Friday, February 18, 2005

WTO, globalization, subsidy, patents, pharma - 1

சென்ற வாரம் சனிக்கிழமை (14 பிப்ரவரி) சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் சிறிது நேரம் செலவு செய்தேன். அன்று மாலைதான் அசோகமித்திரன்-50 விழா. அதனால் நிறைய நேரம் அங்கு இருக்க முடியவில்லை.

பேரா.குமாரசாமிபேரா.குமாரசாமி என்பவர் உலக வர்த்தக நிறுவனம் பற்றி மிக நன்றாகப் பேசினார். உலக வர்த்தக நிறுவனம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், பல்வேறு சிறுசிறு தகவல்கள் நான் இதுவரை கேட்டறியாதவை. கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பேசியிருப்பார். அவர் பேசியதிலிருந்து சிறிது சிறிதாக இங்கு (பல மாற்றங்களையும் செய்திருக்கிறேன்) தருகிறேன்.

உலகமயம், தாராளமயம் என்றால் என்ன?

ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில், விவசாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கும் வரியே tariff அல்லது இறக்குமதி வரி. உதாரணத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்படும் சிமெண்ட் ஒரு மூட்டைக்கு ரூ. 100 என்று வைத்துக்கொள்வோம். ஜெர்மனியில் தயாரிக்கப்படும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ. 75தான் ஆகிறது (இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் போக்குவரத்துச் செலவுகளையும் சேர்த்து...). தரத்திலும் ஜெர்மன் சிமெண்ட் இந்திய சிமெண்டை விட உயர்வு என்றே வைத்துக்கொள்வோம். இந்திய அரசு இறக்குமதி வரியை விதிக்காவிட்டால் என்ன ஆகும்? இந்திய நுகர்வோர் அனைவரும் தரம் அதிகமான, விலை குறைவான ஜெர்மன் சிமெண்டை மட்டுமே வாங்குவர். இந்திய சிமெண்ட் ஆலைகள் உற்பத்தித் திறனை இழந்து, நசிந்து போகும். தொழிலாளர்கள் வேலையின்றித் திண்டாடுவர்...

ஏன் ஜெர்மன் தொழிற்சாலைகளால் குறைந்த காசுக்கே சிமெண்டை உருவாக்க முடிகிறது? பல காரணங்கள் உண்டு: அதிக அளவு மூலதனம், சமீபத்தைய உயர்ந்த தொழில்நுட்பம், பிரம்மாண்டமான உற்பத்தித் திறன், அதனால் ஏற்படும் economies of scale... அதாவது எக்கச்சக்கமாக உற்பத்தி செய்வதால் ஒரு மூட்டைக்கு குறைந்த செலவாகிறது. இதுபோன்று பல காரணங்கள்.

இந்நிலையில் இந்திய அரசு என்ன செய்யும்? ஜெர்மன் சிமெண்டை அப்படியே உள்ளே விட்டால் இந்திய சிமெண்ட் துறை முற்றிலுமாக ஒழிந்துபோகும் என்பதால் ஜெர்மன் சிமெண்ட் மீது டாரிஃப் விதிப்பார்கள். ஒரு மூட்டைக்கு ரூ. 40 என்று வைப்போம். இப்பொழுது இந்தியாவில் ஜெர்மன் சிமெண்ட் ரூ. 115க்கும் (ரூ. 75 + ரூ. 40), இந்திய சிமெண்ட் ரூ. 100க்கும் கிடைக்கும். விலை குறைவு காரணமாக இந்திய சிமெண்ட் விலைபோகும்.

