Friday, February 04, 2005

சிந்துபைரவி

கே.பாலசந்தர்கே.பாலசந்தரின் சூப்பர் ஹிட் திரைப்படம் சிந்துபைரவி. இப்பொழுது இதன் திரைக்கதை, வசனம் புத்தகமாக வரப்போகிறது.

சில நாள்களுக்கு முன் பாலசந்தருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது நல்ல படங்கள் எதுவுமே புத்தகமாக வரவில்லையே என்றோம். அவற்றை கிழக்கு பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியிட ஒப்புக்கொண்டார்.

பிப்ரவரி 14-16 மூன்று நாள்களும் கே.பாலசந்தரைப் பாராட்டி கோயம்புத்தூரில் விழாவும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியின்போது ஒரு புத்தகமாவது வரவேண்டும் என்று முடிவு செய்தோம். முதலாவது புத்தகம் 'சிந்துபைரவி'தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. 14-ம் தேதியன்று நடிகர் விவேக் இந்தப் புத்தகத்தை வெளியிட கவிஞர் வைரமுத்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார்.

விழா பற்றிய முழு விவரங்களையும் நாளை தருகிறேன்.

சிந்துபைரவியில் சிவக்குமார், சுஹாசினி


சினிமாவின் வெவ்வேறு காட்சிகள் (scene) என்று தொடங்கி, அவற்றுக்கு one-liner எழுதி, அதை விரிவாக்கி திரைக்கதையாகவும், வசனங்களாகவும் மாற்றி எழுதியபின்னர், இப்பொழுது படித்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சிந்துபைரவி மாபெரும் இலக்கியம் என்று சொல்லமுடியாது. ஆனால் கட்டுக்கோப்பான கதை. ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்கு வெட்டிச் செல்லும்போது பாலசந்தரின் மேதைமை வெளிப்படுகிறது. வசனங்கள் ஆழமானவை, அழுத்தமானவை. இந்தப் படத்தில் எந்தப் பாத்திரமுமே தேவையற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

கதை உங்கள் அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். செவ்வியல் இசையை ரசிக்க அவ்விசைப்பாடலின் மொழி தெரிந்திருக்க வேண்டுமா? மக்களுக்குப் போய்ச்சேரும் மொழியில் பாடல்களை எழுத வேண்டுமா? மக்கள் மொழியில் பாடல்களைப் பாடாமல் வேற்று மொழியில் மட்டும் பாடல்களைப் பாடலாமா? இதுபோன்ற சில கேள்விகள், அதையொட்டிய சில விவாதங்கள். இதன் ஊடாக, இசையில் பேரறிவு படைத்த தனி மனிதன் ஒருவனின் ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகள், அந்தக் கோட்பாடுகளை அவனே உடைப்பது. தன் மனைவியிடமான அவனது உறவு, மற்றொரு பெண்ணிடமான உறவு. இந்தப் பிரச்னைகளின் தீர்வு.

ஜேகேபி, சிந்து, பைரவிஜேகேபி, சிந்து, பைரவி மூவரையும் மட்டும் வைத்து மேற்படிக் கதையை ஒரு சிறந்த சிறுகதையாக எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

இப்பொழுதெல்லாம் வெகு சில சினிமாப் படங்களே நல்ல கதைகளை முன்வைத்துச் செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. படம் எடுக்க ஆரம்பித்ததும், "அண்ணே, இப்படியொரு சீன் வச்சுக்கலாண்ணே" என்று ஜால்ராக்கள் சொன்னதும் அப்படி ஒரு சீன் உள்ளே வருகிறது. தனியாக காமெடி டிராக் வைக்கிறார்கள். பின் எடிட்டரிடம் கொடுத்து ஒரு வழி செய்து வெட்டி ஒட்டுகிறார்கள். தனியாக பாடல்கள் - பல நேரங்களில் படத்துக்கு முன்னதாகவே எடுத்து முடித்துவிடுகிறார்கள் - எடுத்து, மற்றுமொரு ஒட்டுவேலை. இந்தப் பாடல்களிலும் 'ஸ்பெஷல் அப்பியரன்ஸ்' காண்பிக்க மும்பை நடிகைகள் இறக்குமதி.

இதற்கெல்லாம் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை கதைக்கென செலவிட்டு, உருப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து, அதை சரியான திரைக்கதையாக்கி, பின் வசனம் எழுதி, அதன்பின் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் எழுதிப் படமெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கோடிக்கணக்கில் பணம் செலவு செய்பவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?

