரணங்களைக் கொடுத்தார். அவர் எழுதிவைத்திருந்ததை வாங்கி பின்னர் இங்கே போடுகிறேன்.

விவேக், வஸந்த்விவேக் பேசத் தொடங்கியதும் சிரிப்பலை பரவியது. விவேக் தன் பேச்சுக்களுக்கு நிறையவே உழைக்கிறார் என்று தெரிய வந்தது. ஒரு நோட்டுப்புத்தகத்தில் நிறைய எழுதிக்கொண்டு வந்திருந்தார். விவேக்கும் பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவராம். பேச்சு நடந்த நேரத்தில் நிறையவே சிரித்தேன். ஆனால் இப்பொழுது ஞாபகத்தில் எதுவுமில்லை. கே.பி என்ற இனிஷியல்களை வைத்து நிறைய வார்த்தை விளையாட்டுகளை விளையாடினார். சில எடுத்துக்காட்டுகள்:

காவாசாகி பஜாஜ் (K.B) விளம்பரம் ஒன்றில் ஒரு பைக் சிறுத்தையாக மாறுவது போல நம்ம கே.பி படமெடுக்கறப்ப சிறுத்தையா மாறிடுவார்.

ரஜினியையும், கமலையும் சேர்த்து இனிமேல் நடிக்க வைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. இந்தக் கொம்பனால் மட்டும்தான் முடிந்தது - அதுதான் கொம்பன் பாலசந்தர் - கே.பி

நடுநடுவே காதலர் தினத்தை வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்களை நிறையவே கலாய்த்தார். பசங்களை வேண்டும்போதெல்லாம் கைதட்ட வைத்தார், விசிலடிக்க வைத்தார்.

வைரமுத்துவைரமுத்து சிம்மக்குரலில் பேசத்தொடங்கினார். எப்படி தன் பாடல்கள் பாலசந்தர் போன்றவரது படங்களுக்கென்றால் எப்பொழுதும் இருப்பதைவிட சிறப்பாக வருகிறது என்றார். இதையே கவிஞர் கண்ணதாசனும் கூடச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். பாலசந்தர் தன் சில பாடல்களில் சில மாற்றங்களைச் சொன்னதனால் சிறப்பு கூடியது என்பதை (ஏதோ ஒரு பாடலில்) "வெக்கத்தால் செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு" என்ற வரிகளை உதாரணம் காட்டிச் சொன்னார். முதலில் எழுதியது "செவ்வந்திப் பூவு செவப்பாச்சு" என்ற வரிகளாம். பாலசந்தர் இந்த வரிகளில் வைரமுத்து என்ன சொல்ல வருகிறார் என்று கேட்க, வைரமுத்து அதற்கு "வெட்கப் படுவதால் இந்தப் பெண் உடல் சிவப்பாகிறது" என்று சொல்ல, பாலசந்தர் ஒரு 'ம்'ஐச் சேர்க்க முடியுமா என்று கேட்டாராம். அந்த 'ம்'ஐப் 'பூவு'க்குப் பக்கத்தில் சேர்த்ததால் "செவ்வந்திப் பூவும்" என்று அவள் உடல் சிவக்கும்போது தலையில் வைத்திருந்த மஞ்சள் நிற செவ்வந்திப் பூவும், சிவந்து காணப்பட்டது என்ற பொருள் வந்ததாம். (படம் 'அச்சமில்லை, அச்சமில்லை' என்று நினைக்கிறேன்.) ... சினிமா எனக்கு அப்பாற்பட்டது, அதனால் இந்த விளக்கம் கொஞ்சம் என் தலைக்கு மேல் போய்விட்டது. (நான் சொன்ன வரிகளில் தவறும் இருக்கலாம்.)