இப்படிச் செய்வது இந்திய நுகர்வோருக்கு எதிரானதாக இருந்தாலும், நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையில் இது சரியான செயல்தான். ஆனால் நாளடைவில் இந்த டாரிஃப் குறைக்கப்படலாம், அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படலாம் என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இந்திய சிமெண்ட் துறை உலக அளவுக்கு முன்னேற வேண்டும், உலகத் தரத்தில் உள்ள சிமெண்டை பிற நாடுகளில் கிடைக்கும் குறைந்த விலைக்கே தந்தாக வேண்டும் என்றும் ஓர் அரசு எதிர்பார்ப்பதில் தவறில்லை.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில்கள் நசியாமல் இருக்க டாரிஃப் முறையை அமல்படுத்தியுள்ளனர். 1948-ல் இருபத்தி ஐந்து நாடுகள் ஒன்று சேர்ந்து GATT என்ற அமைப்பை உருவாக்கின. GATT என்பது General Agreement on Tariff and Trade. இந்த அமைப்பில் அமெரிக்க, பல ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுடன், அப்பொழுதுதான் விடுதலை பெற்றிருந்த இந்தியாவும் அடக்கம்.

டாரிஃப் என்பது வெளிப்படையாக விதிக்கப்படும் ஒரு வரி. ஆனால் இதைப்போலவே ஒரு நாட்டின் தொழிலைப் பாதுகாக்க வேறு சில முறைகளும் புழக்கத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் கோட்டா அல்லது ஒதுக்கீடு. அதாவது ஒரு நாட்டிலிருந்து இந்த அளவுக்குத்தான் பருத்தி ஆடைகள் இறக்குமதி செய்யப்படலாம் என்று முன்னதாகவே ஒவ்வொரு நாடும் முடிவு செய்துகொண்டு அதன்படி நடக்கும். இதன்படி (உதாரணத்துக்கு - உண்மை நிலவரமில்லை) இந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளும் பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்யக்கூடியனவாக இருந்தாலும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து $100 மில்லியனுக்கு மேல் வாங்காது. அதே போல பங்களாதேஷிடமிருந்து $75 மில்லியனுக்கு மேல் வாங்காது. மற்றொரு முறை - உரிமம் பெற்றவர்களிடமிருந்துதான் இறக்குமதியை அனுமதிப்பது. இந்த உரிமம் வழங்குவதை சரியாகக் கையாளுவதன் மூலம் ஒரு நாட்டின் அரசு தாராள வர்த்தகத்தைத் தடுக்கும். உதாரணத்துக்கு இந்தியா தன் நாட்டுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய வேண்டுமானால் தன்னிடம் முன் உரிமம் வாங்கியிருப்பவர்களால் மட்டும்தான் செய்யமுடியும் என்று தீர்மானிக்கலாம். அதன்பின் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிமம் தராமல் கொரியா உற்பத்தியாளர்களுக்கு மட்டும் தரலாம். அல்லது இன்னொரு நாட்டுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி நடக்கலாம். உதாரணத்துக்கு கொரியா இந்தியாவிலிருந்து வாழைப்பழங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கிறது என்றால், அதற்கு பதிலாக கொரியாவிலிருந்து செல்பேசிகளை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி தருவது.

இப்படிப்பட்ட டாரிஃப், டாரிஃப் அல்லாத தடைகள் (மேலே சொன்னவை) ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி, பின் முற்றிலுமாக ஒழித்து, நாடுகளுக்கு இடையே தாராளமான தடையில்லா வர்த்தகம் (free trade) நடத்த ஏற்பாடு செய்வதுதான் GATT அமைப்பின் குறிக்கோள்.

இதற்கென GATT அமைப்பின் அமைச்சர்கள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். (Round of talks என்று சொல்வார்கள்.)

