அடுத்த வாரம் முதல் குமுதத்தில் ஜெயமோகன் ஒரு தொடர் எழுதவிருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.
ஏற்கெனவே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிவரும் கதாவிலாசம் என்னும் தொடர் விகடனில் வந்துகொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் அசோகமித்திரன் பற்றி. அசோகமித்திரனின் புகழ்பெற்ற நாவலான கரைந்த நிழல்கள், அற்புதமான சிறுகதையான புலிக்கலைஞன் இரண்டும் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இந்தத் தொடர் தமிழக எழுத்தாளர்களைப் பற்றியது.
மனிதன் கடவுளைப் படைத்தானா?
2 hours ago
குமுதம் வாசகர்களின் தரத்தை கூட இணைய வாசகர்களிடம் இல்லை என்கிற கட்டுரையை ஜெயமோகனிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம். :-))
ReplyDeleteBy: suresh kannan
nannaaa
ReplyDeleteஏற்கனவே திண்ணையில் அறிவியல் சிறுகதை வரிசை என்று எழுதும் அவர் இனி குமுதத்திற்காக ஒருபக்க கவர்ச்சி கதை விறுவிறுப்பாக எழுதுவார் என்று நம்பலாம்.
ReplyDeleteவரவேற்கப்படவேண்டிய விஷயம். வெகுஜன எழுத்துக்களுக்கும் சிறுபத்திரிகை எழுத்துக்களுக்குமுள்ள இடைவெளியைக் குறைக்க உதவவே செய்யும் இது. வேறொரு விதமாகவும் யோசித்துப் பார்க்கையில், கல்கி, சுஜாதா போன்று வெகுஜனப் பத்திரிகைகளின் போக்கை நிர்ணயித்த/செலுத்திய தனிப்பட்ட ஜாம்பவான்கள் யாரும் தற்போதைய வெகுஜனப்பத்திரிகை சூழலில் (சுஜாதாவுக்குப் பிறகு) இல்லாதது எஸ்.ரா, ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் வெகுஜனப்பத்திரிகைகளில் எழுதுவதற்கு இணக்கமான சூழலை உருவாக்கியதா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. பார்க்கலாம்....
ReplyDelete'வரவேற்கப்படவேண்டிய...' என்று தொடங்கும் அனானிமஸ் பின்னூட்டம் என்னுடையது - குழப்பத்தைப் பொறுத்தருள்க...
ReplyDeleteவெகுஜனபத்திரிகை சூழலில் எழுதாதது இவர்கள் அதன்மீது வைத்திருந்த காழ்ப்புணர்ச்சிதான் காரணம் அதற்கு ஊட்டம் கொடுப்பதுபோல் சிறுபத்திரிகை குழுக்களையும் நாம் கண்டிப்பாக சொல்லவேண்டும். எனினும் வரவேற்கிறோம் சிறந்த படைப்புகளை ஜெயமோகன் படைக்கட்டும்.
ReplyDelete