Saturday, February 19, 2005

அனுமன்: வார்ப்பும் வனப்பும்

அனுமன்: வார்ப்பும் வனப்பும்இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஹரி கிருஷ்ணன் எழுதிய "அனுமன்: வார்ப்பும் வனப்பும்" என்ற நூலுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது சாதாரணமாக இலக்கிய விழா என்று அறிவிக்கப்பட்டு மேடையில் நான்கு பேர் பேசி, கைதட்டி, கலைந்து செல்லும் கூட்டமல்ல.

Informal-ஆக கடற்கரை மணலில் அமர்ந்து இந்தப் புத்தகத்தை ரசித்துப் படித்த இருவர் - மதுரபாரதி, இரா.முருகன் - பேசுவதைக் கேட்கவும், அதைத் தொடர்ந்து, வந்துள்ளோர் அனைவரும் தத்தம் கருத்தையும் சொல்லிக் கலந்துரையாடவும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 5.00 மணி அளவில் கடற்கரை காந்தி சிலையருகே கூடுவோம். பின் கூட்டம் குறைவாக உள்ள இடமாகப் பார்த்து கடற்கரை மணலில் அமர்ந்து பேசுவோம்.

நாளை இந்த வலைப்பதிவில் படங்களும், முடிந்தால் முழு ஆடியோவும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். இதுவரை காற்று வீசும் கடற்கரையில் டிஜிட்டல் ஆடியோ ரெகார்டரைப் பயன்படுத்தியது கிடையாது. அதனால் ரெகார்டிங் தரம் எப்படியிருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

8 comments:

  1. பத்ரி நான் முயற்சி செய்திருக்கிறேன். காற்று அலைகழிக்கும். "ஹஷ்" என்கிற ஒசையோடு தான் பதிய இயலும். வார்த்தைகள் திரியும் வாய்ப்புகள் உள்ளது.

    ReplyDelete
  2. அதனால் என்ன? போகட்டும்! கடற்கரையில் உட்கார்ந்து கொண்டே பேசுவதைக் கேட்பது போன்ற ஓர் effect இருக்கும்:-)

    --பத்ரி

    ReplyDelete
  3. VaazththukkaL Hari Sir
    usha

    ReplyDelete
  4. I'm gonna miss it :-( I bought the book last month, and have just finished smelling it :-) Expecting transcripts of the discussion...

    - Kannan

    ReplyDelete
  5. I'm gonna miss it :-( I bought the book last month, and have just finished smelling it :-) Expecting transcripts of the discussion...

    - Kannan

    ReplyDelete
  6. சென்னையிலிருந்தும் வர இயலாமைக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். பிற அவசர வேலைகள் குறுக்கிட்டதால் வர இயல வில்லை. பதியுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  7. ஏனய்யா இதை முன்னையே சொல்லக்கூடாத? ;(

    ReplyDelete
  8. ஏனய்யா இதை முன்னையே சொல்லக்கூடாத? ;(

    ரவியா

    ReplyDelete