12 comments:

  1. அற்புதம். இந்த படத்தை எத்தனை தடவைகள் பார்த்திருக்கிறேன் என்று கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், எப்போது போட்ட்டாலும் உட்கார்ந்து பார்த்துவிடுவேன். என்க்கு தெரிந்து, ஒரு சினிமா படம், அந்த கதையின் விரிவாக்கமாய் ஒரு சீரியல் எடுக்கப்பட்டது (சஹானா) இந்தப் படத்திற்கு தான் என்று நினைக்கிறேன்.
    ஒரு புத்தகத்தை ரிசர்வ் செய்யவும்.

    ReplyDelete
  2. நல்ல திரைப்படம், தமிழிசையின் முக்கியத்தை விளக்கிய படம் இளைய்ராஜாவின் திறமையை அதிசயிக்க வைத்த படம். ஆனால் ஆணுக்கும் பெண்னுக்கும் இடையே ஒத்தக் கருத்து இருந்தால் அது உறவாகத்தான் வேண்டும் என்பது போலவும் உரார் வரச்சொன்னால் வருவதும் ஊரைவிட்டு போகச்சொன்னால் போவதும் என சிந்துவைப்படைத்ததன் அதுவும் பாலச்சந்தரின் படைப்பு என்பதை நாம்ப முடியவில்லை. If he wants to say that sindu will do anything to keep JKB happy then she becomes "him"?

    By: Padma Arvind

    ReplyDelete
  3. அருமையான இக்கதையின் தொடர்ச்சியாக சஹானாவை எடுத்து இவர் தான் ஈட்டிய நல்லப் பெயரைக் கெடுத்துக் கொண்டார். எப்போது முடிப்பார்கள் என்று ஆகி விட்டது அந்த சீரியல். கடைசியில் முடிவைப் பார்த்தால் கழுநீர்ப் பானையில் கை கழுவது போல ஒரு உணர்ச்சி. கடுமையான சொற்களுக்கு மன்னிக்கவும். நான் கூற நினைப்பது இன்னும் கடுமையானது.

    படம் எடுக்க ஆரம்பித்ததும், "அண்ணே, இப்படியொரு சீன் வச்சுக்கலாண்ணே" என்று ஜால்ராக்கள் சொன்னதும் அப்படி ஒரு சீன் உள்ளே வருகிறது. தனியாக காமெடி டிராக் வைக்கிறார்கள். பின் எடிட்டரிடம் கொடுத்து ஒரு வழி செய்து வெட்டி ஒட்டுகிறார்கள்."
    இந்த சீரியலில் அவ்வறுதான் நடந்தது என்று நினைக்கிறேன். தேவையில்லாமல் ராசி பாத்திரத்தைப் புகுத்தி, அதை சாவடித்து ரொம்பத்தான் படுத்தி விட்டார் மனிதர். ரேணுகா மற்றும் மதன் பாப் நடித்தப் பாத்திரங்களும் இந்த சீரியலில் ஒட்டவில்லை.

    ஆதங்கத்தில் எழுதி விட்டேன்.

    ஆன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. நன்றி பத்ரி & பாரா,

    இந்தப் படத்திலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாத ராஜா - வைரமுத்து - ஜேசுதாஸ் கூட்டணியின் பாடல்களும் புத்தகத்தில் வருமா ? (பாடல் வரிகளைதான் சொல்கிறேன் :)

    என். சொக்கன்,
    பெங்களூர்.

    By: N. Chokkan

    ReplyDelete
  5. அருமையான படம். ஆனால் அதைவிட மூவர் கூட்டணியின் பாடல்கள் அருமையிலும் அருமை. புத்தகத்தில் பாடல்கள்... குறுவட்டாக்கி கொடுப்பிங்களோ:P

    ReplyDelete
  6. கேபியின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. படத்தில் பல இடங்களில் கேபி டச் உண்டு. தமிழில் வெளியான கடைசி 'பாரம்பரிய இசை' சம்பந்தப்பட்ட படம் என நினைக்கிறேன். ' லதா மங்கேஷ்கரா வந்து பருப்பு போடி செஞ்சு தரப்போறா' போன்ற சில முகத்தில் அறையும் வசனங்களும், சின்னச்சின்ன விஷயங்களும் எடுக்கப்பட்டிருக்கும் (ஒரு வாரம் ஆகிறது என்பது சிந்துவின் வீட்டு கதவடியிலிருந்து விழும் வாரப் பத்திரிக்கை மூலம் காட்டப்படும்). இளையராஜாவின் இசை - ஓர் மைல்கல்.

    நமது சந்ததியினருக்கு டிவிடி/விசிடியில் சேமித்துவைத்து காண்பிக்க வேண்டிய தமிழ் படங்கள் 50 பட்டியலில் சிந்துபைரவியும் ஒன்று
    (மற்ற படங்களை (என்னுடைய எண்ணத்தில்) எனது வலைப்பதிவில் பட்டியலிடுகிறேன்(திருவிளையாடலும், தில்லானா மோகனாம்பாளும், வஞ்சிக்கோட்டை வாலிபன்.. போன்றவை முதல் 10ல் இடம்பெறும்)

    - அலெக்ஸ்

    ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறோம்.

