இன்றைய தினமணியில் தி.ஜ.ரங்கநாதன் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
அவர் மஞ்சரி எனும் இதழின் ஆசிரியராகப் பல காலம் இருந்தவர்.
அவர் எழுதியதை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் லூயி ஃபிஷரின் காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தி.ஜ.ர தமிழாக்கம் செய்ததைப் படித்திருக்கிறேன் (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு).
கருணாநிதி முதல்வராக இருந்த காலங்களில்தான் அதிகபட்சமாக எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் புலவர் குழந்தை, ம.பொ.சி ஆகியோரது எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டு முறையே ரூ. 10 லட்சம், ரூ. 20 லட்சம் அவர்களது சந்ததிகளுக்கு வழங்கப்பட்டன.
உடனடியாக தி.ஜ.ர எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படுமா என்று தெரியவில்லை. ஒருவேளை அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம்.
அரசால் முடியாவிட்டால் மற்றொரு புதிய முறையையும் கொண்டுவரலாம். BAPASI போன்ற தமிழ் பதிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்தமாக ஒரு தொகையைக் கொடுத்து ஓர் எழுத்தாளருடைய எழுத்துகளின் உரிமையை வாங்கிக்கொள்ளலாம். அதன்பின் எந்தப் பதிப்பாளரும் ஒரு குறிப்பிட்ட தொகையை BAPASI-க்குக் கொடுத்துவிட்டு non-exclusive முறையில் பதிப்பிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.
திரைக்கல்வி எவருக்காக?
2 hours ago
பத்ரி!
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
பத்ரி
ReplyDeleteநல்ல விசயம்.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
பத்ரி, தமிழ் இ-புத்த்கம் கிடைக்கும் வலைதளங்களின் பட்டியல் ஏதேனும் இருந்தால் கொடுங்களேன்..
நன்றி
வணக்கம் பத்ரி அவர்களே,
ReplyDelete//மற்றொரு புதிய முறையையும் கொண்டுவரலாம். BAPASI போன்ற தமிழ் பதிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்தமாக ஒரு தொகையைக் கொடுத்து ஓர் எழுத்தாளருடைய எழுத்துகளின் உரிமையை வாங்கிக்கொள்ளலாம். அதன்பின் எந்தப் பதிப்பாளரும் ஒரு குறிப்பிட்ட தொகையை BAPASI-க்குக் கொடுத்துவிட்டு non-exclusive முறையில் பதிப்பிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.//
மிகச்சிறந்த முறை! இப்படியொன்றை யோசித்ததற்கு என் மனமுவந்த பாராட்டுகளும் நன்றியும்.
இதன் மூலம் அரசியல் காரணங்களால்(காழ்புகளால்) கவனிப்பு பெறமுடியாமல் போன எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொணர முடியும் இல்லையா?
இது போன்ற ஒரு சுதந்திரமான ஒரு அமைப்பு மிக அவசியம் என்றே கருததுகிறேன்.
BAPASI-ல் ஏதும் அரசியல் இருக்கிறதா, அல்லது அவர்கள் முனைவார்களா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
தனி ஆர்வளர்கள் முயற்சியில், ஒன்றோ அல்லது மேலூமான அமைப்புகளோ உருவானால், ஒவ்வொரு முறையும் 'அரச' டினோசர் உயிர்த்தெழ கோரிக்கை வைக்க வேண்டியிருக்காது.
அப்படியேதேனும் ஒன்றை நீங்களோ/ வேறு யாருமோ உருவாக்க முயன்றால் நானும் (பொருளாதரீதியாக) ஒரு கை கொடுக்க தயார். இதன் மூலம் பல நல்ல தமிழ் படைப்புகள் பதிப்பை காண முடியுமுடியும் என்ற நம்பிக்கையுடன்,
வணக்கத்துடன்...
பத்ரி சார்,
ReplyDeleteபதிவிற்கு சம்மந்தமில்லாத ஒன்று. Project Madurai மூலம் பல நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் பல அரிய இலக்கியங்கள், மின்புத்தகங்களாகக் கிடைக்கின்றன.
ஆனால் அவ்வரிய நூல்களுக்கு உரைநடை விளக்கங்கள் மின் மாற்றம் செய்யப்படவில்லை. Copyright உரிமம் காரணமாக இருக்கலாம் அல்லது Project Madurai நோக்கம் தொகுப்பது மட்டும் என்று இருக்கலாம்.
தமிழ் இலக்கிய்ங்களின் அருமை பெருமைகளை அறிய உரைநடை விளக்கங்கள் தேவை என்பது எனது எண்ணம். தங்களின் கிழக்கு பதிப்பகம் மூலம், பிற தமிழ் வலைஞர்கள் உதவியோடு அவற்றை Project Maduraiயில் உரைநடை விளக்கங்களை மின்புத்தகங்களாக பதிப்பிக்க இயலுமா ?
நன்றி.
திரு சிவபாலன் அவர்களுக்கு
ReplyDeleteஎங்களின் சென்னைநெட்வொர்க்.காம் தளத்திலும் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளோம். பார்க்கவும்.
அன்புடன்
கோ.சந்திரசேகரன்,
சென்னைநெட்வொர்க்.காம்
http://www.chennainetwork.com
அரசு செய்த நல்ல சேவை! தகவலுக்கு நன்றி!
ReplyDeleteயோகன் பாரிஸ்
திரு. சந்திரசேகரன் மிக்க நன்றி.
ReplyDeleteநீங்கள் கொடுத்த சுட்டிக்கு சென்று பார்க்கிறேன்.