தான் எழுதிய பாடல்களில் மூன்று பாடல்களைத்தான் தான் முழுவதும் விரும்பியமாதிரி இயக்குனர்கள் படமாக ஆக்கியுள்ளார்கள் என்று ஒரு பட்டியல் கொடுத்தார். அவையாவன:

படம்: அலைகள் ஓய்வதில்லை, இயக்குனர்: பாரதி ராஜா, பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
படம்: பம்பாய், இயக்குனர்: மணிரத்னம், பாடல்: உயிரே
படம்: புன்னகை மன்னன், இயக்குனர்: பாலசந்தர், பாடல்: என்ன சத்தம் இந்த நேரம்

பிறகு "என்ன சத்தம் இந்த நேரம்" பாடலைப் படமாக்கியதைப் பற்றி வியந்து பேசினார்.

மூடநம்பிக்கைகள் மிகுந்திருந்த சினிமா உலகத்தில் படமெடுப்பவர்கள் தனது முதல் படத்தில் "மீண்டும் வெற்றி", "நான் வெல்வேன்", "திருமால் பெருமை" போன்று படங்களுக்குப் பெயர் வைத்தது போலல்லாமல் தனது முதல் படத்துக்கு தைரியமாக "நீர்க்குமிழி" என்று பெயர் வைத்தவர் என்று பாராட்டினார்.

மிகவும் நேரமாகிவிட்டதால் மேடையிலிருந்து எஸ்கேப் ஆக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் இரவு சேரன் எக்ஸ்பிரஸைப் பிடிக்க முடியாது.

கடைசியாகப் பேசிய பாலசந்தர், தான் இதுவரை எடுத்துள்ள 100 சொச்சம் படங்களை விட, சிந்துபைரவி திரைக்கதை நூலாக வருவதில் எக்கச்சக்கப் பெருமைப் படுவதாக சொன்னாராம். அவருக்கு இது முதல் புத்தகம். இனி, மேலும் பலவும் வரும்.

21 comments:

  1. Badri, PSGCAS is where I started my college life and was a place which shaped me up a lot. Glad to know you visited there. Hope you had great time. Is Dr.P.Sampathkumar the principal now? I salute the professors and lecturers there for making me of what I am today. Thanks and regards, PK Sivakumar

    ReplyDelete
  2. பத்ரி, என்னே ஒற்றுமை! கே. டி.வியில் 'சிந்து பைரவி' பார்த்துக் கொண்டே கணினியை இயக்குகிறேன். இங்கே அது சம்மந்தமான உங்களின் பதிவு. :-)

    /விவேக்கும் பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவராம்/
    ஊரறிந்த விஷயம் பத்ரிக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். விவேக் அறிமுகமான படம் பாலசந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்'.

    நிகழ்ச்சிப் பற்றிய உங்களின் குறிப்புகள் வழக்கம் போலவே அருமை. அதுசரி, பேசியவர்களில் ஒருவராவது 'சிந்துபைரவி' படத்தைப் பற்றி சிலாக்கியமாக / சுவாரஸ்யமாக பேசினார்களா? ;) (படத்தை அனுபவித்துப் பார்த்துக் கொண்டு எழுதும்பொழுது இந்த கேள்வி இயல்பாக வருகிறது)

    --ராஜா

    ReplyDelete
  3. பத்ரி, என்னே ஒற்றுமை! கே. டி.வியில் 'சிந்து பைரவி' பார்த்துக் கொண்டே கணினியை இயக்குகிறேன். இங்கே அது சம்மந்தமான உங்களின் பதிவு. :-)

    /விவேக்கும் பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவராம்/
    ஊரறிந்த விஷயம் பத்ரிக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். விவேக் அறிமுகமான படம் பாலசந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்'.