    By: Alex Pandian

    ReplyDelete
  7. பாடல் வரிகள் நிச்சயம் உண்டு.

    ReplyDelete
  8. எனக்கென்னமோ சஹானா நன்றாய் எடுத்திருப்பதாய்தான் தோன்றுகிறது. மற்ற சீரியல்களை விட சஹானா எவ்வள்வோ பரவாயில்லை என்பது என் எண்ணம். கேபியின் மிடில் கிளாஸ் மனிதர்களும், அறிவுஜீவிகளும் முழுக்க முழுக்க இருக்கிற சீரியலது. உதா. ரேணுகாவின் அம்மா, மன்னி, தம்பி. அறிவுஜீவிகளுக்கு, பிரகாஷ்ராஜ், ராமகிருஷ்ணன் என சீரியல் விரியும். படத்தில் சொல்லமுடியாத நிறைய விசயங்களை இதில் தொட்டிருப்பார் (கர்நாடக வித்வான், சினிமாவிற்கு பாடலாமா?, ப்யூஷன் பாடுவது கேவலமா? ) இது என் எண்ணங்கள் மட்டுமே யாரையும் குறிப்பிட்டோ அல்லது வம்படியாய் நான் சொல்வது தான் முடிவு என்றோ இல்லை.

    ReplyDelete
  9. பாலசந்தர் என்றவுடன் பல வருடங்களாக தெரிந்து கொள்ள விரும்பிய ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு வசனம் வரும்," நாலாம் தலைமுறையைப் பார்,நாவிதனும் சொந்தக்காரானாவான்" என்று..அதாவது சாதி வேறுபாடுகளெல்லாம் மறை-குறைந்து விடும் என்பதாக.இப்படிதான் நான் பொருள் புரிந்து கொண்டேன்.

    எந்த காலத்தில் இது மாதிரி இந்தியாவில் நிகழ்ந்துள்ளது...? நான் இந்தியா போய் ரொம்ப வருடங்களாகிறது.இருந்தாலும்,அவரிடம் கேட்டு விளக்கம் அளியுங்கள்.விதண்டாவாதமாய் கேட்கவில்லை,உண்மையிலேயே எனக்கு குழப்பம்.

    "ஐயம் கேட்கிற ஆள்",பாலசந்தர் முத்துபேட்டையில் ஆசிரியராய் பணிபுரிய ஆரம்பித்த போது,அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர் (அமரர்) பேரளம் முத்தையனின் பேரன் என்பதை சொல்ல வேண்டியதில்லை ;)

    By: vassan

    ReplyDelete
  10. Àòâ : Å¡úòÐì¸û. º¢É¢Á¡ áø¸û ¦¸¡ñÎ ÅÕŨ¾ ÅçÅü¸¢§Èý. º¢óШÀÃÅ¢Ô¼ý ¿¢ýÚ Å¢¼¡Áø, §ÁÖõ ÀÄ º¢Èó¾ ¾¢¨Ã츨¾¸¨Ç, áøÅÊÅ¢ø ¦¸¡ñÎ ÅÃ×õ.