இந்தத் தடையில்லா வர்த்தகம் பற்றி இருவேறு எண்ணங்கள் உண்டு. அது நீங்கள் வளர்ந்த நாட்டைச் சேர்ந்தவரா, அல்லது வளரும் நாட்டைச் சேர்ந்தவரா என்பதைப் பொறுத்தது. வளர்ந்த நாடு, தன் நாட்டின் வியாபார நிறுவனங்களுக்கு பரந்த சந்தையை எதிர்பார்க்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள்தொகை அப்படியே உள்ளது, அல்லது குறைய ஆரம்பித்து விட்டது. ஆனால் உற்பத்தித் திறனோ அதிக அளவில் உள்ளது. கையில் தேவையான அளவு மூலதனமும் உள்ளது. தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். இந்தக் காரணங்களால் குறைந்த விலையில் அதிகமான பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது. எனவே இந்தப் பொருள்களுக்கான சந்தையாக வளரும் நாடுகளை எதிர்பார்க்கிறார்கள். வளரும் நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ளது.

வளரும் நாடுகளோ, தங்களது சந்தையைக் காக்க முயற்சி செய்கின்றனர். மூலதனம் குறைவு, நுட்பத்தேர்ச்சித் திறன் குறைவு ஆகிய காரணங்களால் எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து வாங்கிவிட்டால் நாளை உள்நாட்டில் உற்பத்தித் திறனே இல்லாது அழிந்துபோய்விடும். எனவே வளரும் நாடுகள் எப்பொழுதுமே தமது சந்தையை வெளியாருக்குக் கொடுப்பதை தயக்கத்துடனேயே செய்கிறார்கள்.

வளர்ந்த நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா - வளரும் நாடுகளை பலமுறை மிரட்டியே சந்தைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். மிகச்சிறிய நாடாக இருந்தால் மிரட்டினால் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு ஓர் ஏழை நாடு - ஆப்பிரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அங்கு பணக்கஷ்டம். அந்த நாட்டுக்கு பண உதவி செய்வதாகவும், அதற்கு பதிலாக அவர்கள் தன் நாட்டின் வர்த்தகத்தில் அமெரிக்க கம்பெனிகளுக்கு தங்கு தடையின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வற்புறுத்துகிறது. அந்த ஆப்பிரிக்க நாடும் ஏற்றுக்கொள்கிறது. அவ்வளவுதான். சில வருடங்களில் அந்த ஆப்பிரிக்க நாட்டின் எல்லாப் பொருள்களும் - உடுக்கும் உடை, குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பவுடர், பூசிக்கொள்ளும் நகச்சாயம், போட்டுக்கொள்ளும் டயாபடீஸ் ஊசி - என்று எல்லாமே அமெரிக்காவிலிருந்து வந்தது என்றாகி விடுகிறது. ஏனெனில் உள்ளூர் கம்பெனிகளால் போட்டியிட முடியவில்லை.

நாளை டாலர் சர்ரென்று ஏறுகிறது. எதையுமே ஆப்பிரிக்க நாட்டில் உள்ளவர்களால் வாங்க முடியவில்லை. உடனே இந்த ஏழை நாட்டில் லாபம் வராதென்று அமெரிக்க நிறுவனங்கள் கடையைக் கட்டி, வேறு ஒரு நாட்டை நோக்கிச் செல்கிறார்கள். விளைவு? பால் பவுடர், நகச்சாயம், மருந்துகள் என்று எதுவுமே கிடையாது. உள்ளூர் உற்பத்தி மொத்தமாக அழிந்து விட்டது.

எனவே வளரும் நாடுகள் தன்னிறைவு அடைவது, தம் சந்தையைப் பாதுகாப்பது என்று பேசுவது நியாயம்தானே? ஆனால் வளர்ந்த நாடுகளுக்கு இது கோபத்தை வரவ்ழைக்கிறது. இடையில் உள்ள நாடுகளுக்கு?