    நிகழ்ச்சிப் பற்றிய உங்களின் குறிப்புகள் வழக்கம் போலவே அருமை. அதுசரி, பேசியவர்களில் ஒருவராவது 'சிந்துபைரவி' படத்தைப் பற்றி சிலாக்கியமாக / சுவாரஸ்யமாக பேசினார்களா? ;) (படத்தை அனுபவித்துப் பார்த்துக் கொண்டு எழுதும்பொழுது இந்த கேள்வி இயல்பாக வருகிறது)

    --ராஜா

    [முதல்முறை இட்ட மறுமொழியைக் காணவில்லை. இது இரண்டாவது முயற்சி]

    ReplyDelete
  4. //விவேக்கும் பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவராம்.//

    புதுப்புது அர்த்தங்கள்தான் விவேக்கின் முதல் படம் என்று நினைக்கிறேன் - "இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்"!
    -மாண்ட்ரீஸர்

    ReplyDelete
  5. //விவேக்கும் பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவராம்.//

    புதுப்புது அர்த்தங்கள்தான் விவேக்கின் முதல் படம் என்று நினைக்கிறேன் - "இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்"!

    ReplyDelete
  6. Badri,

    This is a good beginning. May I request you to continue the good work with scripts of landmark movies like 'Chidambaram', 'Elippaththayam', 'pokkuveyyil' and even Chemmeen (the visual experience created by Ramu Kariath was in fact an enhancement upon the reading experience one gains from reading Thakazhi's novel),

    If you can obtain the copyright (most of these movie scripts are available in print in Malayalam), here is my offer to translate without charging anything!

    Odyssey? (What do you say)

    rgds,
    era.mu

    ReplyDelete
  7. >மூடநம்பிக்கைகள் மிகுந்திருந்த சினிமா உலகத்தில் படமெடுப்பவர்கள் தனது முதல் படத்தில் "மீண்டும் வெற்றி", "நான் வெல்வேன்", "திருமால் பெருமை" போன்று படங்களுக்குப் பெயர் வைத்தது போலல்லாமல் தனது முதல் படத்துக்கு தைரியமாக "நீர்க்குமிழி" என்று பெயர் வைத்தவர் என்று பாராட்டினார்.

    1) Thirumal Perumai' was not A.P.Nagarajan's first movie.

    2) 'Neerkkumizhi' - The MD of the moive late V.Kumar deserves equal praise. Neerkkumizhi was incidentally Kumar's first movie as MD and he commenced his work recording 'Aadi adankum vaazhkkaiyada' - considered as an inauspicious pallavi by Kodambakkam standars.

    The song was written by Vaali and Seerkazhi rendered it in his majestic voice (though Seerkazhi was a chubby cheerful person, his voice was used as Asariri in most of the movies, then!).

    Whne the song recording was about to start, there was a power breakdown in the recording studio!

    Nonetheless, Kumar went on undeterred. And now, though the MD and the singer are no longer with us, the song haunts us.

    rgds,
    era.mu

    ReplyDelete
  8. மாண்ட்ரீஸர்: 'மனதில் உறுதி வேண்டும்' தான் விவேக்கின் முதல் படம். சுகாஸினியின் தம்பியாக நடித்திருப்பார். அவரை பிரபலமாக்கியது புது புது அர்த்தங்களும், நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனமும்.

    --ராஜா

    ReplyDelete
  9. மாண்டீ, ராஜா சொல்வது உண்மை. அதில் இருக்கின்ற இன்னொரு சிறப்பியல்பு, மனதில் உறுதி வேண்டும் படம், அந்த காலக்கட்டத்தில் ஒரு பெரும்புரட்சி, கிட்டத்திட்ட 12 புதுமுகங்கள் அறிமுகப்டுத்தப்பட்ட படமது. அதில் எனக்கு தெரிந்து பிரபலமானவர்கள், விவேக், ரமேஷ் அரவிந்த் (கேளடி கண்மணியில் வரும் காதலன்), லலித குமாரி (தற்போது மிஸஸ். பிரகாஷ்ராஜ்)

