நேற்று 39வது ஞானபீட விருது மராத்தி கவிஞர் (கோ)விந்தா கராண்டிகருக்கு வழங்கப்பட்டது. (ஜனவரியிலேயே வெளியிடப்பட்ட தகவல்தான்.) விருதை அளித்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கராண்டிகரின் கவிதையை வாசித்ததைக் கேட்டவுடன் தனக்கும் மராட்டி மொழி கற்றுக்கொள்ள ஆசை ஏற்பட்டதாகச் சொல்கிறார்.
கராண்டிகர் பற்றி எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ஜனவரி 2006 இதழில் வந்த விரிவான கட்டுரை அவரது இலக்கிய, சமுதாயப் பார்வைகளைப் புரிந்துகொள்ள உதவும்.
சென்ற ஆண்டுக்கான ஞானபீட விருது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குக் கிடைத்தது என்பது உங்களில் பலருக்கு நினைவில் இருக்கலாம்.
ஆலயம்
19 hours ago
No comments:
Post a Comment