இடையில் என்றால் சில துறைகளில் நல்ல வளர்ச்சி, சில துறைகளில் படுமோசம். இந்தியாவை எடுத்துக்கொள்வோம். தடையற்ற வர்த்தகம் என்று சில இடங்களில் பேசியாக வேண்டும். இந்தியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் வேண்டும். ஆனால் பல இடங்களில் - முக்கியமாக விவசாயத்தில் - தடைகள் தேவை. இல்லாவிட்டால் இந்திய விவசாயத் துறையின் பாடு திண்டாட்டம். எனவே இந்தியாவின் நிலை (சீனாவின் நிலையும்) சற்றே மாறுபட்டது. சில இடங்களில் தடை வேண்டும். சில இடங்களில் தடை கூடாது. அமெரிக்காவின் நிலையோ வேறு மாதிரியானதாக இருக்கும். எங்கெல்லாம் இந்தியா தடையை எதிர்பார்க்கிறதோ அந்த இடங்கள் அமெரிக்காவுக்கு ஏற்புடையதாக இருக்காது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா தன் நாட்டுக்கு தாய்லாந்து, இந்தியா ஆகிய இடங்களிலிருந்து வரும் இறால் இறக்குமதியின் மீது டாரிஃப் விதித்தது. அதற்குக் காரணம் அமெரிக்காவின் இறால் பிடிக்கும் மீனவர்கள் கொடுத்த புகார்தான். அதற்கு சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க இரும்பு கம்பெனிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரும்பு எஃகு மீது இறக்குமதி வரி விதித்தது.

அமெரிக்கா ஒன்றும் முற்றுமுழுதான தாராள, தடையற்ற வர்த்தகத்தைப் பேணுவதில்லை. தன் நாட்டு நிறுவனங்களுக்கு ஏதேனும் தொல்லை என்றால் உடனடியாக அவற்றைக் காக்கும் விதமாக வரி விதிப்பதில் அமெரிக்கா சிறிதும் அஞ்சுவதில்லை. சொல்லப்போனால் அமெரிக்க சட்டங்களும் WTO விதிமுறைகளும் ஒத்துப்போகாவிட்டால் அமெரிக்க சட்டங்களே பொருந்தும் என்று அமெரிக்கா ஒரு சட்டமே இயற்றியுள்ளது! ஆனால் WTO பிற நாடுகள் இவ்வாறு செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது.

ஆகா... நாம் WTO எங்கிருந்து வந்தது என்று பார்க்கவில்லையே? அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

11 comments:

 1. அருமையான விளக்கங்கள். பொருளாதாரப் பாடம் நான் எடுத்துப் படிக்கவில்லை. ஓரளவுக்கு புத்தகங்கள், இணையம் வழி அறிந்தவைதான்! அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறோம்.

  //WTO பிற நாடுகள் இவ்வாறு செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது//

  அந்தப் பயலுங்க அப்படித்தான் சொல்வானுங்க..வலியவன் எளியவனை எள்ளி நகையாடுதல் எத்தனை நாளைக்கு? அவனுகளுக்கு ஒரு சட்டம். மத்தவனுங்களுக்கு ஒரு சட்டம்! ஈராக்கை இந்தியா அடிச்சு புடிச்சிருந்தா லபோ திபோன்னு கத்திருப்பானுங்க...

  அன்புடன்,
  மூர்த்தி.

  ReplyDelete
 2. With formation of WTO in 1994 the situation has changed.So it does not make much sense to talk of GATT rules today as it is the rules of WTO which are binding.USA had to amend its laws so that they are comptaible with WTO
  agreements.In WTO dispute settlement export subsidies made available to US based corporations, tariffs on steel imports into USA
  were declared to be not compatible with WTO
  agreements.

  ReplyDelete
 3. the last post was by me.i dont give importance to SJM on these issues.delhi science forum, left oriented groups have done more work and have been working consistently.
  third world network,south centre,unctad,public citize,cptech - if you visit their websites you may find publications on wto issues.in tamil you may find some translations published by pooualakin nanbargal on these issue.i had written in tamil on these but that was in 90s.
  ravi srinivas

  ReplyDelete
 4. http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=38&fldrID=1

  அன்புடன்,
  மூர்த்தி.

