இன்று மியூசிக் அகாடெமியில் 'Mozart Meets India' குறுந்தட்டு வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்.
Awesome. முதல் இரண்டு குறுந்தட்டுகளை விலைக்கு வாங்கியது நான்தான்:-)
தமிழ் மையம் (அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ்) - இளையராஜாவின் சிம்பனிக் ஆரடோரியோவுக்குப் பிறகு கொண்டுவந்திருக்கும் கர்நாடக, மேற்கத்திய இசைவிசை வடிவம்.
விழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் அம்பிகா சோனி, தயாநிதி மாறன் ஆகியோர் வந்திருந்தனர்.
விளக்கமான செய்திகளும் படங்களும் நாளை எல்லா செய்தித்தாள்களிலும் வரும். சன் மியூசிக் சானலில் இந்த விழாவின் ஒளிபரப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். பல கேமராக்களுடன் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
இசைத்தட்டில் இருந்து ஆறு பாடல்களில் மூன்றை அரங்கில் பாடிக்காட்டினர். அத்துடன் மேலும் இரண்டு பாடல்கள் + ஒரு நாட்டியம் மிக அற்புதமாக இருந்தது.
ரூ. 199/- குறுந்தட்டின் விலை. இசைவிரும்பிகள் அவசியம் வாங்க வேண்டியது.
இசை கிடக்கட்டும். ஜெகத் காஸ்பர் ராஜ் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளுத்துக் கட்டினார்.
இசையமைப்பு நெல்லைக்கு அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜேசுராஜ் என்பவராம்.
I am happy to note that carnatic music is being de-religionised and de-languagised and hence being made more universal.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
5 hours ago
இந்த இசைத்தட்டை இணையத்தில் வாங்க வழியுள்ளதா பத்ரி ?
ReplyDeleteமேலும் பத்துக்கு எத்தனை மார்க் போடுவீங்க ?
//I am happy to note that carnatic music is being de-religionised and de-languagised and hence being made more universal.//
ReplyDeleteவழிமொழிகிறேன்.
வணக்கம் பத்ரி,
ReplyDeleteதிருவாசகத்தோட நிருத்தாம ஜெகத் கஸ்ப ராஜ் மேலும் இசைப்பணி தொடர்வது ஆச்சர்யம் தான் , முதல் பிரதி வாங்கினா போதுமா என்னை போல இலவச சேவை விரும்பிகளுக்காக நெட்ல போட்டு லின்க் தர வேணாமா (ஹி.. ஹி ..ஹி)
sa re ga ma இந்த குறுந்தட்டை விநியோகித்து விற்பனை செய்கிறார்கள். அப்படியானால் இந்தியா முழுக்க கடைகளில் இன்று முதல் கிடைக்க ஆரம்பித்திருக்கும். அவர்களது ஹமாரா-சிடி ஆன்லைன் தளத்தில் சீக்கிரமே விற்பனைக்கு வரலாம்.
ReplyDeleteசீக்கிரமே பல்வேறு மின்வணிகத் தளங்களிலும் கிடைக்க ஆரம்பிக்கலாம்.
வவ்வால்: நீங்க கேக்கறது நியாயமே இல்ல:-) 200 ரூபாய்தானே? காசு கொடுத்தே வாங்கிடுங்க!
//I am happy to note that carnatic music is being de-religionised and de-languagised and hence being made more universal//
ReplyDeleteபைபிளும், குரானும், கீதையும் கூட universal தான்....universalஆக வேண்டுமென்றால் dereligiousஆக வேண்டுமென்பது அவசியமா? தீபாவளி கொண்டாடுவதில்கூட ஒரு secular outlookஐ சிலர் insist பண்ண நினைப்பது பேதேமையாகப் படுகிறது.
இன்னுமொன்று, மேற்கத்தியமயமாக்கலையே சர்வதேசமயமாதலாகவும் உலகமயமாதலாகவும், universalizationஆகவும் சிலர் கருதுவது வேதனை தருகிறாது...am i right, Badri?
பத்ரி,
ReplyDeleteஏதோ கிறிஸ்தவத்துக்கும், கர்நாடக இசைக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் எழுதுகிறீர்கள்! கிறிஸ்தவ கீர்த்தனைகளை கேட்டதில்லையா?
//
ReplyDeleteI am happy to note that carnatic music is being de-religionised and de-languagised and hence being made more universal.
//
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி கர்னாடக சங்கீதத்தை ஒரு மதத்துடன்(மதங்களுடன்) சேர்த்துப் பார்ப்பது !
அதே போல் சமஸ்கிருதத்துடன் இணைத்துப் பார்ப்பது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், புத்தர் காலத்தில் இருந்த ப்ராக்ரித மொழியில் எழுதிய பாடலைக்கூட கர்னாடக சங்கீதத்தில் பாடியிருக்கிறார்கள்.
அதே போல், சைவம், வைணவம், சக்தம், கௌமாரம், கணபதம் போன்ற மத நம்பிக்கைகள், புத்த மதம், ஜைன மதம், பாடல்கள் கூட கர்னாடக சங்கீதத்தில் உள்ளது.
காதல் பாட்டுக்கு கர்னாடக சங்கீதத்தில் பஞ்சமா?
Why do you make such statements?
The Universalness that the carnatic music has, is always been there with it.
The universalness that you intend to portray is in my opinion nothing but, Romanization, anglicization.