Monday, February 07, 2005

அமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்

இம்மாத (பிப்ரவரி 2005) அமுதசுரபி இதழில் வலைப்பதிவுகளின் தாக்கம் மிக அதிகம். தமிழ் வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்களே கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

ஐயப்பன் தகவல் தொழில்நுட்பப் பெரும்புள்ளிகள், ஆஹா யாஹூ என்று இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஐயப்பா: அதெப்படிப்பா பிரணாய் ராயைப் புடிச்சு, நாராயண மூர்த்தி, ராமலிங்க ராஜு, அஸீம் பிரேம்ஜி, ஷிவ் நாடார் கோஷ்டியோட சேர்த்தே? அதுவுமில்லாம விட்டா கரன் தாப்பரையும் இந்த கோஷ்டில சேர்த்திடுவேன்னு பயமுறுத்தறே?

க்ருபா ஷங்கர் செல்லும் இடமெல்லாம் தொடர்பு என்ற தலைப்பில் GSM, CDMA தொழில்நுட்பங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று சற்றே சொதப்பியுள்ளார். போகட்டும் விட்டு விடுங்கள், சின்னப் பையன். புதிதாக கேமரா செல்பேசி வாங்கிய குஷியில் இருப்பதால் மன்னித்துவிடுவோம்!

இகாரஸ் பிரகாஷ் வலை விரிக்கும் வலை என்று இணையத்தில் நடக்கும் மோசடிகள், ஸ்பாம்கள், வைரஸ்கள் பற்றிய ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

மாலன் ஒரு பெரும் பாய்ச்சல் என்ற தலைப்பில் செல்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்திச் சேவை பற்றியும், சமீபத்தில் சிங்கப்பூர் தமிழ் இணைய மாநாட்டில் வெளியான சில தமிழ் இணையப் புதுமைகள் பற்றியும் எழுதியுள்ளார்.

பத்ரி சேஷாத்ரி அகலப்பாட்டை உலகை நோக்கி என்ற தலைப்பில் இந்தியாவில் அகலப்பாட்டை எதிர்காலம் பற்றி எழுதியிருக்கிறார்.

ஆசிரியர் அண்ணாகண்ணன் ஓர் அருமையான சிறுவர் பாடல் (எட்டை வைத்துக்கொண்டு என்னெவெல்லாம் செய்யலாம் என்ற கணிதப்பாடல்), கவிஞர் உமா மகேஸ்வரி பற்றிய அறிமுகக் கட்டுரை இரண்டையும் எழுதியுள்ளார்.

மற்றும் இரு இணைய நண்பர்கள் தமது புனைப்பெயர்களில் எழுதியுள்ளதால் அவர்களை இங்கே குறிப்பிடப் போவதில்லை. தம் பெயர்கள் நேரடியாக வெளியே வருவதில் அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்.

பவித்ரா சீனிவாசன் தமிழில் வெளியாகியுள்ள சில தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதியுள்ளார்.

தனக்கென தனி வலைப்பதிவை வைத்துக்கொள்ளாத, தோழியர் வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுதும் ஜெயந்தி சங்கர் எழுதிய பேஜர் என்ற ஒரு கதை வெளியாகியுள்ளது. அருமையான கரு. இன்னமும் நன்றாகக் கதை வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சட்டென்று முடிந்தது போல இருந்தது. [Correction: ஜெயந்தி சங்கரின் வலைப்பதிவு]

அனந்த், கனடா (இவர் மரபிலக்கியம், சந்த வசந்தம் குழுக்களில் பங்கு பெறும் பேராசிரியர் அனந்தா?) ஒரு கவிதை எழுதியுள்ளார்.

மற்ற படைப்புகளை எழுதியவர்களை இணைய வெளியில் நான் பார்த்தது கிடையாது.

இது ஒரு பெரும் பாய்ச்சல்தான்!

8 comments:

  1. பத்ரி தகவலுக்கு நன்றி.

    வலைப்பதிவின் வீச்சை உலகுக்கு எடுத்துணர்த்தும் அனைத்து வலைப்பதிவாளர்க்கும் வாழ்த்துக்கள். (அதோட குறைந்தபட்சம், நாமளும் நமக்குத்தெரிந்தவருமாவது அமுதசுரபியைக் காசு குடுத்து வாங்கி இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிப்போம்!)

    அதோட பத்ரி...
    தனக்கென தனி வலைப்பதிவை வைத்துக்கொள்ளாத,
    அதெல்லாம் அந்தக்காலம். இதைப் பார்க்கலியோ நீங்க!?
    வல்லமை தாராயோஎன்றென்றும் அன்புடன்,
    அன்பு


    By: அன்பு

    ReplyDelete
  2. «ñ½¡ ¸ñ½Ûõ Á¡ÄÛõ ´Õŧà ¾¡É¡? þÐ ¿¡û Ũà ¦¾Ã¢Â¡Áô §À¡î§º:-).. ÍõÁ¡ §ƒ¡ìÌ.... «ñ½¡ ¸ñ½¨É ÍðÊÉ¡ø , «Ð Á¡ÄÛìÌ «ÛôÒ¸¢ÈÐ. ºÃ¢ ¦ºïÍÎí¸.

    By: prakash

    ReplyDelete
  3. மாத்திட்டோம்ல!

    ReplyDelete
  4. ììÌõ... ¸¡¾ø À¼ À¡¾¢ôÀ¡ìÌõ? :-) . §À÷ ¦º¡øÄÅ¢ÕõÀ¡¾ «ó¾ ¦ÃñÎ §À÷ ¬ÕýÛ ¸¢Í¸¢Í À¡½¢Â¢§Ä¡îÍõ ¦º¡øÄ¢ôÒÎí¸. ´÷ò¾÷ ÐǺ¢... ¦¾Ã¢Ôõ. þý¦É¡Õò¾÷?

    By: prakash

    ReplyDelete
  5. என்னோட கட்டுரை இங்க இருக்கு. http://thoughtsintamil.blogspot.com/articles/20050207_broadband.html

    பாத்துட்டு மத்தவங்க எல்லாருமே விமர்சனம் செய்யலாம்.

    ReplyDelete
  6. எல்லாரும் கலக்குங்க...:-)

    ReplyDelete
  7. ஏதோ தகவல் தொழில்நுட்ப சிறப்பிதழ் என்று போட்டிருக்கிறார்களே என்று வாங்கி வந்தவனுக்கு பக்கங்களை புரட்ட புரட்ட ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    By: ராஜா

    ReplyDelete
  8. இது நல்ல விசயம். இப்படியான கட்டுரைகள் வருவது வலைப்பூக்களின் தாக்கத்தை மக்களுக்கு அருகே கொண்டு செல்லும்.

    By: Balaji-paari

    ReplyDelete