    பத்ரிக்கு எங்கோ ஒரு ESP வேலைசெய்கிறது என்றுதான் நினைக்கிறேன். அ.மி விழா அமைத்தால், எஸ்.ரா, அ.மி பற்றி விகடனில் எழுதுகிறார். கே.பி விழா பார்த்து புத்தகம் வெளியிட்டால், கே டிவியில் சிந்து பைரவி படம் போடுகிறார்கள். போட்டு தாக்குங்க ( உரிமம்: அல்வாசிட்டி விஜய்)

    நாராயண்

    ReplyDelete
  10. இரா.மு, இதே போல பவர் பெயிலியர் விசயம் அன்னக்கிளி செய்யும்போது இளையராஜாவிற்கும் நடந்தது என்று சொல்வார்கள். உண்மையா? ஆனாலும், இன்னொரு விசயமும் உறுத்துகிறது. டி.எம்.எஸ் புகழின் உச்சியிலிருக்கும்போது, கடைசியாக பாடிய ஹிட்டான பாடல் "நான் ஒரு ராசியில்லா ராஜா" என்றும் சொல்வார்கள். அதன்பின் அவருக்கு இறங்குமுகம். எப்போதோ படித்து இன்னமும் மாறாமல் நினைவில் இருப்பதனால், இந்த கேள்விகள்.

    ReplyDelete
  11. சினிமா எனக்கு அப்பாற்பட்டது, அதனால் இந்த விளக்கம் கொஞ்சம் என் தலைக்கு மேல் போய்விட்டது. ஓ.... பத்ரி இதான் உங்கள் வெற்றியின் ரகசியமா? அப்போ நானும் இன்றிலிருந்து என் திரையுலகத்தொடர்பை அறுத்துக்கொள்ளப்போகிறேன். திரைத்துறையில் இருந்து யார் என்னை மறுபரிசீலனை செய்ய சொன்னாலும், செய்வதாய் இல்லை:)

    ஒரு ஸ்டுடியோ, ரூ. 2 கோடி அளவில் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் Mass Communication, Visual Communication, Electronic Communication மாணவர்கள் இந்த ஸ்டுடியோவைப் பயன்படுத்தி படங்களை இயக்கலாம், நல்ல முயற்சி/பாரட்டத்தக்க துவக்கம். இதுபோல் பலதுறைகளிலும் கல்லூரியும் தொழில் சார்ந்த நிறுவனமும் ஒத்துழைத்தால் இன்னும் பல சாதிக்க இயலும். (ஒருவேளை நானும் உருப்பட்டிருப்பேன்:)

    ஒரு கொசுறு தகவல்: இங்கு சிங்கையின் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரல் கனவைத்தேடிஎன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக அறிகிறேன். இதன்மூலம் திரைத்துறையில் ஆர்வமுள்ள சிங்கைவாசிகளுக்கு திரைத்துறையில் இருப்பவர்கள் மூலமே அவர்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப் போகிறார்கள் (இசையில் தேவா, நடிப்பில் சூர்யா.... இன்னும் பலர் உதவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது:)
    மேல் விபரங்களுக்கு...

    ReplyDelete
  12. increased availability of film scripts is welcome.
    you can consider publishing film scripts of other movies by him e.g. aval oru thodarkathai,arangetram.
    balachander entered the film world by writing dialog for a MGR film produced by sathya movies.i wonder whether there has been any attempt to critically examine a director like and his works. someone like venkatesh charkravarthy can do that.perhaps you can ask him to write a critical introduction to balachandar and his films.

    ravi srinivas

    ReplyDelete
  13. பாலசந்தரின் முக்கியமான படங்கள் அனைத்தும் வரும். அடுத்து, எப்பொழுது, எந்தப் படங்கள் திரைக்கதைகளாக வெளியாகும் என்பதை கூடிய விரைவில் தெரிவிக்கிறேன்.

    பாலசந்தரின் படங்கள் பற்றிய ஆய்வு - முக்கியம்தான். விசாரிக்கிறேன், இதை யார் செய்ய விரும்புகிறார்கள் என்று.