    Å¡ºý : þÐ µÅ÷. «Å÷ À¼ò¾¢ø À¡ò¾¢Ãí¸û §À͸¢È źÉò¨¾ ±øÄ¡õ, «Å÷ ¾¨Ä Á£Ð ÍÁò¾ ÓÊÔÁ¡? «Å÷ ¿øÄ Å¢ò¨¾ ¦¾Ã¢ó¾ þÂìÌÉ÷. «õÁð§¼. Ó¾ø º£É¢ø †£§Ã¡×õ †£§Ã¡Â¢É¢Ôõ ¾ü¦¸¡¨Ä ¦ºöÐ ¦¸¡û¸¢È Á¡¾¢Ã¢ À¼õ ±Îì¸×õ ¦¾Ã¢Ôõ. À¢ÈÌ, ¾ü¦¸¡¨Ä ¦ºöÐ ¦¸¡ûÇì ܼ¡Ð ±ýÚ À¢Ãº¡ÃôÀ¼õ ±ÎòÐ ¸½ì¨¸ §¿÷ ¦ºöÂ×õ «ÅÕìÌò ¦¾Ã¢Ôõ. "¸ø¡½òÐìÌ ÓýÒ ¦Àñ ¸÷ÅÁ¡¸ þÕì¸Ä¡õ , ¸÷ôÀÁ¡¸ò¾¡ý þÕì¸ì ܼ¡Ð" ±ýÚ ¸Å¢¾¡ («.´.¦¾¡¼÷¸¨¾) À¢ü§À¡ìÌò¾ÉÁ¡É ¼ÂÄ¡ì «ÊôÀ¡û. ¬É¡ø, ¾¢ÕÁ½Á¡ÉÅÛ¼ý, ¯È× ¦¸¡ñÎ, À¢û¨Ç ¦ÀüÚ Ó¾ø Á¨ÉÅ¢ìÌ ÌÆ󨾨Âô À⺡¸ì ¦¸¡ÎôÀ¡û ¸ø¸¢ ( ¸ø¸¢). ¸¡ðº¢ô ÀÊÁí¸ÙìÌ Ó츢ÂòÐÅõ ¦¸¡Î측Áø, §Á¨¼ ¿¡¼¸í¸¨Çô À¼õ À¢ÊôÀÐ §À¡Ä¢Õó¾ ¸¡Äò¾¢Öõ, ¿¢ä§Åù ¸¡Äò¾¢Öõ, À¢ýÉ÷ Å¢„¤Åø Ô¸ò¾¢Öõ ,¸¡ÄòÐìÌ ¾ì¸ÀÊ À¼í¸¨Çì ¦¸¡ÎòÐ ¾ý¨ÉÔõ ÒÐôÀ¢òÐì ¦¸¡ñ¼¡÷ ±ýÀÐ «ÅÃÐ §Á¾¨Á¨Âì ¸¡ðÎõ ±ýÀ¾¢ø ³ÂÁ¢ø¨Ä, ¾É¢ôÀð¼ ӨȢø «ÅÃÐ À¼í¸û Á£Ð- ¿¢Æø¿¢ƒÁ¡¸¢ÈÐ ¾Å¢Ã- ¦Àâ ®ÎÀ¡Êø¨Ä ±ýÈ §À¡¾¢Öõ.

    ¯È׸ÙìÌ þ¨¼Â¢ø þÕìÌõ conflict ¸¨Ç À¼Á¡¸ ±ÎôÀо¡ý «ÅÕ¨¼Â ¦¼¡¨Áý. º¢óÐ ¨ÀÃÅ¢Ôõ «ôÀÊôÀð¼Ð. «¾¢§Ä «Å÷ Á¢¸×õ ¦ÅüÈ¢ ¦ÀüÈ¡÷. ºã¸ì §¸¡Ç¡Ú¸¨Ç Å¢Á÷ºÉõ ¦ºöÅÐ, «ÅÕìÌ ÁüÚ¦Á¡Õ , ¿øÄ Š§¸¡ô þÕìÌõ ºô¦ƒìð. «Å÷ ¿øÄ ¾¢È¨ÁÂ¡É À¨¼ôÀ¡Ç¢ ÁðΧÁ. «¾üÌ §ÁÄ¡¸, «Åâ¼õ þÕóÐ ¬§Ã¡ì¸¢ÂÁ¡É ºã¸ Å¢Á÷ºÉí¸¨Ç ±¾¢÷À¡÷ì¸ §Åñʾ¢ø¨Ä ±ýÀÐ ±.¾¡.«À¢ô.

    ¿øÄ À¼í¸û ¦¸¡ÎòÐ §¸Ç¢ì¨¸ Åâ ÅÝø «¾¢¸Á¡ì¸¢, «Ãº¡í¸ ÅÕÅ¡¨Âì ÜðÊÉ¡÷ ±ýÀÐ ¾Å¢Ã, «Åâ¼õ ±ÉìÌô À¢Êò¾ ´§Ã Å¢„Âõ, âɢ¸¡ó¨¾ ¸ñÎÀ¢Êò¾¡÷ ±ýÀо¡ý.

    //அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர் (அமரர்) பேரளம் முத்தையனின் பேரன் என்பதை சொல்ல வேண்டியதில்லை ;)//

    «ö§Â¡... ¿£í¸ §¸À¢ìÌ §ÅñÊÂÅá? ¾ôÀ¡ §À¡îÍÐí¸§Ç :-)

    By: prakash

    ReplyDelete
  11. பிரகாஷ்: தெரிந்தவர் எல்லாம் கிடையாது.என் தாத்தாவிற்கு ஒரு காலத்தில் தெரிந்தவர்.

    சும்மா கடமைக்கு வசனம் எழுதலாம் என்கிறீர்கள்,,அதுவும் சரிதான் ;)

    By: வாசன்

    ReplyDelete
  12. சகானாவை நான் பார்க்கவில்லை.
    சிந்துபைரவி மனதுள் பதிந்து விட்டு படங்களில் ஒன்று.
    சினிமாவுக்கே உரிய சில சொருகல்கள் தவறுகள் இருந்தாலும்
    குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் நன்றாக அமைந்திருந்த படம்.

    ReplyDelete