  ReplyDelete
 5. ரவி: எனக்கு எந்தக் குழுவாக இருந்தாலும் விருப்பு/வெறுப்பு கிடையாது. புதிதாகத் தெரிந்து கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. WTO பற்றி SJM சொன்னது புரிவது போல இருந்தால் அது போதும் எனக்கு. ஆனாலும் இடதுசாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தேடிப் பார்ப்பேன். WTO தொடர்பான விஷயங்களில் இடதுசாரிகளும் SJM-ம் இணைந்து செயல்படுதல் நலம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

  எமர்ஜென்சி காலத்தில் இடதுசாரிகளும், RSS-ம் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

  --பத்ரி

  ReplyDelete
 6. சிமெண்ட் விலை உதாரணத்தில் உற்பத்தி விலை குறைவு மட்டுமில்லாமல், வளர்ந்த நாடுகள் தொழில்களுக்குக் கொடுக்கும் மானியங்கள்(Subsidies) எப்படி சர்வதேசச் சந்தையில் இந்த நாடுகளில் உற்பத்தியான பொருட்களின் விலையைக் குறைவாக வைத்திருக்க உதவுகிறது என்று அடுத்த கட்டத்தில் விளக்கலாம்.
  (உதாரணம்: ஐரோப்பாவில் சர்க்கரை உற்பத்தி, அமெரிக்காவில் விவசாயம் - இவற்றுக்கு அளிக்கப்படும் மானியங்கள்)

  -பரி

  (blogger commenting as a whole sucks!)

  ReplyDelete
 7. ÌÕã÷ò¾¢Â¢ý SJM ³ ò¾¡ý ͧ¾º¢ ŢƢôÒ½÷× þÂì¸õ ±ýÚ ¦ÀÂ÷òÐ ±Øи¢È£÷¸û , ±ýÚ ÓýɧÁ§Â ¦¾Ã¢ó¾¢Õó¾¡ø, þó¾ô §À¡Šð¨¼ ÀÊò¾¢Õ츧ŠÁ¡ð§¼ý. [¿¢ü¸... þôÀÊ ´ý¨È ÁðÎõ ¾¢ÈóРŢΧÅý ÁüÈ ±øÄ¡ÅüÈ¢Öõ ¸¾¨Å ãÊì ¦¸¡û§Åý ±ýÚ ¦º¡øÅÐ ±ýÀ¨¾ ÌÕºÃñ¾¡Š, one cannot become half pregnant ¾ý áÄ¢ø ( India Unbound) ±ýÈ áÄ¢ø ¿ì¸Ä¡¸ì ÌÈ¢ôÀ¢ð¼Ð ¿¢¨É×ìÌ ÅóÐ ¦¾¡¨Ä츢ÈÐ :-).] ¿¡ý ͧ¾º¢ þÂì¸òÐìÌ ±¾¢Ã¢ þø¨Ä. ¦Åû¨Ç측Ã÷¸Ç¢ý «Ã¡ƒ¸ ¬ðº¢ì¸¡Äò¾¢ø, ¿õÓ¨¼Â ¯ûé÷ò ¦¾¡Æ¢ø ±ó¾ «Ç×ìÌ À¡¾¢ì¸ôÀð¼Ð, ±ò¾¨É ¦¿ºÅ¡¨Ä¸û þØòÐ ã¼ôÀð¼Ð, ¨¸Å¢¨Éì ¸¨Ä¸û À¡¾¢ì¸ôÀð¼Ð, ±ýÀÐ ¿¡õ ÀÊì¸ì ¸¢¨¼ì¸¢È ÅÃÄ¡Ú. ¯ûéâø þÕì¸¢È ¦¾¡Æ¢ø¸¨Çì ¸¡ôÀ¡üÚõ Åñ½õ, «¨Áó¾ ¦¾¡Æ¢ø Ð¨È À¡Ä¢º¢¸Ùõ, ºð¼ ¾¢ð¼í¸Ùõ ÅçÅü¸ò ¾ì¸§¾. þÅüÚìÌ ¸¡Ä ÅÃõÒ ¯ñÎ. ¦¾¡Æ¢ø¸¨Ç ÅÇ÷츢§Èý §À÷ÅÆ¢ ±ýÚ, «Ãº¡í¸õ, Á¸¡ §Á¡ºÁ¡É §º¨Å¸¨Ç, ¦¾¡¼÷óÐ Áì¸ÙìÌ «Ç¢òÐì ¦¸¡ñÊÕì¸ ÓÊ¡Ð

  prakash

  ReplyDelete
 8. நல்ல பதிவு. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  -NS