    --பத்ரி

    ReplyDelete
  14. //balachander entered the film world by writing dialog for a MGR film produced by sathya movies//

    Á§¸ó¾¢Ãý Å¢„Âò¾¢Öõ þ§¾ ¸¨¾¾¡ý. ¬ÃõÀ¸¡Äí¸Ç¢ø, â„¢ãÄõ, ¾í¸ôÀ¾ì¸õ, ¸¡Ç¢ §À¡ýÈ ¦Á§Ä¡ÊáÁ¡ì¸ÙìÌ ÅºÉ¸÷ò¾¡Å¡¸ þÕóÐ, ', ¾¡öìÌÄí¸û ¯îÍ즸¡ðÎõ ¦¿ï¨ºô À¢Æ¢Ôõ źÉí¸û ±Ø¾¢ À¢ýÉ÷, þÂìÌÉḠ¬É§À¡Ð¾¡ý, ¯¾¢Ã¢ôâì¸û, ÓûÙõ ÁÄÕõ §À¡ýÈ ¸¡ðº¢åÀí¸ÙìÌ «¾¢¸ Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎìÌõ À¼í¸¨Ç ±Îò¾¡÷.

    //someone like venkatesh charkravarthy can do that.perhaps you can ask him to write a critical introduction to balachandar and his films.//

    ¦ºöÂÄ¡õ ¾¡ý. ¬É¡ø, «ó¾ Ţơ×ìÌ §¸.À¡ººó¾¨Ãì ÜôÀ¢ðÎ, §¸¡ÂÓòà÷ ¸øæâ¢ø Òò¾¸ ¦ÅǢ£ðΠŢơ ±Îì¸ÓÊ¡Ð. ¦¸¡ý§É §À¡ÎÅ¡÷ :-)

    ReplyDelete
  15. //balachander entered the film world by writing dialog for a MGR film produced by sathya movies//

    Á§¸ó¾¢Ãý Å¢„Âò¾¢Öõ þ§¾ ¸¨¾¾¡ý. ¬ÃõÀ¸¡Äí¸Ç¢ø, â„¢ãÄõ, ¾í¸ôÀ¾ì¸õ, ¸¡Ç¢ §À¡ýÈ ¦Á§Ä¡ÊáÁ¡ì¸ÙìÌ ÅºÉ¸÷ò¾¡Å¡¸ þÕóÐ, ', ¾¡öìÌÄí¸û ¯îÍ즸¡ðÎõ ¦¿ï¨ºô À¢Æ¢Ôõ źÉí¸û ±Ø¾¢ À¢ýÉ÷, þÂìÌÉḠ¬É§À¡Ð¾¡ý, ¯¾¢Ã¢ôâì¸û, ÓûÙõ ÁÄÕõ §À¡ýÈ ¸¡ðº¢åÀí¸ÙìÌ «¾¢¸ Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎìÌõ À¼í¸¨Ç ±Îò¾¡÷.

    //someone like venkatesh charkravarthy can do that.perhaps you can ask him to write a critical introduction to balachandar and his films.//

    ¦ºöÂÄ¡õ ¾¡ý. ¬É¡ø, «ó¾ Ţơ×ìÌ §¸.À¡ººó¾¨Ãì ÜôÀ¢ðÎ, §¸¡ÂÓòà÷ ¸øæâ¢ø Òò¾¸ ¦ÅǢ£ðΠŢơ ±Îì¸ÓÊ¡Ð. ¦¸¡ý§É §À¡ÎÅ¡÷ :-)
    -prakash

    ReplyDelete
  16. //balachander entered the film world by writing dialog for a MGR film produced by sathya movies//

