ஸ்வதேஷி ஜாகரன் மஞ்ச் எனப்படும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம், 12 பிப்ரவரி 2005, சனிக்கிழமை அன்று சென்னையில் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை, அறிவியல் பெண்கள் கல்லூரி, 11-13, துர்காபாய் தேஷ்முக் சாலை, அடையார், சென்னை (ஆந்திர மகிள சபா எதிரில்). நேரம்: காலை 9.30 முதல் மாலை 4.30 வரையில்.
காலையில் இரண்டு முக்கியமான பேச்சுகள் உள்ளன.
1. உலக வர்த்தக அமைப்பும், உலகமயமாதலும், காப்புரிமையும் - ஒரு பார்வை : குமாரசுவாமி.
2. இந்தியச் சூழலில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் - முரளிதரன்
இதைத்தவிர சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், கலந்துரையாடலும் நடைபெறும்.
கலந்துகொள்வதற்குக் கட்டணம் ரூ. 50. மதிய உணவும், இடையிடையே காபி, டீயும் வழங்கப்படும்.
கலந்துகொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள: ரவி வானமாமலை - 98415-91518, ஸ்ரீதர் - 94441-90977
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
16 hours ago
ஸ்வதேஸி ஜாக்ரன் ஒரு RSSசார்பு இந்துத்வ தேசிய இயக்கம் என்பதை உங்கள் அறிவிப்புடன் சின்ன குறிப்பாய் சொல்லியிருக்ககலாம். முக்கிய பேச்சுக்களில் குருமூர்த்தி இல்லையா?
ReplyDeleteஸ்வதேஷி ஜாகரண் மஞ்ச் இணையத்தளத்தின் சுட்டியையும் கொடுத்துள்ளேன்.
ReplyDeleteபின்னணி எதுவாக இருந்தாலும் மேலே சொன்ன இரண்டு பேச்சுகளும் சுவாரசியமானவை. அதில் மதக்கலப்பு எதுவும் இருக்காது என்று நம்புவோம். நான் பேச்சுகளுக்கு போகப்போகிறேன். என்ன பேசினார்கள் என்பதைப் பதிவும் செய்கிறேன்.
குருமூர்த்தி வரப்போவதில்லை என்று அறிகிறேன்.
===
பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் இடதுசாரிகளும், ஸ்வதேஷி ஜாகரண் மஞ்சும் ஒரேமாதிரியான கொள்கைகளை வைத்துள்ளனர். இந்த விஷயங்களிலாவது இருவரும் இணைந்தே போராடலாம் என்று தோன்றுகிறது.
இப்போது இருக்கும் சுழ்நிலையில் வர இயலாது என்பது தான் முடிவு. இதுவும் மாறலாம். உங்கள் பதிவுகளைப் பார்த்து தெரிந்துக் கொள்கிறேன்.
ReplyDelete"உலக வர்த்தக அமைப்பும்" என்ற தலைப்பே சொல்லிவிடுகிறது. என்க்கு தெரிந்து, கண்டிப்பாக RSS சாயல் அடிக்காமல் இருக்காது என நம்புகிறேன். என் நினைப்பு பொய்யாகும் என்ற எதிர்பார்ப்புடன்.
சொதனை பின்னூட்டம்.
ReplyDeleteTஎச்டிங்
ReplyDelete