  ReplyDelete
 9. மூர்த்தி : //அந்தப் பயலுங்க அப்படித்தான் சொல்வானுங்க..வலியவன் எளியவனை எள்ளி நகையாடுதல் எத்தனை நாளைக்கு? அவனுகளுக்கு ஒரு சட்டம். மத்தவனுங்களுக்கு ஒரு சட்டம்! ஈராக்கை இந்தியா அடிச்சு புடிச்சிருந்தா லபோ திபோன்னு கத்திருப்பானுங்க... //


  prakash: //[¿¢ü¸... þôÀÊ ´ý¨È ÁðÎõ ¾¢ÈóРŢΧÅý ÁüÈ ±øÄ¡ÅüÈ¢Öõ ¸¾¨Å ãÊì ¦¸¡û§Åý ±ýÚ ¦º¡øÅÐ ±ýÀ¨¾ ÌÕºÃñ¾¡Š, one cannot become half pregnant ¾ý áÄ¢ø ( India Unbound) ±ýÈ áÄ¢ø ¿ì¸Ä¡¸ì ÌÈ¢ôÀ¢ð¼Ð ¿¢¨É×ìÌ ÅóÐ ¦¾¡¨Ä츢ÈÐ :-).] //


  இந்தியா மட்டும் அல்ல அனைத்து நாடுகளும் இதைத்தான் செய்கின்றன. அது தான் நல்லதும் கூட. ஆனால் இந்தியா செய்ய முனைந்தால் மட்டும் அது பலருக்கு "நக்கலாக" தெரியும்.

  அன்புடன்,
  கணேசன்

  ReplyDelete
 10. பிரகாஷ்: என் பதிவில் எதையுமே நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. யாரையுமே படியுங்கள் என்றும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது அசோகமித்திரன் சொல்வது போல படிப்பவன் மீதான வன்முறை. எனக்கு விருப்பமானவற்றைத்தான் நான் எழுதுகிறேன்.

  மற்றபடி, கண்களைச் சுற்றியுள்ள திரையை விலக்கி, சற்று ஆழ்ந்து படித்திருந்தீர்களென்றால் நான் ஒருவருடைய பேச்சைக் கேட்டுவிட்டு, அதனைப் பற்றி சற்று மேலும் தெரிந்து கொண்டு அதைப்பற்றிய என் புரிதலை எழுதுகிறேன் என்பது விளங்கும்.

  மேலும் நான் சுதேசி என்னும் ஐடியாவைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

  மற்றபடி குருசரண் தாஸ் சொன்ன கமெண்ட் பற்றி எனக்கு இப்பொழுதைக்குச் சொல்ல ஒன்றும் இல்லை. அது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டால் நான் அவருக்கு தீங்கிழைத்தவனாவேன்.... அவர் எந்த context-ல் அதைச் சொல்லியிருக்கிறார் என்று தெரியாதல்லவா. அவரது இரண்டு புத்தகங்களும் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்க வேண்டும்.

  --பத்ரி

  ReplyDelete
 11. badri, left and rss may cooperate on some issues. i consider views of sjm to be more problematic than that of the left.left atleast has some theoritical basis whereas sjm does not seem to have one.organisations like napm and persons like vandana shiva are more consistent in their
  views.sjm has a piecemeal approach and after going through their site i found that they have nothing to say on major issues.let me try to write in detail on these soon.
  ravi srinivas

  ReplyDelete