    Á§¸ó¾¢Ãý Å¢„Âò¾¢Öõ þ§¾ ¸¨¾¾¡ý. ¬ÃõÀ¸¡Äí¸Ç¢ø, â„¢ãÄõ, ¾í¸ôÀ¾ì¸õ, ¸¡Ç¢ §À¡ýÈ ¦Á§Ä¡ÊáÁ¡ì¸ÙìÌ ÅºÉ¸÷ò¾¡Å¡¸ þÕóÐ, ', ¾¡öìÌÄí¸û ¯îÍ즸¡ðÎõ ¦¿ï¨ºô À¢Æ¢Ôõ źÉí¸û ±Ø¾¢ À¢ýÉ÷, þÂìÌÉḠ¬É§À¡Ð¾¡ý, ¯¾¢Ã¢ôâì¸û, ÓûÙõ ÁÄÕõ §À¡ýÈ ¸¡ðº¢åÀí¸ÙìÌ «¾¢¸ Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎìÌõ À¼í¸¨Ç ±Îò¾¡÷.

    //someone like venkatesh charkravarthy can do that.perhaps you can ask him to write a critical introduction to balachandar and his films.//

    ¦ºöÂÄ¡õ ¾¡ý. ¬É¡ø, «ó¾ Ţơ×ìÌ §¸.À¡ººó¾¨Ãì ÜôÀ¢ðÎ, §¸¡ÂÓòà÷ ¸øæâ¢ø Òò¾¸ ¦ÅǢ£ðΠŢơ ±Îì¸ÓÊ¡Ð. ¦¸¡ý§É §À¡ÎÅ¡÷ :-)
    -prakash

    ReplyDelete
  17. பாலசந்தரின் முக்கியமான படங்கள் அனைத்தும் வரும். அடுத்து, எப்பொழுது, எந்தப் படங்கள் திரைக்கதைகளாக வெளியாகும் என்பதை கூடிய விரைவில் தெரிவிக்கிறேன்.

    பாலசந்தரின் படங்கள் பற்றிய ஆய்வு - முக்கியம்தான். விசாரிக்கிறேன், இதை யார் செய்ய விரும்புகிறார்கள் என்று.

    --பத்ரி

    ReplyDelete
  18. இப்போதான் முதல்முறையா உங்கள் வலைப்பூவைப் பார்க்கிறேன் பத்ரி.... எளிமை + இனிமை உங்கள் எழுத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது....நிறைய + நிறைவாய் தொடர்ந்து எழுதுங்கள்... ( சிங்கப்பூர் மாலன் நூல் வெளியீட்டு விழாவில், நெப்போலியனால் அன்போடு இறுக கட்டிப் பிடிக்கப்பட்ட 'அந்த' பத்ரிதானா 'இந்த' பத்ரி ? )

    அன்புடன்
    பாலு மணிமாறன்

    ReplyDelete
  19. மாலன் நூல்கள் பற்றிய பேச்சுகளின்போது அங்கு இருந்தேன். ஆனால் என்னை யாரும் அன்போடு இறுக கட்டிப்பிடிக்கவில்லை:-) என்றே நினைக்கிறேன். அன்போடு நிறையப்பேர் கை குலுக்கினர்:-)

    --பத்ரி

    ReplyDelete
  20. .. என்றே நினைக்கிறேன்னா என்ன அர்த்தம்? எதையும் திட்டவட்டமா சொல்லமுடியாத நிலைமையா? :)

    'பிரச்சனை' இல்லாத ஒரு அட்டைப்பட சந்தேகம்.:) சிந்துபைரவி அட்டைப்படத்துல போட்டிருக்கற ஸ்டில் படப்பிடிப்பின்போது தனியா எடுத்த ஸ்டில்லா இருக்குமா? இந்த காஸ்ட்யூம்ல, இந்த லொகேஷன்ல, இந்தக் காட்சிக்கு வாய்ப்பே இல்லையே படத்துல. நல்லா இருக்கு.

    ReplyDelete
  21. இன்னும் பொட்டி சரிசெய்யலையா? X-(

    மேல இருக்கற பின்னூட்டத்தின் அதி அத்யாவசிய சந்தேகங்கள் நான் எழுப்பினதாக்கும்.

    -- ஜெயஸ்ரீ.

    ReplyDelete